Monday, December 25, 2006

ஆழ்வார் பாடல்கள் - பாமரன் விமர்சனம்
அஜித் மறுபடியும் படம் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து, அதாவது பரமசிவன், திருப்பதி போன்ற படங்களின் பாடல்கள் எதுவும் ரொம்பவும் ரசிக்கும் படியாக இருந்ததில்லை. ஆனால் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வந்திருக்கும் ஆழ்வார் பாடல்கள் கொஞ்சம் நம்பிக்கையை தந்திருக்கிறது. அஜித்துக்கும் தேவாவுக்கும் ஒரு ராசி இருந்திருக்கிறது. இவர்கள் இருவரின் காம்பினேஷனில் வந்த பாடல்கள் ரசிக்கும் படியாகவும் இன்றும் கேட்கும்படியாகவும் இருக்கிறது. உதாரணமாக வாலி, முகவரி படங்களைச் சொல்லலாம். அந்த ராசி ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் உண்டோ என்று தோன்றவைக்கிறது ஆழ்வாரின் படப் பாடல்கள்

சொல்லித் தரவா
பாடியவர்கள் : சாதனா சர்கம், முகமத் சாலமத்

குத்து பாட்டு மாதிரி ஆரம்பிக்கும் இந்தப் பாடல் மெல்ல ஒரு அழகிய மெல்லிசை பாடலாக விரிந்து மனசை நிரப்புகிறது. வெறும் உள்ளூர் வாத்தியங்களுடன் ஆரம்பித்து அப்படியே வெஸ்டர்ன் இசையோடு கலந்து அழகாக வந்திருக்கு.. முதல் முறை கேட்கும் போதே மனசுல நிற்கும் மெட்டைப் போட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.. முகமதின் குரலும் அஜித் குரலோடு ஒத்துப் போவதும், சாதனா சர்கத்தின் தேன் குரலும் இந்தப் பாட்டிற்கு தூண்கள்.. வழக்கம் போல "தல தல தல தாழாது உந்தன் தல"ன்னு தூக்கி வைக்கின்ற வைர வரிகளும் வாலியின் பேனாவில் இருந்து வந்திருக்கிறது.. இதோடு மிதமான வயலின் இசை மெலடி பாடல் கேட்பவர்களுக்கு நிச்சயம் கொஞ்சம் மயக்கமூட்டும். ஆனால் ஏன் முகமத் தமிழை அப்படி உச்சரிக்கிறார் என்று தெரியவில்லை.. முகமத் தமிழ் தெரியாதவர் போலத் தெரிகிறது.. இன்னொரு உதித் நாராயணன்?

பிடிக்கும் உனைப் பிடிக்கும்
பாடியவர் : மதுரஸ்ரீ

மதுரஸ்ரீயின் உற்சாகமான குரல் இந்தப் பாட்டுக்கு மிகப் பெரிய வலிமை. வாலியின் வார்த்தை விளையாடல்கள் கொண்ட பல்லவிக்கு, ஸ்ரீ காந்தின் இசை மெருகூட்டி இருக்கிறது. உச்சதஸ்தாயில் மதுரஸ்ரீ பாடும்போது கேட்கவே நன்றாக இருக்கிறது. மதுரஸ்ரீ உச்சரிக்கும் வார்த்தைகளே எல்லாவிதமான உணர்ச்சிகளையும் தந்துவிடுகிறது. அவரது குரல் இந்த பாட்டிற்கு பலம்.

பல்லாண்டு பல்லாண்டு
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், செந்தில்தாஸ்

டிசம்பர் சீசனுக்கு ஏற்ற பாட்டு. மகாநதியில் வரும் ஸ்ரீரங்க ரங்கநாதரின் பாட்டைப் போலவே செமி-கிளாசிக்காக வந்திருக்கிறது. உன்னி கிருஷ்ணனின் குரலையும் அவரது ஏற்ற இறக்கங்களையும் பற்றிச் சொல்லவே வேண்டாம். உன்னி கிருஷ்ணனுக்கு செந்தில்தாஸ் நேர்த்தியாக கம்பெனி கொடுத்திருக்கிறார். வைஷ்ணவ கோயிலகளில் பாடப் பெறுகின்ற பாடல் போல் தெரிகிறது. கண்மூடிக் கேட்டால் ஏதோ பக்தி பாடல் மாதிரி கன கச்சிதமாக இருக்கிறது.. ஸ்ரீகாந்த் தேவாவுக்கு பாராட்டுக்கள். இப்படி ஒரு அருமையான கர்னாடிக் பாடலை ஸ்ரீகாந்த் தேவாவால் எப்படி தர முடிந்தது என்று இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது.. இது படத்தில் அஜித்தின் அறிமுக காட்சி என்று சொல்லப்படுகிறது. மற்ற பாடல்களை பார்த்தால் வேறு எதுவும் அறிமுகப் பாடல் இருப்பது போலத் தெரியவில்லை. இந்தக் காலத்தில் இப்படி ஒரு அறிமுகப் பாடல் எடுபடுமா?

அன்புள்ள காதலிக்கு
பாடியவர்கள் : குணால், குஷ்பூ

தீனாவில் வரும் 'நெஞ்சில் என்றும்' என ஆரம்பிக்கும் பாட்டின் சாயல் ஆரம்பத்தில் இருந்தாலும் போகப்போக அதிலிருந்து பாடல் பாதை மாறிவிடுகிறது. ரொம்பவும் ஸ்பீடான பாட்டு இது. இப்படி ஒரு ஸ்பீடான டூயட் ஒவ்வொரு படத்துக்கும் தேவை என்றாகிவிட்டது. குஷ்பூவின் குரல் நம்மை அவரின் வேகத்துக்கு அழைத்தே செல்கிறது.


மயிலே மயிலே
பாடியவர்கள் : ஸ்ரீகாந்த் தேவா, செந்தில்தாஸ், ரோஷிணி, சுருதிப்ப்ரியா, அர்ஜூன் தாமஸ், சுஜவிதா

பரபரன்னு உங்கள் கால்களை ஆடவைத்து, கூடவே உங்களையும் பாடவைக்கும் ஒரு குத்துப் பாடல். இளமையான பாடகர்களின் (சன் டிவியின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் தேர்தேடுக்கப் பட்டவர்களா எல்லோரும்?) குரலைகளை பயன்படுத்தி வேகப் பாடலை கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.. இதுவும் படத்துக்கு ஒரு குத்துப் பாட்டு, வேகப் பாட்டு அவசியம் என்னும் பார்முலாவில் வந்திருக்கிறது. இந்தபாட்டு முன் வரிசைக்காரர்களை நிச்சயம் மகிழ்விக்கும்.

ஆஹா..ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு ஆழ்வார் பாடல்கள் இல்லை என்றாலும், கர்னாடிக் ரசிகர்களுக்கு ஒரு பாட்டு, குத்துப் பாட்டு ரசிகர்களுக்கென ஒரு பாட்டு, மெலடி காதலர்களுக்கென ஒரு பாட்டு என கொடுத்து எல்லா ரசிகர்களையும் ஆளவே முயற்சித்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.. ஓரளவு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

போக்கிரி பாடல்கள் விமர்சனம்
பருத்திவீரன் பாடல்கள் விமர்சனம்

28 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Nice review Karthik... Songs seems ok when compared to other Ajith movies in the recent past :)
Appadiye Asin photo potu iruntheengana naanga jollu vittutu poirupom :)

Anonymous said...

பாட்டு ஓகே. படமும் ஓகே வா இருந்தா தல இன்னமும் கலக்கல் தான்

Anonymous said...

//
மதுரஸ்ரீ உச்சரிக்கும் வார்த்தைகளே எல்லாவிதமான உணர்ச்சிகளையும் தந்துவிடுகிறது. அவரது குரல் இந்த பாட்டிற்கு பலம்.
//

குறிப்பாய் ஆழ்ழ்ஹா (அழகா -வாம்) :-)

Anonymous said...

கார்த்திக்,இசையை நன்றாக தான் ரசிக்கின்றீர்கள்....உங்கள் விமர்சனத்தை படித்த பின் பாடல்களை தரவிறக்கி கொண்டிருக்கின்றேன்..

said...

//Nice review Karthik... Songs seems ok when compared to other Ajith movies in the recent past//

Thanks KK.. நானும் இதே தான் நினச்சேன்

said...

//பாட்டு ஓகே. படமும் ஓகே வா இருந்தா தல இன்னமும் கலக்கல் தான் //


படமும் நல்லா தான் இருக்கணும் மணி. பார்ப்போம்.

said...

//குறிப்பாய் ஆழ்ழ்ஹா (அழகா -வாம்)//


:-)

said...

me too heard the songs.. pretty good compared to recent Ajit's songs... i liked "solli tharava".. good melody...

said...

//கார்த்திக்,இசையை நன்றாக தான் ரசிக்கின்றீர்கள்....உங்கள் விமர்சனத்தை படித்த பின் பாடல்களை தரவிறக்கி கொண்டிருக்கின்றேன்..

//

நன்றிங்க தூயா.. கேட்டுட்டு சொல்லுங்க உங்க கருத்துக்களை

Anonymous said...

gud review work karthik...enakku idhula romba pidichadhu mathurashri song than...really i luv the pronounciations wat she does, unga review correcta irundhuchu ella songukum esp for this song..

guru said...

Good review Karthik :-)
I am pretty impressed with this album. All the songs are quite different and complete in their own way. You reflected what I felt.
BTW, Thala doesn't have any introduction song in the film.
He is changing gears and guess with this and the solid script this film is all set to impress Family Audience etc

BTW, Except Solli Tharavaa song and its saranam, we don't have anylyrics that will praise the hero. That reflects how much thala has been careful with the songs.

Infact, the carnatic number and PIDIKKUM was finalised by Thala it seems :-))

Overall, A great album with soothing sounds IF not the KUTHU song

said...

hey..hear pallandu lyrics clearly...real mas song without too much of star worship lyrics.."IVANTHAN NALLA MANITHAN IVAN POL ILLAI PUNITHAN"..etc...,
This album is good.Thanks to VAALI-THE ALLTIME GENIOUS

Anonymous said...

ஆஹா.. வந்த உடனே விமர்சனம் போட்டாச்சா!
very good..

//மதுரஸ்ரீ உச்சரிக்கும் வார்த்தைகளே எல்லாவிதமான உணர்ச்சிகளையும் தந்துவிடுகிறது. அவரது குரல் இந்த பாட்டிற்கு பலம்.//
true!

mmm...padam eppadi irukku enru parpom!

said...

//me too heard the songs.. pretty good compared to recent Ajit's songs... i liked "solli tharava".. good melody... //

i too liked sollitharava song, Arun..

same pinch..

said...

//really i luv the pronounciations wat she does, unga review correcta irundhuchu ella songukum esp for this song..
//

Really thanks one among u

said...

//Good review Karthik //

Thanks Guru

said...

/This album is good.Thanks to VAALI-THE ALLTIME GENIOUS //

Correct harish.. I too notice that.. Always vaali is great :-)

said...

/ஆஹா.. வந்த உடனே விமர்சனம் போட்டாச்சா!
very good//


கவலையேபடாதீங்க ட்ரீம்ஸ்.. படம் சூப்பரா இருக்கும்

C.M.HANIFF said...

Tnx for the musical review ;)

said...

வாழ்க்கையில் புத்தொளியும், மகிழ்ச்சியும்,வெற்றிகளும் அமைய புது வருட வாழ்த்துக்கள்.Happy2007.--SKM

said...

Maams...eppadi irukeenga....indha blogger-laye unga alavuku post poduravaanga yarachum irupaangalanu sandhegamdhaan.....adhanala dhaan award, reward ellam kudukaraanga....ennoda vaazhukal.....but cinema dhaan namma target :)

said...

Maams...Wishing You a Very Happy & Prosperous New Year :)

Pudhu varusathula namma padathuku poojai podurom :)

said...

vanakkam thalaiva,

Wish You a Wonderful New Year!!!

said...

//Tnx for the musical review//

Thanks Haniff

said...

//வாழ்க்கையில் புத்தொளியும், மகிழ்ச்சியும்,வெற்றிகளும் அமைய புது வருட வாழ்த்துக்கள்.Happy2007.--SKM //

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க

இந்த வருடம் உங்களுக்கு இபமும், நினைக்கும் எல்லவற்றையும் நடத்தி தரும் இனிய வருடமாக அமைய வாழ்த்துக்கள்.

said...

//adhanala dhaan award, reward ellam kudukaraanga....ennoda vaazhukal.....but cinema dhaan namma target//

Thanks da Mapla.. ama..cinema thaan namma target mapla

said...

//Maams...Wishing You a Very Happy & Prosperous New Year :)

Pudhu varusathula namma padathuku poojai podurom//

Thanks da Mapla..kattayam pottuduvom mapla

said...

//vanakkam thalaiva,

Wish You a Wonderful New Year!!! //

Nanri Naattamai ungalukkum iniya new year vaazhththukkaL :-)