Tuesday, January 30, 2007

நானும் அவளும், ஒரு நீண்ட பயணத்தில் 2

முதல் பகுதி

காதல் என்ற வானத்தில் பறவைகள் ஏராளம். நாங்கள் மட்டுமல்ல, என் வகுப்பில் இன்னும் சில பறவைகளும் இருந்தன. எங்களை போல காதலை மண்ணுக்குள் புதைத்து வளர்க்காமல், தேசிய கொடியை போல உயரத்தில் பறக்க விட்டு வாழ்பவர்கள். அப்படிப் பட்டவர்கள் அவர்கள் இருவரும் விளையாட்டுபிள்ளைகள். தினமும் நூறு முறை சண்டையிடுவார்கள். ஆயிரம் முறை சேர்ந்துகொள்வார்கள். அவர்களும் அந்த சுற்றுலாவுக்கு வந்திருந்தார்கள்.

அவள் என்னை கையசைத்து அழைக்க, டிரைவரின் எதிர்புறம் அமர்ந்திருந்த நான் அவள் இருக்கை நோக்கி நடந்தேன். ஓடிய திருடனை பிடிக்க போலீஸ் போகும் போது இடையில் திடீரென ரயில் வண்டி வந்துவிடுவதை போல, திடீரென்று என் நண்பனின் காதலி, எனக்கும் தோழி தான், கோபமாக வந்தாள் பின்னிருக்கையில் இருந்து. நான் என்னவளின் இருக்கை பக்கத்தில் வர, அவள் பக்கத்தில் இவள் வந்து அமர்ந்தாள். விதி என்பதன் சதங்களையும், அது அடிக்கும் நாலையும் ஆறையும் பார்த்து கை தட்டுவதா, தலையில் கொட்டுவதா என்று தெரியாமல், வந்த வழியே திரும்பினேன். அவள் என்னைப் பார்த்தாள். அதில் என்றையும் விட ஏமாற்றமும், கண்களின் ஓரம் ஒரு துளி நீரும் தேங்கி நின்றது. முதன் முதலாய் எனக்காய் அவள் இதயத்தின் கூட சேர்ந்து கண்களும் அழ ஆரம்பித்தது. தைரியமில்லாதவர்களின் காதல்கள், ஆயுதமில்லா மனிதனைப் போல போர்க்களத்தில் காயப்பட்டுப் போகின்றன. மறுபடியும் என் இருக்கையில் அமர்ந்து இருக்கையில், வேகமாக வந்த என் நண்பன், அவளின் காதலன், அவள் இருக்கையின் கீழே அமர்ந்து, அவள் மடியில் தலை சாய்த்து தூங்க ஆரம்பித்தான். நான் என்னவளை பார்த்தேன்.

எதிர்புறம் வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்தில், அவள் முகம் மறைந்து மறைந்து தெரிய ஆரம்பித்தது. மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவை போல அந்த இருட்டான வாகனத்தில் எனக்கு அவள் தெரிந்தாள். இடுப்பேறி அமர்ந்து பருப்பு சாதம் சாப்பிட்டு நிலவை கண்டு ஏமாந்து போகும் கைகுழந்தையை போல நான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள்-

நேற்று நடந்த ஏமாற்றங்கள் நெஞ்சில் நிறைந்து கிடந்தாலும், அதற்கு அவள் காரணமில்லை என்று புரிந்திருந்தது மனசுக்கு. காலையில் வழக்கம் போல கேன்டீனில் நான் சாப்பிட, அவளை துணைக்கு அழைத்தேன். அவளும் வந்தாள். நான் என்றும் போலவே அவள் கூட பேசிக்கொண்டிருந்தேன். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. என் கூட நடந்து வருவதை நிறுத்தினாள்.

கோபமா என்று கேட்டாள்.. உன் மீதில்லை என்றேன்.. சுற்றுலாவை விடு. இன்னும் இருக்கும் முப்பது நாட்களும் நான் உன்னருகே தான் இருப்பேன். நானென்ன செய்வது. நான் உன்னை அழைத்த போது, விதியை அழைத்ததாக அது வந்து என்னருகில் அமர்ந்து கொண்டது என்றாள். நான் அவளைப் பார்த்து சிரித்தேன். அவளும் சிரிப்பையே பதிலாகத் தந்தாள். அதைப் பார்த்த, பக்கத்தில் இருந்த மரத்தின் இலைகளெல்லாம் மலராக மாறியது. இலையே மாறும் போது, நாமென்ன என்று நினைத்ததோ என்னவோ, அதன் வேர்களும் பூவாய் விரிந்தது.

அடுத்து வந்த அத்தனை நாட்களும் என் கூடத் தான் இருந்தாள். வகுப்பின் இருக்கையில் இருவரும் சேர்ந்தே அமர்ந்தோம். எனக்காய் ஏடுகளில் அவள் எழுதினாள். அவளுக்காய் நான் அவளை ரசித்தேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புது பிறப்பாய் தெரிந்தது. நானும் தினமும் மூழ்கி முத்தெடுத்தேன். முத்தாய் அவளே மறுபடி மறுபடியும் கிடைத்தாள். இப்படியாக சென்ற ஒரு நாளில், மழை பெய்து தரையெல்லாம் புது வண்ணமடித்த நாளில், வகுப்பில், யாருமே இல்லாத ஒரு பொழுதில், ஜன்னலில் முகம் தேய்த்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் அவள். நானும் எழுதிய ஏட்டை மூடிவைத்து அவளருகில் சென்று நின்றேன். மெல்ல அவள் இடை பற்றி, பின்னால் இருந்து அணைத்தேன். நான் அணைத்தவுடன் அவளுள் இருந்த பெண்மை பிரகாசமாய் விளக்கேற்றி வைத்தது. என் மூச்சுகாற்று தான் அந்த விளக்கை ஏற்றி வைத்ததோ. மெல்ல திரும்பி, என்னைப் பார்த்து நாணமாய் சிரித்து, எனது கைகளை விடுவித்தாள். ஆனால் அதை பற்றி அவள் ஏதும் கேட்கவில்லை. நானும் ஏதும் தொடங்கவில்லை.

கடைசி நாள்-

இருவரும் ஒரே பெஞ்சில்.. அவன் கைகளை பற்றிக்கொண்டே அவள் இருந்தாள், கடலடியில் மண்ணைப் பிடித்த நங்கூரம் போல.. எதுவும் பேசவில்லை. கடிகாரத்தின் முட்கள் மட்டும் மணிக்கொரு தடவை பேசிக்கொண்டன. முத்தமிட்டுக்கொண்டன. மௌனமாகவே காற்று கூட நடை போட்டது. சூரியன் கூட என்ன செய்கிறோம் என்று எட்டி பார்த்துவிட்டு சென்றான். அன்றைய பொழுது எழுந்து செல்கையில், அவள் என் கை பிடித்து கொடுத்த முத்தமும், காதில் சொன்ன ஐ லவ் யூவும் தான் இன்று வரை என் இதயதில் உலராமலும், லப் டப் ஓசைக்கு பதிலாகவும் உயிரூட்டுகிறது

(இது என்னை சுற்றி நடந்தவைகள் கொண்டு எழுதியது. எனக்கு நடந்தவைகளும் சில அங்கங்கு தூவப்பட்டுள்ளது)

55 பின்னூட்டங்கள்:

said...

mudhal?

said...

ungluku neram vandachu. mani adichuda vendiadhu thaan. yaruppa adhu innum ponnu paathukittu? seekram kalyanam pannunga, paatha varai podhum! :-)

said...

நான் தான் firstஆ? தெரியலை? பின்னூட்டம் கொடுத்துப் போடலியா? என்ன என்னோட ப்ளாகுக்கு வர மறந்துட்டீங்க? ஆஃபீஸ்லே நிஜமாவே அப்போ வேலைதான் செய்யறீங்கன்னு நினைக்கிறேன். :D

இப்போ உங்க பதிவைப் பத்தி:
நிஜமாச் சொல்லுங்க. தலையே வெடிச்சுடும் போல் இருக்கு. ஏன் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துக்கலை? இது உங்களைச் சுற்றி நடந்ததா? நீங்களும் பங்கு பெற்றதா? May be a million dollar question?

Anonymous said...

Kalakkals karthik :)

said...

Aaaha...Payanam unmayavey neenda payanam than :) And ur writing style is 2 good :) Nice flow.

Anonymous said...

first portion padichen karthi. also read your post abt vijaykanth.
sari, aara amara vanthu commentu podalaam!nu paartha daily oru postu pottu thaakare! :)

as usual narration superb. esp the way U mentioned abt clock and time passes every one hour.

//ungluku neram vandachu. mani adichuda vendiadhu thaan.//
@kodi, ROTFL :) neeyum naanum goal adichutu jollya irukom, athugaaga karthiya vera usupi vudariyaa? :p

//நான் தான் firstஆ? தெரியலை? //
@geetha madam, y? athaan en paasa malar vanthu pongal vaangitu enakum pangu kudukka poraa illa? ethuku chinna pasangaloda potti pottutu? :p

//என்ன என்னோட ப்ளாகுக்கு வர மறந்துட்டீங்க? //
athaane paarthen. yappa karthi, udane un default ans already type panni vechu irupiye! :))

said...

!வாவ்! அருமை நண்பரே! கதை சூப்பர்... என்ன யதார்த்தம் .என்ன அழகான வரிகள்...

said...

ம்ம்ம்... படித்தால், வாழ்க்கையை நினைத்து சிரிப்பதா... அழுவதா என்றே தெரியலை! என்னன்னவோ நடக்கது!

said...

//(இது என்னை சுற்றி நடந்தவைகள் கொண்டு எழுதியது. எனக்கு நடந்தவைகளும் சில அங்கங்கு தூவப்பட்டுள்ளது) //

இல்ல... (இது என்னை சுற்றி எனக்கு நடந்தவைகள் ) என்பதை இப்படி சொல்லிடீங்களா!

said...

//தைரியமில்லாதவர்களின் காதல்கள், ஆயுதமில்லா மனிதனைப் போல போர்க்களத்தில் காயப்பட்டுப் போகின்றன//

அழகு! அழகு! வேற என்ன சொல்ல! கலக்கறீங்க!

said...

என்ன தலீவரே அதுக்குள்ள முடிச்சுட்டீங்க....ஆனா அப்படியே உயிரோட்டமா இருந்தது நீங்க எழுதுன விதம் :-)

said...

நீங்களூம் dreamzz ம், எழுதுறத பார்த்தா என்னோட டைரில இருந்து ரெண்டு பேரும் கொஞ்சம் pages சுட்டுட்டீங்க போல இருக்கு (நல்ல வேளை எனக்கு டைரி எழுதற பழக்கம் எல்லாம் இல்ல) :-)

Anonymous said...

wow! nice flow in writing.very interesting MK.
appuram yenna aachu?

said...

Hi Karthi

Very nice writing style. Aana, sonthamaa kathaiyaannu doubt innum (inspite of the PS) vida maatenguthu.

Cheers
SLN

said...

yahoooooooooooooooooooo :-) vitta idatha pidichutten!! ellarum konjam othungappa!

said...

ambi pongal thaan mudinju poche! nama vera edavdu pudusa keppom, malai kofta maadri ;-)

nama goal adicha podhuma, yaam petra i(thu)nbam peruga ivvaiyagam nu oru nallennam thaan! :-)

said...

எழுத்து நடை அட்டகாசம் தல... அப்பறம் அந்த லவ்ஸ் என்னாச்ச்சு?

அநியாயத்துக்கு உவமைகள பயன்படுத்தி கலக்கியிருக்கீங்க :)

said...

//இது என்னை சுற்றி நடந்தவைகள் கொண்டு எழுதியது. எனக்கு நடந்தவைகளும் சில அங்கங்கு தூவப்பட்டுள்ளது)//


அப்பு என்னங்கப்பு சொல்றீக..கொஞ்சம் விளக்குறீகலா. இந்த காதல் தான் நமக்கு புரியலை அப்படினா நீங்க சொல்ல வரதும் புரியாத புதிரா இருக்கே..


நீங்க தான் எக்ஸ்ட்ரா பில் கட்டீனிங்களா. சொல்லுங்கப்பு..

said...

//இது என்னை சுற்றி நடந்தவைகள் கொண்டு எழுதியது//

இப்படிக் கவுத்துட்டீங்களே :-D

//எனக்கு நடந்தவைகளும் சில அங்கங்கு தூவப்பட்டுள்ளது//

எங்கெங்குன்னு சொன்னா மறுபடியும் படிக்கிறப்போ உதவும்.. ஹிஹி

said...

ஆகா..அருமை எழுதியிருக்கிங்க..

ரொம்ப வேகமாக முடிச்சிட்டீங்க...
உவமைகள் எல்லாம் கலக்கியிருக்கிங்க..
ரொம்ப அழகாக, அமைதியாக இருந்தது உங்க வரிகள்..

said...

//mudhal? //

நீண்ட இடைவேளைக்கு பிறகு, கொடி :-)

said...

//seekram kalyanam pannunga, paatha varai podhum//

பொற்கொடி, கண்ணுக்கு தெரிந்தவரை யாரும் அப்படி இல்லை

said...

/என்ன என்னோட ப்ளாகுக்கு வர மறந்துட்டீங்க?//

மேடம், என்ன இது ஒரு நாளைக்கு வரலைனாலும் இப்படியா சபைல தொண்டனை கேள்வி கேட்பது

//ஏன் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துக்கலை? இது உங்களைச் சுற்றி நடந்ததா? நீங்களும் பங்கு பெற்றதா//

பூக்கின்ற பூவுக்கெல்லாம் சமியின் பதம் தொடவோ, பெண்ணின் கூந்தல் ஏறவோ வாய்ப்பு கிடைப்பதில்லை. சில மண்ணிலும், பல கல்லறை செல்லும் மனிதனுக்கு துணையாகவும் ஆகிறது..

சொன்னது போல இது முழுக்க என் கதையல்ல, மேடம்

said...

//Kalakkals karthik //


நன்றிங்க ஹனிஃப்

said...

//Payanam unmayavey neenda payanam than :) And ur writing style is 2 good //

நன்றிங்க பொன்னா..

எல்லோர் வாழ்விலும் இப்படியொரு பயணம் இருப்பது உண்மை தான்.. சில நேரம் அது ஊர்வலமாக ஊருக்கு தெரிந்தும், பல நேரம் தனிமையான மனதின் நடை பயணமாகவும் அமைந்து விடுகிறது

said...

//aara amara vanthu commentu podalaam!nu paartha daily oru postu pottu thaakare//

இந்த போதை நிஜமாகவே தலைகேறி விட்டது அம்பி..

//as usual narration superb. esp the way U mentioned abt clock and time passes every one hour.//

நன்றி அம்பி

//naanum goal adichutu jollya irukom, athugaaga karthiya vera usupi vudariyaa? //

நல்லா கேட்டப்பா அம்பி.. உன் ஒருத்தனுக்கே டெலிபோன் துறை அழுகிறது.. இதில் நானுமா

said...

/athaan en paasa malar vanthu pongal vaangitu enakum pangu kudukka poraa illa? ethuku chinna pasangaloda potti pottutu?//

அம்பி, மேடத்தின் காலை உன்னை விட வேறு யார் வார முடியும்..

//athaane paarthen. yappa karthi, udane un default ans already type panni vechu irupiye!//

:-)

said...

//வாவ்! அருமை நண்பரே! கதை சூப்பர்... என்ன யதார்த்தம் .என்ன அழகான வரிகள்...//

கற்பனையில் இருப்பதை எழுதுவதை விட, நேரில் நடப்பதை எழுதும் போதும் கொஞ்சம் உணர்ச்சிகள் கூடுதலாகவே வந்துவிடுகிறது, ட்ரீம்ஸ்

said...

//ம்ம்ம்... படித்தால், வாழ்க்கையை நினைத்து சிரிப்பதா... அழுவதா என்றே தெரியலை! என்னன்னவோ நடக்கது! //

அது தான் வாழ்க்கை நண்பரே..

said...

/இல்ல... (இது என்னை சுற்றி எனக்கு நடந்தவைகள் ) என்பதை இப்படி சொல்லிடீங்களா!
//

ஜுஸ்ட்ல வக்கீல் படிப்பை விட்டீங்களோ ட்ரீம்ஸ்.. என்னமா கேள்வி கேக்குறீங்க

said...

//அழகு! அழகு! வேற என்ன சொல்ல! கலக்கறீங்க!//

:-)

said...

//என்ன தலீவரே அதுக்குள்ள முடிச்சுட்டீங்க....ஆனா அப்படியே உயிரோட்டமா இருந்தது நீங்க எழுதுன விதம் :-) //

என்னமோ தெரில நாட்டாமை.. சிறியதாகவே எழுத விருப்பம்.. பெரிய தொடர் போடுவதை விட

said...

//நீங்களூம் dreamzz ம், எழுதுறத பார்த்தா என்னோட டைரில இருந்து ரெண்டு பேரும் கொஞ்சம் pages சுட்டுட்டீங்க போல இருக்கு (நல்ல வேளை எனக்கு டைரி எழுதற பழக்கம் எல்லாம் இல்ல)//

இந்த பாதையில் நடக்காதவர்கள் மிகச் சிலரே, நாட்டாமை

said...

//wow! nice flow in writing.very interesting MK.
appuram yenna aachu? //

நன்றிங்க SKM.. அப்புறம் அவள் அவர்களாகிவிட்டாள் :-)

said...

//Aana, sonthamaa kathaiyaannu doubt innum (inspite of the PS) vida maatenguthu.
//

சொந்த கதையெல்லாம் இல்லீங்க SLN

said...

/ vitta idatha pidichutten!! ellarum konjam othungappa!
//

இதுக்கு பேரு தான் ரீஎன்டரியா..

said...

/nama vera edavdu pudusa keppom, malai kofta maadri //

தோடா.. ப்ரியா வரட்டும் பொற்கொடி.. ரிசிப்பி போடச் சொல்லலாம்

said...

/எழுத்து நடை அட்டகாசம் தல... அப்பறம் அந்த லவ்ஸ் என்னாச்ச்சு?//

ம்ம்ம்.. 'பூவே உனக்காக' என்று சொல்லி 'ஆனந்தம் ஆனந்தம்' பாடி வந்தான் அந்த புண்ணியவான்

//அநியாயத்துக்கு உவமைகள பயன்படுத்தி கலக்கியிருக்கீங்க //

முதல் முறை கொஞ்சம் கடினமாக இருந்தது.. இப்போது கொஞ்சம் சுலபமாகி விட்டது அருண்

said...

//நீங்க தான் எக்ஸ்ட்ரா பில் கட்டீனிங்களா. சொல்லுங்கப்பு..
//

மணி, எக்ஸ்ட்ரா பில்லை நான் தான் கட்டினேன், என் நண்பன் கையில் அப்போது பர்ஸ் இல்லாததால்

said...

//எங்கெங்குன்னு சொன்னா மறுபடியும் படிக்கிறப்போ உதவும்.. ஹிஹி //

சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும் என்பது என் எண்ணம், அரசி

said...

//ரொம்ப வேகமாக முடிச்சிட்டீங்க...
உவமைகள் எல்லாம் கலக்கியிருக்கிங்க..
ரொம்ப அழகாக, அமைதியாக இருந்தது உங்க வரிகள்.. //

இது போன்ற பயணங்களின் இறுதியில் வருவது தானே அமைதி, கோபி.. நண்பனிடத்தில் அந்த அமைதியை பார்த்தேன் கோபி

said...

konjam naal varala...adukulla ivlo post...eppadi ungalala mattum

said...

adhuvum indha padhivu super...ore kaadhal rasam....maraikaama sollunga....ellame unga anubhavam dhaane

Anonymous said...

Dear Karthi,
NIce write up.Ungaluku UVAMAIGALL ellam azhaga varugiradhu.

Oru Personal Diary ai (Ezhuthu thiran ulla oruvarin) padithadhai pol oru feelings...

Dhariyam iladha kadhaluku ungalin varthaigal ..


தைரியமில்லாதவர்களின் காதல்கள், ஆயுதமில்லா மனிதனைப் போல போர்க்களத்தில் காயப்பட்டுப் போகின்றன.

True Words..

Unmai Kadhaluku Thevaiyana and azhagana oru vishayam -- Braveness.....

Adhuvum nichayam Boys kite irukanam.Enga period la Love garadhu romba thappana oru vishayam.

ANal ippodhu, love panradhai vida, andha love ai kapatri, marriage varai kondu vandhu, adhu murindhu pogamal kapatra vendum.
Inraiya Kadhalargaluku Disturbance enru yarum kedaiyadhu.

Avargalae dhan avargaluku Disturbance.

Kadhal seivadharkum, adhai kaapatri kolvadharkum nichayam Classes vandhu vidum enru ninaikren.... Ha ha ha....

With Love,
Usha Sankar.

said...

நல்லா எழுதியிருக்கீங்க அண்ணா. //தைரியமில்லாதவர்களின் காதல்கள்...// அருமையான வரி!
இது ஒருவேளை உங்களுக்கு நடந்திருந்தால், உங்கள் காதல் கைக்கூட என மனமார்ந்த வாழ்த்துக்கள்.
காதலை உணராதோர் அது பற்றி கூற முடியாது, அதனால் தான் எனக்கிந்த ஐயம்.

said...

enakku orey aarvama irukku indha kadhaiya padichadhuku appram, yaru namma karthiku kaadhalenum sirpathai uli kondu iyakum sirpa pen..romba dialogue pesareno...nijama kadhai chanceless karthi..ungalukkulla ivlo thiramai irukkum bodhey oru chinna aasai ungalidam, ungalai ippadi ezhudha thoondiyadhu yar apdinu ketkanumnu...seri ippo than puriyudhu, adhu andha ammani thanu...

yaraga irundhalum, seekiram vaama, enga karthika romba wait panna vaikadha iniyum...yerkanave pirandhirupal, pirindhirundhalum, pudhiya uravai yerpadutha pogum, ungal bagyavadhi yarena seekiram koorividungal en thozha..

dum dum dum kotunganu edho solla try panni soliten..

said...

MK, pudhu veetuku poi irukken. Inimae angae irundhudhan ungalai vandhu parpen.Neengalum kandippa vanga.ithanai naal poruthadhu pola iniyum poruthupeenga nu ninachu katti irukken.Vanga,varanum.

said...

//konjam naal varala...adukulla ivlo post...eppadi ungalala mattum //

எல்லாம் நீ இல்லாத குறையை தீர்க்கத் தான் மாப்ள :-)

said...

//adhuvum indha padhivu super...ore kaadhal rasam....maraikaama sollunga....ellame unga anubhavam dhaane //

இல்ல மாப்ள.. அப்படி இருந்த சந்தோசம் தான் மாப்ள

said...

//Kadhal seivadharkum, adhai kaapatri kolvadharkum nichayam Classes vandhu vidum enru ninaikren.... Ha ha ha....
//

எதிர்காலத்தில் எல்லாமே நடக்கும்ங்க உஷா.. ஆனால் தானா அழகிய தீயே படத்துல சொல்ற மாதிரி பூம்னு வர்ற காதல் மாதிரி எதுவும் இருக்காது

said...

//காதலை உணராதோர் அது பற்றி கூற முடியாது, அதனால் தான் எனக்கிந்த ஐயம்.//

தீயின் சூடு பற்றவைத்தவனுக்கு மட்டுமே இருந்ததில்லை தஙச்சி.. பக்கத்தில் இருந்தவருக்கும் தெரிந்து விடும் அதன் உக்கிரம்..

said...

//dum dum dum kotunganu edho solla try panni soliten..//

பழுக்கும் காலத்தில் எல்லாம் தானாக நடக்கும்ங்க தோழியே.. உங்களின் கனிவான வார்த்தைக்கு ரொம்ப நன்றி..

said...

//MK, pudhu veetuku poi irukken. Inimae angae irundhudhan ungalai vandhu parpen.Neengalum kandippa vanga.ithanai naal poruthadhu pola iniyum poruthupeenga nu ninachu katti irukken.Vanga,varanum. //

SKM, கட்டாயம் விசிட் அடிக்கிறேன்.. வாழ்த்துக்கள் மேடம்

said...

சூப்பர்...!!!!!!

said...

//
இந்த பாதையில் நடக்காதவர்கள் மிகச் சிலரே
//
ரொம்ப கரிக்ட் அண்ணாத்தே