Saturday, December 02, 2006

பில்லா ரீமேக்கில் அஜித் - சூடான சினிமா செய்திகள்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 15

மாறிவரும் தட்ப வெட்ப சூழ்நிலையில் நம்ம சிட்டுக்குருவி ரொம்ப அல்லாடிகிட்டு இருக்கு. குளிர்ல எங்க தங்குறதுன்னு அதுக்கு ஒரே பிரச்சனை. நம்ம கூட வந்து இந்த பனிகாலத்துல தங்கிக்கலாமான்னு கேட்டது.. நானும் ஓகே சொல்லிட்டேன்.. அதனால இனிமேல் சிட்டுக்குருவியோட நியுஸ் சுடச்சுட உங்களுக்கு கிடைக்கும். வழக்கம்போல இந்த தடவையும் அது நியுஸ் பேக்ஸ்ல அனுப்பிடுச்சு..

வதந்தியாக சொல்லப்பட்ட பில்லாவின் ரீமேக்கில் அஜித் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தை டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். எல்.சுரேஷ் ஆனந்த பிக்சர்ஸ்க்காக தயாரிக்க, யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய படம் மார்ச் 2007 ஆரம்பிக்கிறது. இதற்காக விஷ்ணு ஸ்க்ரிப்ட் எழுத தொடங்கிவிட்டார். ஒரிஜினல் படத்தின் இரண்டு புகழ் பெற்ற பாடல்களான 'மை நேம் இஸ் பில்லா'வும் 'வெத்தலையை போட்டேண்டி'யும் புதிய ஆக்கத்திலும் ரீமிக்ஸ் ஆக வரப் போகிறது. ரஜினியிடமும் இது பற்றி பேசி ஒப்புதல் வாங்கிவிட்டதாக தெரிகிறது.

ராஜீவ்காந்தி கொலையை மையப்படுத்தி ஆர்.கே.செல்வமணி தயாரித்து இயக்கிய குற்றப்பத்திரிக்கை படம் 14 ஆண்டுகளுக்கு பல சோதனைகளை தாண்டி இன்னும் ஒரு மாதத்தில் வெளிவருகிறது. சென்னை உயர்நீதி மன்றம் பல சர்சைக்குள்ள காட்சிகளை நீக்கிய பிறகு படத்துக்கு 'ஏ' சர்டிபிகட் கொடுத்து படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது.

வடிவேலுவை போலவே விவேக்கும் சொல்லி அடிப்பேன் படத்தில் நகைச்சுவை கதாநாயகனாய் நடித்து வருவது தெரியும். ஆனால் கிட்டதட்ட இரண்டு வருட காலமாக இழுத்துக்கொண்டிருந்த படம் வெளிச்சத்தை விரைவில் பார்க்கப்போகிறது. ரஜினி, ஷங்கர், பாலசந்தர் முன்னிலையில் இந்த படத்தின் ஆடியோ கேசட் வெளியானது.

இது சந்தானம் காலம்.. ஆம்.. லொள்ளு சபா சந்தானம் தற்போது மிக அதிக படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இவரின் இயல்பான வசன உச்சரிப்பும் டைமிங் காமெடியும் ரசிகர்களை கவர்ந்திருப்பதாக தெரிகிறது. தர்போது கீரீடம் (மகுடம்), அழகிய தமிழ் மகன், வியாபாரி போன்ற பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இரட்டை அர்த்த கமெடியை தவிர்த்தால் முன்னுக்கு வரலாம் இந்த சந்தானம்.

இப்போதைக்கு இவ்ளோதாங்க நியுஸ். சிட்டுக்குருவி வீடு ஷிப்ட் பண்றதுல மும்மரமா இருக்கிறதால இப்போதைக்கு அப்பீட்..அப்புறம் ரிப்பீட்..

25 பின்னூட்டங்கள்:

said...

சிட்டுக்குருவிக்கு தேங்க்ஸ் :)
சந்தானம் பத்தி சொன்னது ரொம்ப கரெக்ட் !!!

Anonymous said...

Super news Karthik... Ajith super'a suit aavar for Billa... Hope they make the movie interesting...

said...

//Ajith super'a suit aavar for Billa//

@KK, ennathu ithu...I strongly disagree with this....singam irundha idathula...venam naan sollala... :-)

said...

KM, ithu ellam tooooooooo much..எங்களூக்கு கொஞ்சம் படிக்கறதுக்கு டைம் குடுங்க...இல்ல அதிகமா எழுதறதுக்கு மேட்டர் இருந்தா..ஈமெயில்ல எனக்கு அனுப்புங்க..உபயம் நம்ம சி.எம் னு போட்டு நான் போஸ்ட் போடுறேன் :-)

C.M.HANIFF said...

Romba nanri sittukuruvikku

said...

நல்லபடியா எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்திருக்கீங்க, ரொம்பவே சந்தோஷம், உங்களோட டாகை நாளைக்குப் போடறேன். அப்புறம் அசினை விட்டாச்சா? ஊர் உலகத்திலே, நாட்டுலே நடப்பு எல்லாம் எப்படி? எல்லாம் ஒண்ணொண்ணாக் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன். அப்புறமா வரேன்.

guru said...

Ajith will perfectly fit into the character. That character requires
- Gethu
- Typical sarcastic actor
- Villan ( Vaali, Varalaaru )
- DON (Dheena, Attagaasam (Thala pola varuma))

Ajith will fit the bill for these kind of gangster and DON characters.

Karthi, Thanks for the update

We can soon expect yet another
THALA POLA VARUMA in

MY NAME IS BILL

:-)

Cheera

said...

சிட்டுக்குருவி, செம form ல இருக்கு போல..
பில்லாவா அஜித்தா? LOL

said...

கலக்கு சிட்டு..

said...

vazhakam pola suda suda cinema newz...but naan ippa chennai-la irukaradhu naala idhellam namaku yerkanaver theriyum Maams :)

said...

Chittukuruvikku nanri. One question. Billa's original 'Don' was remade in Hindi with SRK. Will the tamil remake be a remake of this new 'Don' or a Tamil original?

Matrapadi, Santhanam comment, romba sari

Cheers
SLN

said...

syam,
carita sonninga... enna ezhuduradunnu theriyaame inga evalo peru irukkom :(

said...

//சிட்டுக்குருவிக்கு தேங்க்ஸ் :)
சந்தானம் பத்தி சொன்னது ரொம்ப கரெக்ட் //

உங்க நன்றியை குருவிக்கு சொல்லிட்டேன்..

said...

//Super news Karthik... Ajith super'a suit aavar for Billa... Hope they make the movie interesting... //

correct KK..

said...

//singam irundha idathula...venam naan sollala...//

shyam.. athu vera onnum illai.. pon vaikkira idathula poo vaikkira maathiri..

said...

//எங்களூக்கு கொஞ்சம் படிக்கறதுக்கு டைம் குடுங்க...இல்ல அதிகமா எழுதறதுக்கு மேட்டர் இருந்தா..ஈமெயில்ல எனக்கு அனுப்புங்க..உபயம் நம்ம சி.எம் னு போட்டு நான் போஸ்ட் போடுறேன் //

கட்டாயம் அனுப்புறேன் நாட்டாமை.. அப்புறம் இந்த ஸ்பீடை குறைச்சுக்குறேன்

said...

//Romba nanri sittukuruvikku //

unga nanriyaiyum pass pnniiten kuruvikku haniff

said...

//அப்புறம் அசினை விட்டாச்சா? ஊர் உலகத்திலே, நாட்டுலே நடப்பு எல்லாம் எப்படி? எல்லாம் ஒண்ணொண்ணாக் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன். //

அசினை விட்டாச்சா.. அடேயப்பா.. அதெப்படி..மனசுக்குள்ள போட்டு அப்படியே வச்சு இருக்க ஆள அப்படி சாதாரணமா விட்டுவிட முடியும மேடம்.. ஒரே மாதிரி பதிவு போட்டா எப்ப பாத்தாலும் அசின் புராணம்னு சொல்வீங்கள்ல அது தான்..

சீக்கிரம் ஒரு பதிவை போட்டுடுடவேண்டியது தான்

said...

/Ajith will fit the bill for these kind of gangster and DON characters.

Karthi, Thanks for the update
//

appadi podunga guru..namma thala pola varuma enna..

said...

//சிட்டுக்குருவி, செம form ல இருக்கு போல..
பில்லாவா அஜித்தா? LOL //

அய்யோ ப்ரியா அதை ஏன் கேக்குறீங்க. நம்ம வீட்டுக்கு வரப் போற சந்தோசத்துல பயங்கர formல இருக்கு

said...

//கலக்கு சிட்டு..//
உங்க பாரட்டுக்களை சிட்டுக்குருவிக்கு பாஸ் பண்ணினேன் ரவி.. நீங்க நட்சத்திரமா வந்ததுக்கு பாராட்டு சொல்ல சொன்னுச்சு..

said...

//naan ippa chennai-la irukaradhu naala idhellam namaku yerkanaver theriyum Maams//

athuvum sari thaan

said...

//Will the tamil remake be a remake of this new 'Don' or a Tamil original?
//

from tamil original only SLN..

said...

//syam,
carita sonninga... enna ezhuduradunnu theriyaame inga evalo peru irukkom //

arun, enna ithu.. Naattamai kooda kaiya kOththutteenGka

Anonymous said...

Eagerly waiting for thalai's Billa 2007...........
The one & only man.........