Tuesday, December 05, 2006

அம்மா அப்பாவும் ஒரு 4000 டாலரும்

பணம்..பணம்..பணம்..இப்படி மனசுகுள்ள லப்டப்னு அடிக்கிறதுக்கு பதிலா உங்க மனசு அடிச்சக் கூட பரவாயில்லை.. இந்த உலகத்துல இது இல்லாம நீங்க இருக்க முடியாதுங்குற வாதத்தை நான் ஏத்துக்குறேன்.. ஒரு மனுஷன் கிட்ட எவ்வளவு பணம் இருந்தாலும் வசதிகள் இருந்தாலும் ஒரு பிள்ளையை வளர்த்து நல்லதொரு இடத்துல வச்சு பாக்குறது எவ்வளவு கஷ்டம்ங்கிறது அனுபவிச்சவங்களுக்கே தெரியும்.. சின்ன வயசுல மறக்காம போலியோ தடுப்பு ஊசி போடுறதுல இருந்து ஒவ்வொரு விஷயமும் பெத்தவங்களுக்கு பெரிய சோதனைகள் தான்.. சின்னதா உடம்புக்கு வந்தாக்கூட டாக்டர்கிட்ட ஓடி என்னன்னு பார்த்து... அது சரியாகி பொக்கை வாய் விரிச்சு சிரிப்பீங்களே..அது வரைக்கும் எங்க போனாலும் அவங்களுக்கு அந்த பிள்ளையோட நினைப்பாத்தான் இருக்கும்.. இப்படி உருகி உருகி வளர்த்த பிள்ளைக்கு பெத்தவங்களை விட 4000$ தான் பெருசா..?

பள்ளிகூடதுக்கு போறதுல எவ்வளவு பிரச்சனைகள்..ஷேர் ஆட்டோல போனா..அய்யோ புளிமூட்டை மாதிரி அடச்சுட்டு போறானேன்னு ஒரு வருத்தம்..அய்யா..பணக்காரனா கார்ல ஸ்கூலுக்கு போனாக்கூட கூட்டிட்டு போற டிரைவர் யார்கூடவாவது சேர்ந்து பணத்துக்காக கடத்தாம இருக்கனுமேன்னு ஒரு பயம்..நடந்து போனா..எப்படி ரோட்டை கிராஸ் பண்ணி போயிட்டு வரப்போறானோன்னு ஒரு பயம்.. இப்படி நொடிக்கு நொடி பிள்ளை மேல பெத்தவங்க வச்ச பாசத்துக்கு 4000$ மதிப்பு கூடவா இல்லாம போயிடும்..?

எனக்கு சின்ன வயசுல பஸ் ஏறினாவே தூக்கம் வந்துடும்..தூங்கிடுவேன்.. அப்போ நான் மூணாவது படிச்சுகிட்டு இருந்தேன்.. அப்படி ஒரு நாள் திண்டுக்கல்ல பஸ் ஏறி எங்க வெள்ளோட்டுப்பிரிவுல இறங்காம விட்டுட்டேன்..பஸ் காந்திகிராமம் போயிடுச்சு..(இது நான் இறங்கவேண்டிய ஸ்டாப்ல இருந்து மூணு கிலோமீட்டர்) எழுந்து பார்த்த நான் வெளில வேற ஸ்டாப் பேர் பார்த்து பஸ் அதிர்ற மாதிரி ஒரே அழுகை.. பஸ் கண்டக்டர் என்னை சமாதானப் படுத்தி திரும்பி வர்றப்போ என்னை அதே ஸ்டாப்ல இறக்கிவிடுறேன்னு சொன்னார்.. திரும்பி அந்த பஸ் ஸ்டாப் வர்றதுக்கு கிட்டதட்ட ஒரு மணி நேரதுக்கும் மேல ஆயிடுச்சு.. என் ஸ்டாப்ல இறங்கி எங்க ஊருக்கு ஒரு கிலோமீட்டர் நடக்கனும்..நடந்து போய் என் வீட்டுக்கு போனா ஒரே கூட்டம்.. எங்கம்மா என்னைக் காணாம எல்லா பசங்ககிட்டயும் விசாரிச்சு இருக்காங்க.. ஒவ்வொருத்தரும் ஒரு பதில் தர பயந்துபோயிட்டாங்க.. அப்ப அழ ஆரம்பிச்சவங்க தான் என் முகத்த பார்த்தவுடன் தான் முகதுல சிரிப்பு வந்தது.. இப்படி ஒவ்வொரு மகனையும் மகளையும் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பங்க..அப்படி பட்ட அப்பா அம்மாவோட அன்புக்கு ஒரு 4000$ கூட பெறுமானம் ஆகாதா என்ன..

எனக்கு அப்போ ரெண்டு மூணு வயசு இருக்குமாம்.. நாங்க அப்போ மும்பை பக்கத்துல பொம்பூர்னாங்கிற இடத்துல இருந்தோம்.. வாசலில எனக்கு எங்கம்மா பருப்பு சோறு ஊட்டிகிட்டு இருந்தாங்க.. நான் அப்போ சாப்பாடெல்லாம் மத்த குழந்தைகள் மாதிரி அடம் பிடிக்கமாட்டேனாம்.. எடுத்துட்டு வந்த சோறு தீர்ந்து போனதால, சமையல் ரூம்ல சாதம் எடுக்க போயிருந்தாங்களாம்.. சமயல் ரூம் அங்கே இருந்து ரெண்டு ஸ்டெப்தான் இருக்குமாம்.. அதனால என்னை விளையாடவிட்டுட்டு உள்ள போயிட்டாங்களாம்.. வந்து பாத்தா எனக்கு முன்னால பாம்பு..நான் அதை பிடிக்க கையை நீட்டிகிட்டு போறேனாம்.. பாத்தவுடன் எங்கம்மாவுக்கு உசிரே இல்லியாம்.. ஒரே கத்த கத்திகிட்டு என்னை தூக்கி இருக்காங்க..பாம்பும் பயந்தும் பக்கத்துல இருந்த ஒரு புதருக்குள்ள போயிடுச்சாம்.. அப்படி நம்மள பாதுகாத்த அம்மா அப்பவை போய் பாக்க 4000$ செலவு ஆகுதுன்னு போகாம இருக்க ஒரு பையனை நினைத்தா என்ன செய்றது..?

அரும்பாடுபட்டு உங்களை காத்ததால தான் இன்னைக்கு நீங்க சொகுசா அமெரிக்காவுல உட்கார்ந்து பிள்ளைகுட்டியோட என்ஜாய் பண்றீங்க.. அவங்க மகனை பாக்கணும்னு இந்தியாவுக்கு கூப்பிட்ட 4000$ செலவாகுமேன்னு ஒரு காரணம் சொல்லி போகாமல் இருக்கும் உங்களை மாதிரி மனுஷங்களை எங்கேயா கொண்டு போறது.. உங்களையும் எப்படித் தான் இந்த பூமிமாதா சும்மா சுமக்குறாளோ.. உலகத்துல எந்த எந்த விஷயத்துக்கு கூட நீங்க ஒப்பீடு செய்றதுக்கு இன்னொரு விஷயம் இருக்கும்..ஆனா அம்மா அப்பா பாசத்துக்கு.. அவங்க அன்புக்கு.. அவங்களோட தியாகத்துக்கு.. எதையும் ஒப்பீடு செய்யமுடியாது..ஏன் இன்னொரு அம்மா அப்பா பாசத்தையே கூட ஒப்பீடு செய்யமுடியாது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்துல தனித்து நிக்ககூடியது..

அட..ஏற்கனவே பலபேர் பலதடவை சொல்லி இருக்கலாம்.. சொல்லி இருப்பாங்க.. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்னு எழுதிதான் நீங்க பரீட்சைல மார்க் கூட வாங்கி இருப்பீங்க.. ஆனா அதை வாழ்க்கைல கடைபிடிச்சாத் தாங்க நீங்க உசந்த மனுசன்.. இல்லைனா.. அட போங்க.. சுடுகாடு போற பிணத்துக்கு கூடத்தான் மாலை விழுது.. அதுக்காக சாமியாகிட முடியுமா.. மனுஷங்களோட வாழ்றதால உங்களை மனுஷனா சொன்னா.. அட.. சொல்லமுடியுமா என்ன.. அப்படி நான் சொன்னாத் தான் நீங்க மனுஷன் ஆகிட முடியுமா என்ன..

ப்ரியாவோட மனிதரில் எத்தனை நிறங்கள்ங்கிற பதிவை பார்த்தவுடன் அதுல ஒரு மகன் அம்மா அப்பா கூப்பிட்டதுக்கு சொன்ன பதிலை படித்தவுடன் என்னால மனசுல இருக்க கோபத்தை அடக்க முடியல.. அது தாங்க இந்த பதிவு..

வாழ்க்கைல என்னிக்கும் மறந்துடாதீங்க..

மாதா, பிதா, குரு, தெய்வம்..இது தான் உயர்வுக்கு வரிசை..
இல்லைன்னா எப்படியோ அனுபவிப்பீங்க அதற்கான தண்டனை என்னும் பரிசை..

59 பின்னூட்டங்கள்:

said...

நன்றி கார்த்திகேயன்.

அம்ம்மா அப்பாவுக்கு செய்யற தப்பு
சும்மா விடாது. நெமிஸிஸ் மாதிரிப்
பின்தொடரும்.

முற்பகல் ப்பிற்பகல் தெரியாதவன்ங்க்கள்ளை ஒண்ண்ணும் செய்ய முடியாது,.

said...

உங்கள் கோபகுமரல்களை கோர்வையாக கூறியிருக்கிறீர்கள்,

\"மாதா, பிதா, குரு, தெய்வம்..இது தான் உயர்வுக்கு வரிசை..\"

I full heartedly agree with ur quotes karthik.

Anonymous said...

உங்க பதிவு நூற்றுக்கு நூறு உண்மை..

//ஷேர் ஆட்டோல போனா..//

ஷேர் ஆட்டோன்னா என்னன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்..

said...

உங்க கோவத்த நானும் பகிர்ந்துக்கிறேன். மனுஷனே இல்ல அவன்.

said...

இது ஒரு நல்ல பதிவு. அப்படியே இதந்த பதிவுக்கு வினையூக்கியா இருந்த பதிவையும் பாடித்தேன்.

அந்த $4000 மக்களை பார்த்தால் புதுசா U.S வந்தமாதிரி தெரியல. ஆனால் இந்த மாதிரி பேசர மக்கள்கிட்ட சில சமயம் நியாம் இருக்கத்தான் செய்யுது. எப்படினா ?

1. கிரீன் கார்டு இப்பதான் கிடைசிருக்கும். உடனே வீடு ஒன்னு வாங்கிருப்பார்.
2. புது வீடு வாங்கினா சும்மாவா குடி போக முடியும்? தட்டுமுட்டு சாமனும் வாங்கியிருப்பாரு.
3. அப்புறம் புதுசா ஒரு Toyota CAMRY வாங்கியிருப்பாரு.

இதுக்கெல்லாம் காசு எங்கயிருந்து வரும். கடன் தான் அது எல்லாம் கட்டுனும் இல்லையா!

ஆனா ஒரு சிலருக்கு எங்வளவுதான் சம்பாரிச்சாலும் இந்த் 1 US X 45Rs factor போகவே போகாது.

புதுசா U.S வந்தவனுக்கு கூட ஒரு உதவி கேட்டால் செய்யமாட்டார்கள்.

said...

நன்றாக சொன்னீர்கள் வல்லிசிம்ஹன்.. அம்மா அப்பாவை கடைசி காலத்தில் கவனிக்காதவர்கள் வாழ்ந்த் என்ன தான் செய்யப் போகிறார்கள் போங்கள்

said...

//I full heartedly agree with ur quotes karthik//

thanks divya..hope everyone will agree..

said...

//உங்க பதிவு நூற்றுக்கு நூறு உண்மை//

நன்றிங்க மை பிரண்ட்.. நம்ம பக்கத்துல இருக்க தெய்வங்கள் அம்மாவும் அப்பாவும்

said...

//உங்க கோவத்த நானும் பகிர்ந்துக்கிறேன். மனுஷனே இல்ல அவன்//

நன்றிங்க அருண்

said...

/இதுக்கெல்லாம் காசு எங்கயிருந்து வரும். கடன் தான் அது எல்லாம் கட்டுனும் இல்லையா!

ஆனா ஒரு சிலருக்கு எங்வளவுதான் சம்பாரிச்சாலும் இந்த் 1 US X 45Rs factor போகவே போகாது.

புதுசா U.S வந்தவனுக்கு கூட ஒரு உதவி கேட்டால் செய்யமாட்டார்கள்//

இவன், நீங்க என்ன தான் சொன்னாலும் அதை ஒரு காரணமா ஏத்துக்கமாட்டேன்.. இதே மாதிரி காரணத்தால அவங்க பெற்றொர்கள் இவரை சரியான பருவத்துல என்ன செய்யனுமோ அதை செய்யாம இருந்திருந்தா..இப்போ அவங்க இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியுமா...

said...

உங்கள் கோபம் நியாயமானதே. மிகச் சரி கார்த்திகேயன். அந்தப் பதிவையும் வாசிச்சேன்.

said...

நன்றிங்க அரசி.. அந்த பதிவையும் வாசிச்சு பின்னூட்டம் இட்டதுக்கு அமைச்சர் ப்ரியா சார்புல நன்றிங்கோவ்..

said...

மு.கார்திகேயன்

//ஆனா ஒரு சிலருக்கு எங்வளவுதான் சம்பாரிச்சாலும் இந்த் 1 US X 45Rs factor போகவே போகாது.

புதுசா U.S வந்தவனுக்கு கூட ஒரு உதவி கேட்டால் செய்யமாட்டார்கள்//

இவ்விரண்டு வரிகளும் பணம் என்னும் மாயமான் பின் ஒடிக்கொண்டேயிருக்கும் மக்களை பற்றியது.

//இதுக்கெல்லாம் காசு எங்கயிருந்து வரும். கடன் தான் அது எல்லாம் கட்டுனும் இல்லையா!//

இது அமெரிக்கா வந்தும் பொருளாதார பிரச்சனை தீராதவர்களை பற்றியது.

குறிப்பாக தென் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலஸ், ஹாலிவுட் மற்றும் ஆரஞ்சு கவுநன்டிகளில் வசிக்கும் இந்திய மக்கள் படும்பாடு கொஞ்ஜம் கஷ்டம்தான்.

குறிப்பாக 65K கீழ் வருட வருமானம் வரும் 3 பேர் கொண்ட குடும்பத்திற்கு 4000$ என்பது சற்று அதிகமான தொகைதான்.

ஆனால் அம்மா, அப்பாவுக்கு முன் எல்லாமே தூசுதான்.

said...

அம்மா அப்பாவை சந்தோஷமா வைக்கலைன்னா, எந்த பிள்ளையும் நல்ல இருக்க முடியாது. அவங்க மகிழ்ச்சி தான் நம்முடையதா மாத்திக்கனும். இந்த குணம் பெண்களுக்கு பிறவியிலேயே உண்டு, அதை தக்க வச்சிக்கனும்னு எங்க வீட்டு பெரியவங்க சொல்வாங்க...

Anonymous said...

Ungal pathivu romba arumai, nalla solli irukeenga, nalla maattukku oru soodu :)

said...

//ஆனால் அம்மா, அப்பாவுக்கு முன் எல்லாமே தூசுதான்//

இவன், நீங்க சொன்ன எல்லாத்தையும் விட இது தான் மேட்டர்.. நீங்க எடுத்துவைக்கிற வாதங்களை எல்லாம் நான் ஒத்துக்குறேன்..ஆனா அவர் என்ன பேச்சு பேசியிருக்கர்னு கொஞ்சம் நீங்க கொடுத்திருக்க சுட்டில போய் பார்த்தா நான் சொல்றது சரின்னு புரியும்

//ச்ச, நம்ம பரென்ட்ஸ் லாம் ஏன் இப்படி ஸென்டி யா இருக்காங்கனு தெரியல. இந்த ஊர் காரங்கள பாரு, பசங்களோட privacy ல தலையிடவே மாட்டாங்க//

அந்த பதிவுல என்னை கோபப்படுத்திய வரிகள் இவன்

said...

//ப்ரியாவின் பதிவை படித்ததின் விளைவு இப்படி ஒரு டச்சிங்கான கோவம் கலந்த வருந்தம் கலந்த ஆதங்கம் கலந்த ஒரு பதிவு.//

ஆமாங்க வேதா.. அந்த பதிவோட தாக்கத்தை என்னால தடுக்க முடியல

said...

//இந்த குணம் பெண்களுக்கு பிறவியிலேயே உண்டு, அதை தக்க வச்சிக்கனும்னு எங்க வீட்டு பெரியவங்க சொல்வாங்க... //

ரொம்ப கரெக்ட் தங்கச்சி.. பெண்களுக்கு ஆன்களை விட பெற்றோரர் கவனிக்கிற ஆசைகள் ரொம்ப உண்டு..

said...

//nalla maattukku oru soodu //

correct haniff.. intha maathiri jenmangal eppOthaan thiruntha pORaangalo

said...

கண்ணா கார்த்தி! நல்ல எழுதி இருக்கப்பா! விசு மாதிரி வரிசையா சொல்லி இருக்கியே! சூப்பர்!


@priya, இவன் சும்மாவே கோழி குழம்புக்கு போஸ்ட் போடுவான், இப்படியா சிங்கத்தை தட்டி விடனும்? பாரு என்ன ஆச்சு!னு! எல்லாம் உன்னை சொல்லனும்! :) LOL

said...

நீங்க சொல்றத முழுமையா ஒத்துக்கறேன். 90% பேர் உங்கள மாதிரி மாதா, பிதா அருமைய தெரிஞ்சு தான் இருக்காங்க கார்த்திக். அந்த 10% பேரையும் அவங்கள குறை சொல்றதா இல்ல அவங்க வளர்ப்பு முறைய குறை சொல்றதானு தெரியல. இதுக்கெல்லாம் இவ்ளோ அப்செட் ஆக வேண்டாம்.

Mr.இவன் சொல்ற மாதிரி அவருக்கு financial commitments அதிகம். இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி parents முன்னாடி எல்லாமே தூசு தான். இன்னும் சில பேருக்கு ஊருக்கு போறோம்னதும் அங்கேருந்து வர shopping list அ பாத்து அலர்ஜி.

தீக்ஷண்யா சொல்ற மாதிரி பெண்களுக்கு பெற்றோர் கிட்ட attachment அதிகம். ஆனா, ஒரு கசப்பான உண்மை என்ன தெரியுமா? அவங்களே in-laws னு வந்தா அப்படியே மாறிடறாங்க. வீட்டுக்கு பணம் அனுப்ப கூடாதுனு husband டோட சண்டை போடர எவ்ளவோ பெண்கள நான் இங்க பாக்கறேன்.

மொத்தத்துல, values தெரியர மாதிரி குழந்தைகள வளக்க வேண்டியது முக்கியம். நல்லா படி, வெளிநாடு போ னு சொல்லி சொல்லி வளர்க்கர parents, values சொல்லிக் குடுக்க மறந்தா இப்படி தான் ஆகும்.

said...

@Ambi,

//இவன் சும்மாவே கோழி குழம்புக்கு போஸ்ட் போடுவான், இப்படியா சிங்கத்தை தட்டி விடனும்? //
சரியா சொன்னிங்க. இவர் பயங்கர sensitive ஆ இருப்பார் போல இருக்கு.

எப்படியோ என் post க்கு link குடுத்து, hit rate அதிகப் படுத்தி இருக்கார் :)

said...

//கண்ணா கார்த்தி! நல்ல எழுதி இருக்கப்பா! விசு மாதிரி வரிசையா சொல்லி இருக்கியே! சூப்பர்!//

நன்றிங்கோவ் அம்பி!!!

//@priya, இவன் சும்மாவே கோழி குழம்புக்கு போஸ்ட் போடுவான், இப்படியா சிங்கத்தை தட்டி விடனும்? பாரு என்ன ஆச்சு!னு! எல்லாம் உன்னை சொல்லனும்! :) LOL
//

ஹிஹி..அம்பி..மனசுல ஏதோ கோபம்..பதிவை போட்டாச்சு..அதுக்கு சின்னபுள்ளையை போய் எதுக்கு..திட்டுறீங்க

said...

//மொத்தத்துல, values தெரியர மாதிரி குழந்தைகள வளக்க வேண்டியது முக்கியம். நல்லா படி, வெளிநாடு போ னு சொல்லி சொல்லி வளர்க்கர parents, values சொல்லிக் குடுக்க மறந்தா இப்படி தான் ஆகும்//

100% சரியா சொன்னீங்க ப்ரியா

said...

//சரியா சொன்னிங்க. இவர் பயங்கர sensitive ஆ இருப்பார் போல இருக்கு. //

sensitive தான் ப்ரியா..ஆனா எல்லா விஷயத்துக்கும் இல்ல.. ராக்கெட்ல ஏறி அது ஆமை வேகதுல போனாக் கூட அமைதியாத் தான் உட்கார்ந்து இருப்பேந்.. இந்த மாதிரி சில விஷயத்துக்கு ஒரு தனி மதிப்பு இருக்கு இல்லியா ப்ரியா..அது தான்

//எப்படியோ என் post க்கு link குடுத்து, hit rate அதிகப் படுத்தி இருக்கார்//

appadi pOdunga..congrats priyaa.

Anonymous said...

Karthi,ungal kobam nyayamaanadhe.. andha original linkla poi padichaudane, naanum idha mathiri thaan kobappatten....

sundar :)

said...

//
குறிப்பாக 65K கீழ் வருட வருமானம் வரும் 3 பேர் கொண்ட குடும்பத்திற்கு 4000$ என்பது சற்று அதிகமான தொகைதான்.

ஆனால் அம்மா, அப்பாவுக்கு முன் எல்லாமே தூசுதான்.//

சரியா சொன்னீங்க...
வாழ்க்கையில பணம் என்னைக்கும் தேவையாத்தான் இருக்கும்...

அதுக்காக அம்மா, அப்பாவை கவனிச்சிக்காதவங்க அதற்குரிய பலனை அனுபவித்தே ஆக வேண்டும்

Anonymous said...

நண்பரே,
பெற்றவர்களைப் பற்றி பெருமைப்படும் உங்களைப் போல மனிதர்களில் நானும் ஒருவன்.
நம் மக்கள் டாலர்களை பார்த்த பின்பு மாறிவிடுகிறார்கள். பணம் பத்தும் செய்யும். பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் ந்தையையுமா ??

நம் பெற்றோர் காட்டும் அன்பின் பாதையில் வந்த பின்பு பணமாவது கிணமாவது. பணம் என்பதே நம் மனதிர்க்கும் நம் மனதில் பிடித்தவர்களுக்கும் செலவு செய்வதுதானே? அப்படி இருக்கயில் பெற்றொரை விட்டுக் கொடுக்கும் எவனாக இருந்தாலும் Anniyan Stylelil கொலை செய்வது கூட பாவம் இல்லை :)

said...

karthi,

In general, unga sentiments OK. Aanaa, other side-um thernjikaama naama kova padakkoodathu. It may have been just a casual comment made by Priya's friend, who does not need to explain all his reasons to Priya (or you and me) for not going to India.

Matrapadi, 4000$ vs parents, parentsukku munnaal matrathellaam thoosu enbathellam verum paper sentiments. Ithey, leave kidaikkavillai enraal, velayai vidu enraa solveergal?

Ellorukkum than sontha constraints mattumey justified enbathey en thaazhmayaana opinion.


Cheers
SLN
(En sontha kathai enru ninaikkaatheergal)

Anonymous said...

கார்த்தி,

நீங்க சொல்றது சரிதான். ஆனால் அப்படி வளர்த்த பெத்தவுங்களை விட்டுட்டு அந்த $4000 க்குதான அமெரிக்காவுல உக்காந்திருக்கீங்க. அத நெனச்சு பாத்தீங்களா? இதெல்லாம் விட்டுட்டு இந்தியாவுல அவுங்களையும் கூட வச்சுகிட்டு இருக்கிற வாழ்க்கைய நெனச்சுப் பாத்தீங்களா? $4000 செலவு பண்ணி வருடம் ஒரு முறை போய் பாத்துட்டு வந்துட்டா நீங்க பெரிய தியாகியா?

said...

//andha original linkla poi padichaudane, naanum idha mathiri thaan kobappatten....
//

unmayile anthaalu chonna thoniyai ninachchu paaththaale ippadi irukkaangale manushangannu oru kobam vanthuduthu sundar...

said...

//அதுக்காக அம்மா, அப்பாவை கவனிச்சிக்காதவங்க அதற்குரிய பலனை அனுபவித்தே ஆக வேண்டும் //
சரியாச் சொன்னீங்க வெட்டி

said...

//அப்படி இருக்கயில் பெற்றொரை விட்டுக் கொடுக்கும் எவனாக இருந்தாலும் Anniyan Stylelil கொலை செய்வது கூட பாவம் இல்லை //

கிட்டு, நீங்க எப்படி எல்லாம் சொல்றீங்க..கீழ பாருங்க ஒரு நண்பர் (அனான்) பெயரைக்கூட சொல்லாமல் என்னமாய் கேள்வி கேக்குறார்னு?

Anonymous said...

nach endru sonneenga kaarthi...
ithulla comedy ennana intha madhiri aalunga, abanga pillaigal mattum athu madhiri iruka koodathu enru ninaipaanga! aana vidhi vidumaa enna?

mmm
panatha thaandi parpaangala enru parpom! panam valrathukku, valkai illa enbathu ennaiku puriyumo!

said...

//Ellorukkum than sontha constraints mattumey justified enbathey en thaazhmayaana opinion//

SLN, உங்க கருத்துக்கு நான் தலைவணங்குகிறேன்.. காரணமெல்லாம் உண்டு..அதை நான் மறுக்கவில்லை.. ஆனா ப்ரியாவோட பதிவுல சொன்ன அந்த மனுஷனோ அவர் போகாதது மட்டும் அல்ல.. இன்னும் ஏன் தன்னோட அப்பா அம்மா சென்டி-யோட இருக்காங்களோன்னு ஒரு சலிப்பா சொன்னாரே அது தான் அது தான் இந்த பதிவுக்கு காரணம்.. மற்றபடி மேல 'இவன்' சொன்ன மாதிரி காரணங்கள் இருக்கலாம்..

Anonymous said...

//$4000 செலவு பண்ணி வருடம் ஒரு முறை போய் பாத்துட்டு வந்துட்டா நீங்க பெரிய தியாகியா? //

@anony, neega kaarthi sonnatha thappa purinju tension agareenga...

panuthukaaga thaan americala irukkom enbathu unmai thaan.. 100% ... aana ungalukkaga valra vayasanavargalaiyum ninaichu paarunga... athukkaga unga panatha ellam kali panni poi paarka vendaam.. But, konja maachum prioritise pannanumla! panam innaikku varum nalaikku pogum... aana parents? evlo kanavugaloda ungala valarthuirupaargal.. ungalukku enru oru valkai vandhavudan marandhu viduveengala?

said...

வணக்கம் கார்த்திகேயன்,
உங்கள் கோபம் நியாயமானதே,

\\கோபத்தை அடக்க முடியல.. அது தாங்க இந்த பதிவு..\\

இது எனக்கு கோபமாக தொரியல, ஒரு கடமையா தான் தொரியுது. சில மனிதர்களுக்கு தவறான சிந்தனைகள் வரும் போது அதனை தடுப்பது மற்றொரு சக மனிதனின் கடமை. அதை தான் நீங்களும் செய்து இருக்கின்றிர்கள்.

Anonymous said...

@sin//Ellorukkum than sontha constraints mattumey justified enbathey en thaazhmayaana opinion.
// kandippa, but i think kaarthi is trying to say .. PLEASE PRIORITISE YOUR PARENTS OVER MONEY.. enru..

romba panam selvaagum enraal, ungalukku senti ellam paper senti ayiduma? appadiye paper sentiments enraalum, senti senti thaana...

said...

//நீங்க சொல்றது சரிதான். ஆனால் அப்படி வளர்த்த பெத்தவுங்களை விட்டுட்டு அந்த $4000 க்குதான அமெரிக்காவுல உக்காந்திருக்கீங்க. அத நெனச்சு பாத்தீங்களா? இதெல்லாம் விட்டுட்டு இந்தியாவுல அவுங்களையும் கூட வச்சுகிட்டு இருக்கிற வாழ்க்கைய நெனச்சுப் பாத்தீங்களா?//

வாங்க அனான் நண்பரே.. நீங்க தப்ப விஷயத்தை புரிஞ்சு இருக்கீங்கன்னு உங்க பின்னூட்டம் நல்லாவே சொல்லுது..

நான் அமெரிக்கவுல வந்து வேலை பார்க்கும் எல்லோரையும் பார்த்து சொல்லவில்லை.. யார் அம்மா அப்பாவை கவனிக்காம இருக்காங்களோ..யார் இன்னும் ஏன் அம்ம அப்பா செடி-யோட இருக்காங்களோன்னு சலிப்போட சொல்வார்களோ..யார் ஏன் இந்திய பெற்றோர் அமெரிக்க பெற்றோரை போல பிள்ளைகள் ஒரு அளவுக்கு மேல் கண்டுகொள்ளாமல் இருக்கணும்னு நினைக்கிறாங்களோ..அவங்களை பத்தி தான் சொல்றேன்.. நான் லிங்க் கொடுத்த பதிவை படிச்சு அந்த மனுஷன் சொன்ன வார்த்தைகளை நினைத்தால் உங்களுக்கே புரியும்..

இந்த பதிவு மறைமுகமாக உங்களை தாக்குவதாக நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்யமுடியும்..

நான் இங்கே பணம் சம்பாதிக்க வந்தவனே..குடியிருக்கவோ..பெற்றோரை மறந்து அவங்க பாசத்தை மறந்து வாழ்பவனல்ல..

சும்மா போகிற போக்குல எழுத வேறு விஷயம் இல்லைனும் இந்த பதிவைப் போடல..

மேலும் அனான் நண்பரே.. தாங்கள் தங்கள் பெயர் சொல்லியே வாதிடலாம்..

// $4000 செலவு பண்ணி வருடம் ஒரு முறை போய் பாத்துட்டு வந்துட்டா நீங்க பெரிய தியாகியா?//

அட.. என்னங்க அனான் நண்பரே.. பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க.. இதெல்லாம் மனசுல பெத்தவங்க மேல பாசம் இருக்கவங்க செய்ய வேண்டியது.. தானா மனசுல அந்த பாசம் வந்து போகணும்.. கடமையாக் கூட செய்யக்கூடாது..

Anonymous said...

appadiye avanga chinna kulandhaiyai indiala vittutu kaasukkaaga inga irukira sila "modern petrorgala" pathi sollanum neenga...

said...

//கீழ பாருங்க ஒரு நண்பர் (அனான்) பெயரைக்கூட சொல்லாமல் என்னமாய் கேள்வி கேக்குறார்னு?//

மாயவரத்தான் பாணியில சொல்லணும்னா இப்படிப்பட்ட பின்னூட்டங்களை அப்படியே "ரீடைரெக்ட் டூ குப்பைத்தொட்டி"னு கண்டுக்காம விட்டுடுங்க கார்த்தி. அவனவன் அமெரிக்காவுக்கு வரமுடியலியேன்ற வயித்தெரிச்சல்ல இப்படி சவுண்டு விட்டா அதுக்கெல்லாம் நாம விளக்கம் கொடுத்தாகணும்னு என்ன தலையெழுத்தா. திரைகடலோடியும் திரவியம் தேடறதுங்கிறது தமிழர்களுக்கிடையே இன்னிக்கு நேத்து ஆரம்பிச்ச விசமில்லைன்னு கூட இந்த அனானிக்குத் தெரியலைன்னா....... I pity him.

//athukkaga unga panatha ellam kali panni poi paarka vendaam.. But, konja maachum prioritise pannanumla!//

Dreamzz சொல்ற இந்தக் கருத்தை நான் வழிமொழியறேன். அப்படித்தான் நானும் இந்தப் பதிவைப் புரிஞ்சிக்கிட்டேன். உதாரணத்துக்கு இந்த முறை ஊருக்குப் போறப்ப இரண்டொரு காரணங்களால வேற வழியில்லாம peak fare-ல போகவேண்டிய நிர்ப்பந்தம். டிக்கட்டுக்கு மட்டும் $5100 காலி. விட்டா வங்கிக் கணக்குல ஓட்டை வரக்கூடிய அளவுக்கு டின் கட்டிடுச்சு. என்ன பண்றது. போயாச்சு. போயிட்டு வந்தாச்சு. இனி கொஞ்ச நாளைக்கு செலவைக் குறைச்சு சேமிப்பை அதிகரிச்சு ஈடுகட்டவேண்டியதுதான்.

said...

Dreamzz அவர்களே, தமிழ்ல எழுதுங்கப்பா. தங்கிலிஷை எழுத்துக்கூட்டிப் படிக்கிறதுக்குள்ள முழி பிதுங்குது :-D

Anonymous said...

@anan
annae annaanae. elloorkum panam enbadhu vaazkkaiyil mukkiyamae. marukka mudiyaadha unmai adhu. edukku varugirom? naalai namm vaazkkaiyum nammaich chaerndha vaazkkaiyum nalla irukkath thaanee?. adukaaga pethavanga kooda illayae adu idunnu logic paesa vaendaam. ippo hostel poi padikara pasanga illaya. 4 yrs parentsa vittu daanae irukaanga. adu pola daan iduvum.

said...

//appadiye avanga chinna kulandhaiyai indiala vittutu kaasukkaaga inga irukira sila "modern petrorgala" pathi sollanum neenga...//

appadi kelunga dreamzz

said...

//இது எனக்கு கோபமாக தொரியல, ஒரு கடமையா தான் தொரியுது. சில மனிதர்களுக்கு தவறான சிந்தனைகள் வரும் போது அதனை தடுப்பது மற்றொரு சக மனிதனின் கடமை. அதை தான் நீங்களும் செய்து இருக்கின்றிர்கள்//

நன்றிங்க கோபிநாத்.. முதல் வருகைக்கு நன்றி.. உங்க வார்த்தை எனாக்கு பூஸ்ட்டா இருக்கு

said...

//evlo kanavugaloda ungala valarthuirupaargal.. ungalukku enru oru valkai vandhavudan marandhu viduveengala? //

Dreamzz.. ellaame ennoda thot mathiri same-a irukku..

Thanks for your words..

said...

இன்னிக்குத் தான் வர முடிஞ்சது. ரொம்ப நல்ல பதிவு. அப்பா, அம்மா பாசத்துக்கு ஈடு, இணை ஏதும் கிடையாது. அதை நல்லா உணர்ந்திருக்கிற உங்களை மாதிரி ஒரு பிள்ளை கிடைத்தது உங்க அப்பா, அம்மா செய்த புண்ணியம். நீடூழி வாழ்க! வளர்க!

said...

//இப்படிப்பட்ட பின்னூட்டங்களை அப்படியே "ரீடைரெக்ட் டூ குப்பைத்தொட்டி"னு கண்டுக்காம விட்டுடுங்க கார்த்தி. //
அரசி, அப்புறம் நாம பயந்துகிட்டு பதில் சொல்லலைங்கிற மாதிரி ஆகிடும்ங்க..அது தான்..



// உதாரணத்துக்கு இந்த முறை ஊருக்குப் போறப்ப இரண்டொரு காரணங்களால வேற வழியில்லாம peak fare-ல போகவேண்டிய நிர்ப்பந்தம். டிக்கட்டுக்கு மட்டும் $5100 காலி. விட்டா வங்கிக் கணக்குல ஓட்டை வரக்கூடிய அளவுக்கு டின் கட்டிடுச்சு. என்ன பண்றது. போயாச்சு. போயிட்டு வந்தாச்சு. இனி கொஞ்ச நாளைக்கு செலவைக் குறைச்சு சேமிப்பை அதிகரிச்சு ஈடுகட்டவேண்டியதுதான்.
//
உங்க பாசத்த செயல நான் மதிக்கிறேன்.. வணங்குகிறேன் அரசி

said...

//Dreamzz அவர்களே, தமிழ்ல எழுதுங்கப்பா. தங்கிலிஷை எழுத்துக்கூட்டிப் படிக்கிறதுக்குள்ள முழி பிதுங்குது //

:-))

said...

/Nalla ezuthurenga.Vazthukal.
padichi partha than theriyuthu, neenga enaku pakkathu ooru'nu :-)
Ennoda amma valarntha ooru chinnalappatti.
//

vaangka kumaresan.. paraattukku nanringka..

kattayam ungakala mailla contact panren

said...

//adukaaga pethavanga kooda illayae adu idunnu logic paesa vaendaam. ippo hostel poi padikara pasanga illaya. 4 yrs parentsa vittu daanae irukaanga. adu pola daan iduvum.//

chooppar point kittu..

said...

//அதை நல்லா உணர்ந்திருக்கிற உங்களை மாதிரி ஒரு பிள்ளை கிடைத்தது உங்க அப்பா, அம்மா செய்த புண்ணியம். நீடூழி வாழ்க! வளர்க!
//

நன்றிங்க தலைவியே

Anonymous said...

@சேதுக்கரசி
நீங்க சொல்லி கேட்காம இருப்பேனா?

Anonymous said...

moovaayiram selavu panna amma appa rendu perayum 6 months inga vachukalaam. Ellaa amma appaakkum pasangaloda irukardhu dhaan sandhosham - even though the kids say avangalukku inga bore adikudhaam.
rendu vaaram mattum India poi sandhosa paduthinaa porumnu nenaikaravanga idhayum yosichupaakkalaam.
Unga blog romba touching karthik.

said...

//@சேதுக்கரசி
நீங்க சொல்லி கேட்காம இருப்பேனா//

அரசி ஆணை நிறைவேற்றப்பட்டது உடனே

said...

//Unga blog romba touching karthik. //

Nalla idea anon..

thanks for great comments :-)

Anonymous said...

மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லம் சரிதான். ஆனா, அவன் நிலைமையில் இருந்து பாத்தாதான் அவன் செய்வதும் புரியும். அமெரிக்காவில் வாழ்வது ஒன்றும் சுலபமில்லை பிரதர். இன்றைய நிலயில் வேலை எவனுக்கு எப்ப போகும்னு தெரியாது. வேல போச்சுன்னா, வீடு, கார், குழந்தைகள் படிப்பு மற்றும் வீட்டு செலவை கவனிக்க பணம் அவசியம்தான். சும்ம திண்ணயில் உட்கார்ந்து பொழுதுபோக்க முடியாது. யாரும் மாமன் மச்சான் வீட்டில் போய் டேரா போடவும் முடியாது. அவருக்கு என்ன கஷ்டமோ? நாளைக்கு அவர் பெற்றோருக்கு பணத்தேவை வரும்போதும் இதே பாழாய்ப்போன பணம் தான் தேவைப்படும். அவசரத்துக்கு மருந்து வேண்டும், ஒரு கிலோ பாசத்தை வைத்துக்கொண்டு மருந்து கொடுன்ன எவனாவது கொடுப்பானா? இதுதான் வாழ்வின் கசப்பான உண்மை. சம்பாதிக்க முடியும்போது சம்பாதித்து அதை சேமித்து வைப்பதில் எந்த தவறும் இல்லை. அவர் சம்பாதித்த $4000, அதன் அருமை அவருக்குத்தான் தெரியும்!

Anonymous said...

கார்த்தி,

நியாயமான கோபம். எனக்கு என்னவோ ஒட்டுமொத்தமாய் அவன் மீது மட்டும் குற்றம் இல்லை என்றே தெரிகிறது..

ஏனெனில் நீ எவ்வாறு வளர்க்கப் படுகிறாயோ, நீ எவ்வாறு விதைக்க படுகிறாயோ அவ்வாறு தான் உருவகம் அடைகிறாய்..

எனவே அவனை சார்ந்த சமுகமும் இதற்கு காரணமாகிறது..


அதைவிட ஒரெ ஒரு நிமிடம் எதற்காக என்று யொசித்துவிட்டால்?

No matters..

priyavin pathivukkum poi padithen..

said...

Mani..

Nee solvathu 100% correct.

but ellorum appadi irukkirathu illiye.. mela irukka anon comment paarunga.. ungalukke puriyum makkal eppadi ellam irukkaangannu