Wednesday, December 06, 2006

காதலனே கண்கண்ட தெய்வம் - பகுதி 4 (நிறைவு பகுதி)

இந்த கதையின் முந்தைய மூன்று பகுதிகளை படிக்க...

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி


ஆட்டோ தரமணியை நெருங்கி இருந்தது.. பின்னால் இன்ஸ்பெக்டர் இன்பவேலன் ஆட்டோவை நெருங்கி இருந்தார்.. அதற்குள் அவர் கொடுத்த தகவல் கிடைத்து வேளச்சேரி போலீசும் ஜீப்பில் விரட்டி வந்து கொண்டிருந்தது.. ரோட்டில் போகும் மொத்த சனமும் என்னமோ ஏதோ என்று இந்த துரத்தல் காட்சியை பார்த்து கொண்டிருந்தது..

சண்முகம் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தான்.. இப்படி செஞ்சு வச்ச சிலை மாதிரி ரெண்டு பொண்ணுக மாட்டும் என்று அவன் கனவுல கூட நினைக்கவே இல்லை.. மெல்ல தலையை நீட்டி பின்னால் திரும்பி பார்த்தான்.. பசித்த புலி மாதிரி இன்பவேலன் பறந்து வந்து கொண்டிருந்தேன்.. இவன் தலையை பார்த்ததும் இன்பவேலனுக்கு இன்னும் கோபம் கூடி வண்டியின் வேகமும் கூடியது.. இவன் எப்படி இங்கே வந்தான்..சிவ பூஜைல கரடி மாதிரி.. நம்மள பாலோ பண்றதே இவன் வேலையாப் போச்சு..என்று நினைத்தவாறே மயக்க மருந்தை எடுத்த சண்முகம், மெல்ல பாவனா பக்கம் திரும்பி மேடம் மேடம் என்று அழைத்தான்... மெல்ல திரும்பினாள் பாவனா.. அவள் முகத்துக்கு நேரே வைத்து மயக்க ஸ்ப்ரேயை அடித்தான் சண்முகம்.. அந்த நேரம் பார்த்து.. அதிலிருந்து காத்து கூட வரவில்லை..சட்டுன்னு நிலைமையை உணர்ந்த பாவனா தனது ஹை-ஹீல்ஸ் செருப்பு போட்ட காலால் சண்முகத்தை ஓங்கி உதைத்தாள்.. இதை சற்றும் எதிர்பாராத சண்முகம் ஆட்டோவைவிட்டு வெளியே போய் தலைகுப்புற விழுந்தான் அந்த தார்ரோட்டில்.. விழுந்த வேகத்தில் எழுந்தான் சண்முகம்.. ஆட்டோவை நோக்கி ஓடினான்.. இவன் கீழே விழுந்தவுடன் பயந்து போன காளிதாஸ் ஆட்டோவிலிருந்து குதித்து ஓடினான்..

அதுவரை சமத்து பிள்ளையாய் இன்ப்வேலன் கையில் படுத்துக் கிடந்த கைத் துப்பாக்கி சண்முகத்தை நோக்கி எழுந்தது.. ஓடிய சண்முகம் டிரைவர் இல்லாமல் ஓடிய ஆட்டோவை பிடிக்கவும் இன்பவேலனின் துப்பாக்கி குண்டு சண்முகத்தின் காலை முத்தமிடவும் சரியாக இருந்தது.. காலில் குண்டடி பட்டாலும் கையில் பற்றிய ஆட்டோவை விடாமல் அதுகூடவே விந்தி விந்தி ஓடினான் சண்முகம்.. அந்த இடத்தில் இன்பவேலனை பார்த்தவுடன் சொல்லாத அந்த பாசம்.. காதல்.. மனசுக்குள் முட்டி பாவனாவின் கண்களில் கண்ணீராய் பெருகியது.. வேலன் என்று கத்திகொண்டே ஆட்டோவை விட்டு வெளியேற இந்தப்பக்கம் வந்த பாவனாவை பிடித்து வெளியே இழுத்தான் சண்முகம்.. அவன் இழுத்ததில் நிலைகுலைந்த பாவனா ரோட்டில் விழப்போக, அவள் தலைமுடியை கொத்தாக பிடிக்க போனான் சண்முகம்.. அதே நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த இன்பவேலன், சண்முகத்தை வலது காலால் எட்டி உதைத்தான்.. இடது கையால் பாவனாவை தாங்கினான்.. நிலைதடுமாறி ஓடிய ஆட்டோ ரோட்டின் பக்கவாட்டில் இருந்த ஒரு பள்ளத்தில் இறங்கி நின்றது.. உள்ளே இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்து காவ்யா மயக்கம் போட்டு கிடந்தாள்..

வேலன்..வேலன்..என்று அவன் மார்பில் தலை சாய்த்து அழுதாள் பாவனா.. அவளின் தலை தடவி சமாதானப் படுத்தவா.. இல்லை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து..காதல் பூ ஒரு போர்க்களத்தில் பூத்தது கண்டு இன்பத்தில் திளைத்து கிடந்தான். அதே நேரம் ஆட்டோவுக்குள் மயங்கி கிடந்த காவ்யாவை கண்ட சண்முகம் மெல்ல எழுந்து அவளை நோக்கி குண்டு பாய்ந்த கால்களை இழுத்துக் கொண்டு நடந்தான்.. ஏதேச்சையாக திரும்பி பார்த்த இன்பவேலன் சண்முகத்தின் மார்பை நோக்கிச் சுட்டான்.. கொண்டு பட்ட வேகத்திலே சுருண்டு விழுந்தான் சண்முகம்..

இன்பவேலன் வீடு

பாவனாவின் பெற்றோர்களும் இன்பவேலனின் பெற்றோர்களும் முறையாக இன்பவேலனுக்கும் பாவனாவிற்கும் இடையே கல்யாணத்தை நிச்சயம் செய்தனர்.. தனது தோழியே தனக்கு அண்ணியாக வரப்போவதை நினைத்து பவித்ரா மிகுந்த சந்தோசத்தில் இருந்தாள்..

இரவு வேலை..மொட்டை மாடி..வான் நிலா தனியாக மேகத்துக்கிடயே நடை போட்டுகொண்டு இருக்க, வையத்து நிலா பாவனா இன்பவேலனின் தோளில் சாய்ந்து கொண்டிருந்தாள்..இருவரும் அங்கேயே இல்லை.. பின்ன ஒரு கட் சொல்லி பாத்தா மொரிஷியஸ்ல புது லொகேசன்ல..ரெண்டு பேரும் டூயட் தான்..

காக்கிச் சட்டை போட்ட மச்சான்..
கொக்கி போட்டு மனசை தச்சான்..
என்று யுவன் இசைல கேகேவும், சுஜாதாவும் பாட.. ஒரு உல்லாச உலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

(நான்கு வாரத்திற்குள் முடிய வேண்டிய கதை நேரமின்மை காரணமா ஏழு வாரங்களில் தான் முடிக்க முடிந்தது.. இது சென்னையில் ஒரு கால் சென்டர் பெண்ணுக்கு நடந்த ஒரு கொடுமையை படித்துகொண்டு இருந்தப்போ உதித்தது.. )

22 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ahaa..naan firsta?
kadhai supernga!

//. பின்ன ஒரு கட் சொல்லி பாத்தா மொரிஷியஸ்ல புது லொகேசன்ல..ரெண்டு பேரும் டூயட் தான்..// ennama yosikiringa... ella nija kadhalukkum ippadi oru kaalam varanum...

nalla kadhai:)

said...

yep..Neenga thaan firstunGka..

thanks dreamzz..

Anonymous said...

ஆகமொத்ததுல ஒரு கதையை எழுதி முடிச்சுட்டீங்க.. வாழ்த்துக்கள்.

சினிமாவுக்கு கதை எழுதலாமே? கரெக்டா எப்போ எப்போ பாட்டு போடலாம்ன்னு சொல்லுரீங்க? அதுவும் பாடுவது சுஜாதா என்பதுனால கண்டிப்ப கேட்பேன்.. ஹீ ஹீ ஹீ..

said...

Kadha supera irundhudhu :) Aana ivlo seekiram mudipeengannu edhir paakala :(

said...

//சினிமாவுக்கு கதை எழுதலாமே? கரெக்டா எப்போ எப்போ பாட்டு போடலாம்ன்னு சொல்லுரீங்க? அதுவும் பாடுவது சுஜாதா என்பதுனால கண்டிப்ப கேட்பேன்//

சுஜாதா பேர் எழுதுனவுடனே நினச்சேன்.. உங்களுக்கு பிடிச்ச பாடகியாச்சேன்னு மை பிரண்ட்..

சினிமாவுக்குத் தானே சீக்கிரம் எழுதிடலாம்

said...

//Kadha supera irundhudhu :) Aana ivlo seekiram mudipeengannu edhir paakala //

Thanks G3.. Anaa romba naal izhukka vendaamennu ninachchen athu thaan :-)

said...

//ஆக்ஷன் கதையை இப்படி காதல் கதையா முடிச்சிட்டீங்க:)அதுவும் டூயடெல்லாம் பாட வச்சு கலக்கிட்டீங்க:)

//

இந்த கதையை சினிமாவா சரியான மசாலா கலந்து எடுக்கனும்னு நினச்சேன் அது தான் கடைசில ஒரு டூயட்டோட வேதா

Anonymous said...

mothathula ippo than unga full storya padichen...ottumothama padikaracha nalla irukku romba..edho periya journalist rangela than irukku..hope u r one of that too...

said...

என்னவோ போங்க, முடிவிலே சொதப்பல்னு தோணுது. வித்தியாசமா எதிர்பார்த்தேன். பரவாயில்லை, உங்களுக்காகப் பாராட்டுகிறேன். இல்லாட்டிப் பின்னூட்டம் குறைஞ்சு போயிடுச்சுன்னா? ஹிஹிஹி.

said...

//mothathula ippo than unga full storya padichen...ottumothama padikaracha nalla irukku romba..edho periya journalist rangela than irukku..hope u r one of that too... //

பொறுமையா முழுசையும் படிச்சதுக்கு நன்றிங்க one among u

உங்க பாராட்டுக்கு தலைவணங்குகிறேன் one among u

said...

//பரவாயில்லை, உங்களுக்காகப் பாராட்டுகிறேன். இல்லாட்டிப் பின்னூட்டம் குறைஞ்சு போயிடுச்சுன்னா?///

நன்றிங்கோவ் மேடம்.. ஏதோ என் மொகத்த பாத்து ஒரு பின்னூட்டத்த போட்டதுக்கு ஹிஹிஹி

said...

ஆஹா சுபமா முடிச்சிட்டீங்க, வித்தியாசமா டூயட்லாம் வச்சு.

என்னமோ பயணக் கட்டுரை எழுதணும்ங்கர அவசரத்துல முடிச்ச மாதிரி இருக்கு. ஆனா நல்லா இருந்தது.

said...

ம்ம்ம்.பெருமூச்சுதான் அப்பாடீன்னு.முன் கதைகள் படிக்கும் போது சர்வசாதாரணமா கொன்று விடுவீர்களோ(கோழிக் கழுத்தைப் போல) அப்படீன்னு பயம் வந்தது.நல்லவேளை சுபமா முடிச்சுட்டீங்க.நன்றி.--SKM

said...

vara varam padathai correct-a mathidareenga ;-) Eppolerndhu kadhai ellam ezhuda arambicheenga neenga?? Or shd I say, neengaluma??

Anonymous said...

anna
romba perisaa ellam ezudhi irukeenga. mudalil mudal irandu partsai piece piece aakittu varaen part-3ku

said...

//ஆஹா சுபமா முடிச்சிட்டீங்க, வித்தியாசமா டூயட்லாம் வச்சு. //

நன்றிங்க ப்ரியா


//என்னமோ பயணக் கட்டுரை எழுதணும்ங்கர அவசரத்துல முடிச்ச மாதிரி இருக்கு. ஆனா நல்லா இருந்தது.//

அப்படியெல்லாம் இல்லை ப்ரியா.. ரொம்ப நீளமா எழுதுனாலும் பிரச்சனை அதுனால தான் முடிச்சுட்டேன்

said...

//முன் கதைகள் படிக்கும் போது சர்வசாதாரணமா கொன்று விடுவீர்களோ(கோழிக் கழுத்தைப் போல) அப்படீன்னு பயம் வந்தது.//

அய்யோ என்னங்க இப்படி நினச்சுட்டீங்க SKM

said...

//vara varam padathai correct-a mathidareenga//
Thanks usha

//Eppolerndhu kadhai ellam ezhuda arambicheenga neenga?? Or shd I say, neengaluma??

//

hehehe..athu nadakkuthu romba naala usha

said...

//anna
romba perisaa ellam ezudhi irukeenga. mudalil mudal irandu partsai piece piece aakittu varaen part-3ku //

padichchuttu sollunga kittu

Anonymous said...

Hi கார்த்தி,

கதை ஓட்டம் நன்றாக இருந்தது.. ஆனால் அனைவரும் சொல்ற மாதிரி திடிரென்று முடிந்துவிட்டது...

ஒருவெளை இது சிறிய தொடர்கதையோ (ஆவி ல வருகிற நீளமான சிறுகதை மாதிரி)

என்ன நீங்களும் மசாலாக்குள் இறங்கிவீட்டீர்கள்..

பாட்டு வேற ,,,

ம்ம்ம்ம்.. கலக்குங்கள்..

said...

நன்றி மணி.. இது படதுல வர்ற கிளைமாக்ஸ் காட்சியை நினைத்து படுச்சு பாருங்க.. நல்ல இருக்கும்னு நினைக்கிறேன்

Anonymous said...

semma kalakkal karthik