Tuesday, February 05, 2008

அமெரிக்க இந்திய உணவகங்கள் - சுகாதாரம்?

என் பிலாக் குரு பாலாஜிக்கு சான்டா கிளாரா தோசா பிலேசில் நடந்த குலோப்ஜாமுனில் பூச்சி சம்பவத்தை படித்த பிறகு, அறுபது சதவிகித இந்திய உணவகங்கள் அமெரிக்காவில் இப்படித் தான் இருக்கின்றன, என்ற என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.. இப்போது முக்கால்வாசி அப்படித் தானோ என்று யோசிக்கத் தோன்றுகிறது..

கொலம்பஸ்ஸில், பனானா லீஃப் (வாழை இலை) என்ற ஒரு உணவகம் இருக்கிறது.. முதலில் ஆரம்பித்த போது மக்கள் நிறைய சென்று நல்ல வருமானம் ஈட்டியது.. கூட்டம் எப்போதும் இருக்கும்.. உணவும் சுவையாக இருக்கும்.. ஆனால் சுகாதாரம், அதற்கு பெரிய கேள்விக்குறி தான் மிஞ்சும் .அதுவும் அங்கே சமைக்கும் ஒருவர், கேரளா பாலக்காட்டுகாரர், ஆரம்பித்த புதிதில் வெள்ளையும் சொல்லையுமாக இருப்பார்.. சாப்பிட வருபவர்களை குசலம் விசாரிப்பார்.. இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, அவர் வெளியில் வந்து எங்களை சாப்பாடு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வந்தால் தெறித்து ஓடுவொம்.. முகத்தில் பாதி இடத்தில் தோசை மாவு இருக்கும்.. கை வைத்த வெள்ளை பனியன், காவி கலரில் இருக்கும்.. தலை முடி கண்ணா பின்னாவென்று சிதைந்து கிடக்கும்.. பார்ப்பதற்கு சமையல்காரர் போல இருக்கமாட்டார்.. இவரை பார்த்தே அந்த கடையில் கூடும் கூட்டம் குறையத் தொடங்கியது.. ஒரு நாள், ஒரு உணவுகூட ஆய்வின் போது கடையையும் பூட்டிவிட்டார்கள்.. ஒரு மாததிற்கு பிறகு கடையை மறுபடியும் திறந்தார்கள்.. அந்த பாலக்காட்டு சமயல்காரரை காணவில்லை.. இப்போது முன்னைவிட கொஞ்சம் உருப்படியாக இருக்கிறது..

பணம் சம்பாரிக்கத் தான் நாம் வந்திருக்கிறோம்.. ஆனால் ஓரளவிற்காவது நாம் சுத்தமாக வைத்துகொள்ளவேண்டும்.. நாயகரா சென்றபோது, அங்கே இருந்த டேஸ்ட் ஆப் இந்தியாவில் சாப்ப்பிட்ட பிறகு இனிமேல் வெளியூரில் எந்த இந்திய உணவகங்களில், அது பற்றி நன்றாகத் தெரியாமல் சாப்பிடக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.. நிச்சயமாய் இப்படி ஒவ்வொரு ஊரிலும் பல இந்திய உணவகங்கள் இருக்கத் தான் செய்கின்றது.. இதற்கு விதிவிலக்காக அமெரிக்கர்களை அசத்தும் உணவகங்களும் உண்டு..

நியுயார்க்கில் 26வது வீதியும் லெக்க்ஷிங்டன் அவென்வியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது சென்னை கார்டென்.. சைவ உணவகம்.. சரவண பவன் அருகில் இருப்பது.. சிதம்பரத்தில் இருந்து இங்கிருக்கும் ஒரு கோவிலுக்கு வர்ணம் பூச வந்தவர், அந்த வேலை ஆறு மாதத்தில் முடிய, ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.. அதன் பிறகு, கிட்டதட்ட ஆறேழு வருடங்களுக்கு பிறகு, தனியாக இந்த உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார். அங்கு சாப்பிடும் போது அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னது இந்த கதை..நல்ல வருமானம்.. உணவும் ருசியாக இருந்தது.. மூன்று நாளில் முதலிரண்டு நாட்கள் சரவண பவனில் சாப்பிட, இங்க ஒரு நாள் சாப்பிட்டோம்.. கழிவறை மட்டும் மிகவும் சிறியது.. இந்தியர்களை விட, அதிக அமெரிக்கர்களை தான் பார்க்க முடிந்தது..

இங்கு திரவியம் தேட வந்தவர்கள், சிறிது சுகாதாரம், பண்பு எல்லாவற்றையும் கற்றுகொண்டால் நல்ல பெயரும் அதிக வருமானமும் அவர்களுக்குத் தானே.. இதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்? புரியவில்லை...

13 பின்னூட்டங்கள்:

said...

கார்த்தி! நியூயார்க்கில் 27 ம் தெருவும் லெக்சிங்க்டன் அவேன்யுவும் கூடும் இடத்தில் புதியதாக திறக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு பவனில் உணவு வகைகள் நன்றாக உள்ளன. மற்ற இந்திய உணவகங்களை விட நன்றாகவே உள்ளது. இங்கு சாப்பிட்ட இட்லி போல் நியூயார்க்கில் வேறு எங்கும் சாப்பிட்டது இல்லை.

said...

எங்க ஏரியாலயும் சக்கைபோடு போட்ட ஒரு தென்னிந்திய அசைவ உணவகத்தை சுகாதாரம் போதவில்லைன்னு கொஞ்சநாள் அடைச்சாங்க, இப்ப மறுபடியும் ஓடிட்டிருக்கு...

said...

சுகாதாரத்தைப் பற்றிய கருத்துக்கு சுத்தமாக வழிமொழிகிறேன்;)

தல, அது "சென்னை கார்டன்" இல்ல?

said...

//அதுவும் அங்கே சமைக்கும் ஒருவர், கேரளா பாலக்காட்டுகாரர், ஆரம்பித்த புதிதில் வெள்ளையும் சொல்லையுமாக இருப்பார்.. சாப்பிட வருபவர்களை குசலம் விசாரிப்பார்.. இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, அவர் வெளியில் வந்து எங்களை சாப்பாடு எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வந்தால் தெறித்து ஓடுவொம்.. முகத்தில் பாதி இடத்தில் தோசை மாவு இருக்கும்.. கை வைத்த வெள்ளை பனியன், காவி கலரில் இருக்கும்.. தலை முடி கண்ணா பின்னாவென்று சிதைந்து கிடக்கும்.. பார்ப்பதற்கு சமையல்காரர் போல இருக்கமாட்டார்.. இவரை பார்த்தே அந்த கடையில் கூடும் கூட்டம் குறையத் தொடங்கியது..//

இங்கும் அதே கதைதான் நண்பரே.

இதனையும் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.
http://rishansharif.blogspot.com/2008/02/blog-post_05.html

said...

இங்கே!
இடைக்கிடை தொலைக்காட்சியில்
இந்த விபரீதங்களைக் காட்டுவார்கள்.
இவர்கள் குசினிகள் பார்த்தால் சாப்பிடப் பயம் வரும்.

said...

இங்கே (Danbury, CT) அவ்வளவு மோசமில்லைன்னு நினைக்கிறேன்..

அதுக்கு பதிலா இந்திய மளிகைக் கடையில் (Grocery) சுகாதாரம் சரியில்லைன்னு செய்தியில் வருகிறது. ஆனால், எப்படியோ மூடாமல் நடத்துகின்றனர்.

said...

அங்க வந்தும் அப்பிடியேதான் இருக்குறானுவளா
:(((((

said...

நான் பார்த்தவரையில் அட்லாண்டாவிலும், மெம்பிசிலும், ஹூஸ்டனிலும் எல்லா இந்திய உணவகங்களும் சுத்தமாயும், நல்லா சுகாதாரத்தோடும் பராமரிக்கப் படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பல அமெரிக்கர்கள் குடும்பத்தோடு அங்கே வந்து சாப்பிடுவதைக் காணலாம்.

said...

அய்யய்யோ............
அப்படியா இருக்கு.

இங்கே கிறைஸ்ட்சர்ச் நகரில் இந்திய உணவகங்கள் சுத்தமாத்தான் இருக்கு.

முழுக்க முழுக்க வெள்ளைக்காரர்கள்தான் வெளுத்துக் கட்டுறாங்க.

நாம் எப்பவாவதுதான் போறொம்.

said...

கார்த்தி,

பொதுவாக, அமெரிக்க இந்திய உணவகங்களில் இந்தியத் தரத்துக்கு (சுவை) எந்த உணவும் கிடைப்பது இல்லை! எல்லாமே 'customized' உணவுதான். சுத்தம் என்பது, என்னைப் பொறுத்தவரை சமயல் அறை சென்றால்தான் தெரியும் :)

said...

ஆஹா... இங்க கல்ஃப்ல (ஹிஹி.. வளைகுடாவைத்தான் சொன்னேன்.வேற ஏதாவது நெனப்பு வந்துச்சா?..) பரவாயில்லை மாம்ஸ்... சுகாதாரம் இல்லைன்னா,ஒடனே ஓட்டலுக்கு சீல் வைச்சுடறாங்க.. அதை கண்காணிக்கவே ரகசிய ஆளுங்க வைச்சிருக்காஙகலாம்ல்ல...

said...

மிக மிக அவசியம் என்றால் தான் ஹோட்டல் பக்கம் ஒதுங்குவேன்.
பல சமையல் அறைகளை பார்த்துள்ளேன்,அதனாலேயே 10 பேருக்கு மேல் சமைக்கும் இடம் என்றால் எனக்கு அலர்ஜி.
இங்கும் சில சமையல் அறைகளை பார்க்காமல் சாப்பிட்டு விட்டு ஓடிவிட வேண்டும்.

Anonymous said...

We use to go to an (only) Indian store cum restaurant started in our locality (Southern California). Of late, we suspected that they were serving stale overnight food and they cooked only on alternate days. Although the owner/manager was very friendly and polite in service, we decided to visit every alternate day only, i.e on Tuesdays and Thursdays. Eventually we went only on Tuesdays as the store was closed Mondays and we know for sure that they cleaned their utensils on Mondays. Ironically, the restaurant is patronized by unsuspected westerners :(