Sunday, November 19, 2006

மத்திய அமைச்சர்கள் தரப் பட்டியல்...

எப்படி வேலை செய்கிறார்கள் நமது அமைச்சர்கள் என்று அடிக்கடி ஏதாவது ஒரு சஞ்சிகை கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை தருவது வழக்கம்.. அதன்படி தி பைனான்ஸ் எக்ஸ்பிரஸ் என்னும் நாளிதழ் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.இந்த கருத்துக்கணிப்பு ஆறு பெருநகரங்களில் 338 நிறுவங்கள் இடையே நடத்தப்பட்டது..

அதன்படி, போன முறை இந்திய டுடே எடுத்த கணிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்த ரயில்வே அமைச்சர் லல்லு இப்போது முதலிடத்துக்கு வந்திருக்கிறார். ரயில்வே துறைக்கு மிகுந்த லாபம் இந்த வருடத்தில் இவர் முயற்சியில் வந்ததால் அவர் முதலிடத்தை பிடித்ததாக காரணம் சொல்லப்பட்டிருக்கிறது..

அதே போல நாலாம் இடத்தில் இருந்த தயாநிதி மாறன் இப்போது இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்தியா முழுவதும் லோக்கல் கால், 10 கோடி தொலைபேசி இணைப்புகள் (எங்கள் ஊரில் கடந்த பத்து மாதங்களாய் அடிக்கடி தொடர்புகள் துண்டிக்கப் படுவது வாடிக்கை ஆகிவிட்டது..இதற்கும் இவர் இரண்டாம் இடத்திற்கு வந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறேன்), நோக்கியா, மோட்டோரோலா கம்பெனிகள் நமது மண்ணிற்கு முதலீடு செய்ய கொண்டு வந்தது போன்றவைகளை காரணமாக சொல்கிறார்கள் (போட்டோவுக்கு தாத்தாவுடன் போஸ் கொடுப்பதை விட்டுவிட்டார்கள்). இருந்தாலும் தமிழ் நாட்ல இருந்து ஒருத்தர் அதுவும் அரசியல் கத்துகுட்டி இந்த இடத்துக்கு வந்ததுக்கு வாழ்த்து சொல்வோம்..

நமது மத்திய நிதியமைச்சர் போன தடவை இருந்த மூன்றாம் இடத்திலேயே இந்த முறையும் இருக்கிறார். இவரை தயாநிதி மாறன் ஒவர்டேக் செய்துவிட்டார்.

தமிழகத்தை சேர்ந்த மற்ற அமைச்சர்களான டி.ஆர்.பாலு ஆறாம் இடத்திலும் அன்புமணி பத்தாம் இடத்திலும் இருக்கிறார்கள்..

ஆமாம் தமிழ்நாட்ல இருந்து போன மத்தவங்க எல்லாம் என்னதான் செய்றாங்க..

இந்த செய்தியின் மூலம் இங்கே

மே மாதத்தில் இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பு இங்கே

இந்த செய்திகளை நமக்காக பகிர்ந்துகொண்ட பாலிடிக்ஸ் பார்வதிக்கு ஒரு நன்றி

14 பின்னூட்டங்கள்:

said...

3 new posts aa? Nalaikku office la vandhu padikkaren. Sunday kuda attendance kudukkaren parunga. Oru restaurant gift coupon anuppunga.

said...

priya.. attendance mattum illa..
first comment vera..

kattaayam ungalukku restaurant coupon anupuren..

unga kadamai unarchi ennai anantha kanneer vidavaikkuthu priya :-))

Anonymous said...

உங்க politics பார்வதி கொடுத்த நியூஸ் கலக்கலா இருக்கு.. லஞ்சம் வாங்கிறதுல யாரு 1stன்னு ஒரு பதிவை போடுங்க..

said...

ஆஹா.. மை பிரண்ட் நம்மளை வம்புல இழுத்து விடுறீங்களே

Anonymous said...

tnx for the news parvathi &&&&&&&&&&& karthik ;)

said...

thx haniff :-))

said...

dayanithi maranuku 2nd place ellam too much...thamizh naatuku mattum pannina nalladhilla....motha indiavukum seyyanum.....andha vishyathula lallu-vuku first place thayangama kudukalam

said...

பாலிடிக்ஸ் பார்வதி-yaa....indha matter kooda super-a iruke :))

said...

lallu mudhalidama?? sooober..

PS: Innum rest. coupon kidaikkala..

said...

super news karthik.

said...

//dayanithi maranuku 2nd place ellam too much...thamizh naatuku mattum pannina nalladhilla....motha indiavukum seyyanum.....andha vishyathula lallu-vuku first place thayangama kudukalam //

correct mapla..dayanidhi maran TNkku mattum thaan panra maathiri irukku..

said...

//பாலிடிக்ஸ் பார்வதி-yaa....indha matter kooda super-a iruke //

mapla, neenga appo vacationla iruntha..from 302th post she started her politics speech here :-))

said...

//PS: Innum rest. coupon kidaikkala.. //

priya..intha thadavaiyummaddress maari poyiduchchunnu ninaikiren.. adress correct-a kodungka friend..sshhhh..escape? appadinnu ninaikireengala..illa..illave illai

said...

//super news karthik.//

Thanks Arun