Thursday, January 24, 2008

2007-ன் மயக்கும் மெட்டுக்கள்

ஒவ்வொரு வருடமும் கணக்கு வழக்கில்லாத படங்கள் வெளியிடப்படுகின்றன, தமிழ் சினிமாவில்.. படத்தின் பூஜையின் போது எல்லோரும் அந்த படம் வெற்றி பெறவே உழைக்கிறார்கள்.. ஆனால் பத்துக்கும் குறைவான படங்களே நினைத்த வெற்றியை பெறுகின்றன.. மிச்சமிருப்பதில் பத்து படங்கள் தயாரிப்பாளரின் வயிற்றில் பாலை வார்கின்றன. ஒரு படத்தின் வெற்றிக்கு மிகவும் அதிகமாக தன் பங்கை தருபவர்கள் படத்தின் இசையமைப்பாளர்கள்.. படம் வருவதற்கு முன்னரே மக்களின் மனதில் படத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பை தந்துவிடுகின்றன.. தியேட்டர் வரை அவர்களை இழுத்தும் வருகின்றன..

2007-ல் அப்படி ரசிகர்களை கட்டிப்போட்ட படங்களின் பாடல்கள் என்னென்ன.. எனது பார்வையில் ஒரு சிறிய பட்டியல்.. எனது காருக்கான ஒரு ஆடியோ சிடி எழுதினால் அதில் என்னென்ன பாடல்கள் இருக்கலாம். நிச்சயம் இதில் உங்கள் பட்டியலில் இருக்கும் சில பாடல்கள் இருக்கும்.. ஏனென்றால் இந்த வருடம் அநியாயதிற்கு ரசிக்க, மயக்க பல பாடல்கள் இருக்கின்றன.. ஆனால் எல்லாவற்றையும் ஒரு சிடியில் அடக்க முடியாது.. உன்னாலே உன்னாலே படத்தில் அனைத்தும் பாடல்களும் தலையசைக்க வைப்பவை.. அதில் அதிகமா பிடித்த ஒரு பாடலை மட்டுமே இங்கே பட்டியலில் சேர்த்திருக்கிறேன்..

மெலடி மெட்டுகள்
(வரிசை சும்மா தான்.. ரேட்டிங் இல்லை)

தொட்டால் பூ மலரும் - அரபு நாடே (ஹரிச்சரன்,யுவன் இசை:யுவன்)
சென்னை 28 - யாரோ யாருக்குள் யாரோ (SPB, சித்ரா இசை:யுவன்)
தீபாவளி - காதல் வைத்து (
விஜய் யேசுதாஸ் இசை:யுவன்)
கற்றது தமிழ் - பற பற பட்டாம்பூச்சி (ராகுல் இசை:யுவன்)
பருத்தி வீரன் - அறியாத வயசு (இளையராஜா இசை:யுவன்)
பொல்லாதவன் - மின்னல் கூத்தாடும் (கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ இசை:ஜிவி பிரகாஷ்)
கிரீடம் - அக்கம் பக்கம் (சாதனா சர்கம் இசை:ஜிவி பிரகாஷ்)
பச்சைக்கிளி முத்துச்சரம் - காதல் கொஞ்சம் (நரேஷ் ஐயர் இசை:ஹாரிஸ் ஜெயராஜ்)
பொறி - பேருந்தில் நீ எனக்கு (மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ இசை:தினா)
சிவாஜி வாஜி வாஜி (ஹரிஹரன், மதுஸ்ரீ இசை:ஏஆர் ரகுமான்)


தாளப் பாடல்கள்

சிவாஜி - அதிரடிக்காரன் (ஏஆர் ரகுமான், சயனோரா இசை:ஏஆர் ரகுமான்)
கருப்பசாமி குத்தகைக்காரர் - நாலு கோபுர (திப்பு, சின்னப்பொன்னு இசை : தினா)
போக்கிரி - டோலு டோலு தான் (ரஞ்சித், சுசித்ரா இசை: மணிசர்மா)
பில்லா - வெத்தலையை போட்டேன்டி (சங்கர் மகாதேவன் இசை:யுவன்)
சென்னை 28 - சரோஜா சாமானிக்காலோ (ஷங்கர் மகாதேவன், ப்ரேம்ஜி அமரன் இசை:யுவன்)
பருத்தி வீரன் - ஊரோரம் புளியமரம் (சரோஜா, பாண்டி, லக்ஷ்மி, கார்த்திக் இசை:யுவன்)
சிவி – மாயாவி நீயா (ஹரிச்சரன், க்ரிஷ், ஸ்ருதி இசை: தரன்)
தாமிரபரணி - கட்டபொம்மன் ஊரெனெக்கு (விஜய் யேசுதாஸ் இசை:யுவன்)
பொல்லாதவன் - எங்கேயும் எப்போதும் (SPB, யோகி B, சுனிதாசாரதி இசை:ஜிவி பிரகாஷ்)
ஓரம் போ - கோழி காலு (கைலாஷ் நாயர், ஜாஷி கிஃப்ட் இசை: ஜிவி பிரகாஷ்)

இந்த வருஷம் அதிகப்படங்களுக்கு இசையமைத்தது யுவனாகத் தான் இருக்கும். ஆனால் அதில் சில படங்களுக்கு மோசமான இசை அமைந்திருந்தாலும் (மச்சக்காரன்?), பல படங்கள் அந்தந்த நேரத்தில் வரிசை பட்டியலில் நல்ல இடத்தில் தான் இருந்தன.. மற்றும் ஜிவி பிரகாஷின் பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பேற்றது உண்மை தான். அதுவும் 2008-ல் ரஜினி நடிக்கும் குஷேலன் படத்தின் இசை பொறுப்பும் ஜிவி பிரகாஷிற்கு கிடைத்துள்ளது. இன்னும் நல்ல இசை தந்து மகிழ்விக்க வாழ்துக்கள் அவருக்கு!

திரையிசையில் அழையாமல் நுழைந்து விட்ட ஒன்று ரீமிக்ஸ் பாடல்கள். மக்கள் வரவேற்றாலும் அதை எதிர்ப்பவர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது.. இந்த வருடமாவது அதன் தாக்கம் குறைந்து இசையமைப்பாளர்கள் அவர்களின் சொந்த திறனை தருவார்களா நல்லிசையாக?

7 பின்னூட்டங்கள்:

said...

இது நம்ம பட்டியலுங்க... Tamil Film Songs - Best of 2007 Movie Music « Snap Judgment

said...

\\அதுவும் 2008-ல் ரஜினி நடிக்கும் குஷேலன் படத்தின் இசை பொறுப்பும் ஜிவி பிரகாஷிற்கு கிடைத்துள்ளது. இன்னும் நல்ல இசை தந்து மகிழ்விக்க வாழ்துக்கள் அவருக்கு!\\

அப்படியா!!!..சூப்பர் ;)

said...

இங்கேயும் இன்னைக்கு ஃபர்ஸ்ட்டூ?

said...

தல.. நானும் 2007 பாடல்களின் எனக்கு பிடித்ததுன்னு ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே நீங்க போட்டுட்டீங்க. :-(

said...

பாடல் செலக்ஷன் சூப்பரு தல!

said...

உன்னாலே உன்னாலே போன வருஷமா?

said...

danga dunga va vittutingale thala? :)