கற்பூர நாயகியே கனகவல்லியும் யுவன் ஷங்கர் ராஜாவும்
என்னவாயிற்று யுவன் ஷங்கர் ராஜாவுக்கு. வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு பாடலை காப்பி அடிக்க வேண்டும் என்று வரைமுறை வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. தாஸ் படத்தில் இளையராஜாவின் நீங்கள் கேட்டவை படத்தின் அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி என்ற பாடலை, வா..வா..நீ வராங்காட்டி போ போ என்று மாற்றி போட்டவர், இரண்டு நாட்களுக்கு முன், வெளியான ஹரி இயக்கி, விஷால் நடிக்கும் தாமிரபரணி படத்தில் மற்றொரு தவறைச் செய்திருக்கிறார்.
சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ஒரு முறையாவது கேட்டிருப்பர் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய கற்பூர நாயகியே கனகவல்லி என்னும் பாடலை. அந்தப் பாடலை அப்படியே மேற்கத்திய இசை வாத்தியங்களுடன் கருப்பான கையாலே என்னை பிடிச்சான் என்று இசைத்திருக்கிறார். இதை கண்டுபிடிக்க யாருக்கும் எந்த இசைஞானமும் தேவை இருக்காது. எல்லா இசையமைப்பாளர்களும் சொல்லும், இயக்குநர் கேட்டதால் அப்படி இசைத்தேன் என்னும் அதே பல்லவியை தான் இவரும் சொல்லப்போகிறார.. என்ன காரணம் யுவன் சொன்னாலும் நல்ல இசைகளினால் மெல்ல உயரிய ஏணியில் ஏறிக் கொண்டிருக்கும் இவருக்கு இது நிச்சயம் சறுக்கலே.
(ஆனால் இந்தப் பாட்டிற்கு முன், கற்பூர நாயகியே பாட்டை கேட்டுவிட்டு நாயகி இந்த டூயட்டை கனவு காண்பது போல் டைரக்டர் ஹரி படமாக்கி இருந்தால் நான் பொறுப்பல்ல)
31 பின்னூட்டங்கள்:
//கற்பூர நாயகியே பாட்டை கேட்டுவிட்டு நாயகி இந்த டூயட்டை கனவு காண்பது போல்//
ROTFL :) yow! adhu saami paatu, atha kettutu, love song dreamaaa?
copy adikarathula Deva thaan pashtu! suriyan padathula kandha shashti kavasatha kaapi adichaare! :p
ithu ellam too much! :)
//copy adikarathula Deva thaan pashtu! //
அம்பி, தேவாவை மிஞ்ச ஆளே கிடையாது.. இங்கே வந்த பிறகு buffalo soldierஎன்னும் ஒரு இசை ஆல்பம் கேட்டேன்.. அந்தப் பாட்டை இசை, ஹம்மிங் கூட மாறாமல் நேருக்கு நேர் படத்தில் அகிலா அகிலா என்று இசையாக்கி தான் ஒரு சிறந்த ஜெரொக்ஸ் என்று நிரூபித்து இருக்கிறார்
//என்ன காரணம் யுவன் சொன்னாலும் நல்ல இசைகளினால் மெல்ல உயரிய ஏணியில் ஏறிக் கொண்டிருக்கும் இவருக்கு இது நிச்சயம் சறுக்கலே//
நானும் அதே தான் நினைக்கிறேன். ஒரிஜினலாத் தான் டியூன் போடுவேன்னு அடம்பிடிச்சா என்ன?
ஆசை படத்தில் "புல்வெளி புல்வெளி" பாடலும் ஆங்கிலப் பாடல் ஒண்ணோட காப்பி தான்..
ஆனாலும் அக்மார்க் சாமி பாட்டை டூயட் ஆக்கறதெல்லாம் 2 மச் :)
ஏனுங்க கார்த்தி,
அடப்பாவிகளா நாளப்பின்ன கற்பூர நாயகியே பாட்டை கேட்கும் போது இந்த பாட்டுதானே ஞாபகத்திற்கு வரும். இந்த கொடுமைய தட்டிக்கேக்க ஆளே இல்லையா.
//ஒரிஜினலாத் தான் டியூன் போடுவேன்னு அடம்பிடிச்சா என்ன//
கரெக்ட் கைப்புள்ள.. ஒரிஜினாலிட்டி தான் முக்கியம்
//ஆசை படத்தில் "புல்வெளி புல்வெளி" பாடலும் ஆங்கிலப் பாடல் ஒண்ணோட காப்பி தான்.. //
ஆமாங்க அரசி
//அக்மார்க் சாமி பாட்டை டூயட் ஆக்கறதெல்லாம் 2 மச் //
இப்படித்தான் கந்த ஷஷ்டி கவசத்தை தேவா சூரியன் மாத்தினாருங்க அரசி
//நாளப்பின்ன கற்பூர நாயகியே பாட்டை கேட்கும் போது இந்த பாட்டுதானே ஞாபகத்திற்கு வரும்//
ஆமாங்க நான்.. எப்பா கேட்டாலும் ஒரிஜினல் பாட்டு கட்டாயம் நம்ம ஞாபகத்துக்கு வரும்
//ஆனால் இந்தப் பாட்டிற்கு முன், கற்பூர நாயகியே பாட்டை கேட்டுவிட்டு நாயகி இந்த டூயட்டை கனவு காண்பது போல் டைரக்டர் ஹரி படமாக்கி இருந்தால் நான் பொறுப்பல்ல//
LOL :) Directorukku neengalae idea kuduppeenga pola irukkae :)
//Directorukku neengalae idea kuduppeenga pola irukkae //
G3, நீங்க வேணும்னா பாருங்களேன் அப்படித்தான் இருக்கப் போகுது
//கற்பூர நாயகியே கனகவல்லி என்னும் பாடலை. அந்தப் பாடலை அப்படியே மேற்கத்திய இசை வாத்தியங்களுடன் கருப்பான கையாலே என்னை பிடிச்சான் என்று இசைத்திருக்கிறார்.//
அப்படி போடு! நல்லா bit அடிக்கிறாங்கப்பா!
அதை கண்டரிந்து சொன்ன உங்களுக்கு ஒரு ஓ போடணும்!
Remix kaathu ellarayum paada padutudu...
makka...somberi aagitaangapa...
//அப்படி போடு! நல்லா bit அடிக்கிறாங்கப்பா!//
சின்னபிள்ளை கூட கண்டுபிடிக்கும் அளவுக்கு ரொம்ப பட்டவர்தனமா தெரியுது இந்த பிட், ட்ரீம்ஸ்
//அதை கண்டரிந்து சொன்ன உங்களுக்கு ஒரு ஓ போடணும்! //
ஹிஹிஹி..நன்றிங்கோவ் ட்ரீம்ஸ்
/somberi aagitaangapa... //
amanGka manNdu
Ppl..., checkout the site http://itwofs.com/
It has the database of copied songs in all Indian languages.
//(ஆனால் இந்தப் பாட்டிற்கு முன், கற்பூர நாயகியே பாட்டை கேட்டுவிட்டு நாயகி இந்த டூயட்டை கனவு காண்பது போல் டைரக்டர் ஹரி படமாக்கி இருந்தால் நான் பொறுப்பல்ல)//
நீங்கள் இவ்வளவு புத்திசாலியா???? :)
//It has the database of copied songs in all Indian languages. //
Thanks Anon
//நீங்கள் இவ்வளவு புத்திசாலியா????//
ஹிஹிஹி..ஏதோ நிறைய படங்கள் பாக்குறதால தான் தூயா
ada ella padathulayum indha remixa vachidurangapa...
neenga assistant director rangeku yosikareenga pa...i mean directorku neengale eduthu kodukareenga...ippadi patta aal thevainu kodambakkathula news varudhu...adhu oru part timea pannunga..
//neenga assistant director rangeku yosikareenga pa...i mean directorku neengale eduthu kodukareenga...ippadi patta aal thevainu kodambakkathula news varudhu...adhu oru part timea pannunga..
//
ellaam paakkura chinema effect thaan one among u
This particular song claimed to be a remix of the old one...that's what the claim in musicindiaonline.com
//This particular song claimed to be a remix of the old one...that's what the claim in musicindiaonline.com//
Is It? Then you they have changed the lyrics anon.. These guys will tell something..
ஹலோ அடங்குங்க. இந்த பாட்டு ரீமிக்ஸ். காஃபி இல்ல. யுவன் காஃபி அடிச்சா உங்களால கண்டுபிடிக்க முடியாதபடி தான் அடிப்பான். இப்படி வெளிப்படையா இல்ல. ரிதமும் அதே பாட்டு. ஸோ, இது ரீமிக்ஸ்.
உதா, முன் பனியா - பூங்காற்றிலே.
//Is It? Then you they have changed the lyrics anon.. These guys will tell something.. //
See, you might have felt bored hearing the same lyrics. Also, the situation may vary in the film. Also, the old one is devotional and this seems to be a duet / kuththu.
//See, you might have felt bored hearing the same lyrics. Also, the situation may vary in the film. Also, the old one is devotional and this seems to be a duet / kuththu.//
eppaa yuvanukku eppadi oru supporta cheenu :-)
//eppaa yuvanukku eppadi oru supporta cheenu :-)//
ஆமாம் கார்த்தி. உண்மையாவே நான் யுவன் விசிறி தான். அவன் இசையில் பிசிறு அவ்வளவா இருக்காது.
More over, background score excellent-ஆ இருக்கும் (புதுப்பேட்டை, க்ளைமேக்ஸ்ல சூப்பரா ஸ்கோர் பன்னியிருப்பான்). ஹாரிஸ் ஜெயராஜ் பார்த்தீங்கன்னா கஜினி, அன்னியன் ஆகிய இரண்டு படங்களின் background score-ம் ஒரே மாதிரி தான் இருக்கும். பாடல்களும் 4-5 ட்யூன் தான் ரிப்பீட்டாகும்.
அதுவும் புதுப்பேட்டையில் ஒவ்வொரு பாடலுக்கும் புதுப் புது வாத்தியக் கருவிகள் உபயோகப்படுத்தியிருப்பார். ஏனோ ஷங்கரும் ரஜினியும் அவனை உபயோகப்படுத்தவில்லை. காரணம், அன்னியனின் பாடல்கள் அனைத்தும் வேஸ்ட். பார்க்க வைத்தது ஷங்கரின் picturization. விஜயகாந்ந்திற்கு போட்ட தென்னவன் டப்பாங்குத்து பாடல்களை கேட்டிருக்கிறீர்களா? நல்லாவே இருக்கும்.
நா.முத்துக் குமாருக்கும் யுவனுக்கும் அப்படி ஒத்துப் போகும். பாடல் வரிகள் நன்றாக இருக்கும்.
பட்டியல் - 'கண்ணை விட்டு கண்ணிமைகள் விடை கேட்டால்'
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது - 'ஓடிவா காதலே' பாடலில் வரும்
"மின்சாரம் தொலையும் இரவினிலே தன் காதலைச் சொல்லும் தெருவிளக்கு.
(அதேபோல) நீ இமைகள் மூடும் இடைவெளி தான் என் காதல் சொல்வதற்கு"
கண்ட நாள் முதல் - 'மேற்கே மேற்கே' பாடல். (இது அவனுடைய பாடலான காதல் கொண்டேன் பாடல் 'மனசு ரெண்டும் பார்க்க' தான்)
"இது நீரின் தோளில் கை போடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்"
அழகான உவமை.
பினாத்தல் சுரேஷ் பதிவு பாருங்க :-)
//கண்ட நாள் முதல் - 'மேற்கே மேற்கே' பாடல். (இது அவனுடைய பாடலான காதல் கொண்டேன் பாடல் 'மனசு ரெண்டும் பார்க்க' தான்)
"இது நீரின் தோளில் கை போடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்"
அழகான உவமை. //
யுவனை பற்றிய அழகான விரிவுரை, சீனு..
//பினாத்தல் சுரேஷ் பதிவு பாருங்க //
கட்டாயம் படிக்கிறேன் அரசி
இந்த மாதிரி மத்தவங்கப் ட்யூன காப்பி அடிக்கிறவங்களப் பாக்கும்போது , தான் போட்ட ட்யூன மட்டுமே(?) காப்பி அடிக்கிற எஸ். ஏ. ராஜ்குமார் எவ்வளவோப் பரவால்ல போல :))))
Post a Comment