Saturday, December 16, 2006

தாம் தூம் ஜெயம் ரவி, ரத்தக்கண்ணீர் சத்யராஜ்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 16

சிட்டுக்குருவிக்கு நேற்று ஒரு பார்சல் வந்தது அதோட லவ்வர்கிட்டயிருந்து.. ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு மறுபடியும் காதல் கோட்டை படத்தை ஓட்டுறாங்கப்பா.. அந்த பார்சலில், ஒரு அழகான ஸ்வெட்டர் இருந்தது.. ரோஸ் கலர்ல.. இதயப் பகுதில சிவப்பு கலர்ல ஒரு சின்ன இதயம் அழகா பின்னப்பட்டிருந்தது.. இப்போ எல்லாம் சிட்டுக்குருவி அந்த ஸ்வெட்டரோட தான் வாழ்க்கையை ஓட்டுது.. அது மட்டுமில்ல குளுருக்கு இதமா ஒரு சின்ன குல்லா.. அது வெள்ளை சிவப்பும் கலந்த வண்ணத்தில் இருந்தது.. கால்களுக்கு ரோஸ் கலர்ல சாக்ஸ் வேற.. சிட்டுக்குருவியை பாக்க அவ்ளோ க்யூட்டா இருக்குங்க. சே.. என்ன மாதிரி ஒரு லவ் இருந்தா இம்பூட்டு அழகா ஒரு ஸ்வெட்டரை அந்த லவ்வர் குருவி அனுப்பி இருக்கும்.. சே.. எப்படி பொறாமையாய் பாக்கதப்பான்னு சிட்டுக்குருவி நக்கல் வேற அடிக்குது.. ஹ்ம்ம்..நானும் பாரதி மாதிரி, வேற வழி இல்லாமல், நிற்பதுவே நடப்பதுவேன்னு இயற்கையை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

சரி இப்போ சில சினி பிட்ஸை கொறிக்கிற நேரம்...

ரீமேக் ஜூரம் இப்போ கோடம்பாக்கத்தில் ரொம்பவே பரவிகிடக்கு.. பில்லாவை அஜித்தும், முரட்டுக்காளையை விஜயும் ரீமேக் செய்வது ஊரே அறிஞ்ச ரகசியம்.. எப்போதும் வாய்சவடால் பேசும் சிம்பு, தான் மட்டும் என்ன அவர்களைவிட குறைவான்னு, தானும் ஒரு ரஜினி படத்தை கையில தூக்கிகிட்டு நடிக்க போறாராம்.. ஏற்கனவே இப்படி பேசிப் பேசியே வல்லவன்ல வாங்குன காயத்துக்கு மருந்து போட்டுகிட்டு இருக்கும்போதே.. மறுபடியுமா சிம்பு.. இப்போ விஷயம் அது இல்ல.. நம்ம சத்யராஜும் எம்.ஆர்.ராதா நடிச்சு பின்னு பின்னுனு பின்னின ரத்தக்கண்ணீரை ரீமேக் பண்றதுல நடிக்கப்போறாராம்.. ஹ்ம்ம். இன்னும் எத்தனை படம் ரீமேக் ஆகப்போகுதோ..

குத்து படத்துல சிம்பு கூட குத்தாட்டம் போட்ட ரம்யா, அதுக்கு பிறகு கிரில அர்ஜூன்கூட காதல் பண்ணிட்டு, ஒரு வாய்ப்பும் வராம கன்னடப் பக்கம் போயிட்டாரு.. அங்கே உடல் இளைச்சு ஸ்லிம் ஆகி, பெரிய நடிகர்களுடன் ஒரு ரவுன்டு வந்தா, நடிச்ச படமெல்லாம் செம்ம ஹிட்டு.. ஆனாலும் அவருக்கு கோலிவுட் மேல ஒரு கண்ணு இருந்துகிட்டே இருந்தது.. இப்போ அந்த கனவை டைரக்டர் கௌதமன் நினைவாக்கி வச்சிருக்கார். அவர் சூர்யாவை வச்சு எடுக்கும் வாரணம் ஆயிரம் படத்துக்கு அம்மணி தான் ஹீரோயின்..

இந்த வருஷம் கோலிவுட்ல கல்யாண சீசன் போல.. சூர்யா, ஜோதிகாவுக்கு தாலியை கட்ட, அந்தப் பக்கம் விஜயகுமார் மகன் அருண்குமார் திருமணம் முடிச்சார். இப்போ தான் பாரதிராஜா பையன் மனோஜுக்கு கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள செல்வராகவன்-சோனியா திருமணமும் முடிந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினி தலைமைல.. எல்லா தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள். ஆனா சோனியா எப்பவும் போல மணமேடைல கூட ஒரு மாதிரி சோகமா இருக்காரே.. எனுங்க அம்மணி..நீங்க எப்பவுமே எப்படித்தானா?

இம்சை அரசனுக்குப் பிறகு மறுபடியும் வடிவேலு கதாநாயகனா வர்றார். படத்துக்கு பேர் இந்திரலோகத்துல நா அழகப்பன்.. இது சிவாஜி நடிச்சு வெளிவந்த ஒரு படத்தின் கதையாம்.. பூலோகத்துல இருக்க ஒருத்தன் இந்திரலோகம் போய் ரம்பையை காதலிக்கிற படமாம். இது ரம்பையா நடிக்க ஹிந்தி நடிகை ஷில்பா செட்டியை கேட்டிருப்பாங்க போல.. மறுபக்கம் சிம்ரனுக்கும் வலைவீச்சு நடக்குதாம்.. பார்ப்போம் இந்த அழகப்பன் எந்த ரம்பையோட ஆடப்போறாருன்னு.

இளமையா காட்சிகளை மட்டுமல்ல படத்தை கொடுப்பதிலும் ஜீவா பெரிய ஆளுதான்.. 12பி படத்துல ஷ்யாமை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தந்து உள்ளம் கேட்குமேல அசின், பூஜா, ஆர்யாவை (மூவரும் முதலில் ஒத்துக்கொண்ட படம் இது தான்) தந்து, இப்போ வெளிவரப் போகும் உன்னாலே உன்னாலே படத்துல வினய், தனிஷான்னு ஒரு ரெண்டு பேரை அறிமுகப் படுத்தி இருக்கார்.. இப்போ இவரோட அடுத்த படத்துல ஜெயம் ரவி தான் ஹீரோ.. படத்து பேர் தாம் தூம்... எப்பவும் போல படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் தான். படம் புக்கானதுல இருந்து ஜெயம் ரவி தாம் தூம்னு தான் வீட்ல குத்திக்கிறாரம்..

அப்புறம் இன்னொரு விஷயம். ஜெயம் ரவி வர்ற பொங்கல்ல தீபாவளி கொண்டாட போறார்..அட..இவரோட தீபாவளி படம் அப்போதானே ரிலீஸ் ஆகுது.. ஏற்கனவே நாலு படம் சேர்ந்து வந்தா ஓட்டடுறதுக்கு தியேட்டர் இல்ல.. இப்போ இந்த பொங்கலுக்கும் அதுக்குத் தான் பிரச்சனையே..அஜித் ஆழ்வாரா உங்களையெல்லாம் ஆள வர்றார்.. விஜய் போக்கிரியா வர்றார். இது இல்லாம எஸ்ஜே சூர்யா வியாபாரியா வர்றார்.. அட தியேட்டர் கிடைக்காதது அவங்க பிரச்சனை.. நாம எல்லாம் சக்கரை பொங்கல் வாயிக்கு மட்டுமல்ல, கண்ணுக்கும் கொடுப்போம்..

ஏங்க மேல ஒரு ஆறு சினிமா விஷயம் இருக்குமாங்க.. இதை சொல்லி முடிக்குறதுக்குள்ள எத்தனை தடவ அந்த ஸ்வெட்டரை தொட்டு பாக்குறது.. எத்தனை தடவை அதுக்கு முத்தம் கொடுக்குறது.. இருந்தாலும் இந்த சிட்டுக்குருவி பண்றது ரொம்பவே டூ மச்.. என்ன மாதிரி ஒரு மனுஷனை முன்னடி வச்சுகிட்டு இப்படி கடுப்பேத்தலாமா.. சே.. வேற வாழி இல்லாம நாலஞ்சு ஐஸ் கியூப்களை அப்படியே முழுங்கினேன்..ஹ்ம்ம்.. எரியிற வயிறை அணைக்கத் தான்.

(அடுத்த பதிவு - பாமரனின் போக்கிரி பாடல்கள் விமர்சனம்)

20 பின்னூட்டங்கள்:

said...

Aaha.. aanalum unga chittu kuruvi overa romance ududhu.. :)

Aaha.. vadivelukku simran jodiya? kekkavae kastama irukkae :(

Enna kodumai idhu KM? :D

said...

//aanalum unga chittu kuruvi overa romance ududhu//
அதைப் பாத்து எனக்கு பொறாமையா இருக்கு G3

//Enna kodumai idhu KM?//

என்ன பன்றதுங்க அனுபவிச்சு தான் ஆகனும் G3

said...

//
நானும் பாரதி மாதிரி, வேற வழி இல்லாமல், நிற்பதுவே நடப்பதுவேன்னு இயற்கையை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
//
ROTFL :)

unga chittuk'kamali'.. chi.. chittukuruvi romance super :)

தலைவா, எப்பிடி இவளோ டூடெய்ல்ஸ் கெடைக்குது... சூப்பர் சினிமா செய்திகள் சுடச் சுட :)

said...

ரத்தக் கண்ணீர் -- சத்யராஜ் நல்லா இருக்குமா..


ராதரவியின் ஏற்ற இறக்கத்துக்கு

கோயம்புத்துர் லொல்ளு வா..

அது சரி இம்பூட்டு விசயத்த பிட்டு பிட்டுவைக்கீறீங்களே...
எப்படிப்பா? உங்களால மட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

வடிவேலுவும் ஷில்பா/சிம்ரனுமா?
Black and White படம் போல...

சொம்பு வல்லவனுக்கு பெறகும் ஆட்டத்த நிறுத்தலியா?

said...

eppadi karthik ivvalavu cine bits collect panreenga??
[ office la vela over, comments publish kooda panna mudila nu peela vitta inimey namba matein]

said...

//தலைவா, எப்பிடி இவளோ டூடெய்ல்ஸ் கெடைக்குது... சூப்பர் சினிமா செய்திகள் சுடச் சுட //

என்ன ருண்..எப்டி கேக்குறீங்க.. சிட்டுக்குருவி என்னை கோபிச்சுக்கப் போகுது..

எல்லாம் சிட்டுக்குருவி தான் அருண்

said...

/ரத்தக் கண்ணீர் -- சத்யராஜ் நல்லா இருக்குமா..//

உடம்பு வளச்சு அவர் மாதிரி சத்யராஜால் நடிக்க முடியுமான்னு தெரில.. பார்ப்போம் மணி

//அது சரி இம்பூட்டு விசயத்த பிட்டு பிட்டுவைக்கீறீங்களே...
எப்படிப்பா? உங்களால மட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
//

மணி..எல்லோரும் எப்படி கேட்ட சிட்டுக்குருவி என்னை தான் கொல்லப் போகுதுப்பா
//

said...

//சொம்பு வல்லவனுக்கு பெறகும் ஆட்டத்த நிறுத்தலியா?
//

ஆமா அருண்..அது தான் இன்னும் புரில..

said...

/eppadi karthik ivvalavu cine bits collect panreenga?? //

திவ்யா.. எல்லாம் சிட்டுக்குருவி தான்

//
[ office la vela over, comments publish kooda panna mudila nu peela vitta inimey namba matein]

//

அய்யோ திவ்யா.. இதை எல்லாம் தருவது சிட்டுக்குருவி தான்.. நம்புங்கப்பா

said...

சினிமா செய்தியை ஸ்கிப் பண்ணிட்டேன் (ஆர்வமில்லை)
சிட்டுக்குருவி ரொமான்ஸ் பத்தி தான் அனுபவிச்சு எழுதியிருக்கீங்க :-D

Anonymous said...

//அவர் சூர்யாவை வச்சு எடுக்கும் வாரணம் ஆயிரம் படத்துக்கு அம்மணி தான் ஹீரோயின்..//

அட.. ஆண்ட்ரியாதான் ஹீரோயின்னும் சொன்னாங்க.. என்னாச்சு அவருக்கு?

//சோனியா எப்பவும் போல மணமேடைல கூட ஒரு மாதிரி சோகமா இருக்காரே.. //

நான் பார்த்த ப்ஹோதோவிலெல்லாம் சிரிச்சு கொண்டுதான் இருந்தார் கார்த்திக்.:-)

C.M.HANIFF said...

Cinema sittu news super ;)

said...

//சிட்டுக்குருவி ரொமான்ஸ் பத்தி தான் அனுபவிச்சு எழுதியிருக்கீங்க //

நன்றிங்க அரசி

said...

//ஆண்ட்ரியாதான் ஹீரோயின்னும் சொன்னாங்க.. என்னாச்சு அவருக்கு?
//

ரெண்டு பேரும் தான் மை பிரண்ட்

said...

//Cinema sittu news super //

thanks haniff

said...

சிட்டுக் குருவி என்ன தான் காதல்ல பிஸியா இருந்தாலும் ட்யூட்டிய கரெக்டா பாக்குதே..

//நானும் பாரதி மாதிரி, வேற வழி இல்லாமல், நிற்பதுவே நடப்பதுவேன்னு இயற்கையை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.//
LOL.. நல்ல முடிவு..

//ஆனா சோனியா எப்பவும் போல மணமேடைல கூட ஒரு மாதிரி சோகமா இருக்காரே.. //
அதானே..

Anonymous said...

aaha..super..eppadi intha news ellam collect paneenga! mudhalamichar enbathal special reporta?

said...

//சிட்டுக் குருவி என்ன தான் காதல்ல பிஸியா இருந்தாலும் ட்யூட்டிய கரெக்டா பாக்குதே..//

ப்ரியா.. எப்படி எல்லாம் சப்போர்ட் பண்ணக்கூடாது

said...

//aaha..super..eppadi intha news ellam collect paneenga! mudhalamichar enbathal special reporta?//

ஹிஹிஹி..எல்லாம் சிட்டுக்குருவி வேலை தான் ட்ரீம்ஸ்