ரஜினியின் ஆங்கிலம்
ரஜினியின் படங்களில், ஆரம்பித்தில் இருந்து இன்று வரை பல விஷயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும், பாம்பு, கராத்தே ஸ்டைல், முக்கியமாக ஆங்கிலம் பேசுற ஸ்டைல் என்று பெரிய பட்டியல் நீளும்.
ரஜினியின் ஆங்கிலம் பேசும் விதத்தில், இன்னமும் மனசில் நிலைத்த படம் குரு சிஷ்யன். படம் நெடுக ரஜினி காமெடி சரவெடி வெடித்துக் கொண்டிருப்பார். இன்னமும் குரு சிஷ்யன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்தால், சேனல் மாற்றாமல் ரசிப்பது உண்டு. ஒவ்வொரு முறையும் அவர் ஆங்கிலம் தெரிந்த மாதிரி எதையாவது பேச, மற்றவர்கள் முழிக்க, அப்படியொரு படம் வந்தே நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நான் மிகவும் ரசித்து இன்றும் மனதில் நிற்கும் வசனம் "Mr. Paramasivam, I want to know, No or Yes". படம் பாருங்கள் நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்.
குரு சிஷ்யன் தவிர, வேலைக்காரன் வசனம் "I can talk English, I can walk English, I can swim English" மிகவும் பிரபலமானது.
அண்ணாமலை, உழைப்பாளி போன்ற படங்களில் ரஜினி ஆங்கிலம் பேசுவதும், அதை அவர் குழப்பி அடிப்பதும் எல்லோராலும் ரசித்த ஒன்று. இப்படி இவர் படங்களில் ஆங்கிலத்தை குழப்பி அடிக்க, ஷங்கரின் சிவாஜி என்னை ஆச்சரியப்படவைத்தது. ஆம். நுனி நாக்கில் ரஜினி ஆங்கிலம் பேசியது முற்றிலும் வித்தியாசம் தான். எப்படி அவர் ஆங்கிலம் பேசத் திணறியது மிகவும் ரசிக்கப்பட்டதோ அதே போல், அவரின் சரள ஆங்கிலம் வெகுவாக ரசிக்கப்பட்டது என்பது உண்மை. Cool Buddy!
சிவாஜியிலே அப்படி என்றால், எந்திரனில். எல்லா ரசிகர்களுடன் நானும் எதிர்பார்ப்பில்.
3 பின்னூட்டங்கள்:
சிவாஜியையும் ஒரு குரூப் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறதே!
ரஜினியின் நகைச்சுவை ஆங்கிலம் பலரை கவர்ந்தது ..அதே போல அவரது அசத்தும் ஆங்கிலம் மன்னன் படத்திலேயே பலர் கண்டு இருப்பார்கள்.
உண்மைதான். அவரது நகைச்சுவை பல நகைச்சுவை நடிகர்கலயும் மிஞ்சிய ஒன்று
Post a Comment