Monday, December 04, 2006

நாலு பேர் சேர்ந்து வளக்குற மரம்

ஒரு கதை.. அதை நிறைய பேர் சேர்ந்து எழுதினா எப்படி இருக்கும்.. அப்படி ஒரு கதையா(பேயா)ட்டம் தான் இது.. நம்ம கட்சியோட கொள்கை பரப்பு செயலாளர் வேதா..தலைவா..நீங்க இந்த கதையோட தொடர்ச்சியை எழுதுங்க அப்படின்னு ஒரு அன்புக் கட்டளை போட்டுட்டாங்க.. சுற்றுப்பயணம் எல்லாம் போயிட்டு வந்ததுல கொஞ்சம் தாமதமாயிட்டது.. அவங்களைப் போலவே நான் இதை கிரைம் வழிலயே கொண்டு போயிருக்கேன்..

இது வேதாவை எழுதச் சொன்ன உஷாவோட கற்பனை

The Unusual Endings
"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...


இது நம்ம கொ.ப.செ வேதா எழுதின பகுதி...

மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...

ட்ரிங்,ட்ரிங்

'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'

ட்ரிங்,ட்ரிங்

'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'

ட்ரிங்,ட்ரிங்

'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'

இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.

'ஹலோ யாரு?'

'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்

'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'

'மீரா பேசுறேன்'

'எந்த மீரா?'

'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'

'என்னது? யாருங்க இது?'

'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி எதிரொலித்தது.

அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...


ஹிஹி..நம்ம கைவண்ணம் இங்கேயிருந்து தொடங்குதுங்க

ரத்தமெல்லாம் உறைய அப்படியே சேரில் அமர்ந்தான் சூர்யா..

யா..யார் போன் பண்ணி இருப்பா..

அவன் தலைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்... சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய் அந்த இடமே கருங்கும்மென இருட்டாகியது.. நெஞ்சில் பயத்துடன் மெல்ல மெழுகுவர்த்தியை தேடி மெதுவாக அடி எடுத்து வைத்தான்.. அப்போ காற்றில் மெல்ல கொலுசு சத்தம் கேட்டது.. அந்த சத்தம் மெதுவாக இவனை நோக்கி வந்தது..எடுத்து வைத்த காலைக்கூட திரும்ப பின்னால் எடுத்து வைத்தான்.. கொலுசு சத்தம் நெருங்க நெருங்க மல்லிகைப்பூ வாசமும் இவன் நாசியை துளைத்தது.. சூர்யாவுக்கு அதிர்ச்சியில் தொண்டை வறண்டது..

சூர்யா.. எப்படி இருக்க சூர்யா.. காதல் தொய்த்த மயக்கம் கலந்த ஒரு பெண் குரல் கேட்டது.. இந்த இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று சூர்யா குழம்பிய போது..

என்ன சூர்யா..என்னை மறந்துட்டியா..நான் தான் நீ காதலிச்சு ஏமாத்துன மலர்விழி..


நம்ம பகுதி முடிஞ்சதுங்க...

இதே கதைக்கு வேற மாதிரி தொடர்ச்சி வேண்டுமா..

நம்ம நிதி அமைச்சர் மாப்ள
பரணியும், சுத்த சிகாமணி சுகாதார அமைச்சர் தோழி ப்ரியாவும் எழுதியதை படிங்க..

அட.. யாரையாவது மாட்டிவிடலைன்னா எப்படி..

கிளீவ்லேண்டுக்கு ஆணி புடுங்குறேன் பேர்வழின்னு போயிருக்க நம்ம நண்பர்
அருண் (மேட்டரே இல்லை எழுதன்னு சொன்னீங்கலே), (அருணை ஏற்கனவே வேதா வேற டேகிட்டதால நான் கவனிக்கல.. அதனால அவங்களை இதிலிருந்து தப்பிக்க விட்டு, இருக்கவே இருக்கார் நம்ம டிரீம்ஸ்..(சீக்கிரம் தீபா படத்த போடுங்க சார்)அவரை எழுதவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்)மலேசியாவுல இருந்து நமக்கு போட்டியா சினிமாவை அலசுற தோழி மை பிரண்ட், புதுசா வந்திருக்க தோழி திவ்யா (வாம்மா மின்னல்) எல்லோரும் இந்த கதையோட தொடர்ச்சிய எழுதுவாங்க..

அப்படி எழுதலைன்ன அருண் வீடுக்கு ஒரு மோஹினியையும், மை பிரண்ட் மற்றும் திவ்யா வீட்டுக்கு ஒரு மோஹனையும் (மோஹினியோட ஆண்பால் இது தானே) அனுப்பி வைக்கப்படும்..

அடடே..இதை எழுத சில சட்டதிட்டங்கள் இருக்கு.. அது என்னன்னா.. அட நீங்க ஏன்
இங்க போயி படிச்சுக்கக் கூடாது..

நம்ம மாப்ள பரணி சொல்ற மாதிரி BREAK THE RULES...

ஆனா அந்த மரத்த மட்டும் உங்களுக்கு படம் போட்டு கட்டிடுறேன்..



மேல இருக்குல்ல அது தான்பா நாம எல்லோரும் சேர்ந்து வளர்க்கப் போற மரம்...

18 பின்னூட்டங்கள்:

Anonymous said...

naama than firsta? illaiya?

Anonymous said...

//அவங்களைப் போலவே நான் இதை கிரைம் வழிலயே கொண்டு போயிருக்கேன்..
/
crime novela..super!

kadhaiyum super...

said...

Neenga thaan first, dreamzz

said...

//crime novela..super!

kadhaiyum super...
//

Thanks dreamzz.. hehehe..evvalu sollitteenga aduththa thadavai tag ungalukku thaan

said...

ஹி ஹி ஹி :)
இதே கதைக்கு என்ன மூனு பேரு டேகிட்டாங்க. அதுவே இன்னும் pending. கதை எழுதுறதுக்கும் நமக்கும் ராக்கெட்ல போற தூரம் :(

இருந்தாலும் ட்ரை பண்றேன்.அட, எல்லாருக்கும் இதே பதில் தான் சொல்லிருக்கேன் :)

பை த பை, உங்க த்ரில்லர் சந்திரமுகி ஸ்டைல்ல இருக்கு.

said...

மோஹினி மேட்டர் தான் பயமா இருக்கு :(

said...

//இதே கதைக்கு என்ன மூனு பேரு டேகிட்டாங்க. அதுவே இன்னும் pending. கதை எழுதுறதுக்கும் நமக்கும் ராக்கெட்ல போற தூரம் //

அருண்..டேக்ல இருந்து உங்களை எஸ்கேப் பண்ணிட்டேன்

said...

ஆனா மோஹினி பத்தி எனக்கு தெரியாது..அதுகிட்ட மொதல்லயே Read-only-memoryla அப்டேட் செஞ்சதால நீங்க எஸ்கேப் ஆகமுடியாதுன்னு நினைக்கிறேன்

said...

Aaha.. Kalakkals.. Orey kadhaiyae ellarum avangavanga vasathikku twist panni ella kelaiyumae ippo different routela poittirukku :)

Anonymous said...

Hahaha..Tht was reall really 2 good...
I enjoyed reading :)
Keep it going :)

Anonymous said...

@karthi
sari..appadiye..paakatha madhiri irundhu escape aagalam enru ninathala nadakila..sari sari...maratha valakaren!

said...

//avangavanga vasathikku twist panni ella kelaiyumae ippo different routela poittirukku//

correct G3..athulaiyum mapla bharani ennaadanna athE vadivel padamaalla akkittaaru.

said...

//Tht was reall really 2 good...
I enjoyed reading :)
Keep it going//

Thanks Ponnaa

said...

//அப்புறம் வந்து கதைக்கிறேன்//

வருகை பதிவு போட்டாச்சு வேதா..பொறுமையா வந்து படிங்க

said...

//sari...maratha valakaren//

Good dreamzz..chariiiii..antha theepa padaththa konjam..hehehe..solrathu puriyuthaanga

said...

விட்டலாச்சார்யா படம் மாதிரி போகுது. பயமா இருக்கு!

said...

அடுத்து எழுதுறவனGக நம்ம பரணி மாதிர் ஜோக்க மாத்திடுவாங்க ப்ரியா.. பயப்படாதீங்க

said...

//உங்க சார்புல சூப்பரா வளர்த்துவிட்டதுக்கு கட்சி சார்புல ஒரு மாலையும் சால்வையும் 101ரூ பணமுடிப்பும் அனுப்பிட்டேன்//
போஸ்ட் டெலிவரி பண்ண வந்தவர் கேட்டார்னு அவருக்கு சால்வயை கொடுத்துட்டென் வேதா..ஹிஹிஹி

//என் வலைப்பக்கத்துல உரம்போடாததால வளராத மரம் இங்க பச்சைபசேல்னு வளர்ந்துடுச்சு(ஹிஹி மரத்தோட படம் போட முடியாம நம்மள தான் ப்ளாக்கர் திட்டி அனுப்பிடுச்சே)
//


புரியுதுங்க கொ.ப.செ