Thursday, December 07, 2006

வெற்றித் திருமகள் அழகிய அசின்காலை எழுந்த சூரியன் உலகிற்கு மஞ்சள் பெயின்ட் அடித்து கொண்டிருந்த நேரம்.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்.. வெளியூர் பஸ் எல்லாம் பயணிகளை இறக்கி விட்டுக்கொண்டிருந்தது.. மஞ்சள் கலர் சுடிதாரில் அவள்.. பஸ்ஸின் முன்பக்க வழியா எட்டிப் பார்க்கிறாள்..என்ன ஒரு அழகு.. கடவுளின் சொந்த நாடு என்று கேரளாவை சொல்வார்கள்.. அந்த கேரளாவின் இயற்கை அழகிற்கு ஒத்துப் போவது போல் அவளும் இருந்தாள்.. கறுப்புகலர் பேண்ட் போட்ட குதிரைவால்.. மஞ்சள் நிற சால்வரில் ஒரு கையில் பையுடன் அவள் நடந்து வரும் அந்த பாவனைக்கு, அவள் கேட்பது அடுத்தவனிடன் இருந்தால் கூட பிடுங்கி தரலாம்..ஹ்ம்ம்..திருடியும் தரலாம்.. சின்ன பருக்கள் கொண்ட வெண்ணிலா முகம்.. நெற்றியில் மெருன் கலர் ஸ்டிக்கர் பொட்டு.. உதட்டில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் அழகுப் புன்னகை.. கட்..கட்..கட்..

இப்படித்தான் இருக்கும், எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமியில் அசின் அறிமுக காட்சி.. அசினுக்காகவே ஆறேழு தடவை பார்த்த படம்.. என்ன ஒரு விளையாட்டுத்தனமான, துடுக்குத்தனமான நடிப்பு.. ஸ்டைலா நின்னு பீடி குடிக்க முயற்சி பண்ணுவதாகட்டும்.. பிராந்துன்னு ஜெயம் ரவியை கிண்டல் பண்ணுவதாகட்டும்..இடுப்பை ஒடித்து அய்யோ அய்யோ ன்னு பாட்டு பாடுவதாகட்டும்.. படத்த பாத்த எல்லோருக்கும் மனசுல நிச்சயம் நிக்கிற ஆள் அசின்.. அதுக்கு அடுத்து வந்த கஜினி படத்துல அசினோட நடிப்பை பத்தி சொல்லவே வேண்டாம்.. படம் பாத்துட்டு வெளிய வர்றப்போ.. சாகுறதுக்கு முன்னாடி கண்களாலையே ஆயிரம் வார்த்தைகள் பேசுற, அந்த நடிப்பும் அந்த முகமும் மனசை போட்டு பிசையவே செய்திருக்கும்.. அப்படி ஒரு இயற்கையான நடிப்பு ஆற்றல் அசினுக்கு உண்டு.. அதன் பிறகு வந்த உள்ளம் கேட்குமே (இந்த படத்தில் தான் அவர் நடிப்பதற்காக முதலில் ஒப்பந்தம் ஆனார்), சிவகாசி, மஜா, வரலாறு போன்ற படங்களில் இவர் நடிப்பு திறனுக்கு ஏற்ற கதை இல்லையென்றாலும் இவரை கொண்டு போய் உச்சியில் இந்த படங்கள் வைத்ததென்னவோ உண்மை..இப்போது அஜித்துடன் ஆழ்வாரிலும், விஜயுடன் போக்கிரியிலும், கமலுடன் தசவதாரத்தில் இரு வேடத்தில் நடிச்சுகிட்டு இருக்க அசின், தனது கதாபாத்திரத்தின் அழுத்தம் கதையில் பார்த்தே படங்களை ஒப்புக்கொள்கிறார்..

சமீபத்தில் சிஃபி.காம்-ல் பார்த்த ஒரு கட்டுரை தான் இந்த பதிவுக்கு ஒரு மூலாதாரம். மற்ற எந்த நடிகையை விடவும் வெற்றி சதவிகிதம் அசினுக்கு அதிகம் என்று அந்த கட்டுரை சொல்கிறது. அது என்ன அப்படின்னு நாமளும் சற்று பார்ப்போமே..

கடந்த இரண்டு வருடத்தில் அசின் நடித்த படங்களும் அந்த படத்தின் வெற்றி தோல்விகளும்...

எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி (சூப்பர் ஹிட்)
கஜினி (வெள்ளிவிழாப் படம் - பிளாக்பஸ்டர்)
உள்ளம் கேட்குமே (ஹிட்)
சிவகாசி (சூப்பர் ஹிட்)
மஜா (தோல்வி - பிளாப்)
வரலாறு (சூப்பர் ஹிட்)
வெளிவந்த ஆறு படங்களில் மஜாவைவிட மற்ற ஐந்து படங்கள் நல்ல மகசூலைத் தான் தந்திருக்கின்றன.. கிட்டதட்ட 83% வெற்றி.. இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனை.. அதுவும் இல்லாமல் வேறு எந்த நடிகருடன் இதுவரை இவரை யாரும் கிசுகிசுத்துப் பேசப்படவில்லை.. கால்ஷீட் பிரச்சனை தராமல், தயாரிப்பாளருக்கும் எந்த தொந்தரவும் தந்ததில்லை.. அதனால் இப்போது எல்லோரும் புருவம் தூக்கி பார்க்கும் வண்ணம் உயர்ந்து இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு அந்தஸ்தை இவருக்கு தந்தது கஜினியின் கல்பனா பாத்திரம் தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.. மேலும் ஹிந்தியிலும் கஜினி ரீமேகில் இவர் நடிப்பார் என்பது இப்போது நடக்காத ஒரு விஷயமாகி விட்டது. இல்லை என்றால் ஸ்ரீதேவிக்கு பிறகு ஹிந்திக்கு செல்லும் நடிகைகளில் மிகவும் எதிர்பார்ப்பு உள்ளவராக இருந்திருப்பார்.

கடந்த காலத்தில் சாவித்ரி போன்ற நடிகைகள் பெரும்பாலும் கதையம்சம் கொண்ட படங்களில் நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்தனர். இப்போதெல்லாம் நடிகைகள் படங்களுக்கு மசாலா ஐயிட்டம் போலத் தான் பயன்படுத்தப் படுகிறார்கள்.. இதற்கு நல்ல கதையம்சம் இல்லாமல் பத்துபாட்டு ஒரு படத்துக்கு..அதில ரெண்டு குத்துப்பாட்டுன்னு ஒரு கலாசாரம் வேற.. கஜினிக்கு பிறகு அசினுக்கு சும்மா திரையில் தோன்றி என்னாத்த சொல்வேனுங்க ன்னு ஹீரோ கூட ஒரு குத்தாட்டம் போட்டோமா என்பது போலத் தான் படங்கள் கிடைத்து வருகின்றன..

இப்போது நடித்து வரும் படங்களில் கூட ஆழ்வாரிலும் போக்கிரியிலும் ஹீரோவுக்கு காதலியாகத் தான் வந்து போவார் என்று நினைக்கிறேன்.. இரு வேடத்தில் வரும் தசவதாரத்திலாவது ஏதாவது ஒன்றில் தனது கல்பனா போன்ற நடிப்பை காட்டுவாரா என்று பார்ப்போம்..அதுவரை..இப்படி வெற்றித் திருமகளாக வலம் வரும் அசின் மேலும் வெற்றிப் பெற அசின் ஜொள்ளர்கள் சங்கம் வாழ்த்துகிறது.. அதுவும் தல, தளபதி நடிச்சு பொங்கல் அன்று வெளிவரும் படங்கள் வெற்றி பெற இப்போவே அசின் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

38 பின்னூட்டங்கள்:

said...

இதென்ன.. ஜொள்ஸ் பதிவு போலிருக்கு.. இன்னிக்கு டைமில்ல நாளைக்கு வாசிக்கிறேன்! உள்ளேன் ஐயா. எனக்கும் அசின் பிடிக்கும் (அடச்சே.. வேற விதத்துல!!)

said...

எப்படியும் படம் கிளப்பிடுவாங்க...

போட்டோக்கு நன்றி!!!

Anonymous said...

அசினுக்கு நான் வச்சிருக்கும் சிம்மாசனம் எந்த உயரமோ, அதே உயரத்தில்தான் நீங்களும் அவரை வச்சிருகீங்க..

சும்மா சொல்லகூடாது. அசின் அசின்தான்..
ஒரு காலத்துல நதியா, கவுசல்யா போன்றவர்களின் நடிப்பை பார்த்துட்டு.. இப்போ யாரும் அவ்வாறு இல்லையேன்னு வருத்தப்பட்டுகிட்டு இருந்த போது, உள்ளம் கேட்குமே திரேய்லர் பார்த்தேன்.

"ஆஹா, நான் தேடும் செவ்வந்தி பூ இதுதான்"ன்னு நினைச்சேன்.

அந்த நம்பிக்கையை அப்படியே காப்பாத்திட்டார். மலபாராக, பிரியாவாக, கல்பனாவாக, ஹேமாவாக, சீதாவாக மற்றும் திவ்யாவாக கலக்கிட்டார். ஆனால்,இப்போ வரும் படங்கள் அவர் நடிப்புக்கு தீனி போடவில்லைங்கிறது உண்மைதான்.

தசாவதாரத்தின் பத்தில் ஒரு கெட்டப் அசினுக்கு கொடுத்தால் நல்லாதான் இருக்கும்!

said...

வாட் ஈஸ் திஸ்? ஐ டோண்ட் லைக் அசின், ஏதோ சூர்யா,விஷால்,பிருதிவிராஜ் பத்தி சொல்லியிருந்தீங்கன்னா நாங்களும் எங்க கருத்தை ஜொள்ளிட்டு போயிருப்போம்:)
சிவகாசியில் அசினை பயங்கரமா கேவலப்படுத்த படுத்தியிருப்பாங்க,அதெல்லாம் ஒரு படம், அசினே ரொம்ப பீல் பண்ணியிருப்பாங்க:)

said...

வரிசையா லைன் கட்டி எல்லாரும் ஜொள்ளப் போறாங்க, அப்புறமா உங்க வலைப்பக்கத்தை தொடச்சு வைங்க:)

said...

சரியா ஜொல்னீங்க கார்த்திக் :)
படங்கள் ப்ரமாதம்

said...

அதிகமான் டி.வி விளம்பரங்களிலும் தற்போது கொடி கட்டி பறப்பது அசின் தான். cute , petite gal!

said...

வெற்றித் திருமகள் தான். சந்தேகமேயில்லை.

அசின் பிடிக்கும்.. ஆனா அசின் படம் இதுவரைக்கும் 1/2 படம் தான் பார்த்திருக்கேன். என்ன அரை படம்னு கேட்கிறீங்களா? கஜினி குறுந்தகடு பாதிக்கு மேல வேலை செய்யல :-( ஆனா அதுல சூர்யா தான் சஞ்சய் ராமசாமின்னு தெரியாம செம உதார் விடுவாளே.. அடடா என்ன நடிப்பு. அதுலயும், அவன் கிட்ட "ஆட்டோவுக்குக் காசு வச்சிருக்க இல்ல?"ன்னு கேட்கிறதும், "உனக்கு ஒரு நல்ல விளம்பரத்துல சான்ஸ் வாங்கித் தரேன்.. பெரிய banner-ல உன் போட்டோ, என்ன விளம்பரம் தெரியுமா? 'சுடர்மணி ஜட்டி'" அப்படின்னு சொல்ற காட்சி தூள் :)) சூப்பர் நடிகை.

C.M.HANIFF said...

Asin asinutaan ;)

said...

//இதென்ன.. ஜொள்ஸ் பதிவு போலிருக்கு.. இன்னிக்கு டைமில்ல நாளைக்கு வாசிக்கிறேன்//

அரசி.. அசின் நம்ம ஆளு.. ரொம்ப நாள அசின் பத்தி பதிவு போடலைனு ஒரு குறை..அது தான்

//எனக்கும் அசின் பிடிக்கும் (அடச்சே.. வேற விதத்துல!!)
//

:-))

said...

//எப்படியும் படம் கிளப்பிடுவாங்க...

போட்டோக்கு நன்றி!!!

//

நன்றி வெட்டிபயலே

said...

//மலபாராக, பிரியாவாக, கல்பனாவாக, ஹேமாவாக, சீதாவாக மற்றும் திவ்யாவாக கலக்கிட்டார். //

எப்பா..எல்லப் படத்து கேரக்டரையும் புட்டு புட்டு வைக்கிறீங்களே மை பிரண்ட்

said...

//சூர்யா,விஷால்,பிருதிவிராஜ் பத்தி சொல்லியிருந்தீங்கன்னா நாங்களும் எங்க கருத்தை ஜொள்ளிட்டு போயிருப்போம்:)//

வேதா.. உங்க கோபம் புரியுது.. சீக்கிரமே அப்படி ஒரு பதிவை போட்டுட வேண்டியது தான்

said...

//அப்புறமா உங்க வலைப்பக்கத்தை தொடச்சு வைங்க//

:-)

said...

//சரியா ஜொல்னீங்க கார்த்திக் //

உண்மையை சொல்லுங்க.. நீங்களும் தானே அருண்

said...

//அதிகமான் டி.வி விளம்பரங்களிலும் தற்போது கொடி கட்டி பறப்பது அசின் தான்//


அப்புறம், அசின்னா சும்மாவா பிரியா

said...

//சூப்பர் நடிகை. //

அப்படி சொல்லுங்க அரசி

said...

//Asin asinutaan //

hehehe NallaavE jolReenGka haniff

said...

எனக்கும் அசின் பிடிக்கும். ஆனா இந்த ஜொள்ளு போஸ்ட்லாம் டூ மச்.
M.குமரன், கஜினி தவிர ஒண்ணுலயும் சொல்லிக்கர மாதிரி ரோல் இல்ல (வரலாறு நான் பாக்கல). அதுவும் உள்ளம் கேக்குமேல கேவலமா இருப்பாங்க உங்க தலைவி.

Anonymous said...

எனக்கும் அசின் பிடிக்கும் (அடச்சே.. வேற விதத்துல!!) -- appadingara comment enakkum porundhum enbathaala naan sudaren!

Anonymous said...

ஆயிரம் தான் சொன்னாலும் நான் த்ரிஷா fan :( ....
அவுக படத்த போட்டு ஒரு blog போடுங்க சீக்கிரம்!

said...

\"//அதிகமான் டி.வி விளம்பரங்களிலும் தற்போது கொடி கட்டி பறப்பது அசின் தான்//


அப்புறம், அசின்னா சும்மாவா பிரியா\"

கார்த்திக், என் பெயர் 'திவ்யா' , பிரியா இல்ல,
'யா' ன்னு முடியிற பெயர் எதுவேனா எனக்கு வைச்சுடலாம்னு முடிவு பண்ணிடீங்களா??

said...

//எனக்கும் அசின் பிடிக்கும். ஆனா இந்த ஜொள்ளு போஸ்ட்லாம் டூ மச்.
M.குமரன், கஜினி தவிர ஒண்ணுலயும் சொல்லிக்கர மாதிரி ரோல் இல்ல (வரலாறு நான் பாக்கல). அதுவும் உள்ளம் கேக்குமேல கேவலமா இருப்பாங்க உங்க தலைவி.

//

ப்ரியா.. ஹிஹிஹி.. அசின் எப்படி வந்தாலும் அழகு தான்.

said...

//எனக்கும் அசின் பிடிக்கும் (அடச்சே.. வேற விதத்துல!!) -- appadingara comment enakkum porundhum enbathaala naan sudaren! //

dreamzz.. entha vithathula ungalukku pidikkum :-)

said...

//ஆயிரம் தான் சொன்னாலும் நான் த்ரிஷா fan :( ....
அவுக படத்த போட்டு ஒரு blog போடுங்க சீக்கிரம்!

//

ஹிஹிஹி.. உங்களுக்காக ஒரு த்ரிஷா போஸ்ட் சீக்கிரம் போடுறேன் ட்ரீம்ஸ்

said...

//கார்த்திக், என் பெயர் 'திவ்யா' , பிரியா இல்ல,
'யா' ன்னு முடியிற பெயர் எதுவேனா எனக்கு வைச்சுடலாம்னு முடிவு பண்ணிடீங்களா??
//

சரி திவ்யா.. மன்னிச்சுக்கோங்க பா.. அது கவனப்பிழை

Anonymous said...

Oh God,

super jolls....You must save this web-page, to see ur future fiance.

Anonymous said...

I too like Asin... But when I checked out "Dasavathaaram" stills, I was disappointed. She doesnot look in the normal way... Check out urself...

http://www.behindwoods.com/features/Gallery/tamil-movies/movies-1/dasavatharam/Dasavatharam-01.html

-nathas

Anonymous said...

I too like Asin. But I was disappointed when I saw the "Daasavatharam" stills. I doesnot look fine. They didn't show her nice. Check out urself...

http://www.behindwoods.com/features/Gallery/tamil-movies/movies-1/dasavatharam/Dasavatharam-01.html

said...

//hen I checked out "Dasavathaaram" stills, I was disappointed//

இதைப் பார்த்தா அசின் மாதிரியே இல்லையே?

said...

//super jolls....You must save this web-page, to see ur future fiance.
//
ஆஹா.. குடும்பத்துல குழப்பம் உண்டுபண்றீங்களே அனான்..

ஆமா.. நான் இத காண்பிச்சா அவள் மாதவனையோ சூர்யாவையோ காண்பிக்க போறா

said...

//I too like Asin... But when I checked out "Dasavathaaram" stills, I was disappointed. She doesnot look in the normal way... Check out urself...///

Anon, athu mallika cheraawat :-)

said...

Oh..Anon..Neenga nathas a?

said...

//
இதைப் பார்த்தா அசின் மாதிரியே இல்லையே? //

சரியாச் சொன்னீங்க அரசி.. அது மல்லிகா செராவட்

Anonymous said...

என்னதான் சொல்லுங்க திரிஷா மாதிரி வருமா .. நீங்க எல்லோரும் திரிஷாவை நல்லாப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அட நான் சொல்லுவது படத்தில்.

said...

ஆமாம், த்ரிஷாவும் அழகு தான்!

Anonymous said...

hey i dont like asin.. neenga lam ipdi urugaratha partha inum than enaku asin a pidakala pa

Anonymous said...

i like nayanthara only..