Friday, December 29, 2006

மறக்க முடியாத 2006

இந்த வருஷம் எனக்கு மிக மகிழ்வான வருஷம். நினைத்தற்கும் வரமாய் கேட்டதற்கும் அதிகமாக ஆண்டவன் அருள் தந்து, என் உள்ளே சக்தியாய் புகுந்தி எல்லாவற்றையும் நடத்தி கொடுத்த வருடம்..

கிட்டதட்ட ஏழு வருடங்களுக்கு முன்னால் வேண்டிய ஒன்றை திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் நடத்தி கொடுத்ததால், இந்த வருடம் பிப்ரவரி மாதம் கோயில் திருவிழாவின் போது தீச்சட்டி எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் தள்ளிப் போய் இந்த வருடம் தான் இதை எடுக்க முடிந்தது.அம்மனுக்கு என் நன்றியை அளித்தேன்.. பெரியதொரு உள்ளக் கவலை ஒன்றை அம்மன் சன்னிதியில் இறக்கி வைத்தேன். அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

இந்த வருடம் மே மாதம் என் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆனதால் கன்பார்ம் ஆகி, 5/5 என்று ரேட்டிங்கும் கிடைத்த வருடம்..அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

ஒரு அண்ணனாய் இருப்பவனுக்கு இருக்கும் கடமை..தங்கை கல்யாணம்..அதுவும் இந்த வருடம் ஜூன் மாதம் 28-ல் கல்யாணம் நடந்தது ஆண்டவன் அருளால்..அடுத்த வருடம் மாமா புரோமோஷன் வேற வெயிடிங்க்..அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

அதிகம் தேடாமல் ஆண்டவன் தந்தது இந்த அமெரிக்க வாசம்.. அதுவும் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17-இல் நடந்தது.. எத்தனையோ கனவுகள் இருந்தாலும் வாழ்கையில் இதுவெல்லாம் ஒரு தனி கனவு.. இதையும் அந்த வடபழநி ஆண்டவன் நடத்தித் தந்தான்.. அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..

சினிமாக்களிலும் அலுவலகத்தில் மேனேஜர் கையிலுமே பார்த்த வந்த மடிக்கணினி இப்போ நம்ம மடிலையும்..வந்தது அமர்ந்தது இந்த வருஷத்துல தான்

எபோதோ சின்னதாய் ஆரம்பித்து, ஆர்வங்கள் பெருகி, இப்போது புதியதாய்..ஆல விழுதுகளய் நன்பர்கள் கிடைத்து, மன மகிழ வைத்த இந்த பிளாக் உலகம். எத்தனை நண்பர்கள்..எத்தனை திசைகள்..ஒவ்வொரு டிகிரியிலும் பல நண்பர்கள்.. இந்த வருட ஆரம்பத்தில் பின்னூட்டங்கள் இல்லாமல், தண்ணியில்லா ஏரியை போல் கிடந்த இந்த பக்கத்தை பார்த்து, மாரி மழை பெய்யாதோ என்று நினைத்திருக்கிறேன்.. கனவுகள் பெரிய கனவுகள் கண்டிருக்கிறேன்.. இப்போது இந்த வருடக் கடைசியில் அதை திரும்பி புரட்டி பார்த்தால் இந்த தொட்டு விட்ட தூரம் உள்ள உவகையே தருகிறது.. தொட்டெழுந்து பார்த்தால் போகும் தூரமும் நிறையத் தான் இருக்கிறது.

இந்த வருடத்தில் தான் பதிவுகள் எண்ணிக்கை சதமடித்தது.. சேவாக்காகி 300ம் அடித்தது.. பின்னூட்டம் எழுபதையும் தாண்டியது.. முருகன் மாதிரி என் நாடு என் மக்கள் னு ஒரு அமைச்சரவையும் உண்டாகி..ஹிஹிஹி..நமக்கு நாமே முடியும் சூட்டியாச்சு... இதோ அடுத்த மந்திரிசபை விரிவாக்க வேலையும் போயிகிட்டு இருக்கு.. இப்படி பரபரன்னு வாழ்க்கை பதிக்க ஆரம்பிச்சதும் இந்த வருஷத்துல தான்

எழுதிய பதிவுகளை திரும்பி பார்க்கையில், ஆதரவான ஒரு கை தலையை கோதி விடுகையில் கிடைக்கும் ஒரு ஆனந்த மயக்கம், சந்தோசம் உள்ளத்திலே பரவிக் கிடக்கிறது.. ஆனால் நிறைய சினிமா பத்திதான் எழுதி இருக்கிறோமோ என்று ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது.. அதையும் வருகின்ற 2007-இல் சரிப் படுத்த முயல்வேன் என்று ஒரு நம்பிக்கை இருந்தாலும், சினிமாவே இல்லாமல், தண்ணீரே இல்லாமல், இருக்க முடியாது என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது.

நண்பர்களே, வருகின்ற 2007 உங்களுக்கு பொன்னான வாழ்க்கையையும் புதுவேக உற்சாகத்தையும் தந்து, உடல் ஆரோக்கியமும், வெற்றி ஏணிகளில் ஏற்றம் என்று மகிழ்வை தர வாழ்த்துக்கள்.

எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

67 பின்னூட்டங்கள்:

said...

தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

said...

2006ஐ விட 2007 உங்களுக்கு சிறப்பாக அமையட்டும்!!!

வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

கார்த்தி,உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
உங்களுக்கும் முருகன் தான் கிட்டத்து உறவோ?

said...

2006 ஆம் ஆண்டில் தங்கள் வாழ்வில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளையும் மகிழ்ச்சிகரமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளமைக்கு நன்றி. 2006ஐப் போலவே 2007உம் தங்களுக்கு எல்லாவிதத்திலும் மகிழ்ச்சிகளையும் சிறப்புகளையும் அள்ளித் தர வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

:) (உள்ளேன் ஐயா)

Anonymous said...

அன்பு கார்த்திக், உண்மையெ சொன்னா இதுவரை நான் உங்க பதிவு எதையுமே படித்தது கிடையாதுன்னு நினைக்கிறேன்.
ஆனாலும் வருடம் முடியும் இந்நேரத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சினிமாவைப் பற்றித்தான் அதிகம் எழுதியிருக்கிறேன் என்ற நெருடல் இருந்தாலும் என குறிப்பிட்டிருப்பதிலிருந்தே நீங்கள் அடுத்த தளத்திற்கு உங்கள் பயணத்தை தொடங்கிவிட்டீர்கள் என்பது புலனாகிறது.

உங்களின் பல கனவுகல் 2006ல் நிறைவேறியது போல 2007லும் நிறைவேறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தமிழ் எழுத்துலகில் ஒரு புதிய சகாப்தம் இணைய ஊடகங்கள் மூலமாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நீங்களும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

Anonymous said...

நான் தான் First a?

Anonymous said...

உங்களுக்கு எப்படி 2006 special அ இருந்ததொ! அதை விட இன்னும் கூடுதலாய் அடுத்த 2007 இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

said...

Super post Maams...Enna oru malarum ninaivugal :)

Anonymous said...

//சினிமாக்களிலும் அலுவலகத்தில் மேனேஜர் கையிலுமே பார்த்த வந்த மடிக்கணினி இப்போ நம்ம மடிலையும்..//
அட! எனக்கும் இந்த வருடம் தான்!

said...

2006-la kidaitha santhosam ellam oru 1% Maams....Idhu maadhiri 100% santhosatha indha 2007 tharum....adhuku ennoda manamaarndha vaazhthukal :)

Anonymous said...

//உள்ளத்திலே பரவிக் கிடக்கிறது.. ஆனால் நிறைய சினிமா பத்திதான் எழுதி இருக்கிறோமோ என்று ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது//
அதெல்லாம் ஒன்றும் இல்லை! தமிழனுக்கு இருக்கிற ஒரே entertainment -music album -time pass -relaxation - சினிமா!.

said...

5/5...eppadi maams...idhulayum kalakareenga :)

said...

கார்த்திக்,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

மகிழ்ச்சியை பகிர்தல் மகிழ்ச்சி!!! அடுத்த ஆண்டு இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Anonymous said...

சரியாகச் சொன்னீர்கள் கார்த்தி.உங்கள் பதிவில் சினிமா அதிகம்.மாற்றிக் கொண்டால் உங்கள் கனவு நிறைவேரும்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒரு முகம் காட்டாத நண்பன்

said...

//அடுத்த வருடம் மாமா புரோமோஷன் வேற வெயிடிங்க்..//

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)

அடுத்த ஆண்டும் உங்களுக்கு இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.. :-)

Anonymous said...

Karthi,

Very happy to see the wonderful happenings 2006 brought for you. Wishing you that the coming year(s) bring even better things for you and your loved ones

Cheers
SLN

Anonymous said...

Malrum Ninaivugal ullathai thottadhu.Thank you for the wishes and we too wish you the same.
Happy New Year MK.

said...

முழுதுமாக மகிழ்ச்சியளிக்கும் சொற்களைக் கொண்ட பதிவு!

ஓரு இடத்தில் கூட நெருடல் இல்லை; புலம்பல் இல்லை, ஆத்திரம் இல்லை; வன்மம் இல்லை; கழிவிரக்கம் இல்லை!

இப்படியே இனி வரும் எல்லா ஆண்டுகளும் எல்லாருக்கும் அமைய எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன்!

முருகனருள் முன்னிற்கும்!!

Anonymous said...

ஒஹியா வட்ட அசின் ரசிகர் மன்றத்தின் தலைவனே!

இவ்வாண்டில்...

நீ அமெரிக்கா கண்டம் தலைவனாக வாழ்த்துக்கள்...

உன் பொன்னான எழுத்துக்காக அசினின் பாதத்தில் ஊசி என்ன, கடப்பாறையே குத்தலாம்...

எங்கள் தானயத்தலைவியில் போட்டியாளராக இருப்பினும், உங்கள் பதிவைப் போலவே அசினும் படம்பல நடித்து வெற்றிப் பெற வாழ்த்துகிறோம்.

இவன்,
இலியானா அமெரிக்க ரசிகர் மன்ற உறுப்பினர்கள்

[உறுப்பினர்கள் யார் யாருன்னு ஒரு பின்னூட்டம் போடுங்கப்பா...]

Anonymous said...

2006 ungalukku nalla varushama iruthathil romba santhosam... 2007 athavida innum nalla varushama irukattum.

Wishing you and your family a very Happy and Prosperous New Year !!!

said...

கார்த்திக்
உங்களுக்கும் மற்றும் உங்களு குடும்பத்தினர் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

\\ ஒரு அண்ணனாய் இருப்பவனுக்கு இருக்கும் கடமை..தங்கை கல்யாணம்..அதுவும் இந்த வருடம் ஜூன் மாதம் 28-ல் கல்யாணம் நடந்தது ஆண்டவன் அருளால்..அடுத்த வருடம் மாமா புரோமோஷன் வேற வெயிடிங்க்..அதனால் இது மறக்க முடியாத ஆண்டு..\\\

அப்ப ருட்டு கிலீயர்....அடுத்த வருஷம் உங்கள் கல்யாணம் :))

உங்கள் கனவுகளும், முயற்சிகளும் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்

said...

2006ஐ விட 2007ல் உங்கள் வாழ்வில் இன்னும் அதிகம் கலக்க வாழ்த்துக்கள் கார்த்திக் :)

said...

எதுவாக இருந்தாலும் எழுதுங்க கார்த்திக்.
எல்லா அமைப்புகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
புது வருடம் நன்கு அமையவும் வாழ்த்துக்கள்.

said...

வாழ்க வளர்க
இனிய புத்தான்டு மலரடும் வாசமுடன்

said...

என்னடாது எல்லாரும் கன்னா பின்னான்னு வாழ்த்தறாங்க, நான் வெறும் புன்னகை மட்டும் இட்டு உள்ளேன் ஐயா சொல்லிட்டுப் போறது சே..சே.. (எஸ்.கே. எழுதும் லப்-டப் தொடரில் இப்படித்தான் புன்னகை மட்டும் இடப்போக, இந்தப் புன்னகை என்ன விலைன்னு கேட்டுட்டாரு!)

2006-ஐப் போலவே 2007 உங்களுக்கு மகிழ்ச்சியான, இன்னும் வெற்றிகரமான வருடமாக அமைய வாழ்த்துக்கள் கார்த்தி! ரூட்டு கிளியரான்னு தான் நானும் கேட்கணும்னு நினைச்சேன்!

said...

//[உறுப்பினர்கள் யார் யாருன்னு ஒரு பின்னூட்டம் போடுங்கப்பா...]//

ஜி, கார்த்தி ஒத்துக்குவாரோ இல்லையோ, அதனால அவர் சார்பில் நானே சொல்லிடறேன். கார்த்தியும் இலியானா ரசிகர் தான்! அசின் ரசிகரா இருந்துக்கிட்டே இலியானா ரசிகர் மன்றத்துல ஓவர்டைம் வேலைன்னா பார்த்துக்கோங்க!!

Anonymous said...

கார்த்தி இப்பதான் உன்னோட பழைய பதிவுல கமெண்டிட் டு f5 பட்டன் அமுத்தினா அடுத்த பதிவு...


நான் நினைச்ச மாதிரி 2006 பதிவு..

உனக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள்.. உனக்கு நடந்த மாதிரியே எனக்கும்..அத பத்தி இதோ நானும் எழுத போகிறேன்


அப்புறம் நண்பனாய் ஒரு வேண்டுகோள்..

சினிமாவை பற்றி உன்னால் தான் இவ்வளவு உடனுக்குடன் எல்லா விடயங்களையும் எழுத முடியும்..எனவே

இனி வரும் காலங்களில் மற்ற பகுதிகளிலும்,கவிதை,கட்டுரை என இன்னமும் அதிக படுத்தி


"விசையுறு பந்தினை போல்
உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலுடன்.."

புத்தாண்டு வாழ்த்துகள்

said...

என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா :)

Anonymous said...

தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அமஞ்சிக்கரனாலும்,அமெரிக்கானாலும் நம்மூர் முருகன் நெனப்புதானா? very gud

said...

//இந்த தொட்டு விட்ட தூரம் உள்ள உவகையே தருகிறது.. தொட்டெழுந்து பார்த்தால் போகும் தூரமும் நிறையத் தான் இருக்கிறது.
//

Very True. You deserve for it. from the begning itself i'm your fan karthi! :)

Happy New Year! nestu year dum! Dum! Dum! Unakkum! :p

Anonymous said...

Ada oru second kulla yenoda 1st place poiduthu ba ;)

Hehehe..Nice post... Oru rewind poitu vanthuteenga pola :)

Iniya puthandu vaazthugal! :)

said...

ஹாய் கார்த்திக்,

அகில உலக "அசின்" மன்ற தலைவராக ப்ரமோஷன் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

அப்பறம், 2007ல் மேலும் அதிக அளவில்(நீங்களே போதும்னு சொல்ற அளவுக்கு)பின்னூட்டம் கிடைக்க வாழ்த்துக்கள்.

மேலும் உங்கள் பல ஆசைகலும் விருப்பங்களும் நிறைவேர வாழ்த்துக்கள்.

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் கார்த்திக்.

said...

வாழ்த்துக்கள் கார்த்திக், 2006 போல் 2007-ம் ஆண்டும் ஏற்றமும், மகிழ்ச்சியும் நிரம்பி அமைய என்னோட ஆசிகளும், வாழ்த்துக்களும், (நான் எந்த அலுவலகத்திலும் வேலை செய்யவில்லை. செய்தேன். பாதியிலேயே வேலையை விட்டாச்சு.)

Anonymous said...

என்னுடைய கமெண்ட்ஸ் இன்னும் பிரசுரிக்க முடியவில்லையா கார்த்திக். அதை copy & paste பண்ணிடுங்க.. ஹீ ஹீ..

Anonymous said...

Ungalukkum enathu iniya puthandu vaashthukkal ;)

Anonymous said...

thala....me got posted in chn...nethu dhaan vandhen...idho kaniniya pazhudhu paathuttu unga pakkatthukku dhaan vandhen...trng ellam semma jolly...college maadhiri dhaan irundhudhu...joinin on 2nd jan...

ungalukkum iniya putthaandu nalvaazhtukkal...

naatamai'kku ad aah....pramaadham... :))

said...

கண்டிப்பாக இது மறக்க முடியாத ஆண்டு தான் மாப்பி

said...

Karthik thalaiva,

~~~!!!WISH YOU A VERY HAPPY NEW YEAR 2007!!!!!!!~~~

said...

என்ன மாப்பி, நம்ம பங்கு க்காக ரொம்பவே கூவி இருக்க, என்ன மேட்டரு..........

said...

2007ஆம் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய என் இனிய வாழ்த்துக்கள்.

Anonymous said...

கார்த்தி, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

said...

@கார்த்தி. என்ன எழுதறோம்ங்கரது முக்கியம் இல்லை. எப்படி எழுதறோங்கரதுதான் முக்கியம்.பெருசு சிருசு எல்லாரையும் கவர் பண்ணரையே அப்பறம் என்ன ஜமாய்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.அசினை கசினாக்கிட்டு அம்பி வழி போ இந்த வருஷம்.

Anonymous said...

appuram new year kku enna seitheenga?

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஹையா!! உங்க எல்லாருக்கும் முன்னடி முதல்ல நாங்கதான் புத்தாண்டு கொண்டாடினொமே!!!!
(உங்கள விட கிட்டத்தட்ட 14 மணி அட்வான்ஸ்)

Anonymous said...

hi karthik
wish you and your family a fantastic new year. keep us entertaining and im happy to have found a good friend.

said...

என்ன இன்னுமா புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிஞ்சு எழுந்திருக்கலை? ஒரு தலைவின்னா என்ன என்ன கஷ்டம் எல்லாம் பட வேண்டி இருக்கு பாருங்க? ஒவ்வொரு பதிவுக்கா போய்த் தொண்டர்களை எல்லாம் தூக்கத்திலே இருந்து எழுப்பிப் பின்னூட்டம் கொடுக்க வாங்கன்னு கேட்டு, எல்லாம் HEAD LETTER

said...

இந்த வருடம் மிகச்சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா!

Anonymous said...

2006i vida panmadangu 2007 speciala amaiya en vaazthukal..

neenga nijama nalla kadavul bakthar enbadhai ungal padhivil velikonarndhu irukareergal...

really its tough to c guys of this nature...unga manasu padi ellam nalla nadakum ini varum naatkalil..

Anonymous said...

Puthaandu Nalvaazhthukkal :)

said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் வெட்டிப்பயல் 'பாலாஜி', தூயா,கைப்புள்ள, அரசி, மஞ்சூர் ராசா, ட்ரீம்ஸ், மாப்ள பரணி அனைவருக்கும் நன்றி..

தூயா, முருகன் நம்ம உள்ளத்தில் வாழ்பவர்.. உடலில் உலவுகின்ற காற்றும் அவனே..

தங்கள் முதல் வருகைக்கு நன்றி மஞ்சூர் ராசா

said...

//5/5...eppadi maams...idhulayum kalakareenga //

எல்லாம் அவன் செயல் பா மாப்ள

said...

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன நண்பர்கள் ராம், இன்பா, முகம் காட்டாத நண்பன், G3, SLN, SKM அனைவருக்கும் நன்றி..

said...

என்னப்பன் முருகன் முகம் கொண்டு வாழ்த்திய SK (நல்லதையே நினைத்தால் நல்லதே செய்யலாம், நல்லதே நடக்கும்ங்க SK), அமெரிக்க கண்டத்தின் அசின் ரசிகர் மன்ற தலைவனாக வாழ்த்து கூறிய நண்பன் ஜி, நண்பன் KK, ரூட் கிளியர்னு கல்யாணத்துக்கு வாழ்த்து கூறிய கோபிநாத், 2007 இன்னும் நல்லா கலக்க வாழ்த்து சொன்ன கிளீவ்லேண்டு ஹிரோ அருண் எல்லோருக்கும் எனது நன்றி.

said...

எதுவா இருந்தாலும் எழுத சொல்லி வாழ்த்திய தோழர் வல்லிசிம்ஹன், நன்பன் அடியா, மறுபடியும் வாழ்த்து சலாம் போட்ட அரசி, "விசையுறு பந்தினை போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலுடன்.." என்று தமிழோடு வாழ்த்திய என் ஊர் நண்பன் மணிபிரகாஷ், கோபாலன் ராமசுப்பு, ஸ்ருதி, மச்சான் அம்பி(அடுத்த வருடம் "உனக்கும்" டும் டும் டும் என்று இந்த புது வருஷத்தில் தனக்கு நடக்க போகும் கல்யாண சேதியோடு வாழ்த்து சொல்லி அசத்திட்டான்) எல்லோருக்கும் நன்றி

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன பொன்னா, எல்லோரையும் விட ஒரு படி மேல போய், அகில உலக "அசின்" மன்ற தலைவராக ப்ரமோஷன் கிடைக்க வாழ்த்து சொன்ன தோழி சுமதி, நண்பன் கார்மேகராஜா, தலைவி கீதா சாம்பசிவம், மலேசிய தோழி மை பிரண்ட், பிரஞ்ச் நண்பர் CM ஹனிஃப்ஃப், சென்னையில் வேலைக்கு சேர்ந்துள்ள நம்ம கோல்மால் கோபால், இந்திய வந்திருக்கும் என் மாம்ஸ் நாகை சிவா எல்லோருக்கும் நன்றி

said...

வாழ்த்து சொன்ன லண்ட்ன் தோழி உஷா, வாழ்த்து சொன்ன சின்னகுட்டி, ரிபீட் வாழ்த்து சொன்ன தூயா, அசினை கசினாக்கிட்டு அம்பி வழி போக வாழ்த்து சொன்ன தி.ரா.சா சார், எல்லாருக்கும் முன்னடி முதல்ல நாங்கதான் புத்தாண்டு கொண்டாடினொமேன்னு பெருமைபட்டு வாழ்த்து சொன்ன சின்ன அம்மினி, கிட்டு மாமா, தங்கை தீக்க்ஷன்யா எல்லோருக்கும் நன்றி..

said...

//Puthaandu Nalvaazhthukkal :) //

குருவே நன்றி..

said...

/2006i vida panmadangu 2007 speciala amaiya en vaazthukal..

neenga nijama nalla kadavul bakthar enbadhai ungal padhivil velikonarndhu irukareergal...

really its tough to c guys of this nature...unga manasu padi ellam nalla nadakum ini varum naatkalil..

//

Thanks my dear friend ramya

said...

//என்ன இன்னுமா புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிஞ்சு எழுந்திருக்கலை? ஒரு தலைவின்னா என்ன என்ன கஷ்டம் எல்லாம் பட வேண்டி இருக்கு பாருங்க? ஒவ்வொரு பதிவுக்கா போய்த் தொண்டர்களை எல்லாம் தூக்கத்திலே இருந்து எழுப்பிப் பின்னூட்டம் கொடுக்க வாங்கன்னு கேட்டு, எல்லாம் HEAD LETTER

//

ஹிஹிஹி, அதுக்கு தானே தலைவி

said...

//உண்மையோ உண்மை அதை விட சுகம் அதுக்கு வர்ர பின்னூட்டங்களை நோட்டம் விடறது தான்///

ஆமாங்க வேதா.. பழைய பின்னூட்டங்களை படித்து இன்னும் சிரிப்பது உண்டு..

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றிங்க வேதா.. தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

//களப்பணி முடிச்சு வந்த அலுப்புல //

எப்படி இருந்தது களப்பணி எல்லாம்

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் : )

said...

//புத்தாண்டு வாழ்த்துக்கள் /

நன்றிங்க பாலா

said...

இனிவரும் காலங்களிலும் தங்கள் கனவுகளை நனவாக்கி இன்னும் கூடுதல் வெற்றிகளை அடைய வாழ்த்துகிறேன் கார்த்திகேயன்.

said...

//இனிவரும் காலங்களிலும் தங்கள் கனவுகளை நனவாக்கி இன்னும் கூடுதல் வெற்றிகளை அடைய வாழ்த்துகிறேன் கார்த்திகேயன்.//

நன்றிங்க ஹரிகரன்.. தங்களது வாழ்கையும் எல்லவிதமான சந்தோசங்களுடன் இந்த வருசம் அமையட்டும்