படித்த பள்ளியும் நடித்த நாடகங்களும்
இந்த தொடரின் முதல் பகுதி இங்கே
அப்படி ஒரு முரட்டு உருவம் என் தோள் மீது அமர்ந்தவுடன் என்னால் மூச்சு கூட விட முடியவில்லை. எனக்கு வேற வழி தெரியாமல் அந்த உருவத்தின் தொடையை கடித்து வைத்தேன்.. உயிர் பயத்தில் இருப்பவன் கடித்தால் எப்படி இருக்கும்.. அந்த உருவம் விருட்டென்று பக்கவாட்டில் சரிந்தது வலி தாளாமல்.. நான் மெல்ல மேலே வந்து பாறையை பிடித்து மூச்சுவிட்டேன்.. நான் அப்போது தான் யார் நம்ம மேல ஏறி உட்கார்ந்ததுன்னு பார்த்தேன்.. அட.. பிரதர்.. ஆஹா.. மனுஷன் நம்மை காய்ச்சப் போறாரேன்னு ஒரு பயம் வேற உள்ளூர.. டேய்.. உனக்கு நீச்சல் கத்துக்கொடுக்கத்தான் அப்படி செய்தேன்.. போடா.. நான் உனக்கு நீச்சல் கத்துத் தரவே முடியாது.. அப்படினுட்டார்.. அப்போ என்ன பண்றதுன்னு எனக்குப் புரியல.. அப்படியே விட்டுட்டேன்.. பாவம் கடிபட்ட வலி அவருக்கு.. என்னடா உன்னை மொட்டை அடிக்க வச்சாருன்னு ரொம்ப நாள உன் மனசுல இருந்த கோபத்தை காமிசுட்ட போலன்னு நண்பர்களெல்லாம் ஒரே கிண்டல் வேற..இந்த பிரதர் இருக்காரே.. அவர் அப்போ தான் சாமியார் ஆவதற்கான முதல் லெவல்ல இருந்ததால இன்னும் அந்த கோபம், அமைதியான பேச்சு எல்லாம் வரவில்லை.. நாங்கள் எல்லாம் படிக்கிற மாதிரி அவருக்கு இதுவும் ஒரு படிப்பு தான்.
அந்த பள்ளி மலையில் இருந்ததால விளையாட்டு மைதானம் ஒன்றும் ரொம்பப் பெரியதாக இல்லை.. கிட்டதட்ட ஒரு நூறு அடி நீளமும் நாற்பது அடி அகலமும் தான் எங்கள் விளையாட்டு மைதானம். அந்த மைதானத்தின் ஒரு பக்கம் பள்ளிக் கட்டிடங்களும் மறுபக்கம் சவ்-சவ் மற்றும் ஆரஞ்சு தோட்டங்களும் உண்டு.. விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாடும்போதெல்லாம் ஒரே நாளில் நான் எத்தனை ஆரஞ்சு பழங்களை, பந்தை தேடுறேன் பேர்வழி என்று சாப்பிட்டேன் என்று கணக்கே இல்லை. சில சமயம் பந்து கிடைத்தால் கூட, கால் சட்டைபையில் மறைத்து, வேக வேகமாக பறித்த ஆரஞ்சு பழங்களை தின்ற அனுபவமெல்லாம் உண்டு.
மாலையில் பள்ளி முடிந்தவுடன் தினமும் வாக்கிங் போவோம். கிட்டதட்ட தினமும் நாலு கிலோமீட்டர் அந்த மலைப் பாதையில் நடந்ததுண்டு.. ஒரே குரூப்பாகப் போவதால் தூரம் ஒரு பொருட்டாவே தெரியாது.. எங்கள் வாக்கிங் எல்லாம் கொடைக்கானல் போற பாதையில் தான் இருக்கும்.. அதனால் போகின்ற, வருகின்ற பஸ்களுக்கு டாட்டா சொல்வதே, வீட்டை விட்டு வந்த எங்களுக்கு பெரிய சந்தோசமாக இருக்கும்.
அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் அதிகமான பேரும் கிடையாது.. மிஞ்சிப்போனா பத்துப்பேர் இருப்பதே அதிகம் தான்.. அதனால வகுப்புல தூங்கக் கூட முடியாது.. இன்னும் வாயில் எப்போதும் வெற்றிலை குதப்பிக்கொண்டு எங்களுக்கு பாடம் நடத்தும் அந்த தமிழ் வாத்தியாரை ஞாபகம் இருக்கு.. நமக்கு எப்பவுமே தமிழ்னா ஒரு கண்ணு.. சும்மா ஒரு தடவை படிச்சா போதும் செய்யுளும் சரி, கதைகளும் சரி மனசுல ஆணியடிச்ச மாதிரி நிக்கும்.. அதுலையும் அதை பரீட்சைல நம்ம பாணில வேற வித்தியாசமா எழுதினதால அவருக்கு நம்ம மேல அவ்ளோ பாசம்.. அப்போ மட்டுமல்ல, அதுக்குப் பிறகு காந்திகிராம தம்பிதோட்டத்துல படிச்சப்ப தமிழ் வாத்தியாரா எனக்கு தமிழமுது ஊட்டிய த.கதிர்வேல் ஐயாவும் அவர்களுக்கும் சரி.. பரமசிவ பாண்டியன் அண்ணாவுக்கும் சரி நான் ஒரு செல்லப்பிள்ளை தான்..
அங்கே இருந்தப்போ பள்ளி ஆண்டுவிழா வந்தப்போ, மாணவர்கள் கம்மிகிறதால, ஒரே ஆள் ரெண்டு மூணு நாடகத்துல எல்லாம் நடிக்க வேண்டியதாதிருந்தது.. நான் முதலில், அண்ணன் தம்பிகளுக்கிடையில் குதிரையை பிரித்து கொடுகும் தெனாலிராமனாக நடித்தேன்.. பஞ்சகச்ச வெள்ளை வேஷ்டியும் ஒரு துண்டும் தான் காஸ்டியூம்.. வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் மதுரைக்கு போகணும்னு சொன்னதால எல்லா காஷ்டியூம் ரொம்ப எளிமை தான்.. இதுக்கு முன்னால் ஐந்தாவது திண்டுக்கல் செயின்ட் ஜோசபில் படித்த போது, திருவள்ளுவரோட கற்பனை கதையில், திருவள்ளுவரோட அக்கா பையன், அவரோட பொண்ணுக்கு முறைமாமன் நாகவேள் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தேன்.. பக்கா வில்லன் வேஷம் அது.. (குறிச்சுவைங்கப்பா.. நாமளும் என்ட்ரீ ஆனது வில்லனாத் தான்) திருவள்ளுவர் பொண்ணை கடத்திட்டு போய், கட்டிக்கிறியா இல்லியான்னு மிரட்டி, பயங்கர வில்லத்தனம் எல்லம் செய்து, நாடகத்தோட கடைசில, உடம்பெல்லாம் சங்கிலியால கட்டப்பட்டு, நாலு திருக்குறள் சொல்லி மனசு திருந்தற கதை.. பெரிய மீசை.. ஒரு நாட்டுக்கு ராஜா என்பதால் கிரீடம், என் அம்மாவின் பட்டுச்சேலையில் ராஜாக்கள் அணியும் வேஷ்டி, மார்பு அணிகலன்கள்னு பயங்கர காஷ்டியூம்.. காது குண்டலங்களை மறந்துவிட்டேனே.. ஆனால் இப்போது அதுக்கு எதிர்மாறாக ரொம்ப எளிமையான ஆடைகள் தெனாலிராமன் வேடத்துக்கு..
தெனாலிராமன் நாடகம் முடிந்தவுடன் தோளில் இருக்கும் துண்டை எடுத்து தலையில் உருமாவா கட்டிகிட்டு, நாட்டு மக்களுக்கோர் நற்செய்தின்னு முரசறிவிக்கிறவனா நடித்தேன்.. அது முடிந்தவுடன் இடையில் சில சிரிப்பு துணுக்குகளை நடிச்சு காண்பித்தோம்.. இறுதியில் லவ-குசா ராமாயணத்தில் குசனா நடித்தேன். காவி வேட்டி கட்டிகிட்டு.. இப்போ நினச்சாலும் அந்த நாடகங்களும் அந்த நினைவுகளும் சந்தோசமா இருக்கு.. என்னோட அப்பா அந்த ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார்.. அவருக்கு என் நடிப்பை பார்த்து ரொம்ப சந்தோசம்.. நான் இந்த மாதிரி எல்லாம் கலந்துகிட்டது இல்ல.. நீ ரொம்ப நல்லா நடிச்சடா.. அதுவும் உன்னோட ஐய ஒரு நாடக வாத்தியார்.. அவரோட பேரனான உனக்கு இவ்ளோ திறமை வந்தது எனக்கு ஆச்சரியமில்லை என்றார்.. எனக்கு அந்த சின்ன வயசுல ஐயா பத்தி என் அப்பா சொன்னது ரொம்ப அதிசயமா இருந்தது.. என் ஐயா, ஒரு முறை பெண் வேடம் போட்டதுக்காக நிஜமாகவே காது குத்திகிட்டாராம், மேக்கப் போடுறப்போ.. அந்த நாடகத்துல காதுல ரத்தம் வழிய வழிய நடிச்சாராம்.. அதுக்கு பிறகு நிறைய பேர் கிட்ட என் ஐயா பத்தி நிறைய விஷயங்கள் இது போல கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்.. என் ஐய்யாவே நிறைய கதைகளையும் சொல்லி இருக்காரு..
என்னால ஆறாம் வகுப்பு மட்டுமே விவேகானந்தா ஸ்கூல்ல படிக்க முடிந்தது.. மாத மாதம் வரும் ஹாஸ்டல் பில் கட்ற அளவுக்கு என் குடும்ப நிதிநிலை ஒத்துவரவில்லை.. இந்த ஒரு வருடத்திற்கே என் அப்பா ரொம்ப கஷ்டப்பட வேண்டியதாய் இருந்தது.. பள்ளியோட நிர்வாகி, பையன் நல்ல பையன்..நல்லாவும் படிக்கிறான் ஏன் கூட்டிட்டு போறீங்கன்னு கேட்டு வேண்டாம்னெல்லாம் சொன்னார்.. அந்த பள்ளிக்கு, என் அப்பாவுக்கு தெரியாமல், எனக்கே புரியாமல் கண்களில் வழிந்த கண்ணீரால் போய் வருகிறேன் என்று டாடா காண்பித்தேன்.. அதற்கு பிறகு, பல தடவை சுற்றுலாவாக அந்த வழியே சென்று இருந்தாலும் பகலில் அந்த பள்ளியை பார்த்ததில்லை..
எனது மற்ற நாடக கதைகள்...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஆசை ஆசையாய் வச்ச மீசை
29 பின்னூட்டங்கள்:
இன்னைக்காவது தலைவர் போஸ்ட்ல பர்ஸ்ட் கமெண்ட்டா? :-)
ஆகா நான் தான் நானே தான்...சூப்பரப்பு....தல மீதி டுமாரோ
:-)
அதே அதே நாட்டாமை..
உங்க கடமை உணர்ச்சிக்கு எனக்கு கொஞ்சமாவது வரட்டும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன் நாட்டாமை..
\"அப்பாவுக்கு தெரியாமல், எனக்கே புரியாமல் கண்களில் வழிந்த கண்ணீரால் போய் வருகிறேன் என்று டாடா காண்பித்தேன்.. \"
கார்த்திக், ரொம்ப கஷ்டமா போச்சு இந்த வரிகள் படித்து!
கார்த்திக், நீங்களும் பிரியானி பார்சல் கொடுப்பீங்களா முதல் கமெண்ட் போட்டா?????
[நாட்டாமை எனக்கும் ஷேர் கிடைக்குமா??]
//ஆகா நான் தான் நானே தான்...சூப்பரப்பு....தல மீதி டுமாரோ //
:-)
@divya,
//நாட்டாமை எனக்கும் ஷேர் கிடைக்குமா//
எங்களுக்கு எல்லாம் எவ்வளவு டிப்ஸ் குடுத்து இருக்கீங்க உங்களுக்கு இல்லாததா... :-)
//கார்த்திக், ரொம்ப கஷ்டமா போச்சு இந்த வரிகள் படித்து! //
எழுதும் போது எனக்கும் திவ்யா
//கார்த்திக், நீங்களும் பிரியானி பார்சல் கொடுப்பீங்களா முதல் கமெண்ட் போட்டா?????
[நாட்டாமை எனக்கும் ஷேர் கிடைக்குமா??] //
இப்படியே மூணு வேளை சாப்பாடையும் முடிக்கலாம்னு எண்ணமா திவ்யா
\" மு.கார்த்திகேயன் said...
//கார்த்திக், நீங்களும் பிரியானி பார்சல் கொடுப்பீங்களா முதல் கமெண்ட் போட்டா?????
[நாட்டாமை எனக்கும் ஷேர் கிடைக்குமா??] //
இப்படியே மூணு வேளை சாப்பாடையும் முடிக்கலாம்னு எண்ணமா திவ்யா \"
அதே.... அதே .....எண்ணம் தானுங்கோ!!
சாரி கார்த்திக். ஆபிஸ்ல தலைக்கு மேலே வேலை. இங்கும் அங்கும் திரும்புறதுக்கு கூட நேரமில்லை.
இப்ப கூட அந்த வேலைகளில் இரண்டு நிமிட ப்ரேக் எடுத்துட்டுதான் உங்க பதிவுல அட்டெண்ஸ் போடறேன்.
ஃப்ரீயா இருக்கும்போது திரும்பவும் வந்து படிச்சுட்டு இன்னொரு கம்மெண்ட்ஸ் போடறேன்.
Attendence.. padichittu
"Nextu meet panren"
தெனாலிராமன்,லவகுசா,திருவள்ளுவர் நாடகங்கள் எல்லாத்துலயும் பின்னிப் பெடல் எடுத்துருக்கீங்க போல.. அது சரி, அதான் இப்போ தலைவர் :)
//
வெள்ளை வேஷ்டியும் ஒரு துண்டும் தான் காஸ்டியூம்..
//
வெள்ள வேஷ்டி , துண்டு மேல அப்போ இருந்தே ஆச... ஹ்ம்ம்... :)
//
பெரிய மீசை.. ஒரு நாட்டுக்கு ராஜா என்பதால் கிரீடம், என் அம்மாவின் பட்டுச்சேலையில் ராஜாக்கள் அணியும் வேஷ்டி, மார்பு அணிகலன்கள்னு பயங்கர காஷ்டியூம்.. காது குண்டலங்களை
//
அட என்னங்க நீங்க.. எவளவோ போட்டோ எல்லாம் உங்க பதிவுல போட்றீங்க.. இந்த போட்டோவ போடலியே !!!
என்ன இது? என்னோட பதிவுக்கு கமெண்ட் கொடுக்கிறதே இல்லை? எல்லாப் பதிவுக்கும் போறீங்க? முதல் அமைச்சர் பதவிக்கு வேட்டுத்தான்.:D
இந்த ச்யாம் கூட வரதில்லை இப்போ எல்லாம். நானே பதிவு எழுதி, நானே பின்னூட்டம் கொடுத்துக்க வேண்டி இருக்கு.
எப்பவும் போல சூப்பரா எழுதியிருக்கிங்க கார்த்திக்.
//அதுலையும் அதை பரீட்சைல நம்ம பாணில வேற வித்தியாசமா எழுதினதால அவருக்கு நம்ம மேல அவ்ளோ பாசம்..//
அப்பவே அவ்வளவு ஆர்வமா? எனக்கு school படிக்கும் போது தமிழ் ரொம்ப கஷ்டமா இருக்கும். செய்யுள்லாம் மனப்பாடம் ஆகவே ஆகாது. ரொம்ப லேட்டா தான் தமிழோட அருமை தெரிஞ்சது.
//என் ஐயா, ஒரு முறை பெண் வேடம் போட்டதுக்காக நிஜமாகவே காது குத்திகிட்டாராம்//
ஆஹா, என்ன ஒரு dedication.
//அந்த பள்ளிக்கு, என் அப்பாவுக்கு தெரியாமல், எனக்கே புரியாமல் கண்களில் வழிந்த கண்ணீரால் போய் வருகிறேன் என்று டாடா காண்பித்தேன்..//
ஒரே வருஷத்துல இவ்ளொ இனிய அனுபவங்கள குடுத்த பள்ளிய பிரியறதுனா கஷ்டமா தான் இருக்கும்.
/எங்களுக்கு எல்லாம் எவ்வளவு டிப்ஸ் குடுத்து இருக்கீங்க உங்களுக்கு இல்லாததா...//
சைடுல இதெல்லாம் வேற நடக்குதா
//அதே.... அதே .....எண்ணம் தானுங்கோ!! //
என்னையும் கூட்டணில சேர்த்துக்கோங்க திவ்யா
//ஃப்ரீயா இருக்கும்போது திரும்பவும் வந்து படிச்சுட்டு இன்னொரு கம்மெண்ட்ஸ் போடறேன். //
பொறுமையா எல்லா வேலையையும் முடிச்சுட்டு வாங்க பிரண்ட்.. ரொம்பத் தான் வேலை வாங்குறாங்க போல
//அட என்னங்க நீங்க.. எவளவோ போட்டோ எல்லாம் உங்க பதிவுல போட்றீங்க.. இந்த போட்டோவ போடலியே //
அருண்.அந்த போட்டோ கைவசம் இல்ல.. ஊருக்கு போறப்போ அந்த பள்ளில தான் வாங்கணும்
நாலு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிப்பா அருண்
//நானே பதிவு எழுதி, நானே பின்னூட்டம் கொடுத்துக்க வேண்டி இருக்கு//
மேடம்.. இது ரொம்ப கொடுமை.. தினமும் வந்து உங்ககிட்ட அட்டென்டன்ஸ் போடுறேன்..போலீஸ் ஸ்டேஷன்ல போய் கையெழுத்து போடுற மாதிரி.. என்னை போய் இப்படி கேக்குறீங்களே
//ஒரே வருஷத்துல இவ்ளொ இனிய அனுபவங்கள குடுத்த பள்ளிய பிரியறதுனா கஷ்டமா தான் இருக்கும்.//
ஆமாம் ப்ரியா..
அந்த காஸ்டியூம் போட்டோ போட்டா நல்லாருக்குமே (நாங்க கலாய்க்க :))
migavum arumai mr.karthi(k)...nalla rasikum padiyaga padaipugal thareenga..adhuku oru periya applause..
//அந்த காஸ்டியூம் போட்டோ போட்டா நல்லாருக்குமே (நாங்க கலாய்க்க :)) //
நல்லவேளை என்கிட்ட அந்த போட்டோ இல்லைங்க அரசி
//nalla rasikum padiyaga padaipugal thareenga..adhuku oru periya applause..
//
romba thanks one among u.
Karthi
You have painted a wonderful picture (and a sad ending too) of those days. Still wish there were photos
Cheers
SLN
//You have painted a wonderful picture (and a sad ending too) of those days. Still wish there were photos
//
Thanks SLN. I will try to get that photo
Post a Comment