வேதாவின் 100 வேதங்கள்
தன்னுடைய இந்தப் பதிவோடு தோழி, எங்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், வேதா, சதமடித்துள்ளார். சதமடிப்பது சாதாரண விஷயம் அல்ல.. அதுவும் எல்லா பதிவுகளையும் உருப்படியாக எழுதுவது சற்றும் சுலபமான காரியம் இல்லை. என்னை மாதிரி அசினுக்கு ஆணி குத்தியதையோ, அஜித்துக்கு விளம்பரம் கொடுத்தோ ஆயிரம் பதிவுகள் எழுதலாம்.. ஆனால் எழுதும் ஒவ்வொரு பதிவையும் கருத்துள்ளதாய், பயனுள்ளதாய், சமுதாய சிந்தனையோட எழுதுறது என்பது மிகவும் கஷ்டம்.. என்னைப் போல ஆட்கள் மரம் வைம்மா.. பிடிச்ச மூணை போடும்மான்னு மிரட்டி போட்ட பதிவுகளை தவிர்த்து பார்த்தால், பயண கட்டுரை, கவிதைகள், கதைகள்ன்னு பட்டயை கிளப்பியிருக்காரு..
அல்லும் பகலும் உழைத்து, விருட்சமாய் வளர வேண்டிய குழந்தைகள் வெறும் விழுதுகளாய், குடும்பத்தை தாங்கும் பெரிய மனுஷனாய் வாழும் அவலத்தை கண்டு மனம் கொதித்திருக்கிறார் வேதா, தன் பதிவிலே.. பெண்ணடிமை பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் கொடுமைகளையும் சாடி இருக்கிறார்.. நமக்கெல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கதையிலும் சொல்லி இருக்கிறார்.. ஒரு விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.. ஏன் அரவாணிகளும் மனிதர்களே என்று அவர்களுக்காக மனம் கலங்கியிருக்கிறார்.. தமிழ் தெள்ளமுதை அள்ளி கவிதைகள் படைத்திருக்கிறார்.. இப்படி எல்லா விஷயத்திலும் தனது உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.. வேதா.. உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.
இவங்க பிளாக் ஆரம்பிச்சது ஜூலை 2005
முதல் பதிவு ஜூலை 16 (ஆங்கிலத்துல)
ஜூலை 30 (தமிழில்)
இவர் தன்னுடைய முதல் பதிவிலயே இரண்டு பின்னூட்டங்கள் வாங்கியிருக்கார். அந்த பின்னூட்டத்தை இட்டவர் லீ என்பவர்..
படப் பதிவு.. வெறும் படங்களை மட்டுமே வைத்து இவர் ஒரு பதிவிட்டுருக்கிறார். அது பிப்ரவரி 12 அன்று
நான் முதலில் படித்த இவங்க பதிவு ஆறு மனமே ஆறு.. முதல் பின்னூட்டமும் இதுக்கு தான்..
என்னை(யும்) தலைவராக ஏறுக்கொண்டு இடைவிடாமல் கட்சித்தொண்டு ஆற்றி கட்சியை வளர்த்து வரும் கொள்கைபரப்பு செயலாளர் வேதாவுக்கு, வாழ்த்தி ஒரு பதிவு கூட போடலைனா எப்படி..
சதமடித்த டெண்டுல்கரை பெருமையோடும் மகிழ்ச்சியோடும் பாக்குற ஒவ்வொரு இந்தியனைப் போல தோழி வேதாவோட இந்த சதத்தை பாக்குறேன்.. கட்சிக்குள்ளே இருந்து, கட்சிக்காக உழைத்து, இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்கும் வேதாவுக்கு கட்சியின் சார்பாக விழா எடுக்க வேண்டுகிறேன்.. மேலும் சென்னை வேளச்செரியில் இருக்கும் தெருவுக்கு வேதா தெரு என்று பெயர் மாற்றி இந்த சாதனையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்..
மென்மேலும் இதுப் போல கருத்துள்ள பதிவுகள் 1000 எழுதி வளர கட்சியின் சார்பாக வாழ்த்துகிறோம்.
மேலும் அவரோட கவிதை பக்கத்துல 25வது கவிதையும் எழுதியிருக்கிறார் வேதா..
டபுள் வாழ்த்துக்கள் வேதா.. இந்த ரெண்டையும் படிச்ச நாங்கள் தேன்கிண்ணத்தில் விழுந்த எறும்பாய் திளைக்கிறோம்
27 பின்னூட்டங்கள்:
வேதாவை அலசி துவைத்து எடுத்துட்டீங்க போல? அவரின் ஒவ்வொரு பதிவையும் நீங்க எந்தளவுக்கு ரசிசிருக்கீங்கன்னு இந்த பதிவு நல்லாவே உணர்த்துது.
வேதா, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!
இங்கேர்ந்தே நானும் வாழ்த்திக்கிறேன்ப்பா
சென்ஷி
//ஆயினும் கூறுகின்றேன் ஆயிரம் நன்றி//
நன்றியெல்லாம் எதுக்கு வேதா. நீங்க இந்த பதிவுக்கு பாராட்டுக்கும் உரியவரே
//நான் எழுதியதை நானே இவ்வளவு அழகாக எடுத்துக்காட்டியிருப்பேனா என்று தெரியவில்லை அவ்வளவு அழகாக எடுத்துரைத்ததுக்கு மீண்டும் நன்றி//
நன்றி வேதா
//ஆனாலும் ரொம்ப புகழ்ந்துட்டீங்க, அது மகிழ்ச்சியோடு இனி எழுதுவதில் பொறுப்புணர்ச்சியும் சேர்க்க உதவும் என்பதில் ஜயமில்லை//
ஏற்கனவே உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகம் தான் வேதா.. :-) இன்னும் சிறந்த பதிவுகளை இது உங்களிடம் இருந்து இது பெற்றுத் தருமானால் எனக்கு மகிழ்ச்சியே..
/வெறும் படங்களை மட்டுமே வைத்து இவர் ஒரு பதிவிட்டுருக்கிறார். அது பிப்ரவரி 12 அன்று/
எனக்கே மறந்துப்போச்சு அதை பத்தி இதோ போய் பார்க்கிறேன்:)
//
:-)
//இறுதியில் என்னை பற்றியும் எழுதி மறைமுகமாக என் வலைப்பக்கத்தின் விருந்தாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியதற்கு நன்றி:)
இந்த பின்னூட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா தல:) //
போதுங்கா வேதா.. உங்க பின்னூட்ட மழையில் சிறு வயது பாலகன் போல மகிழ்ந்து திளைத்தேன் வேதா
//அவரின் ஒவ்வொரு பதிவையும் நீங்க எந்தளவுக்கு ரசிசிருக்கீங்கன்னு இந்த பதிவு நல்லாவே உணர்த்துது//
நன்றிங்க மை பிரண்ட்
//இங்கேர்ந்தே நானும் வாழ்த்திக்கிறேன்ப்பா
சென்ஷி
//
நன்றிங்க சென்ஷி.. வேதாவோட பதிவை படியுங்கள்.. நிச்சயம் உங்களை அது ஈர்க்கும்
//இந்த பதிவை படிச்சவுடன எனக்கு ஒரே அழுவாச்சியா வருது ஒரு தலைவருக்கு தொண்டர்கள் மீது இப்படி ஒரு பாசமா//
பலனை எதிர்ப்பார்க்காம அல்லும் பகலும் கடமையை செஞ்ச உங்களுக்குக்காக ஒரு ஊர் பெயரைத் தான் மாத்துவதாக இருந்தது.. வேதா :-))
ஏற்கனவே சொல்லிட்டேன். இருந்தாலும் தலைவர் பக்கத்திலும் வாழ்த்திக்கறேன் :)
//
சென்னை வேளச்செரியில் இருக்கும் தெருவுக்கு வேதா தெரு என்று பெயர் மாற்றி இந்த சாதனையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்..
//
அட அடா.. என்னத்த சொல்றது உங்க பாசத்தை :)
ஆஹா என்ன ஒரு பாச மழை. அவங்க குடுக்காத புள்ளி விவரத்தலாம் குடுத்து கலக்கிட்டிங்க. தலைவர் தலைவர் தான் (இப்பவே மஸ்கா போட்டு வச்சிக்கரேன். புன்னாடி உதவும் :))
பெர்ய மன்சன் பெர்ய மன்சன் தான்...தலீவா எனது சகோதரியும் நமது கட்சியின் போர் வாளுமாகிய நமது வேதா பத்தி ஒரு பதிவு போட்டு உங்க பாசத்த காட்டிட்டீங்க... :-)
//வெறும் படங்களை மட்டுமே வைத்து இவர் ஒரு பதிவிட்டுருக்கிறார். அது பிப்ரவரி 12 அன்று//
இதுல உள்குத்து எதுவும் இல்லயே :-)
//சென்னை வேளச்செரியில் இருக்கும் தெருவுக்கு வேதா தெரு என்று பெயர் மாற்றி இந்த சாதனையை நாங்கள் அங்கீகரிக்கிறோம்//
ஏன் தலீவா ஒரு சின்ன கொஸ்டின்...வேளச்சேரியவே வேதா நகர்னு மாத்திட்டா என்ன... :-)
congrats to vedha. ellam seerndhu oru O podungabaa.
வேதா தமிழ்மண ஜோதியில் ஐக்கியமாகல போலிருக்கு? (ப்ரியா மாதிரியே) சரி நானும் 100 பதிவு போட்டேன்னா இப்படி மாலை மரியதையெல்லாம் நடக்கும்னு சொல்லுங்க :)
இது என்ன புதுவிதமான தலைவரா இருக்காரெ..
தொண்டர வாழ்த்தி, பாராட்டி பதிவும் எழுதி,,
அரசியல் பயணத்தில் என்றும் இவ்வாறே இருக்க வேண்டுகிறேன்..
:)))
வேதாவிற்கு வாழ்த்துகள்....
Vedha kku ellarum oru periya O podunga!avanga sevai melum continue aga valthukkal
//பெர்ய மன்சன் பெர்ய மன்சன் தான்...தலீவா எனது சகோதரியும் நமது கட்சியின் போர் வாளுமாகிய நமது வேதா பத்தி ஒரு பதிவு போட்டு உங்க பாசத்த காட்டிட்டீங்க..//
ஹிஹிஹி..நன்றி நாட்டாமை
//இதுல உள்குத்து எதுவும் இல்லயே//
அய்யோ நாட்டாமை என்ன இது.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை
//congrats to vedha. ellam seerndhu oru O podungabaa. //
வாழ்த்துக்கு நன்றி கிட்டு மாமா
//நானும் 100 பதிவு போட்டேன்னா இப்படி மாலை மரியதையெல்லாம் நடக்கும்னு சொல்லுங்க/
கட்டாயம் உண்டு அரசி.. நீங்க முதல் பதிவை போடுங்க.. ஊர்வலம் வந்து மாலை மரியாதை எல்லாம் செய்றோம்
//அவங்க குடுக்காத புள்ளி விவரத்தலாம் குடுத்து கலக்கிட்டிங்க. தலைவர் தலைவர் தான் (இப்பவே மஸ்கா போட்டு வச்சிக்கரேன். புன்னாடி உதவும் :)) //
நன்றி ப்ரியா.. மஸ்கா எல்லாம் வேணாங்க ப்ரியா.. உங்க கடமை உணர்ச்சிக்கு, சூப்பரா ஒரு அசத்து அசத்திடலாம்
//அட அடா.. என்னத்த சொல்றது உங்க பாசத்தை//
:-) Thanks Arun
//தொண்டர வாழ்த்தி, பாராட்டி பதிவும் எழுதி,,
அரசியல் பயணத்தில் என்றும் இவ்வாறே இருக்க வேண்டுகிறேன்..//
நன்றி மணி..நாமெல்லாம் மாறவேமாட்டோம்
//Vedha kku ellarum oru periya O podunga!avanga sevai melum continue aga valthukkal /
Thanks dreamzz
//விரைவில் தமிழ்மணத்திலும் இணைய இருக்கிறேன்///
வரவேற்கிறோம் வேதா..
Post a Comment