Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Friday, May 21, 2010

ரஜினியின் ஆங்கிலம்

ரஜினியின் படங்களில், ஆரம்பித்தில் இருந்து இன்று வரை பல விஷயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும், பாம்பு, கராத்தே ஸ்டைல், முக்கியமாக ஆங்கிலம் பேசுற ஸ்டைல் என்று பெரிய பட்டியல் நீளும்.

ரஜினியின் ஆங்கிலம் பேசும் விதத்தில், இன்னமும் மனசில் நிலைத்த படம் குரு சிஷ்யன். படம் நெடுக ரஜினி காமெடி சரவெடி வெடித்துக் கொண்டிருப்பார். இன்னமும் குரு சிஷ்யன் படத்தை தொலைக்காட்சியில் பார்த்தால், சேனல் மாற்றாமல் ரசிப்பது உண்டு. ஒவ்வொரு முறையும் அவர் ஆங்கிலம் தெரிந்த மாதிரி எதையாவது பேச, மற்றவர்கள் முழிக்க, அப்படியொரு படம் வந்தே நிறைய நாட்கள் ஆகிவிட்டது. நான் மிகவும் ரசித்து இன்றும் மனதில் நிற்கும் வசனம் "Mr. Paramasivam, I want to know, No or Yes". படம் பாருங்கள் நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்.

குரு சிஷ்யன் தவிர, வேலைக்காரன் வசனம் "I can talk English, I can walk English, I can swim English" மிகவும் பிரபலமானது.

அண்ணாமலை, உழைப்பாளி போன்ற படங்களில் ரஜினி ஆங்கிலம் பேசுவதும், அதை அவர் குழப்பி அடிப்பதும் எல்லோராலும் ரசித்த ஒன்று. இப்படி இவர் படங்களில் ஆங்கிலத்தை குழப்பி அடிக்க, ஷங்கரின் சிவாஜி என்னை ஆச்சரியப்படவைத்தது. ஆம். நுனி நாக்கில் ரஜினி ஆங்கிலம் பேசியது முற்றிலும் வித்தியாசம் தான். எப்படி அவர் ஆங்கிலம் பேசத் திணறியது மிகவும் ரசிக்கப்பட்டதோ அதே போல், அவரின் சரள ஆங்கிலம் வெகுவாக ரசிக்கப்பட்டது என்பது உண்மை. Cool Buddy!

சிவாஜியிலே அப்படி என்றால், எந்திரனில். எல்லா ரசிகர்களுடன் நானும் எதிர்பார்ப்பில்.

Monday, May 26, 2008

சிவாஜி - குருவி ஒற்றுமை

தன் வழி தனி வழி என்று சொல்லும் ரஜினியின் வழியில் செல்ல பல நடிகர்கள் போட்டா போட்டி. இதில் எப்போதும் முன்ணணியில் இருப்பவர் நடிகர் விஜய். பாபா படம் சரியாக ஓடாத போது, இனி ரஜினி அவ்வளவு தான் என்று சந்தோசப்பட்டு சந்திரமுகிக்கு இணையாக சச்சினை களமிறக்கி அடி வாங்கி கொண்டவர்.

சமீபத்தில் பலரும் பல நெகடிவ் விமர்சனங்கள் தந்திருந்த போதும், எனது மனைவி விஜய் ரசிகர் என்பதால், வேறுவழியில்லாமல் குருவி படம் இருநூறு ரூபாய் செலவழித்து சத்யம் திரையரங்கத்தில் காண நேரிட்டது. படம் மாஸ்க் ஆஃப் ஜெரோ, தி பிரஞ்சு கிஸ் ஆகிய ஆங்கில படங்கள் மற்றும் சத்ரபதி என்னும் தெலுங்கு படத்தின் தழுவல் என்றாலும், பல இடங்களில் சிவாஜியின் சாயல் தெரிந்தது. அது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.. கவனித்ததை பட்டியலிடுகிறேன், இன்னும் இருந்தால் நீங்களும் பட்டியலை தொடருங்கள்

1. சிவாஜியில் ரஜினியின் அப்பா மணிவண்ணன், குருவியில் விஜயின் அப்பாவும் இவரே
2. சிவாஜியிலும் குருவியிலும் வில்லன் சுமன்
3. சிவாஜியில் இடைவேளையின் போது காசை சுண்டிவிட்டு, சிங்க பாதையா பூப்பாதையா என்று ரஜினி விவேக்கிடம் கேட்பது போன்று, இங்கேயும், மலேசியா கிளப் சண்டைக்கு முன்பு விஜய் இரு விரல்களை காண்பித்து அகிம்சை, அடிதடி என்று விவேக்கை தேர்வு செய்ய சொல்வது
4. சிவாஜியில் ரஜினி செத்து பிழைப்பது போல், இதிலும் விஜய் தண்ணீரில் இறந்து விட்டது போல் காட்சி அமைத்திருந்தது
5. மியூஉசிக்கல் ஸ்டோரில் நடக்கும் முதல் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி, குருவியில் மலேசியா கிளப் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி..
6. இது ஒற்றுமையா என்று தெரியவில்லை.. இரண்டிலும் நாயகர்கள் கூடவே விவேக்

எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்.. இன்னும் இருந்தால் பின்னூட்டதில் சொல்லுங்கள் நண்பர்களே..இது படத்தை குறை சொல்ல எழுதியதில்லை.. கவனித்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளவே..

பி.கு: கல்யாணம் முடிந்து விருந்து என அலைந்து இப்போது தான் கொஞ்சம் நாற்காலியில் சாய்ந்து உட்கார முடிந்தது.. இனி எழுத்து ஊர்வலம் தொடரும் என்று நினைக்கிறேன்.. கல்யாணத்திற்கும், பிறந்த நாளிற்கும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

இந்த மாதம் மத்தியில் திருமணம் செய்து புது வாழ்க்கை தொடங்கிய கவிதாயினி வேதாவிற்கும், மாப்ள பரணிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Wednesday, June 13, 2007

யார் பெரியவர்? அமிதாப்பா இல்லை ரஜினியா

வழக்கம் போல ஃபார்வர்ட் ஆகி வந்த செய்தி தான்.. ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யம் அதிகமாக இருந்தது.. இந்த வீடியோவை பாருங்களேன். தென்னகத்து சூப்பர் ஸ்டாரையும் வடநாட்டின் சூப்பர் ஸ்டாரையும் மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.. யார் பெரியவர்னு CNN சொல்கிறது.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதில் ஒரு நெருடலான விஷயம்.. அமிதாப்புக்கு 18 ரசிகர் மன்றங்களே இருப்பதாக இந்த வீடியோ சொல்கிறது..உண்மையா?

இன்னும் ஆணிகள் குறைந்த பாடில்லை.. உங்களுடைய பின்னூட்டங்களுக்கு தனித் தனியாக பதிலளிக்கமுடியவில்லை..

Thursday, April 26, 2007

எஜமான் ரஜினி - அழகிய தமிழ் மகன் விஜய் - என்ன சம்பந்தம்?



[படம் கீர்த்திவாசனின் பதிவிலிருந்து]

மேல இருக்கும் படத்தை மூன்று மாசத்துக்கு முன்னாடி பாத்தப்ப ஏதேச்சையான விஷயம்னு நினைச்சேன்..

கீழே இருக்கின்ற தலைவரின் படம் எஜமான் திரைபடத்திலிருந்து. விஜயின் படம், தயாரிப்பில் இருக்கும் அழகிய தமிழ் மகன் படத்திலிருந்துஇப்போ உண்மையோ என்று தோன்றுகிறது? நீங்க என்ன நினைக்கிறீங்க?




ஒரு முடிவோடதான் விஜய் இருக்கார் போல.. ஆனால் ரஜினியிடம் இருக்கும் விமர்சனங்களை தாங்கி கொள்கின்ற பக்குவம் இன்னும் வரணும். சமீபத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபாவில் போக்கிரி படத்தை பேக்கரி என்று கிண்டல் செய்ததை கண்டு பொறுக்காமல், அவரது தந்தை அந்த டைரக்டர் மற்றும் டெக்னிஷியன்களை அழைத்து மன்னிபு கேட்க வைத்தாராம். ஆனானப்பட்ட ரஜினி கமல் படங்களை கிண்டல் செய்தாலும் அது நகைச்சுவை நிகழ்ச்சி என்று தான் நினைப்பார்கள். இந்த சகித்துகொள்ளும் தன்மை விஜய்க்கும் இருந்தால் சீக்கிரம் தொடலாம் தேடும் நாற்காலியை...

Sunday, April 15, 2007

சிவாஜியின் ரகசியங்கள்

புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஷங்கர், சிவாஜி பற்றி சிவாஜியின் ரகசியங்கள் என்ற தலைப்பில் சன் டிவிக்கு அளித்து பேட்டியின் தொகுப்பு..

படத்தின் சில ஷாட்களும் இந்த தொகுப்பில் இருக்கின்றன.. தலைவர் நடந்து வந்தாலே ஸ்டைல் தானே..





Friday, April 13, 2007

சிவாஜி - பஞ்ச் டயலாக் ரிங்டோன்ஸ்

சிவாஜி படத்தின் துள்ளல் பாடல்கள் இப்போது தமிழ்நாடின் காற்றின் ஒரு அங்கமாகிவிட்டது. காதுகுத்து, கல்யாணம் முதல் திருவிழா வரை, மைக்-செட் போட்டாலே, போடுகிற முதல் பாடல் சிவாஜி தான். ரஜினி-ஷங்கர்-ஏ.ஆர்.ஆர் இணைப்பில் கிடைத்திருக்கும், எல்லா தரப்பு ரசிகர்களையும், தலையாட்டவும் காலாட்டவும் வைக்கும் இசை தொகுப்பு சிவாஜி பாடல்கள்.

இதுமட்டுமல்லாமல், சிவாஜி பாடல்களின் ரிங்டோன்கள் இப்போது அதிகமாக தரையிறக்கம் செய்யப்படும் ரிங்டோன்கள் தமிழகத்தில். அதில் அதிரடி என்னும் பாடல் அதிகபட்சம். அதற்கடுத்து வாஜி வாஜி-யும், ஒரு கூடை சன்லைட் பாடலும் பட்டியலில் இருக்கிறது.

இதையெல்லாம் விட, இன்னும் சில நாட்களில், யாராவது உங்களை கால் செய்தால், நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரின்னு ரஜினி குரலில் ரிங்டோன்கள் உங்களை அழைக்கப்போகிறது. சிவாஜி படத்தின் பஞ்ச் டயலாக்குகளும் இதில் அடங்கும்.

இந்த ரிங்டோன்கள் வந்தால், தமிழகத்தில் மூன்றில் ஒருவர் இதைத்தான் வைத்திருப்பார்கள் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. அட! பஸ்ஸில் ஏறிவிட்டால் பத்து பேருக்கு கால் வந்தால், போன் அடிச்சா ரிங்கு, இந்த சிவாஜி அடிச்சா சங்குன்னு எல்லாப்பக்கமும் ரிங்டோன் அலற போகுது.. சிவாஜி ஜுரம் பரவ ஆரம்பிச்சிடுச்சுப்பா..

சிவாஜி பாடல்களின் வரிகள் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா.. உங்களுக்காகத் தான் நம்ம சுப.செந்தில் அதையெல்லாம் படமா போட்டிருக்கார். ஒரு கூடை சன்லைட் பாடலுக்கும், அதிரடி பாடலுக்கு இந்நேரம் நீங்க எல்லா வரிகளை சரியா கண்டுபிச்சிருந்தா, ஒரு சபாஷ் உங்களுக்கு.. இல்லைன்னா, செந்தில் பதிவை எட்டி பாத்து, அவருக்கு ஒரு சபாஷ் போடுங்க.

சிவாஜி படத்தை எதிர்பாக்குற பரபரப்போட, பதிவுலக மக்கள் ஆவலா எதிர்பார்த்து படிச்சது, பிரியமான பிரியா எழுதின காதல் யானைங்கிற ஒரு தொடர்கதையை.. நான் சீட்டு நுனில தான் உட்கார்ந்து இந்த பதிவையெல்லாம் படிச்சேன். நீங்களும் பரபரப்பை அனுபவிக்க வேண்டுமா?

Saturday, March 31, 2007

வாஜி வாஜி சிவாஜி - புதிய பட ஸ்டில்கள்









படங்களுக்காக, பிஹைன்ட்வுட்ஸ்.காம் தளத்திற்கு நன்றி