Showing posts with label விழா. Show all posts
Showing posts with label விழா. Show all posts

Wednesday, November 07, 2007

தீபாவளி வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

தலை தீபாவளி கொண்டாடும் அம்பி, ப்ரியா, மணிபிரகாஷ், கைப்புள்ள, KK, பொற்கொடி, எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சமீபத்துல கேமராவுல சுட்ட சில படங்கள்..பாத்துட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க மக்களே

Wednesday, August 15, 2007

விடுதலை சிந்தனைகள்

எல்லோரும் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு பள்ளிக்கு வந்திடனும். நம்ம பள்ளியில தேசிய கொடியேத்தி, மாறுவேடப்போட்டி நடக்கும்னு பள்ளியின் காலை வழிபாட்டில் தமிழாசிரியர் அறிவித்தார்.. வகுப்புக்கு போனவுடனே வகுப்பு ஆசிரியை, நாளைக்கு வருகை பதிவு எடுப்பேன்.. வராதவங்களுக்கு தனியா தண்டனை கொடுப்பேன்.. எல்லோரும் நாளைக்கு காலைல வந்திடுங்கன்னு சொன்னார்.. இப்போதைய சுதந்திர தின கொடியேற்ற நிகழச்சிகள் இப்படித் தான் வலுக்கட்டாயமாக மாணவர்களை வரவைத்து நடத்தப்படுகின்றன. உள்ளத்தில் விடுதலை வேட்கையும் எழுச்சியையும் நமக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் முதல் நம்மை சுற்றியிருக்கிற எல்லோரும் உருவாக்கத் தவறிவிட்டனர்.

அரசு விடுமுறை நாள் கிடைத்தால், விருப்பமான நேரத்தில் காலையில் எழுந்து, தொலைக்காட்சியில் போடுகின்ற நிகழ்சிகளை பார்த்து விட்டு அப்படியே சோபாக்களில் மறுபடியும் ஊறங்கிப்போகும் வழக்கம் என பாரதி சொன்னது வீணிலே அழிகின்றனர் பலர். சிறுவனாக இருக்கும் காலத்திலேயெ இதெல்லாம் அவர்களின் மனதிலே வாழைப்பழத்திலே ஊசி ஏற்றும்விதமாக செய்யப்பட்டிருக்கவேண்டும்.

எங்கள் ஊரில் ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைபள்ளியும் உண்டு. விடுதலை திருநாளின் அன்று, காலை எல்லோரையும் வரவழைத்து கொடியேற்றி, ஊர்வலம் வருவார்கள், கோஷங்கள் முழக்கமிட்டு, கையில் மூவர்ண கொடிகளுடன். அந்த சிறு வயதிலே அவர்கள் அந்த கோஷங்கள் சொல்வதிலும், கொடிகளை ஏந்துவதிலும் அப்படி ஒரு ஆர்வம் இருக்கும். இப்படி பட்டணத்தில் இருக்கும் எத்தனை பள்ளிகள் செய்கின்றன.. பெரும்பாலான பள்ளிகள் விடுதலை நாளன்று கொடியேற்றுகிறதா என்பதே சற்று சந்தேகம் தான். இந்த சிறார்கள் அப்படி ஊர்வலம் சுற்றி வருகையிலே, அவர்கள் பெற்றோர்கள் கொள்ளும் சந்தோசத்தை வார்த்தையில் சொல்ல இயலாது. அன்றைக்கு, தாங்கள் தின்பண்டங்கள் வாங்க வைத்திருக்கும் காசில் கொடி வாங்கி நெஞ்சினில் குத்திகொண்டு அவர்கள் பள்ளிகள் நோக்கி செல்லும் போதும், பார்ப்பவர்களுக்கே சற்று தேசியபற்றின் அளவு மனதில் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.

ஏதோ இராணுவ வீரர்களுக்கு மட்டும் தான் தேசியப்பற்று இருக்க வேண்டுமென்று எல்லைகள் வகுக்கப்பட்டதை போல் எல்லோரும் வாழ்கிறார்கள். இந்நிலை மறந்து, தேசிய உணர்வை ரத்தங்களில் ஏற்றி எல்லா நாளங்கள் நரம்புகளில் பரவ செய்ய வேண்டும். இந்த அறுபது வருட காலத்திலே வியக்க வைக்கும் முன்னேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் பல கோடுகள் இந்திய அன்னையின் முகங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை சுற்றி, தெருவை சுற்றி சுகாதாரமாக, குற்றங்கள் இல்லாத ஒரு இடமாக, சீராக வைத்துகொள்ள ஆரம்பித்தால் அதுவே மெல்ல ஒரு சங்கிலியை போல நமது நாட்டை காக்கும். அதுவே ஒவ்வொரு விடுதலை நாளின் போதும் நாம் ஏற்றுக்கொள்ளும் உறுதி மொழியாக இருக்கட்டும்.

அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துக்கள்.

Monday, July 02, 2007

பிறந்தநாள் அபிஷேக வீடியோ

கிட்டதட்ட ரெண்டு மாசமா என்னுடைய பிறந்த நாள் வீடியோவை போடுறேன் போடுறேன்னு ஒரு சின்ன ஹைப் கொடுத்துகிட்டே இருந்தேன். நான் கொடுத்த ஹைப்புல டென்ஷன் ஆகி என் நண்பன் ஒருத்தன் தொலைபேசிலயே காறித் துப்பிட்டான்.. என்னடா சிவாஜி படத்துக்கு கொடுத்த விளம்பரத்தை விட உன் வீடியோவுக்கு அதிகமா கொடுக்குறேன்னு கோபமாகி, அடுத்து அனுப்பின ஒவ்வொரு மெயிலிலும், கத்தி, வீச்சருவா, ஏ.கே 47ன்னு ஒவ்வொரு சமாச்சாரத்தையும் அனுப்பி வயித்துல புளியை கரச்சுட்டான்.. விடுங்க பாஸ், இவிங்க எப்பவுமே இப்படித்தான்னு சொல்லிட்டு, இதோ வீடியோவை கூகிள போட்டாச்சு..



வீடியோவ பாத்துட்டு, முட்டையால அடிக்கப்போறீங்களா.. அட போங்க தம்பி..வீடியோவுல சலிக்காமா வாங்குறோமுல..சும்மா ஒரு முட்டையை கையில வச்சுகிட்டு பயமுறுத்துறீங்களா..

இந்த வீடியோவை பொறுமையாய் எடுத்ததும், அதற்கு பிண்ணனி குரல் தந்ததும் நண்பன் கணேஷ் ரெங்கநாதன். ஆனா, எடுத்து முடிச்சப் பிறகு தான் தெரிந்தது, இவன் இந்த விடியோவுலயே இல்லைன்னு. நன்றி நண்பா!

Monday, May 14, 2007

பிறந்தநாள் புகைப்படங்கள்

FAIR & LOVELY இல்லீங்கோ.. கேக்கு தானுங்கோ




முட்டையபிஷேகம் இவனுக்கே..

யாரோ..தப்பா முட்டை தக்காளி எல்லாம் போட்டு ஆம்லேட் ரெடி பண்ண ட்ரை பண்ணிட்டாங்கப்பா




வாழ்த்த வந்த நண்பர்கள் கூட்டம்





தொலைபேசி மூலம் வாழ்த்து, உலகத்தின் பல நாடுகளில் இருந்து பாசத்தோடு வாழ்த்து, தாமத வாழ்த்து.. இப்படி இவனை வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. நன்றி..

இன்று தங்கமணியின் கரம் பற்றி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் தொட் தொடங்கும் அம்பிக்கு பிளாக் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

Friday, February 16, 2007

கிட்டு மாமாவிற்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உலக மலரெல்லாம்
உன் பெயர்
சொல்லி
இன்று
பூக்கட்டும்!

பொங்கி ஓடும்
தேச ஆறெல்லாம்
இன்று
உன் பெயர்
சொல்லி
கொண்டாடி குதிக்கட்டும்!

அலையும்
காற்றெல்லாம்
புல்லாங்குழல்
நுழையாமல்
கீதம் இசைக்கட்டும்!

கலைந்து கிடக்கும்
முகிலெல்லாம்
நியுஜெர்சி மீது
மழையாக
உன் பெயர்
சொல்லி பொழியட்டும்!

தாரை தப்பட்டை
இல்லையென்று
நினைத்தால்
இடியும் மின்னலும்
குறுக்கே வந்து முழங்கட்டும்!

ஷ்ரேயாவைப் போலவே பூச்செண்டோடு நாங்களும் களிப்புற சொல்கிறோம்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமு!

Wednesday, February 14, 2007

காதலர் தினமும், என் 400வது பதிவும்

எங்கே என் காதலி
என்று
ஒவ்வொரு மணித்துளியும்
என் இதயம் கேட்க,
கடலின்
அலை போல
கரை வந்து தேடுகிறேன்..

அப்படித் தேடும் போது,
காதல் செய்வோரின்
கால்கள் தொட்டதிலே
முகிழ்த்ததே
அந்த
கவிதைகள் எல்லாம்.

காதல்
செய்யாத
என்னை போன்ற
ஏகலைவன்கள் தான்
அர்ஜூனனின்
காதல் கண்டு
கவிதை
எழுத முடியும்.

காதல்
செய்வோர்
முத்தம் செய்கின்றார்.

என்னைப் போன்று
காதல் விசா
கிடைக்காதோர்
கவிதை எழுதி
சத்தம் செய்கின்றோம்.

காதலருக்கு எல்லாம்
இன்று காதலர் தினம்
என்பதால் சிறப்பு.

எனக்கோ
இது
நானூறாவது பதிவு
என்பதிலே
ஒரு சந்தோசம்..


அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் நண்பர்களே..

பி.கு: விரைவில் நம்ம அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு.. எதிர்பாருங்கள்..

அதுமட்டுமா, அடுத்த சில, 400வது பதிவிற்கான சிறப்பு பதிவுகள்.. (நம்ம நானூறாவது பதிவை எப்படி வந்து சேர்த்தேன் பாத்தீங்களா, காதலர் தினத்தோட..)

இந்த உயரம் நான் ஏறியதற்கு உங்கள் உற்சாக பின்னூட்டங்கள் தான் ஏணிபடிகள்.. அந்த ஒவ்வொரு படிக்கும் நான் தேங்காய் உடைக்க வேண்டாமா..

தேங்காயோடு நான் ரெடி..

Sunday, December 24, 2006

கேளுங்கள் அவர் தருவார்...

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே..

ஏசு கிறிஸ்து தோன்றிய இந்த தருணத்தில் அவரை நினைத்து பார்ப்போம். அவர் நமக்காக அளித்த கருத்துக்களையும் உபதேசங்களையும் மனத்தில் இருத்திக் கொள்வோம்.. கேளுங்கள் அவர் தருவார். தட்டுங்கள் அவரின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Tuesday, December 19, 2006

அவதார புருஷன் அனுமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



சின்ன வயசுல, ஒரு ஐந்து வயசிருக்கும் போது, ஒரு நாள் என் அம்மாச்சி வீட்டின் திண்ணையில் அமர்திருந்தேன்.. அந்த வழியாக கிளி ஜோசியக்காரர் போனார். திண்ணையில் உட்கார்ந்திருந்த கூட்டத்தை பார்த்து, அப்படியே இந்தப் பக்கம் திரும்பினார். எப்படியோ அவருக்கு தெரிந்த தந்திரங்களை வைத்து ஒரு ஆளை ஜோசியம் பாக்க வைத்தார். ஜோசியம் பார்த்தது ஒரு பெண். என் அம்மாச்சி வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர். எனக்கு அத்தை முறை. அப்போ அந்த பெண்ணுக்கு வயது இருபத்தேழு இருக்கும். அதனால் கல்யாணம் ஆக வேண்டுமென்றால் வாரவாரம் சனிக்கிழமை பக்கத்தில் இருக்கும் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு காலையில் போகச் சொன்னார். மொத்தம் ஒன்பது வாரம் அது மாதிரி போகச் சொன்னார். ஆஞ்சநேயர் எனக்கு அறிமுகமானது அப்படித்தான். நான் ரொம்ப சின்ன பையனாக இருந்ததால் நானும் அந்த அத்தைக்கூட திண்டுக்கல் அபிராமி கோவில் பக்கத்துல இருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் வந்தேன்.. அந்த சின்ன வயசுல என்னை வியப்பில் ஆழ்த்திய அந்த சம்பவம் நடந்தது.. ரொம்ப நாளா வரன் அமையாம இருந்த அந்த அத்தைக்கு நல்ல அரசு வேலைல இருக்க மாப்பிள்ளை அமைந்தது. அவங்க அதுக்குப் பிறகும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் அந்த ஒன்பது வாரங்களை முடித்தார்.

அந்த சின்ன வயசுலயே என் மனசுல ஆஞ்சநேயர் உயரமான இடத்துல இருந்தார் இந்த சம்பவத்துக்கு பிறகு..

அதன் பிறகு தூர்தர்ஷன்ல ராமாயணம் பாத்து, எங்க வீட்டுப் பெரியவங்க கிட்ட அவரோட கதையெல்லாம் ஒண்ணுவிடாம கேட்டு நான் வளர்ந்ததைப் போலவே மனசுக்குள்ள அவரும் மெல்ல வளர்ந்தார். அந்த பிரம்மசர்யம், அந்த உறுதி, துணிவு எல்லாம் எனக்கு உள்ளத்திலும் ஊட்டியவர் அவர் தான்.. நான் இந்த இடத்தில் இருப்பதற்கு நான் இரண்டு வருடங்கள் எழுதி வந்த ஸ்ரீராமஜெயம் தான் என்கிற எண்ணம், நம்பிக்கை எனக்கு இன்னமும் உண்டு..

நான் கல்லூரியில் படித்து வந்தபோது என் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் நி.பஞ்சம்பட்டி போகும் வழியில் இருக்கும் அனுமரை வழிபட்டு வந்தேன்.. அந்த அனுமார் அங்கே வந்ததே ஒரு சுவையான சம்பவம்.. ரொம்ப காலத்துக்கு முன்னாடி எங்கள் ஊர் மலையில் இருந்து வீட்டுக்கு பட்டியக்கல் (சதுர வடிவில் இருக்கும் கல். துணி துவைக்கவோ கோவில்களிலோ இந்த வகை கல்லை பாக்கலாம்) சைக்கிளில் எடுத்துச் சென்றார். இப்போது கோவில் இருக்கும் இடத்திற்கு வந்த போது அந்த சைக்கிள் நகரவில்லை. அவரும் என்னன்னமோ செய்து பார்த்தார். ஹ்ம்ஹும்.. ஒண்ணும் நடக்கவில்லை. அப்போது தான் கவனித்தார் அந்த கல்லில் ஆஞ்சநேயர் உருவம்.. பதறியடித்துப் பார்த்த அவர் அந்தப் பாதையின் அருகிலேயே மணல் மேடுகட்டி அனுமாருக்கு கோவில்கட்டினார்..

எங்கள் ஊர் சிறுமலையும் அனுமாரோடு சம்பந்தப்பட்டது.. அனுமார் சஞ்சீவி மலையை தூக்கி சென்றபோது பல மூலிகைகள் அதிலிருந்து இந்த சிறு மலையில் விழுந்ததாம்.. மலையில் நீங்கள் இருக்கும் போது பாம்பு கடித்தால் கூட, நீங்கள் மலையிலேயே இருக்கும் வரை விஷம் உங்கள் உடம்பில் ஏறாது என்பது இன்றும் எங்கள் ஊர் மக்கள் நம்பி வரும் ஒரு கருத்து..

சென்னை வந்த பிறகு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி சென்றதுண்டு. அவ்வளவு உயரிய சிலையை பார்த்த போது தான் புரிந்தது.. அவரை என் மனதில் சிறிய கூட்டுக்குள் அடக்கி வைத்திருப்பதால் தான் என் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்று.. சுருங்கும் போது சிறியவராகி, விரியும் போது பெரியவராகி.. இருக்கும் இடத்தை கோவிலாக்கும் அந்த கருணை அவனுக்கே உண்டு.. அது என் பாக்கியமே ஆஞ்சநேயா..

ஆஞ்சநேயரை பற்றி நான் சொன்னதெல்லம் விரல் நுனியளவு.. இங்கே அம்பி சொல்வதை பாருங்கள்.. அனுமனின் கருணை புரியும்

ஜெய் ஆஞ்சநேயா!!!