Friday, December 22, 2006

கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது

கவிஞர் மு.மேத்தாவுக்கு, அவரின் ஆகாயத்தில் அடுத்த வீடு என்னும் கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது..



இவர் எனக்கு தமிழ் சினிமா பாடல்களின் மூலம் தான் அறிமுகமானார். ரெட்டை வால் குருவி படத்தில் வரும் ராஜா ராஜ சோழன் பாட்டின் வசீகிர வரிகளுக்கு சொந்தக்காரர் யார் என்று தேடிப் பார்த்தால் மு.மேத்தா என்ற சேதி கிடைத்தது. இவர் எழுதிய பாடல்களில் மிகுந்த வார்த்தை விளையாடல்கள் தான் இருந்துள்ளன. கீழ்த்தரமான வரிகள் என்றும் இருந்ததில்லை. ரஜினியின் வேலைக்காரன் படத்தை பார்த்த போது அதன் பாடல்களின் வரிகளுக்கும் இவரே சொந்தக்காரர்.. தமிழ் சினிமா பாடல்கள் தடம் மாறி போவதை கண்டு இனிமேல் சினிமா பாடல்கள் எழுத மாட்டேன் என்று சொன்ன புண்ணியவான், கொள்கையாளன்.

இந்த இனிய தருணத்தில் அவருக்கு எந்தன் வாழ்த்துக்கள். மேலும் தரமான படைப்புகளை தமிழுக்கு தர வேண்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

36 பின்னூட்டங்கள்:

Anonymous said...

metha avargalin padaipukkalai padithu rasithirukiren...rettai vaal kuruvi padathin en pidithamana varigalukku ivare sondhakar ena ippodhu than therigiradhu...

ennudaya manamarndha vaazhthukal avarin virudhukku..

said...

கவிஞர் மு.மேத்தா அவர்கள் நபிகள் நாயகம் அவர்களின் அற்புத வாழ்க்கையை பற்றி கவிதை நடையில் "நாயகம் ஒரு காவியம்" என்ற சிறப்பான படைப்புக்கு சொந்தக்காரர். வைகரை மேகங்கள், கண்ணீர் பூக்கள் புதுக்கவிதை தொகுப்புகள் இவரது தேன் மொழிகள். அன்னக்கிளி சொன்ன கதை இவர் தமிழ் சினிமாவிற்காக சொன்ன கதை தான். "என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்" எனும் படத்தில் வரும் மனதில் ஒரே ஒரு பூ பூத்தது, பாரதி படத்தில் வரும் மயில் போல் ஒண்ணே ஒண்ணு எனும் இவரது பாடலை பாடிய பவதாரினி அவர்களுக்கு விருது கிடைத்தது நினைவிருக்கலாம். அன்னாருக்கு தங்கள் பதிவிலேயே என் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்கிறேன் தங்களின் அனுமதியோடு - நன்றி - நாகூர் இஸ்மாயில்

said...

புதுக்கவிதை உலகில் மேத்தாவை விலக்கி வரலாறு இல்லை. வாழ்த்துக்கள். மேத்தாவின் பாடல் இன்னொன்று - மயில் போல பொண்ணு ஒன்னு - பாரதி படம்
இன்னொன்று - காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே - மைக்கேல் ராஜ்
இவர் தயாரித்து கையைச் சுட்ட படம் - தென்றல் வரும் தெரு
ஆனந்த விகடனில் 1 லட்ச ரூபா பரிசு பெற்ற இவர் நாவல் - சோழநிலா
படைப்புக்கள் சில - புதுக்கவிதைப்போராட்டம், கண்ணீர்ப்பூக்கள், நடந்த நாடகங்கள், திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்.

இவ்வளவு தான் இப்போது நினைவுக்கு வந்தவை - போதுமா:-))

Anonymous said...

கவிதைகளிலும் தோற்றத்திலும் எளிமையும் அடக்கமும் நிரம்பிய கவிஞர்.
தமிழ்க்கவிஞர்களுள் ஐந்தாவதாக இவ்விருதைப் பெறுகிறார். வாழ்த்தி மகிழ்கிறேன்.

I.H

said...

MY GOOD WISHES TO METHA. AVARAI 'DESAPPITHAVVUKKU ORU THERUPPADAGANIN ANJALI' KALATHIIL IRNTHEY KAVANITHUUR VARUGIREN. AVARUDAIYA 'CHOZHA NILA' VUKKE INTHA PARISU KIDAITHUIRRUAVENDUM.
VAZHTHUKKAL.
Natrajan

Anonymous said...

super friday morning news. kewl Mr.Moo.K. :)

said...

தமிழ் கவிஞருக்கு வாழ்த்துக்கள்!!!

said...

//தமிழ் சினிமா பாடல்கள் தடம் மாறி போவதை கண்டு இனிமேல் சினிமா பாடல்கள் எழுத மாட்டேன் என்று சொன்ன புண்ணியவான்//

காசுக்காக என்ன வேனா எழுதலாம்னு இருக்கும் இந்த காலத்துல இப்படியும் ஒருவர்...நினைக்கவே ஆச்சர்யமா இருக்கு....இருந்தாலும் இவர் மூலம் சில தரமான பாடல்களை கேட்கும் சந்தர்பம் கிடைத்தால் நல்லா இருக்கும் :-)

Anonymous said...

good to hear that mu.metha is awarded. Rettai vaal kuruvi and Velaikkaaran songs ivar thaaan ezudinaar enbadhu theriyaadhu. but semma songs adellam.

cinemaala ezudha maataen enru sollath thevai illai. yaen cinemaalayum nalla paadalgal ezuthikondu daan irukkiraargal. But i think vaali and vairamuthu took most of the space. adaan matra kavi's ellam odungkikindu vittaargal

said...

நானும் வாழ்த்திக்குறேன்

said...

மு.மேத்தாவிற்கு வாழ்த்துக்கள். இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

Anonymous said...

அவசியம் படிக்கவும் - மு. மேத்தாவுக்கு ஒரு கடிதம்

said...

ராஜா ராஜ சோழன் நான், மற்றும் பாரதியில் "மயில் போல பொண்ணு ஒண்ணு..." இரண்டு பாடல்களுமே அருமையானவை.

Anonymous said...

வாழ்த்துகள்..

அவரின் தமிழ் கீரிடத்தில்
சிறகாய் விருது

மு.மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்களில் தான் என் கவிதை வாசித்தல் ஆரம்பம் ஆனது...

பகிர்தலுக்கு நன்றி கார்த்தி

said...

//rettai vaal kuruvi padathin en pidithamana varigalukku ivare sondhakar ena ippodhu than therigiradhu...//

நன்றிங்க one among u.. உங்க வாழ்த்துக்கள் அவரை இன்னும் நிறைய எழுத உற்சாகமூட்டும் one among u..

said...

//நன்றாக இருக்கும்.
படித்துப் பாருங்கள் தோழர்.. //

தகவலுக்கு நன்றி திருப்பூரான்.. நிச்சயமாக இந்த தொகுப்பெல்லாம் படிக்கிறேன்..

said...

/அன்னாருக்கு தங்கள் பதிவிலேயே என் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்கிறேன் தங்களின் அனுமதியோடு - நன்றி //

நாகூர் இஸ்மாயில், தெரியாத பல விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள். நன்றிங்க

said...

//இவ்வளவு தான் இப்போது நினைவுக்கு வந்தவை - போதுமா//

அரிய தகவல்களுக்கு நன்றிங்க கானா பிரபா..

Anonymous said...

Certainly a deserving winner. However, I think he did make a few compromises for movies.

SLN

said...

//என் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க//

கட்டாயம் வேதா :-)

said...

/கவிதைகளிலும் தோற்றத்திலும் எளிமையும் அடக்கமும் நிரம்பிய கவிஞர்.
தமிழ்க்கவிஞர்களுள் ஐந்தாவதாக இவ்விருதைப் பெறுகிறார். வாழ்த்தி மகிழ்கிறேன்//

வாழ்த்துகளுக்கும் தங்கள் வருகைக்கும் நன்றிங்க, I.H

said...

/MY GOOD WISHES TO METHA//

Thanks Natarajan

said...

//super friday morning news. kewl Mr.Moo.K//

Thanks adiya

said...

/காசுக்காக என்ன வேனா எழுதலாம்னு இருக்கும் இந்த காலத்துல இப்படியும் ஒருவர்...நினைக்கவே ஆச்சர்யமா இருக்கு....இருந்தாலும் இவர் மூலம் சில தரமான பாடல்களை கேட்கும் சந்தர்பம் கிடைத்தால் நல்லா இருக்கும் //

என்னுடைய எண்ணமும் வேண்டுகோளும் இதுவே நாட்டாமை.. பார்ப்போம், இனி ஏதும் பாடல்கள் எழுதுகிறாரா என்று

said...

/cinemaala ezudha maataen enru sollath thevai illai. yaen cinemaalayum nalla paadalgal ezuthikondu daan irukkiraargal//

parpom kittu, marupadiyum ezhuthuraarannu

said...

/நானும் வாழ்த்திக்குறேன்

//

நன்றி அருண்

said...

//மு.மேத்தாவிற்கு வாழ்த்துக்கள். இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.//

நன்றி ப்ரியா

said...

//ராஜா ராஜ சோழன் நான், மற்றும் பாரதியில் "மயில் போல பொண்ணு ஒண்ணு..." இரண்டு பாடல்களுமே அருமையானவை. //

ஆமாம் அரசி

said...

//பகிர்தலுக்கு நன்றி கார்த்தி//
நன்றி மணி

said...

//Certainly a deserving winner. However, I think he did make a few compromises for movies.
//

Yes SLN.. I do think the same

said...

கவிஞர் மு.மேத்தாஅவர்களுக்கு
என் வாழ்த்துகள்....

பகிர்தலுக்கு நன்றி கார்த்தி

Anonymous said...

metha avargalkukku indha award romba poruthamaanadhu dhaan!

Aprom Karthik, enakku exams'nradhunaala inga konja naalaiki vara mudiyala...Sorry ba! :)

Anonymous said...

என்னோட பாராட்டுகளும் சேர்த்து கொள்ளுங்கள்! நியாபகம் வைத்து சொன்ன உங்களுக்கு ஒரு பாராட்டு!

said...

//பகிர்தலுக்கு நன்றி கார்த்தி//

நன்றிங்க கோபி

said...

//Aprom Karthik, enakku exams'nradhunaala inga konja naalaiki vara mudiyala...Sorry ba!//

பரவ இல்லபா கார்த்திக்.. எக்சாம் எல்லாம் நல்லா எழுதுங்க.. தீபிகா எப்படி இருக்காங்க..

said...

//நியாபகம் வைத்து சொன்ன உங்களுக்கு ஒரு பாராட்டு!
//

ஹிஹிஹி..நன்றிங்க ட்ரீம்ஸ்