Monday, December 11, 2006

சூப்பர் ஸ்டாருக்கும் இயக்குநர் சேரனுக்குமொரு ஒற்றுமை



தமிழகத்தின் சூப்பர் ஸ்டார், தலைவர் ரஜினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

அபூர்வ ராகங்களாய் கதவை திறந்து தமிழகத்துக்குள் வந்தவர், இன்னும் தங்க மகனாக, ராஜாதி ராஜனாக எத்தனையோ இதயங்களில் குடி கொண்டிருக்கும் இந்த சிவாஜி ராவுக்கு, இன்று பிறந்த நாள்..

தலைவா.. இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.. உங்களின் படங்கள் இப்போது ரீமேக் செய்யப்படும் காலம்.. அவைகளும் உங்கள் பெயரை பறைசாற்றட்டும்..





சிறந்த படங்களை மட்டுமே ஆபாசம் இல்லாமல் விரசம் இல்லாமல் இது வரை தந்துகொண்டிருக்கும் நல்ல இயக்குநர் சேரனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பாரதி கண்ணமாவில் தொடங்கி இன்றைய தவமாய் தவமிருந்து வரை இவரது ஒவ்வொரு படைப்பும் சிறந்தது.. இப்போது இவர் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் மாயக்கண்ணாடியை பார்க்க மிக ஆவலாய் இருக்கிறோம்.

இயக்குநர் சேரன் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அட, ஒற்றுமை என்னன்னு சொல்லணுமா என்ன, நண்பர்களே?

20 பின்னூட்டங்கள்:

Divya said...

இயக்குனர் சேரனுக்கும் இன்று தான் பிறந்த நாள் என்று உங்கள் பதிவு பார்த்து தான் தெரிந்தது கார்த்திக்!

[ நடிகை சவுகார் ஜானகிக்கும் இன்று தான் பிறந்த நாள்]

G3 said...

Aaha.. Dhinam oru pirandhanaal vaazhthu posta? kalakalarrenga.. :)

மனதின் ஓசை said...

என் மனதுக்கு பிடித்த இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

நான்தான் பர்ஸ்ட்டா..

இரு சிறந்த மனிதர்களுக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

சென்ஷி

Anonymous said...

ஆஹா.. சேரனுக்கும் இன்று பிறந்த நாளுன்னு எனக்கு தெரியவே தெரியாது.

ஒஹோ! அதான் நேற்று டிவியில் "சொல்ல மறந்த கதை" படம் போட்டாங்களா?

Anonymous said...

அட நம்ப சேரனுக்கம் பிறந்த நாளா?அவருக்கம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

DR.sintok

Anonymous said...

அட நம்ப சேரனுக்கம் பிறந்த நாளா?அவருக்கம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

DR.sintok

Deekshanya said...

Happy Bday to Super Star and Cheran!

Arunkumar said...

தலைவா,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
'சிவாஜி' ரிலீஸ்கு வெய்ட்டிங்க்...........

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சேரனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Priya said...

அட, சேரனுக்கும் பிறந்த நாளா? அப்படி உங்களுக்கு சரியா தெரியுது?

இருவருக்கும் வாழ்த்துக்கள்..

Priya said...

@divya,

//நடிகை சவுகார் ஜானகிக்கும் இன்று தான் பிறந்த நாள்//

திவ்யா, நீங்க தலைவர் கார்த்திக்கை விட ஒரு படி மேல இருக்கிங்க..
சவுகார் ஜானகி உங்க class-mate ஆ?

அவங்களுக்கும் வாழ்த்துக்கள்!

Syam said...

ரெண்டு பேரும் நல்ல நேரத்துல தான் பிறந்து இருக்காங்க... :-)

Anonymous said...

happy b'day to Rajini & Cheran.

சேதுக்கரசி said...

//திவ்யா, நீங்க தலைவர் கார்த்திக்கை விட ஒரு படி மேல இருக்கிங்க..
சவுகார் ஜானகி உங்க class-mate ஆ?//

:-)) யாரோட பிறந்தநாளாவது எனக்குத் தெரிஞ்சுதுன்னா(!) நான் சொல்லமாட்டேனே!

நாமக்கல் சிபி said...

தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

சேரனுக்கும், சௌக்கார் ஜானகிக்கும் வாழ்த்துக்கள்!!!

//திவ்யா, நீங்க தலைவர் கார்த்திக்கை விட ஒரு படி மேல இருக்கிங்க..
சவுகார் ஜானகி உங்க class-mate ஆ?
//
LOL :-)

Anonymous said...

Happy Birthday to One and Only Thalaivar!!!



:) Sundar

Anonymous said...

super star BOTO super. enna oru look u

Cheran is a sincere director.

Anonymous said...

// ராஜாதி ராஜனாக எத்தனையோ இதயங்களில் குடி கொண்டிருக்கும் இந்த சிவாஜி ராவுக்கு, இன்று பிறந்த நாள்..//


//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பாரதி கண்ணமாவில் தொடங்கி இன்றைய தவமாய் தவமிருந்து வரை இவரது ஒவ்வொரு படைப்பும் சிறந்தது..//

Ada ponga.. ithu enna BDAY season pola!!! ennoda saarba avangalukku wishes sollidunga!

மு.கார்த்திகேயன் said...

ரஜினுக்கும், சேரனுக்கும் வாழ்த்துச் செய்தி சொன்ன எல்லோருக்கும் நன்றி..

ப்ரியா..ஆனாலும் நீங்க எப்படி திவ்யாவை சௌகார் ஜானகி கிளாஸ்மேட்டான்னு கேட்டிருக்க கூடாது.. பாருங்க இதனால சேதுக்கரசி எவ்ளோ பயப்படுறாங்கன்னு..

அரசி நீங்க சந்தியா, ஸ்ரேயா மாதிரி இளம் நடிகைகளின் பிறந்த நாளைச் சொல்லலாமே :-))

மு.கார்த்திகேயன் said...

//super star BOTO super. enna oru look u
//

கரீக்டா சொனீன்ங்க கிட்டு