Thursday, December 14, 2006

அடித்த மொட்டையும் ஆறாம் வகுப்பும்

கார்த்தி உனக்கு தம்பிதோட்டம் ஸ்கூல்லயே இடம் கிடச்சுடுச்சுன்னு செலெக்சன்ல டெஸ்ட்ல பாஸான விவரம் லெட்டெர்ல வந்ததை என் அப்பா படிச்சு பாத்துட்டு சொன்னார். பாவம் அந்த ஸ்கூல்.. எனக்கெல்லாம் படிப்பு சொல்லித் தரப்போவுதுன்னு நினச்சுகிட்டேன். ஆனா விதி வலியது..என்னை அங்கே சேர விடல.. மதுரைக்கு பக்கத்துல இருக்க சோழவந்தான்ல, பிரசித்தி பெற்ற விவேகானந்தா மிஷன் ஒண்ணு இருக்கு.. அதுல சேர்ந்த நல்லதுன்னு என் அப்பாவோட தூரத்து தம்பி ஒருத்தர் சொல்ல நான், என் அப்பா, அவர் மூணு பேரும் அங்கே சேருவதற்கு போனோம்.. ஆனா அங்கே பள்ளில படிக்கிறவங்களுக்கு ஹாஸ்டல் வசதி இல்லைனும் அப்படி வேணும்னா கொடைக்கானல் போற வழில ஊத்து என்னும் இடத்தை தாண்டி, பண்ணைக்காட்டுப் பிரிவுல இருக்க விவேகானந்தா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல ஹாஸ்டல் வசதி இருக்குன்னு சொன்னாங்க.. எனக்கு என்னமோ அங்கே சேர்றதுக்கு ஆசை.. ஆனா வீடு நிதி நிலமை ஒத்து வரல..ஆனா என் முகம் சோகத்துல சுருங்கி போனதை பாத்த என் அப்பா அங்கேயே சேத்து விடுறேன்னு சொன்னார். ஆனா அதுக்கு பின்னாடி அவர் எவ்வளவு கஷ்டப்படணும்னு அப்போ அந்த சின்ன வயசுல தெரில.. ரொம்ப சந்தோசத்துல அந்த பள்ளில போய் நானும்சேர்ந்துட்டேன்..

அந்த பள்ளியை விவேகானந்தா மிஷன் நிர்வகித்து வந்ததால அதை ஒரு சாமியார் தான் நிர்வகிச்சு வருவார். எங்க பள்ளியையும் அப்படி ஒருத்தர் தான் நிர்வகித்து வந்தார். அவரை நாங்கள் பிரதர்னு தான் அழைப்போம்.. அவர் முழுக்க வெள்ளையாடை தான் அணிவார்.. வேஷ்டி துண்டு தான் அவரின் பிரதான ஆடை.. நானும் இன்னும் சில நண்பர்கள் சுரேஷ், இளையராஜா, முத்துக்குமார் போன்றோர் அவரின் ஆஸ்தான சீடர்கள் மாதிரி.. எங்களுக்கு அவர் தனியாக இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு நிறைய கதை சொல்லி கருத்தும் சொல்வார்.. அதனால எங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும், கதை நிறைய சொன்னதால..

அங்க ஹாஸ்ட்டலில் உணவு பரிமாறுவதென்பது எங்களுக்கிடையே பகிர்ந்து கொடுக்கப்பட்ட வேலை.. வாரம் ஒரு குழுன்னு இதை எல்லாம் கவனிக்கனும்.. சும்மா சொல்லக்கூடாது.. எப்போ யாரை கேட்டாலும் அவங்க இருந்த ஹாஸ்டல் சாப்பாடு பத்தி கதை கதையா கட்டுக்கட்டாய் குறைகள் சொல்வார்கள்.. ஆனால் இங்கே சாப்பாடு என்பது வீட்டுச் சாப்பாடுக்கு நிகரானது. அவ்வளவு ருசியா இருக்கும்.. அதுவும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.. நான் ஆறாவது படித்த அந்த நேரத்தில் எட்டாவது படித்த சிவக்குமார் என்னும் பையன் கிட்டதட்ட பதினாறில் இருந்து இருபது சப்பாத்தி வரை சாப்பிடுவான்.. சாப்பிடுவதற்கு முன்னால் சாமியை, அன்னலட்சுமியை கும்பிட்டு தான் சாப்பிடுவோம்.. மூணு வேலை பூஜை உண்டு.. தினமும் மாலை முக்கால் மணி நேர பெரிய பூஜை உண்டு.. நானும் மேற்சொன்ன நன்பர்கள் தான் பக்தி பாடல்கள் பாடுவதிலிருந்து, பக்கத்தில் இருந்த பாய்ஸ் டவுனில் போய் பூக்களை பறித்து வந்து சாமிக்கு மணியடிச்சு தீபாரதனை காண்பிப்பது வரை எல்லாமே நாங்கள் தான்.. ஒவ்வொரு முறை வீட்டுக்கு லீவில் வரும் போதும், சாப்பிடும் போது அந்த மந்திரங்களை சொல்லும் என்னை என் தாய் தந்தையர் பெருமிதத்தோடு தான் பார்த்தார்கள்..

ஒரு முறை அந்த பிரதர் எங்களை மொட்டை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதால் (என்னென்ன காரணங்கள் சொன்னார் அவர் இதற்காக என்று ஞாபகம் இல்லை) நாங்கள் அனைவரும் மொட்டை போட்டுக் கொண்டோம்.. அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனோம்.. இந்த பிரதரையும் அவரது செயல்களையும் பிடிக்காதவங்கன்னு சில பேர் ஆசிரியர்களாய் இருந்தார்கள்.. அவர்களுக்கு எங்களை பார்த்தவுடன் அதிர்ச்சி.. பயங்கரமாய் கிண்டல் செய்தார்கள்.. இப்படி எல்லாம் இந்த சின்ன வயசுல மொட்டை எல்லாம் போடக்கூடாதுன்னு சொன்னாங்க.. கிளாஸ்ல வருகை பதிவேடு எடுக்கிறப்போ எல்லாம் என்னை கார்த்திகேயானந்தா என்று தான் பெயர் சொல்வார்.. என் நண்பர்களுக்கும் இதே கதை தான்.. அப்போ ரொம்ப எங்களுக்கு அவமானமா இருந்தது. எது சரி எது தவறுன்னு தெரியாத சின்ன வயசு அது.. இருந்தாலும் இனிமேல் பிரதர் சொன்னாலும் மொட்டை அடிக்கக் கூடாதுன்னு அப்போ முடிவு பண்ணினோம் நாங்க..

எங்கள் பள்ளியை ஒட்டிதான் மஞ்சளாறு ஓடுகிறது.. தினமும் காலை ஐந்து முப்பதுக்கே ஹாஸ்டலில் எழுந்திருக்க வேண்டும்.. அங்கேயே குளிப்பவர்கள் குளிக்கலாம்.. சுடுதண்ணி எல்லாம் கிடைக்கும்.. பிரதர் கூட ஆற்றுக்குக் கூட செல்லலாம்.. நான் பெரும்பாலும் ஆற்றுக்கு தான் செல்வேன்.. அங்கே நீச்சல் தொட்டி மாதிரி பாறையிலே இருக்கும்.. நீச்சல் தெரியாத நாங்க எல்லாம் அதில் தான் விழுந்து குளிப்போம்.. நீச்சல் தெரிந்த பசங்க, அதுக்கு மேல ஒரு பத்தடி உயரத்துல இருந்து குதிச்சு குளிப்பாங்க.. என்னடா கிராமத்துல இருந்து வந்திருக்கானே..நீச்சல் கூட தெரியாதுங்குறான்னு நினைக்காதீங்க.. நான் சின்ன வயசுல நீச்சல் கத்துக்கலாம்னு நினைக்கிற காலத்துல நீச்சல் கத்துக்கப் போன ரெண்டு பசங்க தண்ணில முங்கி இறந்து போனாங்க. அதுனால பயந்து போய் என்னை நீச்சல் கத்துக்க அனுப்பவேயில்லை.. அதுக்கு பிறகு ரொம்ப நாள் கழிச்சு நான் நீச்சல் தொட்டில கத்துகிட்டு எங்க ஊர் கிணத்துல இப்போ தான் டைவ் அடிச்சு பழகினேன்..

மெல்ல நானும் மேலயிருந்து அந்த பாறைத் தொட்டில குதிச்சு குளிக்க ஆரம்பிச்சேன்.. அப்படி ஒரு நாள் நான் மேலயிருந்து குதிச்சேன்.. மேலேயிருந்து குதித்ததால் சர்ருன்னு கொஞ்சம் தண்ணிக்குள்ள போயிட்டேன்.. அப்போ ஒரு முரட்டு உருவம் என் தோள் மேல ஏறி அமர்ந்தது.. என்னால மூச்சு கூட விட முடியல.. கார்த்தி நீ செத்தடான்னு மனசுக்குள்ள அம்மா, அப்பா எல்லோரையும் கடைசியா நினைச்சுக்கிட்டேன்..

(அப்புறம் எப்படி தப்பிச்சு உங்களை எல்லாம் போட்டு தாக்குறேன்னு நாளை சொல்றேன்)

தொடர்ச்சி பகுதி இங்கே

40 பின்னூட்டங்கள்:

சேதுக்கரசி said...

//நான், என் அப்பா, அவர் மூணு பேரும் அங்கே சேருவதற்கு போனோம//

ஸ்கூல்ல சேர்றதுக்கா? :-)

கடைசியில இப்படி சஸ்பென்ஸ் வச்சிட்டீங்களே!

ambi said...

felt nostolgic. nice writing karthi. waiting for d next part.

Anonymous said...

நல்ல விஷயத்தை சிலர் செய்தால், அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கறதுக்கின்னே சிலர் இருப்பாங்கன்றது உங்க கதை ஒரு எடுத்துக்காட்டு..

அப்ப, U.S.-ல இருந்து இந்தியா போனதும், நல்ல படியா போய் சேர்ந்ததுக்கு உங்க குலதெய்வத்தை வேண்டி, நீங்க மொட்டை போட மாட்டீங்களா?

கதை சுவாரஸ்யமாக போகிறது. Keep it Up

Deekshanya said...

anna
antha school nan kodai pogumbodhellam parthirukirain velila irunthu. Orange color paint thanay?? My brother in law went to vivekananda ashram in sholavandan,even he shares similar experiences of his school. He mentions always abt the kaikuthal arusi and the thick milk they serve for students. Also yoga classes, chanting, meditation etc -he still loves.

Achacho aprom antha thottiku mela epdi vanthinga?? seekram solunga?

Anonymous said...

Ungal pathivu nalla iruntathu, enakkum school days nyabagam vantathu ;)

மு.கார்த்திகேயன் said...

//ஸ்கூல்ல சேர்றதுக்கா? :-)
//

லொள்ளுங்க உங்களுக்கு அரசி :-)

மு.கார்த்திகேயன் said...

//felt nostolgic. nice writing karthi. waiting for d next part. //

Thanks ambi

மு.கார்த்திகேயன் said...

//அப்ப, U.S.-ல இருந்து இந்தியா போனதும், நல்ல படியா போய் சேர்ந்ததுக்கு உங்க குலதெய்வத்தை வேண்டி, நீங்க மொட்டை போட மாட்டீங்களா?//

ஆஹா இது என்ன புதுசா ஒரு பூதத்தை கிளப்பிவிடுறீங்க மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

/Orange color paint thanay??//

அதே அதே


//He mentions always abt the kaikuthal arusi and the thick milk they serve for students.//

மறக்க முடியுமா அதெல்லாம்
/Achacho aprom antha thottiku mela epdi vanthinga?? seekram solunga?
//
சீக்கிரம் சீக்கிரம் போட்டுடுறேன் தங்கச்சி

மு.கார்த்திகேயன் said...

//Ungal pathivu nalla iruntathu, enakkum school days nyabagam vantathu //

ஹனிஃப், நல்ல ஒரு கொசுவர்த்தியை சுத்த விடுங்க

Anonymous said...

super karthik. kalakareenga baa

Anonymous said...

Aaaha ungalukulla ipadi elam oru theramaya ;)
Tht was a very descriptive post :)
Truly enjoyed reading... :)

Syam said...

இங்கயும் சஸ்பென்ஸ்ஸா...தாங்காது சாமி :-)

Syam said...

தலீவரே..நானும் விவேகானந்தா பிராடக்ட்தான் :-)

Priya said...

ஹா ஹா குருகுலத்துல படிச்சிருக்கிங்க போல இருக்கு.
உங்க அனுபவங்கள் எல்லாமே வித்தியாசமா இருக்கு கார்த்திக்.அத interesting கா வேர எழுதறிங்க.

//எட்டாவது படித்த சிவக்குமார் என்னும் பையன் கிட்டதட்ட பதினாறில் இருந்து இருபது சப்பாத்தி வரை சாப்பிடுவான்.. //
அத நீங்க எண்ணிட்டிருப்பிங்களாக்கும்!

பிரதர் சொன்னருங்கறதுக்காக எல்லாரும் மொட்டைலாம் டூ மச் தான்.

Priya said...

//U.S.-ல இருந்து இந்தியா போனதும், நல்ல படியா போய் சேர்ந்ததுக்கு உங்க குலதெய்வத்தை வேண்டி, நீங்க மொட்டை போட மாட்டீங்களா?//

ஏற்கனவே அம்பி அலகோட காத்திட்டிருக்கார். இப்ப my friend இப்படி கிளம்பியிருக்காங்க. ஊர் பக்கம் போயிடாதிங்க!

Anonymous said...

present !! commenturen appala

Anonymous said...

Karthi,

Sentiment, action, comedy கலந்து suspense-ல விட்டிருக்கீங்க. சீக்கிரம், அடுத்த பகுதி போடுங்க. அப்படியே, ஒரு குத்துப் பாட்டும் (ஹிஹி)

Cheers
SLN

Divya said...

\"படித்த அந்த நேரத்தில் எட்டாவது படித்த சிவக்குமார் என்னும் பையன் கிட்டதட்ட பதினாறில் இருந்து இருபது சப்பாத்தி வரை சாப்பிடுவான்.. \

கார்த்திக், இப்படி பக்கத்திலிருந்து சாப்பிடுபவர்களின் சப்பாத்தியெல்லாம் எண்ணபிடாது......., அதென்ன பதினாருன்னு ஒரு கணக்கு கார்த்திக்??

கார்த்திக், ரொம்ப ஸ்வாரஸ்யிமாக இருந்தது உங்கள் பள்ளி , ஹாஸ்டல் அனுபவங்கள்....அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டீங்!

Divya said...

enna karthik, comments potta publish pana kooda time iliya ungalukku????

Arunkumar said...

school anubavame thani thaanga...

neenga meendu vandha kathaiya potrunga seekiram :)

Anonymous said...

present sir! :)

மு.கார்த்திகேயன் said...

//super karthik. kalakareenga baa //

நன்றிங்க கிட்டு

மு.கார்த்திகேயன் said...

//Aaaha ungalukulla ipadi elam oru theramaya ;)
Tht was a very descriptive post :)
Truly enjoyed reading... //

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க பொன்னா

மு.கார்த்திகேயன் said...

//இங்கயும் சஸ்பென்ஸ்ஸா...தாங்காது சாமி //

ஹிஹி..என்ன பன்றது நாட்டாமை..நீளம் அதிகமாக இருந்ததால வேறு வழி இல்லாம இப்படி முடிக்க வேண்டியதாயிடுச்சு

மு.கார்த்திகேயன் said...

//தலீவரே..நானும் விவேகானந்தா பிராடக்ட்தான்//

கையை கொடுங்க நாட்டாமை.. ஆமா எங்க படிச்சீங்க

மு.கார்த்திகேயன் said...

//உங்க அனுபவங்கள் எல்லாமே வித்தியாசமா இருக்கு கார்த்திக்.அத interesting கா வேர எழுதறிங்க. //
உங்க பாராட்டுக்கு நன்றிங்க ப்ரியா

//பிரதர் சொன்னருங்கறதுக்காக எல்லாரும் மொட்டைலாம் டூ மச் தான்.
//

அந்த வயசுல அந்த அளவுக்கு சிந்திக்கிற சக்தி இல்லியே ப்ரியா..என்ன பண்றது :-))

மு.கார்த்திகேயன் said...

//ஏற்கனவே அம்பி அலகோட காத்திட்டிருக்கார். இப்ப my friend இப்படி கிளம்பியிருக்காங்க. ஊர் பக்கம் போயிடாதிங்க!
//

மக்களுக்கு தான் என் மேல எவ்வளவு பாசம் நம்ம மேல ப்ரியா..

மு.கார்த்திகேயன் said...

//present !! commenturen appala

//

சரிங்க மணி படிச்சுட்டு வாங்க

மு.கார்த்திகேயன் said...

//Sentiment, action, comedy கலந்து suspense-ல விட்டிருக்கீங்க. சீக்கிரம், அடுத்த பகுதி போடுங்க. அப்படியே, ஒரு குத்துப் பாட்டும் (ஹிஹி)

//

SLN, நீங்க கேட்டுட்டீங்கல்ல, குத்து பாட்டு போடாமல..

மு.கார்த்திகேயன் said...

//கார்த்திக், இப்படி பக்கத்திலிருந்து சாப்பிடுபவர்களின் சப்பாத்தியெல்லாம் எண்ணபிடாது......., அதென்ன பதினாருன்னு ஒரு கணக்கு கார்த்திக்??//
அய்யோ திவ்யா.. இது எனக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம் இல்லை.. ஹாஸ்டலில் இருந்த எல்லோருக்கும் தெரிஞ்சது :-)

//கார்த்திக், ரொம்ப ஸ்வாரஸ்யிமாக இருந்தது உங்கள் பள்ளி , ஹாஸ்டல் அனுபவங்கள்....அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டீங்!
//

சீக்கிரம் அடுத்த பகுதி வருது திவ்யா

மு.கார்த்திகேயன் said...

//enna karthik, comments potta publish pana kooda time iliya ungalukku//

ஆபீசுல வேலையை அள்ளிக்கொட்டுறாங்க திவ்யா.. :-(

மு.கார்த்திகேயன் said...

//school anubavame thani thaanga...

neenga meendu vandha kathaiya potrunga seekiram//

correctaa sonneenga arun.. seekiram pottudurenga arun

மு.கார்த்திகேயன் said...

//present sir!//

பரீட்சை எல்லாம் நல்லா எழுதுங்க கார்த்திக்

Anonymous said...

Hi, U Forget Asin. Or else, I am sending Auto 2 ur house.

Anonymous said...

விவேகானந்த மிஷன் புராடக்டா..

மொட்ட கார்த்தியோட போட்டா எல்லாம் இல்லையா..

மு.கார்த்திகேயன் said...

எத்தனை ஆட்டோ வேணும்னாலும் அனுப்பிக்கோங்க செந்தில்.. அசினோட இதயத்துல இருந்து என்னை நீங்க தூக்கவே முடியாது :-)

மு.கார்த்திகேயன் said...

//மொட்ட கார்த்தியோட போட்டா எல்லாம் இல்லையா.. //

மணி..என்ன எப்படி கேக்குறீங்க.. இருக்கு..ஆனா இப்போ கைவசம் இல்ல

Anonymous said...

/இந்த சின்ன வயசுல மொட்டை எல்லாம் போடக்கூடாதுன்னு சொன்னாங்க.. கிளாஸ்ல வருகை பதிவேடு எடுக்கிறப்போ எல்லாம் என்னை கார்த்திகேயானந்தா என்று தான் பெயர் சொல்வார்.. //

ahaa.... schoola sonathukaaga appove mottai ellam pottu irukeenga! super!

aama, eppadi thapeechinga seekiram sollunga :)

மு.கார்த்திகேயன் said...

//eppadi thapeechinga seekiram sollunga//

சொல்றேங்க ட்ரீம்ஸ் சொல்றேன்