Tuesday, November 14, 2006

அப்துல்கலாமுக்கு போட்டியா ரஜினிகாந்தா?தென்மாநிலங்கள் உருவாகி ஐம்பது வருஷம் ஆகிவிட்டது.. அதை CNN-IBN, "தங்கமான தெற்கு" ங்குற பேர்ல கொண்டாட முடிவு செஞ்சிருக்குங்க.. ஒவ்வொரு துறையிலும் ஒரு ஆள தேர்ந்தெடுத்து, தேர்தல் வச்சிருக்காங்க.. இந்த தேர்தல் இன்னும் ஏழு நாளைக்கு மட்டும் தான் இருக்கும்.

இந்த வலை வாக்கு சீட்ல இருக்கவங்களோட பேர் பட்டியல் (இதுவரை, அவங்க வாங்கின ஓட்டுக்கள், அடைப்புக்குறிக்குள்)

ஜனாதிபதி அப்துல் கலாம் (36.63%)
நடிகர் ரஜினிகாந்த் (30%)
இசைஞானி இளையராஜா (13.46%)
எம்.எஸ். சுப்புலக்க்ஷ்மி (9.21%)
தந்தை பெரியார் (8.27%)
விஸ்வநாதன் ஆனந்த் (2.43%)

இதுல ரஜினியை வச்சாங்கன்னு தெரில.. சினிமாக்காகன்னா அப்போ கமல் பேர் தான் இருக்கணும்.. கட்டாயம் ரஜினி பேர் கிடையாது.. ஒரு பலத்த போட்டி இருக்கனும்னா இன்னும் நல்லாவே ஆட்களை போட்டிருக்கலாம். இருக்கிறவங்கள்ல அப்துல் கலாமுக்கும் ரஜினிக்கும் தான் போட்டி.. அப்துல் கலாமை விட ரஜினி முதல் இடதுக்கு வந்தா அதை விட தமிழனுக்கு அவமானம் இல்ல.. என்ன தான் நான் ரஜினி ரசிகன் என்றாலும், இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் கண்மூடித்தனமா ஆதரிக்க முடியாது. அதுவும் இல்லாம.. மேல இருக்கவங்கள்ல ரஜினியை தவிர, எல்லோரும் தமிழ்நாட்டுல பிறந்தவங்க.. ரஜினிக்கு பதில கமல் பேரு இருந்திருந்தா ரொம்ப பொருத்தமா இருக்கும். ரஜினி பேரை இதில் வைத்த CNN-IBN குழுவை வன்மையா கண்டிக்கிறேன்.இது மட்டுமில்லாம, பிரபலமான தமிழனை தேர்ந்தெடுங்கள் என்று ஒரு விளம்பரம் வேற..

இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க.. சரி முதல்ல இங்க போய் உங்க ஓட்டை போட்டு தமிழ்நாட்டோட மானத்தை காப்பாத்துங்க. கூடவே முடிஞ்சா Post Comments பகுதில ரஜினி பேரை போட்டதுக்கு உங்க எதிர்ப்பையும் சொல்லுங்க நண்பர்களே..

அப்புறம் ஒரு சந்தோசமான சமாச்சாரம்..

உங்க எல்லோருடைய ஆதரவால அதிகமா பார்க்கப்படுற வலைபூக்கள்ல இதுவும் முதல் பத்துல
ஒண்ணா வந்திருக்கு..

எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் நண்பர்களே

32 பின்னூட்டங்கள்:

Anonymous said...

உங்கள் ப்லோக் முதல் பத்தில் ஒன்றாக வந்ததுக்கு வாழ்த்துக்கள் கார்த்திக். :-)

மற்றவர்கள் ஏதாவது சாதித்து இந்தியாவுக்கு நற்பெயர் சேர்த்தார்கள். ஆனால், சூப்பர் ஸ்டார்தான் இந்தியாவுடைய மாஸ்கோட்டா இருக்காரு. இதுக்கு காரணம் நாம்தான்.. நாமதானே சினிமாவை தலையிலே வைச்சுகிட்டு ஆடுரோம். இப்போதாவது அப்துல் கலாம், விஸ்வநாதனுக்கு ஓட்டு போட்டு இதனை திருத்துவோம்!!!

said...

நன்றிங்க மை பிரண்ட்..

கட்டாயம் ரஜினிக்கு போடாதீங்க

said...

எம்ஜியார் நெஜ தேர்தல்ல ஜெயிச்சு முதலமைச்சமராகலாம்... எங்காளு ஒரு கருத்து தேர்தல்ல ஜெயிக்க கூடாதா? ரஜினி ராம்கி யோட இப்பவே வரேன்

Anonymous said...

congrats karthi...

engalukku ellam enna treat thara poreenga??

sundar

said...

வாழ்த்துக்கள் கார்த்திக். கலக்கல் :)

300 posts, ippo Top 10...
super-o-super

said...

//எம்ஜியார் நெஜ தேர்தல்ல ஜெயிச்சு முதலமைச்சமராகலாம்... எங்காளு ஒரு கருத்து தேர்தல்ல ஜெயிக்க கூடாதா? ரஜினி ராம்கி யோட இப்பவே வரேன் //

நெருப்பு சிவா, யாரை வேணும்னாலும் கூட்டி வாங்க.. நானும் ரஜினி ரசிகன்

said...

//congrats karthi...

engalukku ellam enna treat thara poreenga??
//

thanks sundar.. treat thaane thattutta pOchchu

said...

//வாழ்த்துக்கள் கார்த்திக். கலக்கல் :)

300 posts, ippo Top 10...
super-o-super

//

நன்றி அருண்!!!

said...

//உங்க எல்லோருடைய ஆதரவால அதிகமா பார்க்கப்படுற வலைபூக்கள்ல இதுவும் முதல் பத்துல ஒண்ணா வந்திருக்கு..//
2 posts in a day podra mudhal blogum ungalodadhudhan nu varalaiya?Vazhthukkal.--SKM

said...

//2 posts in a day podra mudhal blogum ungalodadhudhan nu varalaiya?Vazhthukkal.--SKM //

O..thanks SKM.. ambiyoda tag-ai naalaikku podalaamnu thaan paaththen.. ambi mirattunathula vera vazhi illaama innaikke pottutten..SKM

said...

முதலில் நல்ல செய்தி சொன்னதற்கு வாழ்த்துக்கள்:)
இந்த கருத்துகணிப்பெல்லாம் சும்மாங்க முன்பு இப்படித்தான் அவங்க நடத்தின கருத்துக்கணிப்புக்கு கமல்ஹாசனுக்கு நாலு வாக்குகளும்,அப்துல்கலாமுக்கு நாலு வாக்குகளும் இணையத்தில நான் பதிவு செஞ்சேன்:)

said...

மாப்பி,

இதுல கோவப்பட ஒன்று இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் நம்மளுக்கு தெரியும், யாரு மிகவும் திறமைசாலி என்பது எல்லாம். அவர்களுக்கு மீடியாவின் மூலம் தெரிவது தான்.

ரஜினியை விட சிவாஜி, எம்.ஜி.ஆர் பெயர் சொல்லாம், நீங்க சொன்னது போல கமலையும் சொல்லாம். இந்த கருத்து கணிப்பை வைத்து எல்லாம் நம்மளவர்களை எடைப் போட அவசியம் இல்லை. நம் மக்கள் எல்லாம் தங்கமே.....

said...

முதல் பத்து வலைப்பூக்களில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!!
இந்த அறுவரை எப்படி, யார் பரிந்துரைத்தார்கள் எனத் தெரியவில்லை.

said...

//முதலில் நல்ல செய்தி சொன்னதற்கு வாழ்த்துக்கள்:)
இந்த கருத்துகணிப்பெல்லாம் சும்மாங்க முன்பு இப்படித்தான் அவங்க நடத்தின கருத்துக்கணிப்புக்கு கமல்ஹாசனுக்கு நாலு வாக்குகளும்,அப்துல்கலாமுக்கு நாலு வாக்குகளும் இணையத்தில நான் பதிவு செஞ்சேன்//

சரிதான் வேதா.. ஆனா இப்படியே எல்லா விசயத்துலையும் விட்டுத் தர முடியாது இல்லியா

said...

//ரஜினியை விட சிவாஜி, எம்.ஜி.ஆர் பெயர் சொல்லாம், நீங்க சொன்னது போல கமலையும் சொல்லாம். இந்த கருத்து கணிப்பை வைத்து எல்லாம் நம்மளவர்களை எடைப் போட அவசியம் இல்லை. நம் மக்கள் எல்லாம் தங்கமே..... //
எல்லாம் சரி மாம்ஸ்.. இருந்தாலும் மனசு கேக்கல..அது தான்

said...

//முதல் பத்து வலைப்பூக்களில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!!
இந்த அறுவரை எப்படி, யார் பரிந்துரைத்தார்கள் எனத் தெரியவில்லை//

மணியன்..ரொம்பவே புகழ்றீங்க.. போதும் போதும்..

said...

வாழ்த்துக்கள் கார்த்திக். கலக்கறீங்க போங்க. இன்னும் நிறைய எழுத இது உங்களுக்கு தூண்டுகோலா இருக்கும்னு நினைக்கறேன்.

said...

பிரபலமான தமிழன் (Most popular tamilian) னு தானே சொல்லியிருக்காங்க. திறமையான தமிழன்னு சொல்லலயே. ஏன் ரஜினி இருக்க கூடாது? அவர் தமிழ் நாட்ல பிறக்கலங்கரதெல்லாம் வேர விஷயம். நம்ம தான் வந்தோரை வரவேற்பவர்களாச்சே!
அந்த list ல அப்துல் கலாம் இல்லனா நானே தலைவர்க்கு தான் ஓட்டு போட்டிருப்பேன் ஹி ஹி...

said...

ennaku kooda rajiniya yen potaangane theriyala...avan thamilane kidayaadhu...nalla vela abdul kalam mudhala varavachi manatha kaapathinaanga

said...

/வாழ்த்துக்கள் கார்த்திக். கலக்கறீங்க போங்க. இன்னும் நிறைய எழுத இது உங்களுக்கு தூண்டுகோலா இருக்கும்னு நினைக்கறேன். //

ப்ரியா.. எல்லாம் உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவால் தான்.. ரொம்ப நன்றிங்க ப்ரியா.. நான் இந்த இடத்தை அடைய உறுதுணையா இருந்ததுக்கு

said...

//ennaku kooda rajiniya yen potaangane theriyala...avan thamilane kidayaadhu...nalla vela abdul kalam mudhala varavachi manatha kaapathinaanga //

correct mapla.. rajni evlo periya staarai venumnaalum irukkalaam.. athukkaaka intha listla eppadi sekkalam..

said...

//மேல இருக்கவங்கள்ல ரஜினியை தவிர, எல்லோரும் தமிழ்நாட்டுல பிறந்தவங்க.. ரஜினிக்கு பதில கமல் பேரு இருந்திருந்தா ரொம்ப பொருத்தமா இருக்கும்//

இதை என்னால் ஆதரிக்க முடியாது...
தமிழ்நாட்ல பிறக்கலைனாலும் அவர் தமிழந்தான்...

ஆனால் இந்த போட்டிய நடத்துற லூசுங்க எதுக்கு அவர் பேரை இந்த லிஸ்ட்ல சேத்துக்கிட்டாங்கனு தெரியல...

நம்ம ஆளுங்களுக்கு எதுக்கு ஓட்டு போடறோம்னே தெரியாம ரஜினி பேர பார்த்தவுடனே குத்திட்டானுங்க...

நம்ம சாய்ஸ் கலாமும், ஆனந்தும் :-)

Anonymous said...

mm..kadasiya naama vivadhikka oru vishayam..priappala thaan oruthan tamilan enru eppadi sollalam neenga? (ada namma rajini matter thaan)

abdul kalam oda compare panradhu konjam opvar thaan, aana, rajini "most popular tamilan" illa appadinu solrathu....


//ஜனாதிபதி அப்துல் கலாம் (36.63%)
நடிகர் ரஜினிகாந்த் (30%)
இசைஞானி இளையராஜா (13.46%)
எம்.எஸ். சுப்புலக்க்ஷ்மி (9.21%)
தந்தை பெரியார் (8.27%)
விஸ்வநாதன் ஆனந்த் (2.43%)//

ithula kodumaiyai parthingana, periyar, dravidar galukku thani naadu venum, engalukku help pannunga enru, jinnah ku letter pottar. avar per ellam irukku LOL

mmm...

Anonymous said...

//உங்க எல்லோருடைய ஆதரவால அதிகமா பார்க்கப்படுற வலைபூக்கள்ல இதுவும் முதல் பத்துல ஒண்ணா வந்திருக்கு..
//

congrats...no 1 a seekiram vaanga..

Anonymous said...

And priya sonnathu pola...

//அந்த list ல அப்துல் கலாம் இல்லனா நானே தலைவர்க்கு தான் ஓட்டு போட்டிருப்பேன் ஹி ஹி... //

naanum thaan ... :))

said...

//ஆனால் இந்த போட்டிய நடத்துற லூசுங்க எதுக்கு அவர் பேரை இந்த லிஸ்ட்ல சேத்துக்கிட்டாங்கனு தெரியல...

நம்ம ஆளுங்களுக்கு எதுக்கு ஓட்டு போடறோம்னே தெரியாம ரஜினி பேர பார்த்தவுடனே குத்திட்டானுங்க...

நம்ம சாய்ஸ் கலாமும், ஆனந்தும்//

கரெக்டா சொன்னீங்க வெட்டிப்பயலே.. எதுக்கு ஓட்டுப்போடுறோம்னு தெரியாம பேரைப் பாத்தவுடன் குத்திடுறாங்க..சே

said...

//mm..kadasiya naama vivadhikka oru vishayam..priappala thaan oruthan tamilan enru eppadi sollalam neenga? (ada namma rajini matter thaan)

abdul kalam oda compare panradhu konjam opvar thaan, aana, rajini "most popular tamilan" illa appadinu solrathu.... //

dreamzz, enna ithu rajinukku evlo support.. Naanum rajni rasikan thaanga.. intha idathula avar per thevai illainu thaan solren

said...

//congrats...no 1 a seekiram vaanga.. //

Thanks dreamzz.. vaazhthukku romba NanRi

said...

//And priya sonnathu pola...

//அந்த list ல அப்துல் கலாம் இல்லனா நானே தலைவர்க்கு தான் ஓட்டு போட்டிருப்பேன் ஹி ஹி... //

naanum thaan ... //

Ahaa.. ippadi koottamaa kilampittaangale..

Nallavelai abdulkalam per irunthathu

said...

வாழ்த்துகள் கார்த்தி...இன்னும் முன்னேற வாழ்த்துகள்...

Anonymous said...

Stallin:

Intha karuthu kanipula, yaru romba popularnu than ketirukanga.
Athanala Rajinikant than sariyana (unmiyana) option.

Namma orula 10 kada(shop) iruntha 5 kada bordalayuthu Rajini padam irukkum.
Onnum illa 10 pullangala kuupitu Rajini padathiku polama ? illa Abdul kalam pesiradhe kekalamanu kettuparunga ?


I respect Abdul Kalam for his contribution to the nation. I admire his simplicity, he is a great man but he was my second choice.
I am not of fan of Rajinikant but he is a real hero. He wasn't exceptionally talented like Kamal Hassan, he neither have great looks. He is still down to earth, you can see how people behave after giving a couple of hits.


Abdul Kalam might have received more votes just because voters does not truly reflect the people of TN [you need not be a statistician to find this].


If we try to distort the picture in ground situation just because we don’t like it, we are fooling ourselves.

said...

இந்த கருத்துக்கணிப்ப வெச்சி கலாமையும் ரஜினையையும் நிறுத்தி பாக்கறது அபத்தம்.