Monday, November 06, 2006

ஒரு கலக்கலான சந்திப்பு

புதுசா டெக்னிக்கல் தேனப்பனும் பாலிடிக்ஸ் பார்வதியும் வரப்போறாங்கன்னவுடனே சிட்டுக்குருவிக்கு தலகால் புரியல.. அவங்களுக்கு கொடுக்குறதுகுன்னே தனித்தனியா கிப்ட் வாங்கி வந்திருக்கு.. எவ்ளோ..நாளா நான் இங்க இருக்கேன்.. எனக்கு ஒரு குண்டூசி கூட வாங்கிட்டு வரலையேன்னு கீதா மேடம் மாதிரி மனசுகுள்ள ஒரே புலம்பல்.. அப்புறம் நீங்க சொன்னபேரை எல்லாம் சொல்லி, இன்னும் ஏன் பேரை நீ செலெக்ட் பண்ணலைன்னு கேட்டா அதுக்கு சர்ருன்னு அந்த சின்ன மூக்குல கோபம் வந்து உக்கார்ந்துகிச்சு. ஏன்னு கேட்ட டெக்னிக்கல் தேனப்பன் பாலிடிக்ஸ் பார்வதி மாதிரி தனக்கும் ஒரு ரிதமா பேர் வேணும்னு சண்டை.. எப்பா சாமி..உன்னை சமாதானப்படுத்த முடியாது..அதோ அவங்க ரெண்டு பேருமே வந்துட்டாங்க..முதல்ல இந்த மீட்டிங் முடியட்டும்..அப்புறம் உன் சண்டையை வச்சுக்கலாம்னு சமாதானப்படுத்திட்டு, அவங்க ரெண்டு பேரும் உள்ளே வர்றதுக்காக கதவை திறந்துவிட்டேன்.

வாங்க தேனப்பன் சார்..வாங்க மேடம்

ஹிம்..நல்லா இருக்கீங்களா ரெண்டு பேரும்..எங்க..எங்க நம்ம சிட்டுக்குருவியை காணோம்..னு தேனப்பன் கேக்க மூணு பேரும் சேர்ந்து சிட்டுகுருவியை தேடினா அது ஷோபாவுக்கு பின்னாடி போய் ஒளிஞ்சுகிடக்கு..என்னான்னு கேட்டா வெக்கமாம்..அடடே..சிட்டுக்குருவி சொல்லவே இல்லை..


வந்தவங்களுக்கு ஜில்லுன்னு ஜூஸ் கொடுத்துட்டு அப்படியே அரட்டை கச்சேரியை ஆரம்பித்தோம்.

வைகோவையே மிஞ்சப் போறார்..சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.. தேர்தலுக்கு முன்னடி, அதிமுகவுல சேர்ந்தவர், புது படம் ஷூடிங் கணக்கா, மேடைக்கு மேடை கருணாநிதியையும், தயாநிதி மாறனையும் சகட்டுமேனிக்கு பேசினார். ஆனா அதிமுக பெரிய அளவுல சீட் பிடிக்காததால, கொஞ்ச நாள் அடக்கி வாசிச்சார். இந்தப்பக்கம் தொடர்ந்து எந்த பிரச்சனையும் இல்லாம சன் டிவில தன் மனைவி ராதிகா புரோகிராம் பண்ண கடுப்பான அதிமுக ஜெயா டிவிக்கு அழைக்க அவரும் மறுக்க, கட்சியிலிருந்து தூக்கப்பட்டார். அதற்கும் மவுனம் காத்த சரத் உள்ளச்சியில் அதிமுக சிதரிப்போக..அதிமுகவிலும் எந்த பதவியும் கிடைக்காமல் போக மனம் வெதும்பினார். தீபாவளிக்கு வந்த தனது 100வது படம் தலைமகனும் படுத்துவிட.. இதுதான் சமயம் என்று அதிமுகவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். தனியாக கட்சி ஆரம்பிப்பதா இல்லை கேப்டனோட கைகோர்ப்பதா என்று அடுத்த வாரம் சொல்லப்போறாராம்..என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார் பொலிடிக்ஸ் பார்வதி..

மேடம் அது சினிமாக்காரர் நியுஸ் நான்தான் சொல்லனும்..நீங்க எப்படி சொல்லலாம்னு சிட்டுக்குருவி சிணுங்கிகொண்டே வழக்கம் போல செய்திகளை கொட்ட ஆரம்பித்தது.

நியுஸ் ஒண்ணு..சிம்புவின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட வல்லவனின் மோசமான வசூலால் அதன் தயாரிப்பாளர் தேனப்பன் மிகவும் அதிர்ச்சியுடன், துவண்டு போயிருக்கிறார். இதனால் ஏற்கனவே இழுத்து கொண்டிருக்கும் பாலாவின் நான் கடவுள் கிடப்பில் போடப்படும் என்று தெரிகிறது. தங்களது தலயை பணம் கேட்டு மிரட்டிய பாலா தேனப்பனின் நிலைமை கண்டு அஜித் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் இருப்பதாக தெரிகிறது. வல்லவனின் கதை சிம்பு வாழ்கை கதை என்றும் சில பேர் சொல்லிவருகின்றனர். அதுவும் அந்த பள்ளி காச்சிகளை பார்த்தால் ரஜினியின் மகளை ஞாபகம் வைத்து எடுத்திருப்பதாக தெரிகிறது..வசனங்களை பார்த்தால் உண்மையோ என்றும் தோன்றுகிறது.. உண்மையா சிம்பு..

நியுஸ் ரெண்டு..பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த அஜித்தின் ஆழ்வார், வரலாறின் வசூலை கண்டு முன்னதாகவே, டிசம்பர் மாதம் 15-இல் வெளிவருகிறது. பொங்கலுக்கும் நிறைய படங்கள் வெளியாகி வசூலை பாதிக்கும் என்பதால், முன்னமே திரையிட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் முடிவெடுத்துள்ளார். இப்போது ஆழ்வாரின் க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நியுஸ் நம்பர் மூன்று..சர்வம் என்றொரு படம் முதலில் சூர்யாவின் சொந்த நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக விஷ்ணுவர்த்தனால் எடுக்கப்படுவதாக இருந்தது. சில்லுன்னு ஒரு காதல் தோல்விக்கு பிறகு, அதை கைவிட்டுவிட்டதாக டைரக்டர் விஷ்ணுவர்த்தன் பத்திரிகைகளுக்கு செய்தி தந்தார். மறுபடியும் ஒரு வாரத்துக்குள் இருவரும் சேர்ந்து அந்த படத்தை மறுபடியும் வேறு ஒரு தயாரிப்பாளரை கொண்டு எடுக்கப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் மறுபடியும் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டதாக இரு நாட்களுக்கு முன்னால் கூறியுள்ளனர். என்னாச்சு உண்மயில் இவர்கள் இருவருக்கிடையே.. ஏன் இந்த குழப்பம் சூர்யா.. இன்னும் கல்யாண மயக்கம் தீரவில்லையோ சூர்யாவுக்கு..

இப்போது கிடைத்த தகவல் படி, சூர்யா கௌதமன் இயக்கதில் உடல் பொருள் ஆவி என்னும் படத்தில் நடிக்கப் போகிறார். இப்போது சரத்-ஜோதிகா வைத்து தான் எடுத்து வரும் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்துக்கு பிறகு இந்த புதிய படம் தொடங்க இருக்கிறது.

செய்தி நம்பர் நாலு.. ஹிந்தியில கஜினி எடுக்கிறப்போ அங்கேயும் கல்பனா கதாபாத்திரத்துல நடிக்க தன்னை தான் கூப்பிடுவாங்கன்னு இருந்த அசின் கனவுல மண்ணை போட்டுட்டாங்க.. அமீர்கான் ஜோடியா நடிக்க போறது பிரியாங்க சோப்ரா...

செய்தி நம்பர் ஐந்து..வல்லவனுக்கும் வரலாறுக்கும் சத்யம் தியேட்டரில் தீபாவளி முதல் ஆளுக்கு இரண்டு காட்சிகள் என்று முடிவானது. சத்யத்துல எல்லா காட்சிகளும் தன்னுடைய படமே ஓடும்..வரலாறு ஊத்திக்கும் என்று தனது நண்பர்களிடம் சொல்லி கனவு கண்டுகொண்டிருந்த சிம்பு, சத்யத்தில் இருந்து வல்லவனை தூக்கியதில் இப்போது அதிர்ச்சியில் இருக்கிறார்.

ஒன்று..இரண்டு..மூன்று என சினிமா செய்திகளை சொன்ன சிட்டுக்குருவி, ரவுண்டு நெக் T-ஷர்டா இருந்தாலும் காலர் இருக்கும் நினைப்பில் தூக்கிவிட்டுக்கொண்டது..

சிட்டுக்குருவியின் ஷேஷ்டையை பார்த்து சிரித்துகொண்டு இருந்த டெக்னிக்கல் கோவிந்தன்.. இன்னைக்கு நம்ம பிளாக் மக்களுக்கு பயன்படுற மாதிரி ஒரு செய்தி சொல்றேன்.. டெக்னோரடி என்னும் ஒரு வலைதளத்தில் உங்க பிளாக் பத்தி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இப்படித்தான் கார்த்தியோட கனவுகளை பத்தி இங்கே சுட்டி இருப்பதை நான் தெரிந்து கொண்டேன்..

இப்படி எல்லோரும் பேசி முடிச்ச பிறகு,வீட்ல பண்ண பிரியாணியை சாப்பிட்டு கிளம்பினாங்க. அதுக்குள்ள சிட்டுக்குருவி பாலிடிக்ஸ் பார்வதியோட பெட்டாகி, லேடிஸ்க்கு என்னன்ன பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டது, அதோட லவ்வருக்கு வாங்கித்தர.

முதல் தடவைங்கிறதால தான் மூணு பேரும் ஒண்ணா வந்திருக்காங்க.. இனிமேல் தனித்தனியாத்தான் வருவாங்க..

பாலிடிக்ஸ் பார்வதி பேக்ஸ் மூலம் அனுப்பின செய்தி

இன்னும் பதினைந்து நாளில் விஜயகாந்தின் திருமண மண்டபம் நெடுஞ்சாலைதுறையினால் இடிக்கப்படும் என்று அதற்கான மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறி இருக்கிறார். கோயம்பெடு அருகே கட்டப்படவுள்ள அடுக்கு மேம்பாலத்திற்காக இடிக்கப்படும் 150 கட்டிடங்களில் அவருடைய திருமண மண்டபமும் ஒன்று. இதனை பத்திரிக்கைகள் ஊதிப் பெரிதாக்காமல் இருந்தா சரி.

15 பின்னூட்டங்கள்:

said...

ai naan phirstu... :-)

said...

romba perisa iruku kaalaila padichitu meethi comment podaren
:-)

said...

muthalla vanthu comment pOttathukku thanks shyaam..

UPS la Neenga romba Naala kEttathai anuppi vachchurukken..

said...

chiddukkuruvi, Politics Parvathi & Technical Govindhan.. 3 in 1 virunthu inraikku.. :D

said...

சிட்டுக்குருவி பேரே நல்லாத் தான் இருக்கு, அதெல்லாம் மாத்த வேணாம். மத்தபடி புலம்பல்னு சொன்னதைத் தாயுள்ளத்தோடு மன்னிச்சு விட்டுடறேன். :D

Anonymous said...

kalakkal karthi.. cine bits and arasiyal seidhigal ellam migavum arumai..
ippadikku sundar :)

C.M.HANIFF said...

Thavaraamal ungal pathivugalai padithu varugiren, nalla rasikumbadi eshuti irukeenga, chittu kuruvikku ean "CINEMA CHITTU "nnu per vaika koodathu , continue ;)

said...

karthik,
kalakkal... inda maathiri news ellam kekkave mudiyaame kashta pattutu irunden.. romba suvaya kudukkureenga.. super :)

(1)
sarathkumar thanni katchiya?

punnaku vikkiravan podalanga vikkuravan ellam tholiladibar aagura maathiriya?

(2)
vallavan dialogues paatha apdi thaan theriyudu... thalaivar ponnayum maapillayum thaakuran

//nee ambani ponna kalyaanam pannanumnu aasapadre.. naan ambaniyaagave aaganumnu aasapadren...//

unga aasaiku oru alave illaya?

(3)
hehe... thalaivi asinoda nadikka anda vetti paya Amir khanukku kuduthu vaikkale.. nalladu thaane :)

-Arun

said...

கலக்கறாங்க டெக்னிக்கல் தேனப்பனும் பாலிடிக்ஸ் பார்வதியும். எல்லா news ம் சூப்பரோ சூப்பர்.

சிட்டுக்குருவி எப்பவும் போல ஜமாய்க்குது.

said...

//chiddukkuruvi, Politics Parvathi & Technical Govindhan.. 3 in 1 virunthu inraikku.. //

virunthu eppadi irunthathu my friend.. you are also started to put cine news.. good to hear

said...

//சிட்டுக்குருவி பேரே நல்லாத் தான் இருக்கு, அதெல்லாம் மாத்த வேணாம். மத்தபடி புலம்பல்னு சொன்னதைத் தாயுள்ளத்தோடு மன்னிச்சு விட்டுடறேன்//

நானும் இதையே தான் நினச்சேன் மேடம்..

மன்னிப்பா..ஹிம்ம்.. நன்றிங்க மேடம்

said...

//kalakkal karthi.. cine bits and arasiyal seidhigal ellam migavum arumai..
ippadikku sundar :) //

Thanks Sundar

said...

//Thavaraamal ungal pathivugalai padithu varugiren, nalla rasikumbadi eshuti irukeenga, chittu kuruvikku ean "CINEMA CHITTU "nnu per vaika koodathu , continue ;) //

Haniff.. ungakalai maathiri friends thodarNthu padichchu pOduRa comments thaan unakku energy tonic.. Thanks haniff

said...

//hehe... thalaivi asinoda nadikka anda vetti paya Amir khanukku kuduthu vaikkale.. nalladu thaane //

I too felt the same Arun :-)

said...

//கலக்கறாங்க டெக்னிக்கல் தேனப்பனும் பாலிடிக்ஸ் பார்வதியும். எல்லா news ம் சூப்பரோ சூப்பர்.

சிட்டுக்குருவி எப்பவும் போல ஜமாய்க்குது.//

ப்ரியா.. நன்றிங்க பிரியா..

என்னாச்சு மாப்பிள்ளை பாக்கும் படலம்