Monday, May 26, 2008

சிவாஜி - குருவி ஒற்றுமை

தன் வழி தனி வழி என்று சொல்லும் ரஜினியின் வழியில் செல்ல பல நடிகர்கள் போட்டா போட்டி. இதில் எப்போதும் முன்ணணியில் இருப்பவர் நடிகர் விஜய். பாபா படம் சரியாக ஓடாத போது, இனி ரஜினி அவ்வளவு தான் என்று சந்தோசப்பட்டு சந்திரமுகிக்கு இணையாக சச்சினை களமிறக்கி அடி வாங்கி கொண்டவர்.

சமீபத்தில் பலரும் பல நெகடிவ் விமர்சனங்கள் தந்திருந்த போதும், எனது மனைவி விஜய் ரசிகர் என்பதால், வேறுவழியில்லாமல் குருவி படம் இருநூறு ரூபாய் செலவழித்து சத்யம் திரையரங்கத்தில் காண நேரிட்டது. படம் மாஸ்க் ஆஃப் ஜெரோ, தி பிரஞ்சு கிஸ் ஆகிய ஆங்கில படங்கள் மற்றும் சத்ரபதி என்னும் தெலுங்கு படத்தின் தழுவல் என்றாலும், பல இடங்களில் சிவாஜியின் சாயல் தெரிந்தது. அது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.. கவனித்ததை பட்டியலிடுகிறேன், இன்னும் இருந்தால் நீங்களும் பட்டியலை தொடருங்கள்

1. சிவாஜியில் ரஜினியின் அப்பா மணிவண்ணன், குருவியில் விஜயின் அப்பாவும் இவரே
2. சிவாஜியிலும் குருவியிலும் வில்லன் சுமன்
3. சிவாஜியில் இடைவேளையின் போது காசை சுண்டிவிட்டு, சிங்க பாதையா பூப்பாதையா என்று ரஜினி விவேக்கிடம் கேட்பது போன்று, இங்கேயும், மலேசியா கிளப் சண்டைக்கு முன்பு விஜய் இரு விரல்களை காண்பித்து அகிம்சை, அடிதடி என்று விவேக்கை தேர்வு செய்ய சொல்வது
4. சிவாஜியில் ரஜினி செத்து பிழைப்பது போல், இதிலும் விஜய் தண்ணீரில் இறந்து விட்டது போல் காட்சி அமைத்திருந்தது
5. மியூஉசிக்கல் ஸ்டோரில் நடக்கும் முதல் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி, குருவியில் மலேசியா கிளப் சண்டைக்கு படத்தின் தீம் மியூசிக் தான் பிண்ணனி..
6. இது ஒற்றுமையா என்று தெரியவில்லை.. இரண்டிலும் நாயகர்கள் கூடவே விவேக்

எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்.. இன்னும் இருந்தால் பின்னூட்டதில் சொல்லுங்கள் நண்பர்களே..இது படத்தை குறை சொல்ல எழுதியதில்லை.. கவனித்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளவே..

பி.கு: கல்யாணம் முடிந்து விருந்து என அலைந்து இப்போது தான் கொஞ்சம் நாற்காலியில் சாய்ந்து உட்கார முடிந்தது.. இனி எழுத்து ஊர்வலம் தொடரும் என்று நினைக்கிறேன்.. கல்யாணத்திற்கும், பிறந்த நாளிற்கும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

இந்த மாதம் மத்தியில் திருமணம் செய்து புது வாழ்க்கை தொடங்கிய கவிதாயினி வேதாவிற்கும், மாப்ள பரணிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

25 பின்னூட்டங்கள்:

said...

வாங்கோ தல @ புது மாப்பிள்ளை...

:-)

மீ தி ஃபர்ஸ்ட்டூ?

said...

தல.. அண்ணி கவுத்துட்டாங்களா?

இனி அஜித் ரசிகரான தல விஜய் ரசிகர் ஆயிடுவாரா? :-(

said...

படத்தை முழுசா பிரிச்சு மேய்ஞ்சா ஒன்னு கூட ஒரிஜினல் கிடையாது தல. சுத்த வேஸ்ட்டூ..

said...

//இது படத்தை குறை சொல்ல எழுதியதில்லை.. கவனித்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளவே..//

சொல்றதையெல்லாம் சொல்லிட்டு எப்படி நழுவுறார் பாருங்க மக்களே. :-)))))

said...

//இனி எழுத்து ஊர்வலம் தொடரும் என்று நினைக்கிறேன்..//

நாங்களும் காத்திருக்கிறோம். :-)

அந்த சினிமா குவீஸ் நடத்துவீங்களே.. அதையும் தொடருங்கள். :-)

said...

vaanga karthi...
kalyana vaazhkai ellam eppadi iruku.. veetla poori kattai ellam parakutha illaya ada pathi sollama ennavo sivaji -kuruvi otrumai appadinu ellam pesarthu sari illa

said...

நடிக நடிகையர் எல்லாம் ஒரு ஒற்றுமையா எடுத்துக்க முடியாது. அப்படி பாத்தா முக்கால் வாசி படங்களில் மனோரமா தான் பாட்டி/அம்மா. :)

அப்புறம் மண வாழ்க்கை எப்படி போகுது? அல்லது ஆரம்பிச்சு இருக்கு..? :))

Anonymous said...

Sorry u forget one more - Laptop and password

Dressing of Vijay ( Theme colour)

said...

sariyaana orrumai.
rajini oru aalamaram...
matravargal ellam siru chedigaldhan.
rajiniyai endra goldai imitate mattumea siyya mudiyum . matravargal ellam minnuvaargal aanaal ponnalla!

ungal padhivu arumai.
thirumana vazhkai sirakka vaazhthukkal.

natpudan
santhosh

Anonymous said...

குருவி பாத்து இன்னும் தெளிவா இருக்கீங்க, வாழ்த்துக்கள்

said...

திருமணம் முடிந்து சந்தோசமாக இருக்க வேண்டிய நேரத்தில் இப்படி "குருவி" பார்க்க வேண்டியதாக போய் விட்டதே :-(

உங்கள் வாழ்க்கை இனிதே அமைய என் வாழ்த்துக்கள்.

said...

என்ன ஆராய்ச்சி.......ஆஹா

said...

உங்கள் வாழ்க்கை இனிதே அமைய என் வாழ்த்துக்கள்.

மொய் பணம் ரூ501\-
புதுவை சிவா.

said...

superu comparison...

rendume kaadhula poo.. onnu rasikum padi.. innonu sirikkumpadi :)

said...

//படம் மாஸ்க் ஆஃப் ஜெரோ, தி பிரஞ்சு கிஸ் ஆகிய ஆங்கில படங்கள் மற்றும் சத்ரபதி என்னும் தெலுங்கு படத்தின் தழுவல் என்றாலும்//


"Blood Diamond" என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்பதே சரி. கதையை அங்கே இருந்துதான் உருவி இருக்கிறார்கள். மசலா வகையறாக்கள்தான் மேற் சொன்ன படங்களிலிருந்து.

said...

//என்ன ஆராய்ச்சி.......ஆஹா//

ரிப்பீட்டேய்...

கல்யாணம் முடிஞ்சவுடனே..பண்ற ஆராய்ச்சியா .. இது...?

திருமண வாழ்த்துக்கள்..

அன்புடன்,
சீமாச்சு...

Anonymous said...

கார்த்திக், திருமண வாழ்த்துக்கள்..:)

Anonymous said...

Welcome back.Congrulations.

Ramya

said...

Welcome Back thala !.

said...

எனது மனைவி விஜய் ரசிகர் என்பதால், வேறுவழியில்லாமல் குருவி படம் இருநூறு ரூபாய் செலவழித்து சத்யம் திரையரங்கத்தில் காண நேரிட்டது.

(:-)hmm. thangamani kavuthutaangala

said...

ada ada...enna researchu..
yaaru edha copy adikardhunnu illaya !!!

kuruvi padam paakala, paakalaamnu nenacha engala reviews koduthu paka vidama senjutaanga ellarum.

said...

annathe
return vandhaacha?

superu

kuruvi paathade thappu.. idhula comparison veraya? enna koduma idhu karthi...

said...

திருமண வாழ்த்துகள்.

***

சிவாஜி ‍ ‍ குருவி ஒற்றுமை தெரியாது.

ஆனா லேட்டஸ்டா புருடாவதாரம் ‍ குருவிக்கும் எக்கச்சக்க ஒற்றுமை இருக்குன்னு தெரியும்.

ரொம்ப பேரு அது பத்தியும் எழுதுறாங்க. எனக்கு ரொம்ப வருத்தம். என்னடா இது 'குருவி' அவ்வளவு கேவலமா போய்டிச்சான்னு!

Anonymous said...

vijay is next superstar
www.superstarvijay.blogspot.com

Anonymous said...

விஜயை பாத்தா உங்கலுக்கு அவ்லவு கேவலமா இருக்கா அவர்தான் அடுத்த superstar அதுக்கு உங்கலுக்கு என்ன குத்துது. குருவியும் சிவஜியும் ஒற்றுய்மை இருக்குது என்ரால் அது ரஜினிக்கும் விஜய்க்கும் ஒற்றுமை அஜித் ரசிகர்கள் எல்லொரும் இப்படித்தான் எரிச்சலும் போராமையும் தான் அஜித் அவர் எப்பயும் தல்aதான் விஜய் எப்பயும் super star நான் விஜய் ரசிகன் visit to www.superstarvijay.blogspot.com
ஏகன் வந்தாள் என்ன எவன் வந்தாள் என்ன எமன் வந்தாள் என்ன எஙகள் தளபதியுடன் மோதினா தல இருக்கது எழுத்து பிழைக்கு மண்ணிக்கவும் அவசத்திரத்தில் எழுத்துகிறேன் இனிமேலாவது விஜயை பர்ரி விமர்சண்ம எழுதவேன்டாம் அப்படி எலுதினால் அப்புரம் தல கீழ