Friday, November 17, 2006

கிராமத்து மணம் கமழும் பருத்திவீரன் பாடல்கள்

பருத்தி வீரன்.. மௌனம் பேசியதே, ராம் படத்துக்கு பிறகு அமீர், சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து எடுக்கும் படம். முதன் முதலாய் கிராமத்து படத்துக்கு இசையமைச்சிருக்கார் யுவன்.. கார்த்திக்கு ஜோடி பிரியாமணி.. முதல்ல பாடல்கள் எப்படின்னு ஒரு ரவுண்டு பார்ப்போம்.

அறியாத வயசு புரியாத மனசு - இளையராஜா

இளையாராஜா இசையமைக்கும் படங்களில் இப்படியொரு பாடல் நிச்சயமா இருக்கும். காதலர்கள் இருவரும் ஆடி ஓடி பாடி..உக்கார்ந்து நடந்து காதல் செய்ய..பிண்ணனில பாடல் ஓடும்..இளையாராஜா கொஞ்சம் இந்த பாட்டை வித்தியாசமா பாடி இருக்க மாதிரி இருக்கு.. சில இடங்களில் ஹஸ்கி குரலில் பாடுவது அவருக்கே புதுசா இருக்கும்.. கொஞ்ச நாள் நம்மூர் FMல கேக்கப்படுற பாட்டா இந்த பாடல் இருக்கும்..

ஏலே ஏலேலே - யுவன் க்ரிஷ்ணா, ராஜ், மாணிக்கவினாயகம்

இது ஒரு டூயட் பாட்டு.. பாடல்களின் வரிகள் ரொம்ப இயல்பா இருக்கு.. மிகவும் சாதாரண வரிகள் தான்.. வார்த்தைகள் தான்.. ஆனால் உணர்வுகளை பிரதிபலிக்கிற பாட்டா இருக்கும். ஆனா என்ன தான் கிராமத்து பாடலா இருந்தாலும் கம்பியூட்டர்ல மெட்டுக்கள் போட்டது நல்லாவே தெரியுது. ஆனா காதுக்கு சுகமாத் தான் இருக்கு.

நாதஸ்வரம் - (பாட்டு இல்ல..இசை மட்டுமே) எஸ்.ஆர். சண்முக சுந்தரம் குரூப்

யுவன் படங்கள்ல இப்போவெல்லாம் தீம் மியூசிக் இருக்கும். இது கிராமத்து படம்ங்கிறதால தீம் இசையும் அதுக்கு ஏத்த மாதிரி.. டூயட்ல ஏ.ஆர்.ரகுமான் சக்ஸ்ஸோபோன் மட்டுமே வச்சு ஒரு தீம் மியூசிக் போட்ட மாதிரி இதுல நாதஸ்வரம்.. படத்துல நாதஸ்வரத்துக்கு ஏதும் மேட்டர் இருக்குமான்னு தெரில.. ஆனா நல்ல வித்தியாசமான முயற்சி... வரவேற்கலாம்.. கொஞ்ச நாள் கழிச்சு "பருத்திவீரன் புகழ் சண்முக சுந்தரம் குரூப் நாதஸ்வரத்தில்"னு நீங்க உங்க ஊர்ல கல்யாணம் கச்சேரி போஸ்டர்கள் பாக்கலாம்.

சரி கம பத - மதுமிதா, S. சரோஜா, அமீர்
இது ஒரு சிறிய பாடல். இது ஹீரோயின் ஊருக்குள்ள தன்னோட் பாட்டி கூட வம்பிழுத்து பாடுற பாட்டுன்னு நினைக்கிறேன். நல்லா எடுத்திருந்தா நிச்சயம் ரசிக்கிற மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா பாட்டுல சொல்ற மாதிரி ரொம்ப பெருசா ஏதும் இல்ல

டங்கா டுங்கா - பாண்டி, லக்ஷ்மி, ராஜா, சரோஜா

இது தான் படத்தோட ஹை-லைட்டான பாட்டு.. அப்படியே மதுரை ஏரியாவுல நடக்குற திருவிழா பாட்டு.. இனிமே அந்த பக்கம் நடக்குற எல்லா திருவிழாவலையும் இந்த பாட்டு நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு ரொம்ப யதார்த்தமா இருக்கு.. பாடுனவங்க எல்லோரும் புதுசு.. கரகாட்டத்துல பாடுறவங்களையே பாடவச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். இடை இடையே வர்ற விசில் சத்தமும் வசனங்களும் பாட்டுக்கு இன்னும் உயிரூட்டுவதாகவே இருக்கு.

ஊரோரம் புளியமரம் - பாண்டி, லக்ஷ்மி, ராஜா, கலா

இதுவும் போன பாட்டு மாதிரியே தான். விஜயலக்க்ஷி நவனீதகிருஷ்ணன் பாட்டோட ஆரம்பிச்சு..அப்படியே கரகாட்ட மெட்டுக்கு அழகா உங்களை கூட்டிட்டு போயிருப்பார் யுவன்கரகாட்டதுல எந்த அளவுக்கு இரட்டை அர்த்த வசங்கள் இருக்கும்னு நேர்லயே பாத்து இருக்கிறேன்.. போன பாட்டுலையும் இதுலையும் கரகாட்டதோட இணைப்பு ரொம்ப இருக்கு.. இந்த ரெண்டு பாட்டு எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்குமான்னு நினைக்கிறேன்..

பாடல்கள் எல்லாமே நல்லா இருக்கு. ஆன ஆஹோ, ஓஹோன்னு சொல்ல முடியாது.. யுவன் இன்னும் நல்லாவே போட்டிருக்கலாம்னு நினைக்கிறேன்.. ஆனா முதல் கிராமத்து படங்குறத வச்சு பாத்த நல்ல முயற்சி நல்ல பாடல்கள்னு தான் நான் சொல்வேன்.. ஆனா ஒவ்வொரும் பாட்டுலையும் அந்த மண்ணோட வாசம் வர்ற மாதிரி அமைச்சிருக்கிறது பாட்டுகளுக்கு பலம். ஆனா கிராமத்து வாத்தியங்கள் உறுமி, தப்பு போன்றவைகள் ரொம்ப பயன்படுத்தலையோன்னு ஒரு குறை இருக்கத்தான் செய்யுது..

ஆனா கொஞ்ச நாள் நீங்க எந்த கிராமத்துக்குள்ளயும் நுழைஞ்சா இந்த பாடல்களை கேக்கலாம்னு நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைகிறீங்க..கேட்டுட்டு சொல்லுங்க..

(நமக்கு ராகம், தாளம், பல்லவின்னு ரொம்ப எல்லாம் தெரியாது.. மனசுக்கு கேட்டவுடன் புடிச்சிருக்கா.. அது தான் மேட்டர்..அத மனசுல வச்சுத்தான் இந்த விமர்சனம் எழுதி இருக்கேன்)

32 பின்னூட்டங்கள்:

said...

Vimarsaanam suuper maams....Nethi dhaan naan pattu ellam download panninen...innum ketkala...kettutu solren....mostly neenga solradhoda othu pogumnu nenaikaren :))

said...

//நமக்கு ராகம், தாளம், பல்லவின்னு ரொம்ப எல்லாம் தெரியாது.. மனசுக்கு கேட்டவுடன் புடிச்சிருக்கா.. அது தான் மேட்டர்.//....adhe matter dhaan ingayum...raagam thaalam ellam therinja paata rasikaradhu poyidum....avan edachum thappu panni irukaanaanu theda arambichiduvom.....theriyaadha varaikum nalladhudhaan maams :))

Anonymous said...

நான் இந்த பாடல்களை இப்பதான் download செய்தேன். கேட்ட முதல் தடவையிலேயே ரிபீட்டுன்னு மனசு சொல்லிடுச்சு. இதோ, இப்பொ இரண்டாம் தடவை கேட்க்க போறேன். :D

said...

மாப்பி, இன்னிக்கே பாட்டை தரையிறக்கம் செய்து கேட்டு விட்டு சொல்கிறேன்.....

said...

மாப்பி, போன பதிவுல யாரோ இரண்டு பெயரை பற்றி சொல்லுறேன் சொல்லிட்டு இப்படி சொல்லாம எஸ்கேப் ஆயிட்ட பாத்தியா நீ?

said...

//Vimarsaanam suuper maams....Nethi dhaan naan pattu ellam download panninen...innum ketkala...kettutu solren....mostly neenga solradhoda othu pogumnu nenaikaren //

O..thanks mapla.. kettavudane en oorukke pona maathiri irunthathu mapla

said...

//avan edachum thappu panni irukaanaanu theda arambichiduvom.....theriyaadha varaikum nalladhudhaan maams //

:-)) athuvum sari thaan mapla

said...

//நான் இந்த பாடல்களை இப்பதான் download செய்தேன். கேட்ட முதல் தடவையிலேயே ரிபீட்டுன்னு மனசு சொல்லிடுச்சு. இதோ, இப்பொ இரண்டாம் தடவை கேட்க்க போறேன்//
மை பிரண்ட், இரண்டாம் முறையா.. நிச்சயம் கேக்கலாம்.. ஆனால் இன்னும் கொஞ்சம் நல்லா அடிச்சிருக்கலாமோன்னு தோணுது, இன்னொரு தடவ கேட்டா..

said...

/மாப்பி, இன்னிக்கே பாட்டை தரையிறக்கம் செய்து கேட்டு விட்டு சொல்கிறேன்.....

//

கேட்டுட்டு சொல்லுங்க சிவா மாம்ஸ்

said...

//மாப்பி, போன பதிவுல யாரோ இரண்டு பெயரை பற்றி சொல்லுறேன் சொல்லிட்டு இப்படி சொல்லாம எஸ்கேப் ஆயிட்ட பாத்தியா நீ?

//
எஸ்கேப் எல்லாம் இல்ல மாம்ஸ்.. அது கொஞ்சம் நீண்ட பதிவு..அது தான் எழுதிகிட்டே இருகேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..

said...

//நமக்கு ராகம், தாளம், பல்லவின்னு ரொம்ப எல்லாம் தெரியாது.. மனசுக்கு கேட்டவுடன் புடிச்சிருக்கா.//

அது எல்லாம் தெரிஞ்சு என்ன செய்யப் போறோம் கார்த்திக்.. மனசுதான சொல்லணும்.. இத்தனை வருஷமா பாட்டுக் கேட்கறேன்.. யாருக்குத் தெரியும், எந்தப் பாட்டு என்ன ராகம்னு..

மனசில நின்னா அதுதான் பாட்டு.. நமக்கு அவ்வளவு தான் தெரியும்..

said...

பாட்ட பிரிச்சு மேஞ்சிருக்கீங்க கார்த்தி... சூப்பர் Review :)

Anonymous said...

naanum paattu release aana udane kettutten karthi.. neenga koduthurukkara vimarsanam romba correct..
yuvanoda mudhal gramathu padangaradhala, avaroda muyarchiya nichayam paaraattathaan vendum...

Enna irundhaalum sollunga, graamathu paattunna, adhukku ore oru raaja..adhuvum illayaraaja thaan.. no comparisons..

sundar :)

said...

கார்த்தி:
இப்பதைக்கு பிரசண்ட்.. நானும் பாட்டு கேட்டுவிட்டு கருத்துகளை பரிமாறி கொள்கிறேன்ன்ன்ன்..

said...

சூப்பர் விமர்சனம் கார்த்திக். நான் இன்னும் பாடல்கள் கேக்கல. கேட்டுட்டு சொல்றேன்.

//நமக்கு ராகம், தாளம், பல்லவின்னு ரொம்ப எல்லாம் தெரியாது.. மனசுக்கு கேட்டவுடன் புடிச்சிருக்கா.. அது தான் மேட்டர்..அத மனசுல வச்சுத்தான் இந்த விமர்சனம் எழுதி இருக்கேன்//

அதானே வேணும். எல்லாரும் அப்படி தான்.

said...

////நமக்கு ராகம், தாளம், பல்லவின்னு ரொம்ப எல்லாம் தெரியாது.. மனசுக்கு கேட்டவுடன் புடிச்சிருக்கா.. அது தான் மேட்டர்.....நீங்க என்ன நினைகிறீங்க..கேட்டுட்டு சொல்லுங்க..//
yengalukkum adhethan.
kaetutu sollrom.--SKM

said...

/மனசில நின்னா அதுதான் பாட்டு.. நமக்கு அவ்வளவு தான் தெரியும்.. //

ஆமாங்க கணேசன்.. மனசுல நிக்கணும்.. எல்லோருடைய வாயும் அதை முணுணுக்கனும்.. அது தான் ஒரு பாட்டோட வெற்றி

said...

//பாட்ட பிரிச்சு மேஞ்சிருக்கீங்க கார்த்தி... சூப்பர் Review//

ஓ..நன்றி அருண்..

said...

//naanum paattu release aana udane kettutten karthi.. neenga koduthurukkara vimarsanam romba correct..
yuvanoda mudhal gramathu padangaradhala, avaroda muyarchiya nichayam paaraattathaan vendum...//

Oh..thanks Sundar..

//Enna irundhaalum sollunga, graamathu paattunna, adhukku ore oru raaja..adhuvum illayaraaja thaan.. no comparisons..
//

ithu pointu.. IR ai adichukka ale illaii..intha vishayaththula

said...

//நானும் பாட்டு கேட்டுவிட்டு கருத்துகளை பரிமாறி கொள்கிறேன்ன்ன்ன்.. //
கட்டாயம் கேட்டுட்டு சொல்லுங்க மணி

said...

//சூப்பர் விமர்சனம் கார்த்திக். நான் இன்னும் பாடல்கள் கேக்கல. கேட்டுட்டு சொல்றேன். //

நன்றி ப்ரியா.. கட்டாயம் கேட்டுட்டு சொல்லுங்க ப்ரியா

said...

//yengalukkum adhethan.
kaetutu sollrom//

saringa SKM.. sonna maathiri paattai kettuttu sollunga.

said...

நானும் கேட்டேன் இந்தப் பாடல்களை.

எங்க கோபாலுக்கு இந்தவகைப் பாட்டுக்கள் கட்டாயம் பிடிக்கும்.
என்னதான் சொல்லுங்க , 'ஆளு மருதைக்காரனாச்சே'!

said...

துளசி... கட்டாயம் உங்க மதுரைக்கார கோபாலுக்கு பாடல்கள் நிச்சயம் பிடிக்கும்

said...

where to download these songs ?

said...

Ravi,
you can download from www.tamilmp3songs.com

Anonymous said...

can you upload it in www.evilshare.com or some megaupload sites? so that I can download ?? the site you are giving is not working.

said...

Anon, Sorry..I gave wrong URL. Get from http://www.tamilmp3world.com/

Anonymous said...

neenga yaen hindu reviewku potiya karthik reviews nu oru paper poda koodadhu..

paravayilla nallave vimarsikareenga..

said...

Thanks "one among u"

Pandian said...

To download High Quality Tamil MP3 Songs, visit www.tamilnapster.com

Pandian.

said...

மிக நல்ல பதிவு கார்த்திக், அப்படியே எனது பதிவையும் பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.

http://naanengiranaan.blogspot.com/2006/11/blog-post_7547.html

http://naanengiranaan.blogspot.com/2006/11/blog-post_20.html