Saturday, November 11, 2006

மும்தாஜும் முந்திரிக்கொட்டையும்

பள்ளி வாழ்க்கையே ஒரு சொர்க்க வாழ்க்கை. அதுவும் எனக்கு அமைந்த நண்பர் கூட்டமும் அப்படி.. கூட்டமாய் சேர்ந்து கும்மி அடிக்கிறதில் ஒரு ஆனந்தமே உண்டு.. நான் என் ஊரில் இருந்து பஸ்ஸில் வந்து செல்வதால்..திண்டுக்கலில் இருந்து வர்ற நண்பர் கூட்டமும் உண்டு.. இவர்களுடன் சேர்ந்து கபடி விளையாண்டாலும் சரி, கால்பந்து விளையாண்டாலும் சரி.. பொழுதுபோறதே தெரியாது..

அப்படி இருக்க நண்பர் கூட்டத்தில் வேலுமணி ஒரு ஆள்.. இவன் தான் நான் சிஎம் உரை ஆற்றிக்கொண்டிருந்தப்போ எனக்கு சோடா கொடுத்து வகுப்பை விட்டு வெளில போனவன். இன்னமும் உரிமையோடு எதுனாலும் சண்டை போடுபவன். அப்போ நாங்கள் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்த டீச்சர் பேரு.. பேரு.. ம்ஹிம்.. பேரு ஞாபகம் இல்ல.. ஏன்னா அவங்களை நாங்க குருவின்னு தான் சொல்வோம்.. ஏன் அந்த பேர்ன்னு இன்று வரை தெரியாது.. ஆனா எங்களுக்கு முன்னாடி இருந்தவங்க அப்படித்தான் கூப்பிட்டாங்க.. நாங்க அப்படித்தான் அழைத்தோம்.. எனக்கு பின்னாடி வந்தவங்களும் அப்படியே.. எனக்கு தெரிஞ்சு டீச்சர்களுக்கு வைக்கிற பேர் தான் உலகத்துல விஷேசமான பேரா இருக்கும்.. இதை விட நான் எம்.சி.ஏ மதுரைல தியாகராஜர் காலேஜ்ல படிச்சப்போ, திருப்பூர்ல இருந்து சதீஷ்ன்னு ஒரு ஜூனியர் வந்தான்.. என்னை சின்ன வயசுல இருந்து கெண்டின்னு தான் கூப்பிடுவாங்க.. நீங்களும் அது மாதிரியே கூப்பிடுங்க அப்படின்னான்.. அதிசயமா இருந்தது.. பட்டப்பேரை சொல்லி இப்படியே கூப்பிடுங்கன்னு சொல்றானேன்னு..ஏன் அந்த பேருன்னு கேட்டதுக்கு..அவன் கண்ணாடி போட்டிருப்பான்.. அதனால அவனை ஸ்கூல்ல எல்லோரும் கண்ணாடி கண்ணாடின்னு கூப்பிட ஆரம்பிச்சு, அது அப்படியே மருவி கெண்டின்னு ஆயிடுச்சுன்னு சொன்னான்.. ஆனா பெரும்பாலும் நான் அவனை சதீஷ்னு தான் கூப்பிடுவேன்.. ரொம்ப நேரம் சதீஷ்ன்னு கூப்பிட்டு திரும்பலைனா, வேறு வழி இல்லாம கெண்டின்னு கூப்பிடுவேன்..

பெரும்பாலும் இந்த பட்டப்பேரே பலபேருக்கும் நிரந்தரமாயிடும்.. சொந்த பேரை சொல்லி ஒருத்தரை யாருக்காவது ஞாபகம் வரலைனா இந்த பட்டப்பேர் தான் உதவும்.. இன்னமும் என் கூட ஹாஸ்ட்டலில் தங்கியிருந்த பல பி.இ நன்பர்களுக்கும் கார்த்தின்னா ஞாபகம் வராது.. கடலை கார்த்தினாத் தான் ஞாபகம் இருக்கும்.. என் ஸ்கூல் ஜூனியர் பையன் ஒருத்தவனுக்கு எயிட்ஸ்னு தான் பேர். காரணம் என்னன்னு தெரியாது..இன்னமும் வில்சன் அவனை அப்படித்தான் கூப்பிடுவான்.. என் பள்ளில டபுள் எம்.ஏ முடிச்ச ஒரு வாத்திக்கு மாமா தான் பேரே.. இப்போ அவர் தலைமை ஆசிரியர்.. ஆனாலும் படிக்கிற பசங்களுக்குள்ள அவருக்கு அது தான் பேர்.. நான் பனிரெண்டாம் வகுப்பு படிச்சுமுடிச்சு பத்து வருசமாச்சு.. இன்னமும் அவருக்கு அது தான் அடையாளப் பேர்.

அப்படி எங்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்த குருவி (குருவே, மன்னிக்கவும்) டீச்சர், ஒரு நாள் கட்டுரை பரீட்சை வச்சாங்க.. ரெண்டு கட்டுரை எழுதணும். எல்லோரும் இடம்விட்டு இடம்விட்டு உக்கார்ந்து தான் பரீட்சை எழுதணும். அதனால பெரும்பாலும் தென்னந்தோப்புல தான் உக்காரச் சொல்வாங்க. என் நண்பன் வேலுமணி இருக்கானே..பிட் அடிக்கிறதுல பலே கில்லாடி. நமக்கு இதெல்லாம் பெரிய அலர்ஜி.. செஞ்சு பாக்கலாமேன்னு கூட செஞ்சதில்ல.. ஆனா அன்னிக்கு என்னடான்னா ஒரு பஸ் டிக்கட் பின்னாடி ரெண்டு ஆங்கில கட்டுரையையும் பிட் எழுதி இருந்தான். ஒரு பஸ் டிக்கட் பின்னாடி ரெண்டு திருக்குறள் எழுதுறதே பெரிய விஷயம். ஆனா அதுல அவன் 200 சொற்கள் கொண்ட ரெண்டு கட்டுரையையும் எழுதி இருந்தான்.. இப்போ நினச்சாலும் அது அதிசயமா இருக்கும்.. அதை பாத்து பரீட்சையும் எழுதி முடிச்சுட்டான். அவன் பண்ண தப்பு, அந்த பஸ் டிக்கட்டை பரீட்சைக்கு முன்னாடி, எழுதின பேப்பர் வாங்குற நேரம் வரைக்கும், சும்மா இருந்த நேரத்துல அவனுக்கு முன்னாடி ஒரு சின்ன குழியை தோண்டி அதுல புதைச்சுட்டான். குருவி டீச்சருக்கு தெரியும் பசங்களைப் பத்தி.. அதனால எல்லோரும் எழுதின பின்னாடி அப்படியே நாங்க பரீட்சை எழுதின இடத்துக்கு போய் ஒரு ரவுண்ட்ஸ் விட்டாங்க.. என்னடா இங்க மட்டும் மண்ணு தோண்டி கிடக்கேன்னு, அவங்க மறுபடியும் தோண்டினாங்க.. அவங்களுக்குன்னா ஆச்சர்யம்.. எப்படி இந்த பசங்க இவ்வளவு சின்ன இடத்துல ரெண்டு கட்டுரையை எழுதினாங்கன்னு.. என்னன்னமோ சொல்லி கேட்டுப்பாத்தாங்க..ம்ஹிம்.. பசங்க யாரும் யாரை சொல்லல.. கடைசி வரைக்கும் யார் அந்த ஆள்னு அவங்களுக்கு தெரியாது. ஆனா ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒண்ணுன்னா அந்த சம்பவத்தை தான் சொல்வாங்க..

என்னடா இப்படியொரு தலைப்பை வைத்துவிட்டு அதை பத்தி ஒண்ணுமே இல்லியேன்னு யோசிக்கிறீங்க.. சரியா.. காதல் தேசம் மற்றும் அமரன் படத்துல முஸ்தபான்னு ஒரு பாட்டு வருமே.. படம் முழுவதும் அப்படியோரு ஆளே இருக்க மாட்டான்.. அது மாதிரி தான் இதுவும்.. அங்க முஸ்தபா.. இங்க மும்தாஜ்.. அவ்ளோ தான் வித்தியாசம்.. அப்புறம் அந்த முந்திரிக்கொட்டை ஏன்னு நினைக்கிறீங்க..அதுவும் வேற ஒண்ணும் இல்ல.. எதையும் யோசிக்காம இப்படி ஒரு தலைப்பு வைத்த நான் ஒரு முந்திரிக்கொட்டை.. காரணம் ஓகேவா..

38 பின்னூட்டங்கள்:

said...

//கடலை கார்த்தினாத் தான் ஞாபகம் இருக்கும்//....romba correct-aana perudhaan vachi irukaanga :)

said...

Enna oru title-karanam...naal aaga aaga neenga thamizh cinema-ku etha aala marikite vareenga....ippadhan oru directorial touch-oda peru vachi irukeenga :))

said...

//romba correct-aana perudhaan vachi irukaanga//

Ahaa mapla.. enna ithu..

Mapla..first comment..ella timeum comment pottavanga solvaangka..oru changekku ippo naane solren

said...

//Enna oru title-karanam...naal aaga aaga neenga thamizh cinema-ku etha aala marikite vareenga....ippadhan oru directorial touch-oda peru vachi irukeenga //

mapla thanks.. seekiram eduththiduvom puthuppadaththai..

said...

கடைசியில தான் எல்லாமே புரியுது...

said...

en peru porkodi. asin en akka. nan yarnu teriudu ungaluku?!

said...

என்ன ஒரு தலைப்பு! என்ன ஒரு பதிவு? என்ன ஒரு படிப்பு? என்ன ஒரு ஆர்வம்? என்ன ஒரு பக்தி?என்ன ஒரு.........?! :D

Anonymous said...

பஸ் டிக்கெட் பின்னாடி ஒரு கட்டுரை எழுதின உங்க ப்ரெண்டோட திறமை
Super !!!

said...

che, title-a parthu asandhu poi naan innum reality-ke varala ;)

But the patta pergal ellam something classic, marakave mudiyadhu. Ennai thennai maram, panai maram, kokku, palli (just coz I wore a band that had a number of colored balls like lizard's eggs), KB girl adhu idhu-nu kooptu kalaichadhu ellam fond memories :)

said...

/கடலை கார்த்தினாத் தான் ஞாபகம் இருக்கும்/
அப்ப இனிமே தலைவர் கடலைன்னு கூப்பிடலாமா தலைவா:)

/பஸ் டிக்கட் பின்னாடி ரெண்டு ஆங்கில கட்டுரையையும் பிட் எழுதி இருந்தான்/
அவ்ளோ நேரம் எடுத்து கஷ்டப்பட்டு அதுல எழுதியதுக்கு படிச்சுட்டே வந்துருக்கலாம்:)

said...

//கடைசியில தான் எல்லாமே புரியுது...//

இன்பா, உங்களை வரவைப்பதற்கான ஒரு விளம்பர வாசகம் தான் இந்த தலைப்பு

said...

//che, title-a parthu asandhu poi naan innum reality-ke varala ;)//

enna panrathu usha..ellaaththaiyum attract pannavendi irukkE

//But the patta pergal ellam something classic, marakave mudiyadhu. Ennai thennai maram, panai maram, kokku, palli (just coz I wore a band that had a number of colored balls like lizard's eggs), KB girl adhu idhu-nu kooptu kalaichadhu ellam fond memories :) //

ayyO..pattaperai paththi pesinaalo, ezhuthinaalo.. naalellaam pOthathu priyaa

said...

//அப்ப இனிமே தலைவர் கடலைன்னு கூப்பிடலாமா தலைவா:)//

கூப்பிடலாம் வேதா..ஆனா எதிர்க்கட்சிகள் அதைவைத்து நமது கட்சியின் இமேஜை கெடுத்துவிடக்கூடாதே என்று தான் பார்க்கிறேன்..

//அவ்ளோ நேரம் எடுத்து கஷ்டப்பட்டு அதுல எழுதியதுக்கு படிச்சுட்டே வந்துருக்கலாம்:) //

இந்த திறமை இருக்கிறதால அவங்க அந்த திறமையை பத்தி யோசிக்கிறதே இல்ல, வேதா

said...

//en peru porkodi. asin en akka. nan yarnu teriudu ungaluku?! //

enna machchinichchi..unnai marakka mudiyuma.. enakku kooda sollala.. veetukku mooththa marumaka.. kalyaanavelai ellaam jaroora nadakuthaamla.. vaazhthukkal porkodi

said...

//பஸ் டிக்கெட் பின்னாடி ஒரு கட்டுரை எழுதின உங்க ப்ரெண்டோட திறமை
Super !!! //

ஆமாங்க சுந்தரி.. நிச்சயம் அது பெரிய திறமை தான்..

said...

//என்ன ஒரு தலைப்பு! என்ன ஒரு பதிவு? என்ன ஒரு படிப்பு? என்ன ஒரு ஆர்வம்? என்ன ஒரு பக்தி?என்ன ஒரு.........?! :D //

ஹிஹி..ரொம்ப நன்றிங்க மேடம்.. என்ன கைப்புள்ள பதிவை படிச்சிட்டு நேர இங்க வந்துட்டீங்க போல.. நிறைய "என்ன" தெரியுதுங்க மேடம்

said...

aaahaa!unga situkuruvi rangeku neegalum thalaippu koduthurukeenga.
bit adichittu adhai kuli thondi vera pudhaichu...teachergalukku patta per...nalla thennam thoppu paLLidhan.Rajini rasigar yeppo ajith rasigar aaneer?ippdi yellam koothadippanga nu keturukken. ippodhan koothadichavara pakuren.
vazhga,vazhga.:)--SKM

said...

/ippdi yellam koothadippanga nu keturukken. ippodhan koothadichavara pakuren.
vazhga,vazhga//

ayyo..SKM..ithellaam sample thaan.. innum niraiya irukku.. kathai kathaiyaa chollalaam.. ellamE manasula appadiye irukku..SKM

Anonymous said...

படிக்கும் வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் வைப்பதில் இருக்கும் குஷியே தனி குஷிதான். எத்தனையோ பேருக்கு நானும் என் நண்பர்களும் சேர்ந்து பெயர் வச்கிருக்கோம்.

ஆனால், the bestன்னு சொன்னா, நான் மலாக்காவுல (மலாக்கா மலேசியாவுல இருக்கும் ஒரு மானிலம்) படிக்கிறப்ப ஒரு பெண்னுக்கு "வாம்மா மின்னல்"ன்னு பேர் வைச்கொம். காரணம் என்னன்னா, நான் தங்கியிருந்த வீட்டில்தான், அவளுடைய நெருங்கிய தொழி தங்கியிருந்தாள். வீட்டுக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அவ்வளவு வேகமான ஸ்பீட்.

காமெடி என்னனா, ஒரு நாலு வருஷத்துக்கு பிறகு அந்த பொண்ணே என்னுடைய ரூம்மேட்டா வந்து சேர்ந்தாள். நாலு வருசத்துக்கு முன்பு, மூன்றே பேரு மட்டும் தான் "மின்னல் மின்னல்"ன்னு கூப்பிட்டுகொண்டிருந்தோம். இப்போ, 5 மாதத்திலேயே அந்த என் தோழியின் பெயர் "மின்னல்"ன்னு நிலச்சி நின்னுடுச்சி. கூப்பிடுறவங்க எண்ணிக்கை கணக்கே இல்லை. உண்மையான பேரு கூட அப்பபோ அவளே எனக்கு ஞாபகம் படுத்துவாள். நீங்க சொன்ன மாதிரி சொந்த பேரை சொல்லி கூப்பிட்டால், திரும்பி பார்க்காதவள், மின்னல்ன்னு கூப்பிட்டா, தடால்ன்னு திரும்பிபார்கிறாள். இப்போ அவள் பாடும் ஒரே பாட்டு "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!".

said...

//காதல் தேசம் மற்றும் அமரன் படத்துல முஸ்தபான்னு ஒரு பாட்டு வருமே//

ROTFL :) ada paavi, blog start panna puthusula nan thaan ipdi ellam dakaldi pannen, nee romba munaretta karthi. :)

said...

//ithellaam sample thaan.. innum niraiya irukku.. kathai kathaiyaa chollalaam.. //
sollungo,sollungo.Ketka nan thayar.
--SKM

said...

தலைவியின் போக்குவரத்தைச் சரியாகக் கண்டுபிடித்த உண்மைத் தொண்டர், தாற்காலிக முதல் அமைச்சர், (விட்டுக் கொடுக்க மாட்டேனே! :D) திருவாளர் "அசின் கார்த்திக்", தற்சமயம் "கடலை கார்த்திக்" மன்னிக்கவும், "தலைவர் கடலை" எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டவர் வாழ்க! வளர்க!. இன்னிக்கு tag போட்டு இருப்பீங்கனு நினைச்சு வந்தா ஒண்ணும் காணோமே?

said...

cooooooooool.. another nice post of urs.. super anna!!
Engal blog ulaga superstar, supreme star, top star, ilaya thalapathi, thala elamay enga annan thaango!!

said...

கடலை கார்த்திக், குருவி...

பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அந்த நாட்களை அழகாக நினைவில் கொண்டு வந்த கார்த்திக்.. நன்றி..

C.M.HANIFF said...

Talaippu super, athai vida ungal pathivu suuuuuuper ;)

said...

//இப்போ அவள் பாடும் ஒரே பாட்டு "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!".
//

மை பிரண்ட்..எப்பா.. உங்கள் அனுபவங்கள் ரொம்பவும் அருமையாக உள்ளது.. ஒவ்வொருவருக்கும் ஒரு தனி கதையே இருக்கும் இப்படி

said...

//ROTFL :) ada paavi, blog start panna puthusula nan thaan ipdi ellam dakaldi pannen, nee romba munaretta karthi//

Oh..Thanks ambi..ellaam un kitta irunthu kaththukittathhu thaan

said...

//sollungo,sollungo.Ketka nan thayar.
//

Oh..thanks SKM.. en kathaiyai kekkurathukkum oru al kidachchaachchu :-))

said...

//இன்னிக்கு tag போட்டு இருப்பீங்கனு நினைச்சு வந்தா ஒண்ணும் காணோமே?
//

போடுற அளவுக்கு இன்னும் நேரம் கிடைக்கல மேடம்.. அம்பியோட டாக்-ஐ சீக்கிரம் போடனும்

said...

//cooooooooool.. another nice post of urs.. super anna!!
Engal blog ulaga superstar, supreme star, top star, ilaya thalapathi, thala elamay enga annan thaango!!
//

Sis, enna ithu thideernnu evlo per annanukku..:-))

said...

//கடலை கார்த்திக், குருவி...

பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அந்த நாட்களை அழகாக நினைவில் கொண்டு வந்த கார்த்திக்.. நன்றி..

//

நன்றி தாரிணி.. அடிக்கடி வாங்க.. இன்னும் நிறைய பழைய சம்பவங்களை நாம் ரசிக்கலாம்

said...

//Talaippu super, athai vida ungal pathivu suuuuuuper ;) //

Thanks haniff..

said...

ஏதோ ஒரு தலைப்ப வச்சிட்டு, ஏதோ எழிதி, எப்படியோ சமாளிச்சிட்டிங்க.

bus ticket பிண்ணாடி 2 கட்டுரையா - பயங்கர திறமைசாலி போல.

said...

என்ன பண்றது ப்ரியா.. அப்பப்போ இந்த மாதிரி சில ஈர்க்கும் விளம்பரங்களை போட வேண்டியிருக்கே

said...

//கடலை கார்த்தினாத் தான் ஞாபகம் இருக்கும்//

அப்போவே காரியத்துல கண்ணா இருந்து இருக்கீங்க :-)

said...

//திண்டுக்கலில் இருந்து வர்ற நண்பர் கூட்டமும் உண்டு//

ஆகா என்னடா நம்ப ஊரு வாசனை வருது.. இதோ பிளாக்லயும் வந்தாச்சு.. நானும் திண்டுக்கல்லுதான்..

பட்டப்பெயர் வைக்கிறதுல இந்த வாத்திமாருக்கு வைக்கிறதுல ஒரு இண்ட்ரஸ்ட்..

nice moments..

இதே மாதிரிதான்,நான் ஸ்கூல் படிக்கிறப்ப எங்க ஸ்கூலில் Basketball state level tournament நடக்கும்.விளையாட வர players la irunthu refree varaikum peru vachu irukkom

athla "Action bava" nu oru refree. entha oru foul pannilaum atha appadiye senju kamiparu.. athu nabagam vanthucu

nice post...alagana thalippu

said...

//அப்போவே காரியத்துல கண்ணா இருந்து இருக்கீங்க //

ஹிஹிஹி..என்ன பண்றது நாட்டாமை

said...

//ஆகா என்னடா நம்ப ஊரு வாசனை வருது.. இதோ பிளாக்லயும் வந்தாச்சு.. நானும் திண்டுக்கல்லுதான்..//

வாங்க மணி.. திண்டுக்கல்ல எங்கே வீடு.. நான் பத்தாம் நம்பர் பஸ் போற அ. வெள்ளோடு