Sunday, December 17, 2006

போக்கிரியின் பாடல்கள் - பாமரனின் விமர்சனம்

விஜய் படத்தின் பாடல்கள் என்றுமே நன்றாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே உண்டு. (புதிய கீதை போன்ற படங்களை தவிர்த்து பார்த்தால்) அந்த எண்ணத்தை பொய்யாக்கப் போவதில்லை என்று வந்திருக்கிறது மணிசர்மாவின் இசையில் போக்கிரி பாடல்கள்.. இந்த போக்கிரியின் ஆல்பம் கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது.. நிறைய பாடகர்கள் புதுசாய் தெரிகிறார்கள்.. இளமையாய் உற்சாகமாக இருக்கிறது அவர்களின் குரல்கள்..

வசந்த முல்லை போல வந்து ஆடிடும் வெண்புறா
பாடியவர்கள் : ராகுல் நம்பியார், வி. கிரிஷ்ணமூர்த்தி

ராகுல் நம்பியாரின் குரல் விஜய்க்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.. அவரின் உச்சரிப்பும், புது வித ஸ்டைலும் கேட்கும் ஒவ்வொருத்தரின் தலையையும் அசைய வைக்கும் வல்லமை கொண்டது.. அதுவும் பாடலின் ஒவ்வொரு வரிகளும் யதார்த்த, ருசிகரமாகவும் உள்ளது.. இந்த வருடத்தின் எல்லா சேனல்களிலும் இடைவிடாமல் இந்த பாட்டு ஓடும்.. மொத்தத்தில் பாடலின் வரியை போலவே பாட்டு நமது நெஞ்சங்களை வசந்தமை நெகிழவைக்கும்.. வளரும் எல்லா திறமையும் ராகுல் நம்பியாருக்கு (வேறு ஏதேனும் பாட்டு பாடி இருக்காரா) உண்டு.. அவருக்கு ஒரு ஷொட்டு.. இந்த ஆல்பத்தின் முதலிடம் இந்த பாட்டுக்குத் தான்

ஆடுங்கடா என்னை சுத்தி...
பாடியவர்: நவீன்

இது நிச்சயமாய் விஜயின் அறிமுக பாடல் என்பது பாட்டின் ஆரம்பத்திலேயே புரிந்து விடுகிறது.. தரை தப்பட்டை மேளம் முழங்க இந்த பாடலை நவீன் பாடியிருக்கிறார். பாட்டின் வரியே சொல்லிவிடுகிறது.. பாடப் போறேன் என்னை பத்தி.. கேளுங்கடா வாயைப் பொத்தின்னு..(பாட்டை கேக்குறதுக்கு இந்த தண்டனை வேறயா) அதனால அப்படித்தான் நானும் இந்தப் பாட்டை கேட்டேன்.. குத்து இசையோடு எப்பவும் விஜய் படங்களில் வரும் அறிமுகப் பாடல் என்பதால் ரொம்ப சொல்றதுக்கு பெருசா ஒண்ணும் இல்ல.. அடிக்கடி போக்கிரி பொங்கல்ன்னு கோரஸ் சத்தம் வருது.. அதனால இந்தப்படத்தின் ஏதாவது ஒரு போஸ்டரிலாவது இந்த வாசகம் வரும் என்பது இப்பவே நாம் சொல்லிவிடலாம்.. குழந்தை தொழிலாளர்கள், சேரியில்லா ஊரு, தீண்டாமை ஒழிப்புன்னு வழக்கம் போல ரஜினி மாதிரி ஓபனிங் பாட்டு தத்துவங்கள் உண்டு இதுலையும்...

மாம்பலமாம் மாம்பலம்
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன், சுசித்ரா

இது கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரும் விஜய் படத்தின் அக்மார்க் குத்து பாட்டாய் இருக்குமென்று நினைக்கிறேன். அதனால சில பாடல் வரிகள் கூட அது போலவே இரட்டை அர்த்தங்கள் பொதிந்ததாய் இருக்கிறது.. குத்துப் பாடல் என்று சொல்லிவிட்டதால் அதைவிட பெரியதாக சொல்வதற்கு இந்த பாடலில் ஒன்றும் இல்லை..

நீ முத்தம் ஒன்று கொடுத்தால்
பாடியவர்கள் : ஏ.வி.ரமணன், சுசித்ரா

இது அழகான மெலடி கலந்த ஒரு டூயட் பாடல். இசையும் வார்தைகளும் சரிவிகதமாய் இருந்து பாட்டுக்கு இன்னும் வலுசேர்க்கிறது.. இந்த பாடலில் அரக்க பரக்க நடன காட்சிகள் இருக்க வாய்ப்பில்லை. மிகவும் நளினமான நடன அசைவுகள் தான் இருக்கும். அதுவும் இயக்குநர் பிரபுதேவா என்பதால் சில சுவாரஸ்யமான நடன காட்சிகளை காணலாம் என்று நினைக்கிறேன்.. நிச்சயம் ஒரு வெளிநட்டு இடத்தை பார்க்கும் வாய்ப்பை இந்த பாட்டு உங்களுக்கு தரும்.

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் (ரீமிக்ஸ்)
பாடியவர்கள் : ஏ.வி.ரமணன், சுசித்ரா


இது போன பாட்டின் ரீமிக்ஸ் பாடல்..

என் செல்லப் பேரு ஆப்பிள்
பாடியவர்கள் : ஏ.வி.ரமணன், சுசித்ரா

இந்த பாடல் கேட்கும் போது நிறைய பாடல்கள் உங்கள் ஞாபகத்துக்கு வந்தாலும் ஜே ஜே படத்தின் மே மாதம் பாட்டு சாயல் அதிகமாக இருக்கிறது.. அது மட்டுமல்ல, சுசித்ரா (அந்த பாட்டை பாடிய ரேடியோ மிர்ச்சி சுசித்ரா) தான் இதையும் பாடி இருப்பதால் அந்த எண்ணத்தில் இருந்து தப்பிக்க முடிவதில்லை.. இது இளமை துள்ளல் கொண்டு கொஞ்சம் மாடர்ன் காஸ்டியூம்கள் கொண்டு அசின் ஆடியிருப்பார்னு நினைக்கிறேன். மற்றபடி சொல்வதற்கு அதிகமாக இந்த பாட்டில் ஒன்றும் இல்லை..

டோலு டோலு தான் அடிக்கிறான்
பாடியவர்கள் : ரஞ்சித், சுசிதா

ஆல்பத்திலேயே ரேட்டிங்கில் மிகவும் கீழே இருக்கும் பாட்டு இது தான்.. ஒண்ணும் பெரிதாக எழுதுவதற்கு இதில் ஒன்றும். ரொம்பவும் மாடர்ன் இசை கலந்த இந்த பாட்டு எல்லோரையும் கேட்க வைக்குமா என்பது சந்தேகமே..

வசந்த முல்லை பாடலைத் தவிர இசை கணக்கில் வேற எதுவும் பெரிதாக சொல்வதற்கு இல்லை.. விஜய் ரசிகர்களின் மனதை கவர ஆடுங்கடா பாட்டு உதவும்.. விஜய் படத்தின் பாடல்களை கொண்டே அது படத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சொல்லிவிடலாம். நிறையப் பாடல்கள் இருப்பதால் படத்தில் ஏதேனும் ஒரு பாடல் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. மேலே சொன்ன பாடல்களோடு போக்கிரி தீம் பாடலும் மணிசர்மாவின் குரலில் உண்டு, போனசாக.. ஆனால் பிரபுதேவா படத்தின் இயக்குநர் என்பதால் படத்தின் பாடல்களில் விஷூவல் ட்ரீட் சில இருக்கலாம்..இருக்கும்..

(ஏற்கனவே சொல்லிக்கிட்ட மாதிரி...நமக்கு ராகம், தாளம், பல்லவின்னு ரொம்ப எல்லாம் தெரியாது.. மனசுக்கு கேட்டவுடன் புடிச்சிருக்கா.. அது தான் மேட்டர்..அத மனசுல வச்சுத்தான் இந்த விமர்சனம் எழுதி இருக்கேன்)

42 பின்னூட்டங்கள்:

said...

அட்டெண்டன்ஸ் :)

said...

குறித்துக் கொண்டேன் அருண்

said...

//.நமக்கு ராகம், தாளம், பல்லவின்னு ரொம்ப எல்லாம் தெரியாது.//

இது பற்றி இந்த வார விக்கி பசங்க பதிவைப் பாருங்கள்!!

அவ்வளவு அவசரம் வேண்டாம், இன்னும் போடலை. ஆனா அங்க அப்பப்போ வந்து பாத்துக்கிட்டே இருங்க!!

(இலவச விளம்பரத்துக்கு நன்றி!)

Anonymous said...

நான் எழுத நினைத்ததை அப்படியே எழுதியிருக்கீங்க. அந்த ஜே ஜே 'மே மாதம்' 100% அப்டிதான் தோணுது..

Anonymous said...

//ராகுல் நம்பியாருக்கு (வேறு ஏதேனும் பாட்டு பாடி இருக்காரா)//

பாடியிருக்கார் கார்த்திக்..

1- பூமிக்கு வெளிசமெல்லாம் (டிஷூம்)
2- சட்டுபுட்டுன்னு (நெஞ்சில் ஜில் ஜில்)
3- தலைநகரம் தீம் சோங்
(எனக்கு தெரிஞ்ச சில)

விமர்சனம் சூப்பர். ஆனால் எனக்கு இந்த பாடல்களை கேட்கும்போது, இதை திரும்ப கேட்க நாட்டம் இல்லை. நான் கேட்கும் லேட்டஸ்ட் பாடல் உன்னாலே உன்னாலே பாடல்கள்தான்..

கார்த்திக், விஜய டி. ராஜேந்திரரின் வீராசாமி பாடலும் வெளியாகியாச்சு. அதுக்கும் ஒரு விமர்சனம் போட்டுடுங்க..

said...

விமர்சனம் சூப்பர் கார்த்திக். ரீமிக்ஸ் பாட்டெல்லாம் இருக்கா...

பாட்ட மட்டும் கேட்டுட்டு அசின் எப்பிடி dance ஆடியிருப்பாங்கனு எல்லாம் சொல்றீங்க.. கலக்குங்க :)

மொதோ கமெண்டுக்கு சுடச்சுட பஜ்ஜி அனுப்புங்க... மழை பெய்யும்போது யூஸ் பண்ணிக்குறேன் :)

said...

//
குழந்தை தொழிலாளர்கள், சேரியில்லா ஊரு, தீண்டாமை ஒழிப்புன்னு வழக்கம் போல ரஜினி மாதிரி ஓபனிங் பாட்டு தத்துவங்கள் உண்டு இதுலையும்
//
நடிப்புல முடியாது. அதனால பாட்டுலயாவது சூப்பர் ஸ்டார மாதிரி ட்ரை பண்றாங்க போல!!!

said...

//இது இளமை துள்ளல் கொண்டு கொஞ்சம் மாடர்ன் காஸ்டியூம்கள் கொண்டு அசின் ஆடியிருப்பார்னு நினைக்கிறேன். ///

இல்லங்க, இது ரகசியா, அதிசயா ன்னு ஐட்டம் நம்பராத்தான் இருக்கும். தெலுகு போக்கிரில அப்படித்தான் இருக்கு.

said...

//இது பற்றி இந்த வார விக்கி பசங்க பதிவைப் பாருங்கள்!! //

பார்க்கிறேன் இலவசம்.. வருகைக்கு நன்றி

said...

//நான் எழுத நினைத்ததை அப்படியே எழுதியிருக்கீங்க. அந்த ஜே ஜே 'மே மாதம்' 100% அப்டிதான் தோணுது..

//

ஓ..அப்படியா..நன்றிங்க ஜி

said...

//விமர்சனம் சூப்பர்.//

நன்றிங்க மை பிரண்ட்

//கார்த்திக், விஜய டி. ராஜேந்திரரின் வீராசாமி பாடலும் வெளியாகியாச்சு. அதுக்கும் ஒரு விமர்சனம் போட்டுடுங்க.. //

வீராசமியில் 14 பாடல்கள் மை பிரண்ட்.. அதுவும் விமர்சனம் எழுதும் அளவுக்கு பாடல்கள் நன்றாக இருப்பதாக தெரியவில்லை..

said...

//விமர்சனம் சூப்பர் கார்த்திக்.//
நன்றி அருண்

//மொதோ கமெண்டுக்கு சுடச்சுட பஜ்ஜி அனுப்புங்க... மழை பெய்யும்போது யூஸ் பண்ணிக்குறேன்//


இன்னும் பஜ்ஜியை விடல போல அருண்

said...

//அதனால பாட்டுலயாவது சூப்பர் ஸ்டார மாதிரி ட்ரை பண்றாங்க போல//

ரொம்ப கரீக்டா சொன்னேப்பா அருண்

said...

/இல்லங்க, இது ரகசியா, அதிசயா ன்னு ஐட்டம் நம்பராத்தான் இருக்கும். தெலுகு போக்கிரில அப்படித்தான் இருக்கு.
//

ஓ அப்படிய உதய்.. உங்கள் முதல் வருகைக்கு நன்றி உதய்

said...

விமர்சனம் அருமை, ஆனால் சில எழுத்து/வாக்கிய பிழைகள், பதிவிடும்முன் ஒரு முறை சரிபார்தல் நல்லது.

சில
//தரை தப்பட்டை மேளம்//
//ஒண்ணும் பெரிதாக எழுதுவதற்கு இதில் ஒன்றும். ரொம்பவும் //
//டோலு டோலு தான் அடிக்கிறான்
பாடியவர்கள் : ரஞ்சித், சுசிதா//

Anonymous said...

Heard only pirated CDs are out. Film audio has not been released officially. Even Vijay gets "appu"!

-kajan

said...

Mmm, konjam enna enna music instruments use panni irukaanga?nu solli irukalaam, though U don't know raagam thaalam, pallavi etc...


//கார்த்திக், விஜய டி. ராஜேந்திரரின் வீராசாமி பாடலும் வெளியாகியாச்சு. அதுக்கும் ஒரு விமர்சனம் போட்டுடுங்க..
//
This is the ultimate comedy. solla mudiyathu karthi post pottalum poduvaaN! :) LOL

said...

கார்த்திக் விமர்சனம் நன்றாக உள்ளது.
இன்னும் பாட்ட கோட்டவில்லை ஆனா எனக்கு என்னவே
விஜய்யின் அறிமுக பாடல் என்றால் அதற்கு சங்கர் மாகதேவன் தான் சரி.

said...

//வசந்த முல்லை போல வந்து ஆடிடும் வெண்புறா
//

பழைய பாட்டோட ரீமிக்ஸா??


//ராகம், தாளம், பல்லவின்னு //

அது தானமாம் கார்த்தி..விக்கிபசங்க சொல்றாங்க ;)

நான் இன்னும் பாடல்களைக் கேட்கல..கேட்டுப் பார்க்கிறேன் :)

Anonymous said...

super review kaarthik. thelivaaga ezudhi ulleergal. manisharam is a gr8 music director. avarudaya azagan paatu ellam arpudhamaaga irukkum.

said...

சூப்பர் தலைவரே.. அருமையான விமர்சனம். வசந்த முல்லையை தவிர அதிகம் எதிர்பார்க்கற மாதிரி ஒண்ணும் இல்லனு தோணுது உங்க விமர்சனத்த படிச்சா. பாடல்களை கேட்டுட்டு சொல்றேன்..

//பாடியிருக்கார் கார்த்திக்..

1- பூமிக்கு வெளிசமெல்லாம் (டிஷூம்)
2- சட்டுபுட்டுன்னு (நெஞ்சில் ஜில் ஜில்)
3- தலைநகரம் தீம் சோங்
(எனக்கு தெரிஞ்ச சில)//
கலக்கறிங்க my friend!

said...

தலீவரே இன்னைக்கு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுட்டு அபீட் ஆகறேன்
:-)

Anonymous said...

Is this movie a remake of Telugu Pokiri

Anonymous said...

ahaa..taknu ellar blogaiyum paarthu oru comemnt podalam enru paartha, unga blogla neriya padikanum... porumaiya... so meethi blog kellam vacation mudinju varugaiyil kandippa comments podaren..appadiya antha amaicharavai pathiyum parkaren..

Paatu vimarsanam super!

athu varai,
Happy Xmas and Advanced New year wishes!

Dreams

said...

//விமர்சனம் அருமை,//
நன்றிங்க சின்னக்குட்டி..


// ஆனால் சில எழுத்து/வாக்கிய பிழைகள், பதிவிடும்முன் ஒரு முறை சரிபார்தல் நல்லது.//
சின்னக்குட்டி, கட்டாயம் இனிமேல் பிழைகளை சரி பார்த்து பதிவிடுகிறேன்..

said...

//Heard only pirated CDs are out. Film audio has not been released officially. Even Vijay gets "appu"!//

அப்படியா கஜன்..

said...

//Mmm, konjam enna enna music instruments use panni irukaanga?nu solli irukalaam, though U don't know raagam thaalam, pallavi etc...//
அடுத்த முறை அதையும் முயற்சி செய்றேன், அம்பி

//This is the ultimate comedy. solla mudiyathu karthi post pottalum poduvaaN!//
14 பாட்டுக்கள் அம்பி..வாய்ப்பே இல்லை

said...

//கார்த்திக் விமர்சனம் நன்றாக உள்ளது. //

நன்றிங்க கோபிநாத்..
//இன்னும் பாட்ட கோட்டவில்லை ஆனா எனக்கு என்னவே
விஜய்யின் அறிமுக பாடல் என்றால் அதற்கு சங்கர் மாகதேவன் தான் சரி.//

நானும் இதையே தான் நினைத்தேன்

said...

//பழைய பாட்டோட ரீமிக்ஸா??//

இல்லைங்க கப்பி..புதுவித மெட்டு..நல்ல இருக்கு


//நான் இன்னும் பாடல்களைக் கேட்கல..கேட்டுப் பார்க்கிறேன்
//

கேட்டுட்டு சொல்லுங்க

said...

//super review kaarthik//

நன்றி கிட்டு

said...

paatellam nalla irukkura madhiriye padamum nalla irukkumnu nambuvom.

ottara padama illama odara padama irukkudhanu pakkanum.

said...

//சூப்பர் தலைவரே.. அருமையான விமர்சனம்.//
நன்றி ப்ரியா

//வசந்த முல்லையை தவிர அதிகம் எதிர்பார்க்கற மாதிரி ஒண்ணும் இல்லனு தோணுது உங்க விமர்சனத்த படிச்சா. பாடல்களை கேட்டுட்டு சொல்றேன்..
//
ஆமாம் ப்ரியா.. அந்த பாடல் தான் ஏதோ உருப்படியானதா இருக்கும்னு நினைக்கிறேன்

said...

//தலீவரே இன்னைக்கு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுட்டு அபீட் ஆகறேன்//

நாளைக்கு படிச்சுட்டு சொல்லுங்க ஷ்யாம்

said...

//Is this movie a remake of Telugu Pokiri //

அதே அதே மது

said...

//Paatu vimarsanam super!//
நன்றி ட்ரீம்ஸ்


//athu varai,
Happy Xmas and Advanced New year wishes!
//
வாழ்துக்களுக்கு நன்றி ட்ரீம்ஸ்.. உங்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

//ottara padama illama odara padama irukkudhanu pakkanum. //

Nallaa chonnapaa mahesh..

Thanks for first visit Mahesh

said...

//விஜய் படத்தின் பாடல்கள் என்றுமே நன்றாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் மக்களிடையே உண்டு. (புதிய கீதை போன்ற படங்களை தவிர்த்து பார்த்தால்) அந்த எண்ணத்தை பொய்யாக்கப் போவதில்லை என்று வந்திருக்கிறது மணிசர்மாவின் இசையில் போக்கிரி பாடல்கள்.. //

Vimarsanam nalla irukku. aana mela irukkara matter-um
//வசந்த முல்லை பாடலைத் தவிர இசை கணக்கில் வேற எதுவும் பெரிதாக சொல்வதற்கு இல்லை.. //

idhuvum match aagalaye...

said...

//
idhuvum match aagalaye... //

correct thaan senthil.. inimel paththukuren

Anonymous said...

"Dolu dolu" song will be a superhit like "kattip pidi kattip pidida" of Kushi.

said...

//Dolu dolu" song will be a superhit like "kattip pidi kattip pidida" of Kushi. //

அது தெலுங்கு படத்தில் அப்படியே இருக்குங்க அனான்..

said...

சேதுக்கரசி.. தவறுதலாக உங்கள் பின்னூட்டத்தை நிராகரித்துவிட்டேன்.. மன்னியுங்கள்..


எந்த ஆபாச வார்த்தைகளும் கலக்காமல் இருக்கும் சில பொங்கல் புது படங்களின் பாடல்கள் சில


ஆழ்வார் - சொல்லித்தரவா மற்றும் மயிலே மயிலே பாடல்கள்
போக்கிரி - டோலு டோலு தான் அடிக்கிறான்


அரசி, எனது வலையில் மாதம் வாரியாக நீங்கள் பார்க்கும் விதம் பக்கவாட்டில் எனது புகைபடத்தின் கீழே இருக்கிறதே..

said...

//தவறுதலாக உங்கள் பின்னூட்டத்தை நிராகரித்துவிட்டேன்.. மன்னியுங்கள்//

பொழச்சுப் போங்க :)) பாடல்களுக்கு நன்றி.

//எனது வலையில் மாதம் வாரியாக நீங்கள் பார்க்கும் விதம் பக்கவாட்டில் எனது புகைபடத்தின் கீழே இருக்கிறதே//

இல்லையே.. ஒரு கூகுள் தேடல் பெட்டி தான் தெரிகிறது, வேறொன்றும் தெரியவில்லை. அந்தத் தேடல் பெட்டியைக் கொண்டு தான் இப்பதிவைக் கண்டுபிடித்தேன்.