Wednesday, November 22, 2006

அடைமழை மாதிரி ஏன் இத்தனை பதிவுகள்..

எழுதுறதை போதைன்னு சொல்லியாச்சு.. ஆனா இப்படியே ரொம்ப நாள் போதையில மிதக்குறவனை என்ன பண்ணுவாங்க..ஏதாவது டாக்டரிடம் கூட்டிட்டு போவாங்க.. இல்லைனா சபரி மலைக்கோ பழநிக்கோ மாலை போடவச்சிருவாங்க.. மாலை போட்டபிறகு எதுவும் இந்த மாதிரி போதை ஏற்றும் சமாச்சாரங்கள் கூடாது.. அதனால என்ன பண்ணுவான் குடிமகன் மாலை போடுறதுக்கு முதல் குடிப்பான் பாருங்க..நம்ம டாஸ்மாக்லயே சரக்கு இல்லைன்னு சொல்றவரைக்கும். ஏன்டா இந்த மாதிரி பில்டப் கொடுக்குறேன்னு பாக்குறீங்களா.. வேற ஒண்ணும் இல்லங்க.. விசயத்தை சொல்றேன் கேளுங்க.. கடந்த ஒரு வாரமா நான் அடைமழை மாதிரி பதிவுகளை போட்டதுக்கு என்ன காரணம்னா, மாலை போடுறதுக்கு முன்னாடி குடிமகன் குடிக்கிற மாதிரி தான்.. அடுத்து ஒரு ஆறு நாள் இந்த வலைப்பக்கமே வரமுடியாது.. இந்த நன்றியளிப்பு (Thanksgiving day) விடுமுறைல ஊர் சுத்தப் போறேன்.. லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கிரான்ட் கேனியன் மலைகள் னு மேற்குப் பக்கம் ஒரு பெரிய சுற்றுலா போறேன்.. அந்த நாட்களை சரிக்கட்ட தான் இத்தனை பதிவு..

பதிவு இருக்கும்னு நீங்க தினமும் வந்து ஒரு அட்டென்டன்ஸ போட்டுட்டு, நீங்க படிக்காத சில பழைய பதிவுகள் இருக்கலாம்.. அதையும் படிச்சுட்டு ஒரு பின்னூட்டத்தை போட்டுடுங்க.. புரியுது.. ஒரு அஞ்சு நாள் நிம்மதியா இருக்கலாம்ன இப்படி படுத்துறியேப்பான்னு நீங்க சொல்றது எனக்கு நல்லாவே கேக்குது.. ஸ்கூல்ல எல்லாம் இந்த டீச்சர் கொஞ்சம் அலுப்பா இருந்தலோ, இல்ல வெளில போறாங்கன்னா டீச்சர் வந்து ஏதாவது படிச்சுகிட்டு இருங்கன்னு சொல்லிட்டு போவாங்கள்ல..ஹிஹிஹி..அது மாதிரி தான் இதுவும்.. எந்த பதிவு படிச்சாலும் ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க நண்பர்களே..

எப்பவும் போனும் கையுமா இருக்க என் மச்சினிச்சி பொற்கொடி ஒரு நல்ல ஐடியா கொடுத்திருக்காங்க.. மத்திய அமைச்சர்கள் தரப் பட்டியல் போட்ட மாதிரி, நம்ம அமைச்சரவையிலும் ஒரு ரேட்டிங் போடலாமேன்னு.. அந்த தரப் பட்டியல் வந்தவுடனே போட்டுடுறேன்.. அந்த தரப் பட்டியல் போடுறதுக்கு நீங்க போடுற பின்னூட்டமும் கணக்குல வருதுன்னு ஒரு சின்ன ஹின்ட் கொடுக்குறேன்.. அதனால எதப் படிச்சாலும் ஒரு பின்னூட்டத்தை போட்டுடுங்க... நீங்க ரேட்ல மேல வரலாம்.. அடப் பாவி.. கமென்ட் வாங்குறதுக்கு இப்படி எல்லாம் ஒரு வழியான்னு நீங்க சொல்றது கேக்குறது.. புரியுது.. என்னங்க பண்றது..

இந்த கீதா மேடம் இருக்காங்களே, எத்தனை பின்னூட்டம் போட்டாலும்..என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடலல..அப்படின்னு நறநறநறன்னு பல்லை கடிச்சு பயமுறுத்துறாங்க.. மேடம்..நான் வர்றதுக்குள்ள அந்த மூணு தொடரை போட்டுடுங்க.. இல்லைனா.. நான் அந்த தொடரை போடம இருந்திருந்தா அம்பி என்ன பண்ணியிருப்பாரோ அதையே தான் நானும் பண்ணுவேன்.. எங்கடா நம்ம கட்சியின் செயலாளர், சுத்த சிகாமணி சுகாதார அமைச்சர் ப்ரியாவை கணோமேன்னு பாத்தா அம்மணி நமக்கு முன்னாலயே ட்ரிப் அடிக்க ஜூட் விட்டுட்டாங்க..

இந்த கோழி குழம்பை பத்தி எழுதி எழுதின போஸ்ட்ல நீறைய பேர்..சாமி..ஆள விடுன்னு ஒரு அட்டென்டன்ஸ் மட்டும் போட்டுட்டு பறந்துட்டாங்க.. அவங்களெகெல்லாம் என்ன சொல்றேன்ன.. இனிமேல் அந்த மாதிரி பதிவுகளை எழுதாம இருக்க முயற்சி பண்ணுறேன்..

அப்புறம் முக்கியமான விஷயம்..உங்க பதிவுக்கெல்லம் வந்து அட்டென்டன்ஸ் கொடுக்க முடியாது.. அதனால நிறைய கமெண்ட் போட்டு அதையெல்லாம் வந்து சரிகட்டிடுறேன்.. வர்ட்டா மக்களே..

42 பின்னூட்டங்கள்:

said...

நல்லா என்சாய் பண்ணுங்க.. கிராண்டு கான்யன் போறப்ப துட்டு அதிகம்னாலும் ஹெலிகாப்டர்ல மட்டும் போகாம வுடாதீங்க. வாழ்நாளில் ஒருமுறை அனுபவம் (அதாங்க once in a lifetime experience) மாதிரிங்க அது. முதல்ல கார்ல போய் கான்யனைப் பார்த்துடாதீங்க. போறப்பவே முதல்ல ஹெலிகாப்டர்ல போய் அதன் பிரம்மாண்டத்துக்குள்ள டைவடிச்சு வாயடைச்சுப் போனப்புறம் சாவகாசமாக் கார்ல ஒரு ரவுண்டு போறதையே நான் பரிந்துரைக்கிறேன். எல்லாம் அனுபவம் தான்.

said...

ஒரு வாரம் லீவா?.. எனக்கு இங்க வயிறு எரியுது.. ஏம்ப்பா , இந்தியாவில இந்த தேங்க்ஸ் சொல்றதுக்கு லீவு தர மாட்டாங்களா..

எனக்கும் நிறைய பேருக்கு சொல்ல வேண்டி இருக்கே..

//லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கிரான்ட் கேனியன் மலைகள் னு மேற்குப் பக்கம் ஒரு பெரிய சுற்றுலா போறேன்.. அந்த நாட்களை சரிக்கட்ட தான் இத்தனை பதிவு..//

ஆஹா.. அடுத்த பதிவுகளுக்கு கேமராவும் கையுமா கெளம்பிட்டிங்களா... சீக்கிரம் எல்லாத்தையும் எழுதுங்க தலைவா..

அப்புறம், நானும் உங்களுக்கு 'தேங்க்ஸ்' சொல்லிக்கறேன். உங்க நட்புக்கு.. (இதன் மூலம் எல்லா நண்பர்களுக்கும் சேர்த்து இந்த வாழ்த்து)

said...

Hiyaaaa 5 days Jolly! (unakku thaan karthi, thappa eduthukaathe) he hee :)
nalla suthu, photo nee pudippa atha naan sollave vendaam. kulirum, so udamba paathuko! :)

said...

அமெரிக்க கண்டத்தில் களப்பணி ஆற்றி தற்போது உல்லாச சுற்றுலா கிளம்பியிருக்கும் தலைவருக்கு போகும் இடமெல்லாம் தாரை தப்பட்டை முழங்க, ஆள் உயர மாலை போட்டு பூர்ண கும்ப மரியாதைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்:)(ஹிஹி அப்டியே ரேட்டிங் கொஞ்சம் பார்த்து போடுங்க தல)

Anonymous said...

நிறைய எழுதி எங்களை போதையாக்கிவிட்டு இப்பெ எழுதமாட்டேன்னு அடம் பிடிக்கிறது ஞாயமா?

நன்றி சொல்வதற்கெல்லாம் உங்களுக்கு லீவா? ஆஹா.. இதை இங்கேயும் அமல்படுத்த ஒரு போராட்டம் போடனுமே!!! ஹீ ஹீ..

said...

enjoy pannunga thalaiva... eda miss pannaalum andha vegas mattum miss pannidaadeenga...
solradu puriyumnu nenaikiren ;)

said...

/டீச்சர் வந்து ஏதாவது படிச்சுகிட்டு இருங்கன்னு சொல்லிட்டு போவாங்கள்ல..ஹிஹிஹி..அது மாதிரி தான் இதுவும்../
டீச்சரென்னவோ அப்படித்தான் சொல்வாங்க ஆனா நாம் அவங்க சொன்ன மாதிரி படிப்போமா என்ன?;)

said...

அட இன்னும் கிளம்பல?:)

C.M.HANIFF said...

Bon voyage ;-)

said...

என்னத்தைச் சொல்ல? நீங்க பாட்டுக்கு மாட்டி விட்டுட்டு நீஈஈஈஈஈஈஈண்ட வார விடுமுறைக்குப் போறீங்களே, இது நியாயமா? தர்மமா? தகுமா? முறையா? நீங்க திரும்பி வந்ததும் போனாப் போகுதுன்னு எழுதறேன்.

said...

என்ன இது திடீர்னு க்மெண்ட் மாடரேஷன் பண்ணறீங்க/ திடீர்னு எடுக்கறீங்க? சரி, மடிக்கணினி எடுத்துட்டுப் போறீங்க தானே?

said...

மறக்காம ஹாலிவுட் போயிட்டு வாங்க. அங்கே ஒரு தெருவிலே எல்லா நடிகர், நடிகை பேர் எல்லாம் பொறிச்சு வச்சிருக்கும், போய்ப் பாருங்க. நீங்க இருக்கிறது செண்ட்ரல் டைம், கலிபோர்னியாவிலே நேரம் மாறி இருக்கும். கடிகாரத்தைத் திருப்பி வச்சுக்குங்க, உங்களுக்குத் தெரிந்திருக்கும், இருந்தாலும் சொல்றேன்.

said...

சரவணபவன் ஹோட்டல் இருக்குன்னு நினைக்கிறேன். லாஸ் ஏஞ்சலீஸிலே? சரியாத் தெரியலை. இந்தப் பின்னூட்டம் போதுமா? இன்னும் வேணுமா?

said...

டிப்ஸுக்கு நன்றி சேதுக்கரசி.. நீங்க சொல்றமாதிரியே ஹெலிகாப்டரில் சுத்தறேன்

said...

//ஒரு வாரம் லீவா?.. எனக்கு இங்க வயிறு எரியுது.. ஏம்ப்பா , இந்தியாவில இந்த தேங்க்ஸ் சொல்றதுக்கு லீவு தர மாட்டாங்களா.. //
கணேசன், ஹிஹிஹி.. வறெல்லாம் எரியாதீங்க.. போயிட்டுவந்து கதை சொல்லி உங்களை கூல் பண்றேன்


//அப்புறம், நானும் உங்களுக்கு 'தேங்க்ஸ்' சொல்லிக்கறேன். உங்க நட்புக்கு.. (இதன் மூலம் எல்லா நண்பர்களுக்கும் சேர்த்து இந்த வாழ்த்து)

//
ரொம்ப நன்றிங்க கணேசன்.. உங்களை மாதிரி நண்பர்கள் கிடைக்க நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்

said...

//Hiyaaaa 5 days Jolly! (unakku thaan karthi, thappa eduthukaathe) he hee :)
nalla suthu, photo nee pudippa atha naan sollave vendaam. kulirum, so udamba paathuko!//

un lollukku alave illai ambi..

un caringu thanks nanbaa

said...

//தலைவருக்கு போகும் இடமெல்லாம் தாரை தப்பட்டை முழங்க, ஆள் உயர மாலை போட்டு பூர்ண கும்ப மரியாதைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்//

இப்படி ஒரு கொ.ப.செ கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் வேதா.. ரொம்ப நன்றிங்க வேதா


ரேட்டிங் தானே..கொ.ப.செவுக்கு இல்லாமலா

said...

//நிறைய எழுதி எங்களை போதையாக்கிவிட்டு இப்பெ எழுதமாட்டேன்னு அடம் பிடிக்கிறது ஞாயமா?
//
ஹிஹிஹி.. ஒரு ரவுண்டு அடுச்சுட்டு வந்து புயலா பதிவை போடுறேன் மை பிரண்ட்

said...

//enjoy pannunga thalaiva... eda miss pannaalum andha vegas mattum miss pannidaadeenga...
solradu puriyumnu nenaikiren //

hihihi..puriyuthu arun.. ana namakku konjam athellaam alergy.. thanks pa

said...

//அவங்க சொன்ன மாதிரி படிப்போமா என்ன//

வேதா. இந்த டீச்சர் கொஞ்சம் கண்டிப்பானவங்க

said...

தலைவியே, உங்க அன்புக்கும் பாசத்துக்கு நான் அடிபணிகின்றேன்..

மறக்காம அந்த பதிவை கொஞ்சம் போட்டுடுங்க

said...

Maams.....Super-a enjoy pannunga....foto ellam pudichi oru album podunga...hollywood pakkam pona appadiye oru padathula nadika mudiyumanu paarunga :))

Anonymous said...

//இந்த நன்றியளிப்பு (Thanksgiving day) விடுமுறைல ஊர் சுத்தப் போறேன்.. லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், கிரான்ட் கேனியன் மலைகள் னு மேற்குப் பக்கம் ஒரு பெரிய சுற்றுலா போறேன்//

oho.... appadiya...poyituu vaanga...vandhu engalukku antha padathaiyum kaminga!

//அடப் பாவி.. கமென்ட் வாங்குறதுக்கு இப்படி எல்லாம் ஒரு வழியான்னு நீங்க சொல்றது கேக்குறது.. புரியுது.. என்னங்க பண்றது..
// athu sari..illati mattum vitudava poraanga!

//அப்புறம் முக்கியமான விஷயம்..உங்க பதிவுக்கெல்லம் வந்து அட்டென்டன்ஸ் கொடுக்க முடியாது.. அதனால நிறைய கமெண்ட் போட்டு அதையெல்லாம் வந்து சரிகட்டிடுறேன்.. வர்ட்டா மக்களே..
//

enna solla vareenga enru onnum puriyala!

said...

nalla ooru suthu da ..fotos podu da..romba naal atchu bloggi ..inikku daan marupadiyum vandean .

said...

mu. ka

nalla ensoiiiiiiii
pannuga,,

nan soothi pakkatha edathium sethu pathutu vanga....

Anonymous said...

Hahaha.. ADAIMAZHAI mathriye thaan irku :P
Nice post! :)

said...

i want to read from the beginning.where are the archives?

said...

romba pannadinga, nanum en aaloda poven teriumla... :)

said...

rating podanum nu sonnade nan enbadalayum, kalyana ponnungradalayum, enaku extrava oru 500 madippen tevai enbadai terivithu kolgiren :)

said...

Welcome to West coast, hope you enjoy/enjoyed your trip, expecting a post regarding the same.

said...

super, innerathuku thirumba varanum, so eppo vareenga? Enjoy the vacation!!

Anonymous said...

//எனக்கு நல்லாவே கேக்குது.. ஸ்கூல்ல எல்லாம் இந்த டீச்சர் கொஞ்சம் அலுப்பா இருந்தலோ, இல்ல வெளில போறாங்கன்னா டீச்சர் வந்து ஏதாவது படிச்சுகிட்டு இருங்கன்னு சொல்லிட்டு போவாங்கள்ல..ஹிஹிஹி..அது மாதிரி தான் இதுவும்.. //

appadi podu...engayo poitinga...
nalla irukku :)

aama..idhukku friday comment potatha nyabagam..enga pochu athu??? oh..comment moderation nalaya :)

said...

நல்லா என்சாய் பண்ணிட்டு வந்துருப்பீங்கன்னு நினைக்கறேன்...லாஸ் வேகாஸ்ல எவ்வளவு சம்பாரிச்சீங்க ச்சே விட்டீங்க :-)

said...

//ஒரு அஞ்சு நாள் நிம்மதியா இருக்கலாம்ன இப்படி படுத்துறியேப்பான்னு நீங்க சொல்றது எனக்கு நல்லாவே கேக்குது.. //

நம்ம தலைவி கீதாக்காவ தான சொல்றீங்க... :-)

said...

//மத்திய அமைச்சர்கள் தரப் பட்டியல் போட்ட மாதிரி, நம்ம அமைச்சரவையிலும் ஒரு ரேட்டிங் போடலாமேன்னு.. அந்த தரப் பட்டியல் வந்தவுடனே போட்டுடுறேன்.. //

இப்படி வேற சொல்லிட்டீங்க...நான் எப்பவுமே உங்களுக்கு நிறையா கமெண்ட் போட்டுவேன் அதுனால கொஞ்சம் பார்த்து போட்டு குடுங்க :-)

said...

//இந்தியாவில இந்த தேங்க்ஸ் சொல்றதுக்கு லீவு தர மாட்டாங்களா..//


@KG, அதுதான் நமக்கு பொங்கல்,கேரளாவுல ஓனம்,ஆந்திரால சங்கராந்தி எல்லாம் இருக்கே :-)

said...

Hope you have enjoyed your Trip.
Sorry for the late Thanksgiving wishes.Enjoy!--SKM

said...

Hi

Just to say I am back. மெதுவா படிச்சு comment செய்றேன்

SLN

said...

அப்டி போடுங்க. நல்லா enjoy பண்ணியிருப்பிங்கனு நினைக்கறேன்.
ஆமா, hollywood directors லாம் உங்கள அங்கயே தங்க சொல்லி ஒரே அடமாமே..

நான் ஊர்ல இல்லாத நேரத்துல ranking க்கு நீங்க வச்சிருக்கர criterion ரொம்ப மோசம்.
சரி, நீங்க போன இடத்துக்கெல்லாம் உங்களுக்கு முன்னாடி போய் பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் பண்ணினேனே..அதுனால என்ன ranking ல முன்னாடி தள்ளி விடுங்க பாப்போம்..

said...

என்ன என் comment அ release பண்ண மாட்டேங்கறீங்க?

said...

enna thala..innum aala kanom...

loss vegas kalipu innum theralayaaaaaaaaaa

said...

உங்க பின்னூட்டதுக்கெல்லாம் நன்றி நண்பர்களே.. இந்த முறை உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியா பதில் பின்னூட்டம் போட முடியவில்லை.. ரொம்ப அசதியா இருக்கு ட்ரிப் போயிட்டு வந்ததுல