Friday, November 17, 2006

நண்பர்களோட நண்பர்கள் நண்பர்களான கதை

ஒவ்வொரு நாளும் விடியறப்போ வானம் ஒரே மாதிரி இருக்கிறதில்லை.. அதே மாதிரி நாமும்.. புதுப் புதுப் பார்வைகள்.. புதுப் புது உணர்ச்சிகள்.. சந்தோசங்கள்.. கனவுகள்.. ஹ்ம்ம்.. இந்த ட்ரீம்ஸ் பதிவுல தீபாவ பாத்ததிலிருந்து அவ நினைப்பு தான்.. பாருங்களேன்.. நேற்று கனவு முழுதும் அவ தான்.. சுவையான ஒரு காதல் படம் ஓடியது.. காலையில் எழவே மனசு இல்ல.. சரி அந்த கனவ தனிப் பதிவா போடுறேன்.. இன்னமும் என் கையை பிடிச்சுகிட்டு பக்கத்துலயே உக்கார்ந்து இருக்க மாதிரி ஒரு பிரமை.. ட்ரீம்ஸ்..இப்போ சந்தோசமா உங்களுக்கு.. உரையாடல்கள்.. நட்புகள்.. நட்பு என்னும் பூ மட்டும் எங்கே எப்படி முழைக்கும்னு யாருக்குமே தெரியாது.. ஆனால் காதலைவிட இதற்கு சக்தி அதிகம்.. வலிமை அதிகம்.. அது பார்க்காமல் நட்பு கொண்ட, சங்க இலக்கிய நண்பர்கள், கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் முதல் இன்று வரை அதற்கென்று ஒரு தனித்துவ வலிமை இருக்கிறது.. (இந்த பார்க்காத நட்பை வைத்து தான் காதல் கோட்டை படத்தோட தீம் ஆரம்பிச்சதோன்னு எனக்கு ஒரு சந்தேகம் இன்னும் இருக்கு) இந்த நட்பு ஒருவருக்காக மற்றவர் உயிர் துறக்குற வரை போனதுண்டு அவர்கள் கதையிலே.. காதல் என்பது கார்மோன்கள் செய்யும் கலாட்டா.. அது எப்படி சொல்லப்பட்டிருந்தாலும் ஆரம்பம் ஒரு ஈர்ப்பில் தான் என்பது என் எண்ணம்.. சில காதல்கள் இதிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கலாம்.. ஆனால் பெரும்பாலும் கண்களையோ முக அழகையோ வைத்து தான் காதல் ஆரம்பிக்கும்.. சரி விடுங்க.. காதல் எப்படி ஆரம்பிச்சா நமக்கென்ன... நாம இப்போ நண்பர்களை பத்தி பார்ப்போம்.. மூணு மூணா போட்டு எழுதின பதிவு புது நண்பர்களை எனக்கு அடையாளம் காட்டி இருக்கு..

முதலில் நண்பர் குரு அறிமுகமான கதையை பார்க்கலாம்.

நான் எட்டாவது தம்பித்தோட்டத்துல படிச்சுக்கிட்டு இருந்தப்போ புதுசா வந்து சேர்ந்தவன் தான் நண்பன் செல்வின். வந்த சில நாட்களிலேயே நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். அப்போது அவன் திண்டுக்கல்லில் இருந்து வந்து சென்றதால் நாங்கள் பள்ளி முடிந்து பஸ் ஏறி நான் எனது வெள்ளோட்டுப்பிரிவு நிறுத்தத்தில் இறங்கும் வரை..அது பிரியாத ஃபெவிகால் நட்பாகவே இருக்கும். பள்ளி முடிந்து கல்லூரிக்கு சென்ற பின்னும் இது தொடர்ந்தது.. கல்லூரியில் படிக்கும் போது நடந்த விபத்தில் நெஞ்சில் அடிப்பட்டதால் அவனை அழுத்தம் கொடுக்கும் எந்த செயலைகளையும் செய்யக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதனால் எம்.சி.ஏ முடித்த பிறகு, காந்திகிராம கல்லூரியிலேயே லெக்சரர் ஆக வேலை செய்து வந்தான். நான் சென்னைக்கு வந்த பிறகும் வருடம் இரு முறையாவது நேரில் நாங்கள் பார்த்து அளவளாவிக் கொள்வோம்.. ஒரு நாள் கால் பண்ணி..என்னமோ தெரில..பேசணும் போல இருக்குடான்னு ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தான்.. சரியா ஒரு வாரம் கழிச்சு செல்வின் நெஞ்சுவலில இறந்து போன செய்தி தான் வருது, விடிகாலைல..

செல்வின் பத்தி என்னிக்கும் மறக்காத ஒரு சம்பவம்.. ஒன்பதாவது படிக்கிறப்போ கணக்கு பிரீயடுல ஜாமென்ட்ரி பாக்ஸ் இல்லாம ஒரு இருபது பேர் வகுப்புக்கு வெளில நிக்க, அடுத்த நாள் எல்லோருக்கும் அதை வாங்கி வந்து கொடுத்து அசத்தினவன்.. ஒரு வேளை, சொர்க்கதுக்கு போற அளவுக்கு புண்ணியத்தை இவ்ளோ சின்ன வயசுலயே பண்ணினதால, போதும் வா சொர்க்கதுக்குன்னு கடவுள் கூப்பிட்டுகிட்டதா நான் அடிக்கடி நினச்சுக்குவேன்..

அப்படிப்பட்ட என் நண்பன் செல்வின் கூட எம்.சி.ஏ படிச்ச நெருங்கிய நண்பன் குருவை தான் அந்த முத்துக்கள் மூணு பதிவு சேர்த்து வைத்தது. ஏற்கனவே குருவை இந்த பிளாக் உலகில் சந்தித்திருந்தாலும், நான் பதிவுகள் போட ஆரம்பித்த நாட்களில் பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களில் ஒருவராய் இருந்தாலும், இப்படி ஒரு நட்பு எங்கள் இருவருக்கும் இடையே இருக்குமென்று அப்போது நினைக்கவில்லை. மேல இருந்து எங்கள் நெஞ்சங்களில் நாளும் வாழும் நண்பன் செல்வின் இதையெல்லாம் நிகழ்த்துகிறான் போலும்.

அடுத்து நல்ல செயல்கள் மூலம் பூனைக்கு மணி கட்டும் மணிப்ரகாஷ்

இங்கே நாம போடுற பதிவுகளை பாத்துட்டு..அட நம்ம திண்டுக்கல் ஆள் என வந்தவர்..என் ஊரின் பக்கத்து ஊர், எங்க பஞ்சாயத்துல இருக்க ஊர் நரசிங்கபுரம்.. அங்கே இவரோட அண்ணனுக்கு பொண்ணெடுத்து, இவர் அக்காவை கட்டிக்கொடுத்து என உறவுகளோடு சம்பந்தப்பட்ட ஊர்.. இவரும் முத்தான மூன்று பதிவுல எழுதி இருந்த விஷயங்களை பாத்து, ரெண்டு பேரும் பின்னூட்டதிலயே பேசிக்க..இவர் கூட பதினொன்று, பனிரெண்டு படிச்ச என் ஊர் பையன், என் நண்பன் பிரகாஷ் என தெரியவர, அப்படியே உடனே கூகிள் டாக்ல சம்பாஷனைகள்.. இவரும் இப்போ நான் இருக்க மாநிலம் ஓஹாயோன்னு சொல்ல, நான் எங்கன்னு கேக்க, அங்க இருந்து சின்சினாட்டின்னு பதில் வர.. அட.. எனக்கும் அங்கே நண்பர்கள் இருக்காங்களேன்னு சொல்லி அவங்களை தெரியுமான்னு கேக்க, ஆமா..தெரியும்னு அவர் சொல்ல.. அட என்ன இன்னிக்கு நண்பர்களோட நண்பர்கள், நண்பர்கள் ஆகுற நாளான்னு ஒரே சந்தோசம்..அப்படியே என் கைபேசி நம்பர் அவர் கேட்டு, நான் கொடுத்து.. அப்புறமென்ன இடைவிடாத உரையாடல் தான்.. இப்படியும் நடக்குமாங்கிற மாதிரி சட்டுன்னு பூத்து பழம் விளைஞ்ச கதை இது.. அப்புறம் பாத்தா நம்ம அருணும் அவரோட எதிர்த்த ரூம்ல தான் தங்கி இருக்காராம்.. இங்க பாருடா..

அது தான் நட்போட ஆச்சர்யமே.. சீக்கிரம் நம்மளையும் அதோட வானதுக்குள்ள இழுத்துக்கும்.. எத்தனை எத்தனை கரங்கள் இப்படி இங்கே எழுத ஆரம்பிச்சதிலிருந்து ஒண்ணு சேர்ந்திருக்கு.. ஒருமித்த கருத்தோ, அதிலே சர்சைகளோ...பிடிச்ச விஷயமோ.. பிடிக்காததோ.. எத்தனையோ முகம் கொண்ட மனங்கள் முகம் காட்டாமல் தங்கள் மனம் காட்டி கைகுலுக்கி இருக்கின்றன.. இதையெல்லாம் நினச்சுப் பாக்குறப்போ நான் கல்லூரியில் எழுதின ஒரு கவிதையின் வரிகள் ஞாபகத்துக்கு வருது..

எங்கிருந்து வந்தோம்..
எப்படி
எங்கே செல்ல போகிறோம்..
சிரித்து கொண்டே
கட்டிப்பிடித்து
கைகுலுக்குகின்றன
பூக்கடை ரோஜாக்கள்..

பல
வண்ணமிகு மண்ணின்
வளர்ப்பிலே வளர்ந்த
பருத்திகள் எல்லாம்
இறுகப்பிடித்து
இழைகின்றன
ஆலையிலே ஆடைகளாய்..

முகங்கள்
முகவரிகளல்ல
மனங்கள்
மாற்றி எழுதுகின்றன
நட்பென்னும் மை கொண்டு


(ஞாபகத்தில் இருந்த சில வரிகள் மட்டும்.. கீழே இருப்பது சும்மா ஒரு இன்ஸ்டன்ட் கவிதை)

கருத்துக்கள்
ஒத்தவருக்கு
உலகமே ஒரு கைக்குள்..
இப்படி
நட்புகள் வாய்த்தவருக்கோ
இதைப் போல
ஆயிரம் கைகள்..


எனக்கும் இப்போ ஆயிரம் கைகள் நண்பர்களே உங்கள் எல்லோராலும்..

12 பின்னூட்டங்கள்:

said...

//
எத்தனையோ முகம் கொண்ட மனங்கள் முகம் காட்டாமல் தங்கள் மனம் காட்டி கைகுலுக்கி இருக்கின்றன..
//

கவிதையை விட இந்த வரிகள் சூப்பர் கார்த்தி.

உங்க நட்பு அனுபவங்களை அழகா எழுதி இருக்கிங்க.

உலகம் ரொம்ப சின்னது கார்த்தி. பாத்திங்களா Sunday கொலம்பஸ் வறேன். மணி கிட்ட உங்க கைபேசி நம்பர் வாங்கி பேசுறேன். கண்டிப்பா

we will meet
will meet
meet

சரி பாப்போம் :)

said...

//உலகம் ரொம்ப சின்னது கார்த்தி. பாத்திங்களா Sunday கொலம்பஸ் வறேன். மணி கிட்ட உங்க கைபேசி நம்பர் வாங்கி பேசுறேன். கண்டிப்பா
//
கட்டாயம் சந்திப்போம் அருண்.. கொலம்பஸ்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

said...

நான் தான் பர்ஸ்டா...

என்னைக்கும் இல்லாம இந்த பதிவுக்கு பர்ஸ்ட்... அப்போ கொலம்பஸ்ல ட்ரீட் இருக்குனு சொல்லுங்க :)

said...

kaarthi,

late a comment podurathukku mannikavum.. ooru sutha LA vanthen. ippathan paartheen.

//முத்தான மூன்று பதிவுல எழுதி இருந்த விஷயங்களை பாத்து, ரெண்டு பேரும் பின்னூட்டதிலயே பேசிக்க..இவர் கூட பதினொன்று, பனிரெண்டு படிச்ச என் ஊர் பையன், என் நண்பன் பிரகாஷ் என தெரியவர, அப்படியே உடனே கூகிள் டாக்ல சம்பாஷனைகள்.. இவரும் இப்போ நான் இருக்க மாநிலம் ஓஹாயோன்னு சொல்ல, நான் எங்கன்னு கேக்க, அங்க இருந்து சின்சினாட்டின்னு பதில் வர.. அட.. எனக்கும் அங்கே நண்பர்கள் //

naan athisaiuthu pona nimidangal avai..

ellame onna pogi athuvm thedir endu padithu udane pesi
innum nadpai aazamai paduthiua pozuthugal

"en nanbanai par ennai patri therium" enra pazamozhi unmaiyakip ponathu....

aananthangalum
intha mathiri athisiyangalum
unarthukirathu
innaum irukirathu aagaayam

vasapatta nam natupugal
innum virithu periyathai,
aazhamai
arputhamai vaanam vasapadatum...

itharku karanamai iruntha
en thamilukkum
valipoovirum
vinjana kandupedipuukalaum
en natpukaLukkum
ella santharpangalilum

nanri ullaavanai..

<< thamilil ezuthatharku mannikavum.. I am out of my place>>

said...

//என்னைக்கும் இல்லாம இந்த பதிவுக்கு பர்ஸ்ட்... அப்போ கொலம்பஸ்ல ட்ரீட் இருக்குனு சொல்லுங்க //

வாங்க அருண்.. நிச்சயமா ட்ரீட் போவோம்

said...

//late a comment podurathukku mannikavum.. //

மணி என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க...

//itharku karanamai iruntha
en thamilukkum
valipoovirum
vinjana kandupedipuukalaum
en natpukaLukkum
ella santharpangalilum
//

கவிதை நல்லா இருக்கு மணி..

நல்லா ஊர் சுத்திட்டு வாங்க..மணி

said...

//கருத்துக்கள்
ஒத்தவருக்கு
உலகமே ஒரு கைக்குள்..
இப்படி
நட்புகள் வாய்த்தவருக்கோ
இதைப் போல
ஆயிரம் கைகள்..//

ஓ.. கார்த்திக். இணைய உலகம் எல்லோரையும் இணைத்த விட்ட பின் தனிமை என்ற வார்த்தைக்கு அகராதியில் இடமில்லாமல் போய்விட்டது..

உங்களைப் போல அருண், மணிப்ரகாஷ் என்று எத்தனையோ புதிய நண்பர்கள் நட்பு வட்டம் கிடைக்க இதுதானே காரணம்..

அருமையான நினைவுகள்.. அழகு கவிதை வரிகள்..

said...

கவிதைகள் சூப்பர் தலைவா:) சரி இது ஏதோ நண்பர்கள் அரட்டை அடிக்கும் பதிவு போல,உங்க மீட்டிங் ப்ளானெல்லாம் போடுறீங்க, நல்லா என்சாய் பண்ணுங்க:)

said...

//உங்களைப் போல அருண், மணிப்ரகாஷ் என்று எத்தனையோ புதிய நண்பர்கள் நட்பு வட்டம் கிடைக்க இதுதானே காரணம்..
//

சரியாச் சொன்னீங்க கணேசன். உங்களை போன்ற நண்பர்களை காட்டியது இது தானே

said...

//கவிதைகள் சூப்பர் தலைவா:) சரி இது ஏதோ நண்பர்கள் அரட்டை அடிக்கும் பதிவு போல,உங்க மீட்டிங் ப்ளானெல்லாம் போடுறீங்க, நல்லா என்சாய் பண்ணுங்க//

ஓ..நன்றிங்க வேதா.. நீங்களும் என் தோழி தான் வேதா.. நீங்களும் அரட்டையில கலந்துக்கோங்க..

said...

karthik,

Romba emotional-a irunthathu when i read the post.

like to know more about selwyn.

said...

Thanks Guru.. Naanum ezhuthurappO konjam unarchivachappattutten..