Tuesday, December 19, 2006

அவதார புருஷன் அனுமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்சின்ன வயசுல, ஒரு ஐந்து வயசிருக்கும் போது, ஒரு நாள் என் அம்மாச்சி வீட்டின் திண்ணையில் அமர்திருந்தேன்.. அந்த வழியாக கிளி ஜோசியக்காரர் போனார். திண்ணையில் உட்கார்ந்திருந்த கூட்டத்தை பார்த்து, அப்படியே இந்தப் பக்கம் திரும்பினார். எப்படியோ அவருக்கு தெரிந்த தந்திரங்களை வைத்து ஒரு ஆளை ஜோசியம் பாக்க வைத்தார். ஜோசியம் பார்த்தது ஒரு பெண். என் அம்மாச்சி வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர். எனக்கு அத்தை முறை. அப்போ அந்த பெண்ணுக்கு வயது இருபத்தேழு இருக்கும். அதனால் கல்யாணம் ஆக வேண்டுமென்றால் வாரவாரம் சனிக்கிழமை பக்கத்தில் இருக்கும் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு காலையில் போகச் சொன்னார். மொத்தம் ஒன்பது வாரம் அது மாதிரி போகச் சொன்னார். ஆஞ்சநேயர் எனக்கு அறிமுகமானது அப்படித்தான். நான் ரொம்ப சின்ன பையனாக இருந்ததால் நானும் அந்த அத்தைக்கூட திண்டுக்கல் அபிராமி கோவில் பக்கத்துல இருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் வந்தேன்.. அந்த சின்ன வயசுல என்னை வியப்பில் ஆழ்த்திய அந்த சம்பவம் நடந்தது.. ரொம்ப நாளா வரன் அமையாம இருந்த அந்த அத்தைக்கு நல்ல அரசு வேலைல இருக்க மாப்பிள்ளை அமைந்தது. அவங்க அதுக்குப் பிறகும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் அந்த ஒன்பது வாரங்களை முடித்தார்.

அந்த சின்ன வயசுலயே என் மனசுல ஆஞ்சநேயர் உயரமான இடத்துல இருந்தார் இந்த சம்பவத்துக்கு பிறகு..

அதன் பிறகு தூர்தர்ஷன்ல ராமாயணம் பாத்து, எங்க வீட்டுப் பெரியவங்க கிட்ட அவரோட கதையெல்லாம் ஒண்ணுவிடாம கேட்டு நான் வளர்ந்ததைப் போலவே மனசுக்குள்ள அவரும் மெல்ல வளர்ந்தார். அந்த பிரம்மசர்யம், அந்த உறுதி, துணிவு எல்லாம் எனக்கு உள்ளத்திலும் ஊட்டியவர் அவர் தான்.. நான் இந்த இடத்தில் இருப்பதற்கு நான் இரண்டு வருடங்கள் எழுதி வந்த ஸ்ரீராமஜெயம் தான் என்கிற எண்ணம், நம்பிக்கை எனக்கு இன்னமும் உண்டு..

நான் கல்லூரியில் படித்து வந்தபோது என் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் நி.பஞ்சம்பட்டி போகும் வழியில் இருக்கும் அனுமரை வழிபட்டு வந்தேன்.. அந்த அனுமார் அங்கே வந்ததே ஒரு சுவையான சம்பவம்.. ரொம்ப காலத்துக்கு முன்னாடி எங்கள் ஊர் மலையில் இருந்து வீட்டுக்கு பட்டியக்கல் (சதுர வடிவில் இருக்கும் கல். துணி துவைக்கவோ கோவில்களிலோ இந்த வகை கல்லை பாக்கலாம்) சைக்கிளில் எடுத்துச் சென்றார். இப்போது கோவில் இருக்கும் இடத்திற்கு வந்த போது அந்த சைக்கிள் நகரவில்லை. அவரும் என்னன்னமோ செய்து பார்த்தார். ஹ்ம்ஹும்.. ஒண்ணும் நடக்கவில்லை. அப்போது தான் கவனித்தார் அந்த கல்லில் ஆஞ்சநேயர் உருவம்.. பதறியடித்துப் பார்த்த அவர் அந்தப் பாதையின் அருகிலேயே மணல் மேடுகட்டி அனுமாருக்கு கோவில்கட்டினார்..

எங்கள் ஊர் சிறுமலையும் அனுமாரோடு சம்பந்தப்பட்டது.. அனுமார் சஞ்சீவி மலையை தூக்கி சென்றபோது பல மூலிகைகள் அதிலிருந்து இந்த சிறு மலையில் விழுந்ததாம்.. மலையில் நீங்கள் இருக்கும் போது பாம்பு கடித்தால் கூட, நீங்கள் மலையிலேயே இருக்கும் வரை விஷம் உங்கள் உடம்பில் ஏறாது என்பது இன்றும் எங்கள் ஊர் மக்கள் நம்பி வரும் ஒரு கருத்து..

சென்னை வந்த பிறகு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி சென்றதுண்டு. அவ்வளவு உயரிய சிலையை பார்த்த போது தான் புரிந்தது.. அவரை என் மனதில் சிறிய கூட்டுக்குள் அடக்கி வைத்திருப்பதால் தான் என் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்று.. சுருங்கும் போது சிறியவராகி, விரியும் போது பெரியவராகி.. இருக்கும் இடத்தை கோவிலாக்கும் அந்த கருணை அவனுக்கே உண்டு.. அது என் பாக்கியமே ஆஞ்சநேயா..

ஆஞ்சநேயரை பற்றி நான் சொன்னதெல்லம் விரல் நுனியளவு.. இங்கே அம்பி சொல்வதை பாருங்கள்.. அனுமனின் கருணை புரியும்

ஜெய் ஆஞ்சநேயா!!!

28 பின்னூட்டங்கள்:

said...

//அந்த சின்ன வயசுல என்னை வியப்பில் ஆழ்த்திய அந்த சம்பவம் நடந்தது.. ரொம்ப நாளா வரன் அமையாம இருந்த அந்த அத்தைக்கு நல்ல அரசு வேலைல இருக்க மாப்பிள்ளை அமைந்தது.//

கோயில்களுக்குத் திருமணம் பிந்தும் பெண்களைப் போகச் சொல்வதற்கு அடிப்படைக் காரணம் கோயிலில் அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்ப்பவர்கள் "தொடர்ந்து கோயிலுக்கு வருதே இந்தப்பெண்.. நல்ல பிள்ளையாக இருக்கும்" என்று நினைத்து/கண்டு சம்பந்தம் பேச வரக்கூடும் என்பதேயாகும் என்பது என் கருத்து. அதனாலேயே கோயிலுக்குப் போகிறவர்களெல்லாம் நல்லவர்களென்றில்லை. ஆனாலும் தொடர்ந்து போவதால் மனதில் அமைதியும் நல்ல மாற்றங்களும் ஏற்படும் என்பது மிகையில்லை.

உங்கள் சொந்தக்காரப் பெண்ணுக்குப் போகச்சொன்னது ஆஞ்சநேயர் கோயில்.. நிறைய பிரம்மச்சாரிகள் வழிபடும் ஒருவரது கோயில்.. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதிசயம் ஒன்றுமிராது. :-)

உங்கள் நம்பிக்கையைப் புண்படுத்தும் நோக்கமில்லை நண்பரே.. தோன்றியதைச் சொன்னேன். அவ்வளவே.

said...

/சுருங்கும் போது சிறியவராகி, விரியும் போது பெரியவராகி.. இருக்கும் இடத்தை கோவிலாக்கும் அந்த கருணை அவனுக்கே உண்டு/
கடவுள் நமக்குள்ள இருக்கிறார் என்பதை நச்சுன்னு சொன்னீங்க:)உங்க பாணியில் எழுதிய ஒரு எளிமையான ஆனா கருத்தாழமிக்க ஆன்மீக பதிவு:)

said...

//ரொம்ப நாளா வரன் அமையாம இருந்த அந்த அத்தைக்கு நல்ல அரசு வேலைல இருக்க மாப்பிள்ளை அமைந்தது//

எளிமையால் ஈர்க்கும் ஐயனல்லவோ ஆஞ்சநேயன்!

//இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்று.. சுருங்கும் போது சிறியவராகி, விரியும் போது பெரியவராகி//

அழகிய சிந்தனை, கார்த்தி!
தன்னை தனக்கு அளித்து என்று சொல்வார்கள்; இங்கே காணுங்கள்!

said...

//சுருங்கும் போது சிறியவராகி, விரியும் போது பெரியவராகி.. இருக்கும் இடத்தை கோவிலாக்கும் அந்த கருணை அவனுக்கே //

Superrrrrrr! well written, i love these words. nicely scripted karthi. anjeneya is always best and special. thanx for posting a one on hearing this Arpa pathar words.

enga akka kitta recommand panren! :) (me thaan pashtaa?)

Anonymous said...

aiiiyaaa....modha comment nanga than..adheppadi ellorum (neengalum ambiyum) solli vacha madiri nan ezhudalamnu irukara oru mattera (aanjaneyar b'day) takkunu blogla potuteenga...

anyway maruthi enga irundhalum ok than..jai hanuman.

said...

nice. one.. i have munched both u and ammanchi blogs. same concept, different approach, different known information in a unknown way. super..

:) grt8

said...

தலீவரே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல சொன்ன மாதிரியே விளம்பரம் போட்டுட்டீங்க...ரொம்ப நன்றிங்க... :-)

said...

சாமி சமாச்சாரத்துக்கும் நமக்கும் எப்பவுமே அவுட் ஆப் சிலபஸ்தான்...அனுமார்னு சொன்னா எனக்கு நியாபகம் வரது எல்லாம் வடைதான் :-)

said...

சுவையா எழுதி இருக்கிங்க கார்த்திக்.

நங்கனல்லூர் கோவில் என்னோட favorite கூட..

ஆஞ்சநேயரே பிரம்மச்சாரி. அவர் கிட்ட ஏன் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேக்கறாங்க??

said...

நல்ல பதிவு கார்த்தி

ஜெய் ஆஞ்சநேயா

Anonymous said...

Karthi,

சுவையான சம்பவங்களுடன் ஆஞ்சனேயரை வாழ்த்தியிருக்கிறீர்கள். நானும் Happy Birthday Hanuman சொல்லிக்கறேன். அப்படியே பரிசு வாங்கிய உங்களுக்கும்.

வால்தனம் செய்பவர்களை ஆஞ்ஜனேயர் அவதாரம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். அவரே அவதார புருஷனா என்று நக்கீரர் கேட்கிறார் :)

cheers
SLN

said...

//ஆஞ்சநேயரே பிரம்மச்சாரி. அவர் கிட்ட ஏன் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேக்கறாங்க//

@priya, குட் கொஸ்டின்...அதே மாதிரி வினாயகரும் பிரம்மச்சாரி ஆனா கல்யானம் முடிஞ்ச உடனே அவர் கிட்ட தான் ஆசீர்வாதம் வாங்க சொல்றாங்க...அது ஏன்...எனக்கு தெரியும் சொன்னா பைத்தியம்பாங்க :-)

said...

//உங்கள் நம்பிக்கையைப் புண்படுத்தும் நோக்கமில்லை நண்பரே.. தோன்றியதைச் சொன்னேன். அவ்வளவே//

நன்றி முகில்.. அப்படியொரு சம்பவம் நடக்க இவர்கள் தானே காரணமாக இருக்கிறார்கள்

said...

/எளிமையால் ஈர்க்கும் ஐயனல்லவோ ஆஞ்சநேயன்!
//

சரியாச் சொன்னீங்க ரவி

said...

//உங்க பாணியில் எழுதிய ஒரு எளிமையான ஆனா கருத்தாழமிக்க ஆன்மீக பதிவு//

ரொம்ப நன்றிங்க வேதா

said...

/Superrrrrrr! well written, i love these words. nicely scripted karthi. anjeneya is always best and special. thanx for posting a one on hearing this Arpa pathar words.//

நன்றி அம்பி..

உங்க பெருந்தன்மை யாருக்கு வரும்.. அற்ப பதர்னு எல்லாம் சொல்லாதேப்பா

//enga akka kitta recommand panren! //

இதுவும் ஆஞ்சநேயனின் திருவிளையாடலோ

said...

//anyway maruthi enga irundhalum ok than..jai hanuman. //

ithu spirit one among u..

said...

//same concept, different approach, different known information in a unknown way. super..
//

Thanks adiya..Thanks for your first visit..

said...

//தலீவரே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல சொன்ன மாதிரியே விளம்பரம் போட்டுட்டீங்க...ரொம்ப நன்றிங்க... //

நாட்டாமைக்கு இல்லாத விளம்பரமா

said...

/சாமி சமாச்சாரத்துக்கும் நமக்கும் எப்பவுமே அவுட் ஆப் சிலபஸ்தான்...//


நாட்டாமைனா சும்மாவா

said...

//சுவையா எழுதி இருக்கிங்க கார்த்திக்.

//

நன்றிங்க ப்ரியா

//ஆஞ்சநேயரே பிரம்மச்சாரி. அவர் கிட்ட ஏன் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேக்கறாங்க??

//

அவர் தான் மின்சாரக்கனவு பிரபுதேவா மாதிரி தூது போகச் சொன்ன அவருக்கே செட் பண்ணிக்க மாட்டாரு

said...

//நல்ல பதிவு கார்த்தி

ஜெய் ஆஞ்சநேயா //

நன்றிங்க அருண்

ஜெய் ஆஞ்சநேயா

said...

// அப்படியே பரிசு வாங்கிய உங்களுக்கும்//

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க SLN

said...

//அதே மாதிரி வினாயகரும் பிரம்மச்சாரி ஆனா கல்யானம் முடிஞ்ச உடனே அவர் கிட்ட தான் ஆசீர்வாதம் வாங்க சொல்றாங்க...அது ஏன்...எனக்கு தெரியும் சொன்னா பைத்தியம்பாங்க//

நாட்டாமை, ப்ரியாவுக்கு சொன்ன அதே பதில் தான் இதற்கும்

said...

ரொம்ப நல்ல பதிவு, சிறுமலைக் கோவிலைப்பத்தித் தெரியும், ஆனால் இன்னும் அந்தப் பக்கம் வந்தது இல்லை. அது சரி, இப்போ சிறுமலைப் பழம் முன்னே மாதிரி கிடைக்குதா? ஹிஹிஹி, ரொம்ப நல்லா இருக்கும், மதுரையிலே இருக்கும்போது சாப்பிட்டது. இப்போ கண்ணால் பார்க்கவே முடியலை.

said...

//சிறுமலைப் பழம் முன்னே மாதிரி கிடைக்குதா? ஹிஹிஹி, ரொம்ப நல்லா இருக்கும், மதுரையிலே இருக்கும்போது சாப்பிட்டது. இப்போ கண்ணால் பார்க்கவே முடியலை.//

இன்னும் கிடைக்குதுங்க மேடம்.. ஆனா சுவை கொஞ்சம் குறஞ்சுபோயிட்டதா நான் நினைக்கிறேன்

Anonymous said...

Intha posta eppadi miss pannen! anjaneyar pathi super post ithu! kalakunga!

said...

//anjaneyar pathi super post ithu! kalakunga!//

Thanks Dreamzz