Thursday, November 02, 2006

இசைபுயலா மறுபடியும் வருவாரா ஏ ஆர் ரகுமான்

ஹாரிஸ் ஜெயராஜ் தான் இப்போதைய தமிழ் சினிமாவின் இசையுலக மன்னன். போன வருஷம் கஜினி பாடல்களை முண்முணுக்க வைத்தவர், இந்த வருடம் பார்த்த முதல் நாளேன்னு பாட வைத்திருக்கிறார். இவருடைய பாடல்கள் தான் மியுசிக் கடைகளிலும் நன்றாக விற்பனை ஆகிறது. இவருடைய இசையும் படத்துக்கு படம் புதுசாகவும் இளமையாகவும் இருக்கிறது. இந்த வருடத்தில் யுவன்சங்கர் பாடல்களும் அந்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. போட்டிக்கு ஏ ஆர் ரகுமானும் இல்லை..

மிகப் பெரிய அளவில் பரபரப்பாய் விளம்பரம் செய்யப்பட்ட, ஏ ஆர் ரகுமானின் சமீபத்திய சில்லுன்னு ஒரு காதலும், பாடல்கள் சுமாராகவே இருந்தன. ஏ ஆர் ரகுமானின் பழைய இசை வேகம் இதில் இல்லை என்றே சொல்லலாம். அதுவும் சில்லுன்னு ஒரு காதல் நன்றாக ஓடாததால் கேசட் சிடி விற்பனையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பெயர் மாற்றம் செய்யப்பட்டு, எட்டாவது உலக அதிசயம் என்று விளம்பரம் செய்யப்பட்ட வரலாறு பாடல்களும் பழைய ஏ ஆர் ரகுமானின் ஸ்டைலில் இல்லை. ஏ ஆர் ரகுமானால் மட்டுமே ஓடிய படங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் இப்போது அவராலும் தாக்குபிடிக்க முடியவில்லையோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரத் தொடங்கிவிட்டது.

இன்டர்நெட்டில் பாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், கேசட் சிடி விற்பனை தான் இசை அமைப்பாளரின் திறமையை நிர்ணயிக்கும் ஒரு சக்தி. ஆனால் சமீபத்திய ஏ ஆர் ரகுமான் பாடல்கள் (ரங் தே பசந்தி தவிர) அந்த அளவுக்கு விற்கவில்லை என்பது மறுக்கமுடியாத மறைக்கமுடியாத உண்மை.

அதுவும் இல்லாமல், இப்போது ஏ ஆர் ரகுமானை பற்றிய புதிய விஷயத்தை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அது ஏ ஆர் ரகுமான் இசையமைத்த படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை என்பதே. மொத்ததில் எடுத்துகொண்டால் சொற்ப படங்களே வசூலை குவித்து இருக்கின்றன என்று பட்டியல் வேறு இடுகிறார்கள் இவர்கள். இது எப்படி என்றால், கஷ்டப்பட்டு கிரிக்கெட்டில் டெண்டுல்கர் நூறு ரன்களை அடிக்க, மற்ற எவரும் விளையாடாமல் இந்தியா தோற்றுவிட்டால், டெண்டுல்கர் விளையாடி இதுவரை இந்திய ஜெயித்தது சில போட்டிகள் தான் என்று குறை சொன்ன கதை போலிருக்கிறது. பாடல்களை நன்றாக கொடுப்பது மட்டுமே ஏ ஆர் ரகுமானால் முடியும். படம் ஓடாததற்கு டைரக்டர் முதல் மற்றவர்கள் தான் காரணம். அதற்கு ஏ ஆர் ஆர் என்ன செய்வார் பாவம். ஒழுங்காக வேலை வாங்காதது அந்த டைரெக்டர் தப்பு தான். இளையராஜாவும் தோல்வி படங்கள் கொடுத்ததுண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

அ..ஆ.., ஆயுத எழுத்து, கண்களால் கைது செய், பாய்ஸ் போன்ற படங்கள் ஓடாததற்க்கு ஏ ஆர் ஆர் என்ன செய்வார். இந்த படங்களின் பாடல்கள் நன்றாகவே இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உதயா, பரசுராம், அல்லி அர்ஜூனா போன்ற சில படங்களில் ஏ ஆர் ரகுமானின் இசையும் சொல்லிகொள்ளும் படியாக இருந்ததில்லை. என்னை பொறுத்தவரை எதுவுமே இசையமைப்பாளரிடம் கிடையது. அந்த படத்தின் டைரக்டரை பொறுத்தது. மணிரத்னதிடம் எந்த மியுசிக் டைரக்டர் வேண்டுமானாலும் ஹிட் தரலாம். ஏனென்றால் அப்படி அவர் வேலைவாங்குவார். இதுவரை வெளிவந்த எந்த மணிரத்னதோட படத்தின் பாடல்களும் சோடை போனதில்லை.

ஏதோ இப்போது ஏ ஆர் ரகுமானால் தமிழில் நிறைய கவனம் செலுத்தமுடிய வில்லை. ஆனால் இனி வரும் படங்கள் அவரின் இசை புயலோடு வரப்போகிறது.. அப்போது இந்த மாதிரி புழுதிகளும் பழிமொழிகளும் பறந்து விடும் என்பது மட்டும் உண்மை.

ஏ ஆர் ஆரின் அடுத்த படைப்புகள்...

1. மணிரத்னத்தோட குரு
2. ஏவிஎம், ரஜினி, ஷங்கர் கூட்டணயில் சிவாஜி
3. கலைபுலி தாணு தயாரிப்பில், அவர் மகனின் இயக்கத்தில், பாக்யராஜ் மகன் சாந்தனு நடிக்கும் சக்கரகட்டி
4. விஜய் நடிக்கும் அழகிய தமிழ் மகன்

புயல் இசையாய் வரும்.. நம் மனதை நிச்சயம் கொள்ளை கொள்ளும்..

20 பின்னூட்டங்கள்:

said...

//ஹாரிஸ் ஜெயராஜ் தான் இப்போதைய தமிழ் சினிமாவின் இசையுலக மன்னன். போன வருஷம் கஜினி பாடல்களை முண்முணுக்க வைத்தவர், இந்த வருடம் பார்த்த முதல் நாளேன்னு பாட வைத்திருக்கிறார்.//
ஆக வருஷத்துக்கு இரண்டு பாடல்கள் தாம் என்று வைத்துக் கொள்ளலாமா?

என்னைப் பொருத்த வரை ஹாரிஸ் ஜெயராஜை கம்பேர் செய்தால் யுவன் எவ்வளவோ மேல். காரணம்,
* வருடத்திற்கு ஓரிரு படங்கள் மட்டும் செய்து, அதை க்வாலிட்டியாக செய்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. (இது ஒரு ட்ரிக் கூட).
* ஒரு பாடலுக்கு சில மாதங்கள் எடுத்துக் கொண்டு fine tune செய்து ஹிட் செய்வது சுலபமான வழி.
* ஹாரிஸ் ஜெயராஜிடம் வெரைட்டி இல்லை. ஒரு சில ட்யூன்களை வைத்துக் கொண்டு ஓட்டுவது. "சுட்டும் விழிச் சுடரே" தான் "பார்த்த முதல் நாளே".
மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் எல்லா படங்களின் இசையும் ஒரே சாயலில் இருக்கும்.
* யுவன் காப்பி அடித்தாலும் தெரியாதவாறு இருக்கும். உதா, "பூங்காற்றிலே" தான் "முன் பனியா".
* பின்னனி இசையை பொருத்தவரையும் ஹாரிஸ் ஜெயராஜிடம் வெரைட்டி இருக்காது. கஜினியும் அந்நியனும் ஒரே மாதிரியான பின்னனி இசை கொண்டவை. ஆனால், யுவன் அப்படியில்லை. புதுப்பேட்டையில் அவன் பின்னனி இசையில் பிரமாதப்படுத்தியிருப்பார்.

said...

Just like Sachin silences his critics with his bat, ARR will silence his critics with his forthcoming music releases,esp in GURU. I am confident in this.

said...

I don't know why ARR tries to experiment a lot with the tunes. This experimentation comes with copying other tunes. I have myself observed and heard the tunes which are similar to English tunes....ARR come bak to your original form...

Karthik...go to the comments section in your laptop article...I have posted the actual rate of the laptop model which you bought.

said...

கஷ்டப்பட்டு கிரிக்கெட்டில் டெண்டுல்கர் நூறு ரன்களை அடிக்க, மற்ற எவரும் விளையாடாமல் இந்தியா தோற்றுவிட்டால், டெண்டுல்கர் விளையாடி இதுவரை இந்திய ஜெயித்தது சில போட்டிகள் தான் என்று குறை சொன்ன கதை போலிருக்கிறது.

romba seriyaana comparision!

A.R.Rehman music pota padangal odalana avar eppadi adhukku kaaranam aaga mudiyum????

Aana, ARR international levela concentrate panradhunaala dhaan avaraala munna madhri poda mudiyalana nu ninaikiren! Inna solreenga?

said...

nice review karthik.

no body can hide a sun. likewise, thiramai enga irunthaalum he/she will come up whatever he deserves.

it's applicable to ARR or anybody.
see, U have come upto this extent and long way to go by god's grace and also by your endevours, rite..?
:)

said...

இப்போ வர எல்லாப் பாட்டும் இசைக்கருவிகள் ஆக்கிரமிப்பாலே வார்த்தைகள் புரியாத மாதிரியில் தான் வருது. தவிர, பழைய பாட்டுக்களின் மெட்டுக்கள் காப்பி அடிப்பது தெரியாமல் காப்பி அடிக்கப் படுகிறது. இதிலே யார் இசை அமைப்பாய் இருந்தாலும் அப்படித்தான். இன்னிக்கு விகடனிலே கூட மதன் கேள்வி-பதிலில் இந்த அடிப்படையில் ஒரு கேள்வி.
இசை அமைப்பாளர்களுக்குப் புது வகையான மெட்டுக்கள் கிடைக்காத நிலை ஏற்படுமா? ஆண்டாண்டு காலமாகத் தமிழ் இசைப் பாடல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறதே? ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்?
பதில்:4 அடிப்படை வர்ணங்களால் 50,000 கலர் பட்டுப் புடவையை உருவாக்கிய மாதிரி, ஏழு ஸ்வரங்களில் ராகம், வேகம் மாற்றி, கூட்டிக் குறைத்து வாத்தியங்களை மாற்றிப்புதுப் பாடல் மாதிரி காட்டுவதாய்க் கூறுகிறது. பலன்:எல்லாப் பாடலும் "எங்கேயோ கேட்ட பாடல்".

said...

Its very simple Karthik. ARR has lost it. Period. When was the last time he gave a solid album in Tamil? I would even place Aayitha Ezhuthu at the bottom of the list of the ARR - Mani Rathnam combos. If MR cant get the best out of him, then nobody can. Look at the number of movies he does, both in Tamil & Hindu. 4-5 movies a year and only one of them - RDB -actually can be even called a complete album.

I am not a big HJ fan but if you look at the movies he has done so far, almost all of his movies have been musical hits.

Sivaji's audio sales will definitely be record-breaking but that should be solely attributed to Thalaivar and not ARR.

Bottomline - Lets just agree that his cup has run dry. I know so many ARR fans who keep saying that he will be back soon and you know what, they have been saying that for 4-5 years now. That is the reason why even when a mediocre album like Anbe Aaruyire or Godfather is released, you see every ARR fan praising it to the sky, saying that it is a must-buy, blah-blah. But the reality is that those albums stinked. Let ARR compose another Kandukondein Kandukondein-like solid album and I will accept he is back. Until then, we dont need to wonder why HJ and Yuvan are ruling the tamil music scenario.

Anonymous said...

sooper comparison..and nice review...ARR will rock again hopefully..eagerly awaiting guru...sivajila avlo hope illa...but since shankar moviengarathala...the rajini rahman jinx mite break...

said...

எல்லாருக்கும் ஒரு peak period உண்டு. அதுக்கு அப்புறம் மக்களுக்கு அவங்க style stereotype ஆ தோணி புது ஆளுங்கள ரசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அது வரவேற்கத்தக்கது தான். என்னை பொறுத்த வரைக்கும் யாரும் ஒரு field ல தனிக்காட்டு ராஜாவா இருக்கக் கூடாது. புதுப் புது ஆளுங்களுக்கு வாய்ப்பு குடுக்கணும், encourage பண்ணனும்.
personal ஆ நான் ARR ஐ விட இளையராஜாவோட fan. ARR songs லாம் அப்பப்ப கேக்க நல்லா இருக்குமே தவிர பல வருஷங்கள் நிலைச்சி நிக்காது.

//இப்போது ஏ ஆர் ரகுமானை பற்றிய புதிய விஷயத்தை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அது ஏ ஆர் ரகுமான் இசையமைத்த படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை என்பதே.//
சினி field ல உள்ள பல மூட நம்பிக்கைகள்ல இதுவும் ஒண்ணு.


சச்சின் analogy brillinat ஆ use பண்ணி இருக்கிங்க. again, my personal opinion is: its high time Sachin takes retirement.

said...

சரியாச் சொன்னீங்க சீனு. ஆனா ஏ ஆர் ஆர் கிட்ட வேலை வாங்குற திறமை இருக்கணும். ஹாரிஸும் கௌதமன் தவிர வேற யார்கிட்டயும் பெரிய அளவில் ஹிட் தரவில்லை. தொட்டிஜெயா படம் தோல்வி ஞாபகம் இருக்கிறதா?

said...

//Just like Sachin silences his critics with his bat, ARR will silence his critics with his forthcoming music releases,esp in GURU. I am confident in this.//

yeah Arun.. I too expecting the GURU

said...

//I have myself observed and heard the tunes which are similar to English tunes....ARR come bak to your original form...//

you are right leo.. he can do something better

said...

//ARR international levela concentrate panradhunaala dhaan avaraala munna madhri poda mudiyalana nu ninaikiren! Inna solreenga//

ellaam sarithaan karthik.. anaa ethavathu cheyyalaina kastam

said...

//nice review karthik.

no body can hide a sun. likewise, thiramai enga irunthaalum he/she will come up whatever he deserves//

Thanks ambi.. correct ambi..anaa avar cheekiram prove pannaa nallathu..

said...

//எல்லாப் பாடலும் "எங்கேயோ கேட்ட பாடல்". //

madam, nalla thaan solreenga.. Anaa ARR rahman marupadiyum varuvaarannu chollunga

said...

//Sivaji's audio sales will definitely be record-breaking but that should be solely attributed to Thalaivar and not ARR//

No filbert.. ARR has some market still..we cannot say that sivaji's sales will be only based on rajni.. ARR also play a better role..

said...

//sooper comparison..and nice review...ARR will rock again hopefully..eagerly awaiting guru...sivajila avlo hope illa...but since shankar moviengarathala...the rajini rahman jinx mite break... //

sure gils..

said...

//ARR songs லாம் அப்பப்ப கேக்க நல்லா இருக்குமே தவிர பல வருஷங்கள் நிலைச்சி நிக்காது//

கரெக்ட் ப்ரியா.. நானும் பலதடவை அதை உணர்ந்திருக்கிறேன்

said...

@ filbert

I disagree with u filbert. Even his so-called "mediocre" performance like "anbe aaruyire" and "Varalaaru" is WAY BETTER than Harris Jeyaraj and Yuvan's!

Accepted ARR is not scoring like when he was in magical touch. But for that reason one cannot ridicule his current efforts. Remember he is concentrating on international projects too... so naturally his effort is diverted..

said...

//Accepted ARR is not scoring like when he was in magical touch. But for that reason one cannot ridicule his current efforts. Remember he is concentrating on international projects too... so naturally his effort is diverted//

I am with you, karthik BS