Sunday, November 19, 2006

என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி

பழைய தமிழ் பாடல்களை ரீமேக் என்னும் பெயரில் இப்போதைய இசை அமைப்பாளர்கள் மாற்றி இசை அமைத்து வருவது நாளுக்கு நாள் பெருகி வருகிறது.. சமீபத்தில் வாத்தியார் படப் பாடல்களை கேட்கும் போது, வாங்க மாப்பிள்ளை வாங்க படத்துக்காக ஷங்கர் கணேஷ் இசையமைச்ச என்னடி முனியம்மா பாடலை ரீமேக் பண்ணின புது வடிவத்தை கேட்டுகொண்டிருந்தேன்.. நன்றாகத் தான் பண்ணியிருக்கிறார்கள்.. இந்த மாதிரி புது இசை வடிவம் பழைய பாடல்களுக்கு கொடுப்பதை நான் மிகவும் வரவேற்கிறேன்.. நான் பிறந்து சிறு வயதாய் இருக்கும் காலத்திலே கல்யாண வீடுகளில் ஒலிப் பெருக்கியில் கேட்ட ஞாபகம்.. அதற்குப் பிறகு அப்பப்போ வானொலியில் கேட்டிருக்கிறேன்.. இந்த மாதிரி புது வடிவம் கொடுப்பதால் பழைய பிரசித்தி பெற்ற பாடல்களை மறுபடியும் கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது.. அதுவும் இது எல்லா தரப்பு வயதினரையும் இது மகிழ்விக்கும்.

எனக்கு சரியாக ஞாபகம் இல்லை, இந்த மாதிரி ரீமேக் பண்ணுவது எப்போ ஆரம்பித்தது என்று. ஆனால் குறும்பு படத்தில் யுவன் தனது அப்பா இசையமைத்த அடுத்த வாரிசு படப் பாடலான ஆசை நூறு வகை தான் இந்த புதுவடிவ இசைக்கு வாசல் திறந்துவிட்டது என்று நினைக்கிறேன். அப்போது இப்படி செய்வது புதிதாக இருந்தது.. எல்லார் புருவங்களையும் கொஞ்சம் உயர வைத்தது.

அதன் பிறகு மன்மதனில் என் ஆசை மைதிலியே என்றும், வல்லவனில் காதல் வந்திடுச்சு எனவும் அவர் பழைய பாடல்களுக்கு புதிய இசைகருவிகளில் புதிய வடிவத்தை போட்டு கால்களை தாளமிட வைத்தார். தாஸ் படத்தில் அவர் அப்பாவின் நீங்கள் கேட்டவை பாடலான அடியேய் மனம் நில்லுன்னா நிக்காதடியை வா வா வா நீ வராங்காட்டி போ போ போன்னு அப்படியே 'காப்பி' அடிச்சிருந்ததை இப்போதைக்கு இங்கே மறந்துவிடுவோம்.

யுவனுக்கு ஒரு படி மேல போய் பழைய பாட்டின் பிரசித்தி இன்னும் எல்லோர் மனங்களிலும் இசைக்கப்படும் படகோட்டி பட தொட்டால் பூ மலரும் பாடலை, புது இசை வடிவம் மட்டுமல்லாது புதிய மெட்டிலும் விருந்து படைத்தார் இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான். இந்த பாட்டு பழையதை போன்றே மிகவும் ரசிக்கப்பட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இப்படி பழைய பாடல்களை புதிதாக அடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பின்னே வருபவருக்கு, இப்போது இருக்கும் மிகவும் இளையவருக்கும் அந்த பழைய பாடல்கள் மறந்து போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. சில பேர் பழங்கால புராதான சின்னங்களுக்கு புதிய வர்ணம் பூசுவது போலவும், அது அந்த பழைய அழகை மறைத்துவிடும் என்று சொல்வதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லவற்றுக்கும் எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. ஆனால் மறந்து போன பழைய பாடல்களையே இவைகள் நிச்சயம் ஞாபகமூட்டும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இப்படி செய்வது ரசிக்கத்தான் வைக்கிறது. நிச்சயம் வரவேற்கலாம்.

30 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Neengal sollvathu varaverka thakkathey ;)

இராம்/Raam said...

கார்த்திக்,

இந்த பாட்டை கேட்டேன். நல்லா இருக்குங்க!

மு.கார்த்திகேயன் said...

Haniff..Neenga yaaru..pattu pattunnu mutha ALa comment podureenga..Nammalai asathureenga.. makkal vera puliyotharai kodukirathukku payanthukittu naan thaan haniff kira perla first comment poduratha solraanga.. ungalai paththi konycham chollungalEn haniff..

மு.கார்த்திகேயன் said...

//இந்த பாட்டை கேட்டேன். நல்லா இருக்குங்க//

ஆமா ராம், இந்த மாதிரி பாடல்கள் புதுசாவும் இளமையாவும் இருக்கு ராம்

Anonymous said...

dear m.k.
I'm from pondicherry, now living & working in France, tamil blogs patri terinthu athil romba interest ipothu, neengal sonnathu poll oru bothai , avalavu taan ,neengal todarnthu esuthungal, continue ;)

Bharani said...

enna Maams....oru rendu naal ooruku poyitu varadhukulla naalu post potuteenga :))

Bharani said...

Even i liked the song...ennadi muniyamma....karthik nalla paadi irukar...sema gramathu kuttu paatu :))

Bharani said...

ippadi remake panradhu thappu illa....aana konjam too much-a poi ivanga pudhu patte podama, 6 paatayum pazhasa eduthu potudara nelama vandhuda koodathu :))

Bharani said...

Appuram pudhu photo supper...oru naayagan uruvaagiraan :))

Anonymous said...

I think first remake song happened in the S.J.Surya and Simran movie.

But I can not remember the movie name

Syam said...

//இப்படி பழைய பாடல்களை புதிதாக அடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பின்னே வருபவருக்கு, இப்போது இருக்கும் மிகவும் இளையவருக்கும் அந்த பழைய பாடல்கள் மறந்து போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன//

ரீமிக்ஸ் பாடல்கள் கேட்க நல்லா இருந்தாலும்...நீங்க சொல்றது சரிதான் :-)

Syam said...

//makkal vera puliyotharai kodukirathukku payanthukittu naan thaan haniff kira perla first comment poduratha solraanga//

எப்படியோ அது நீங்க இல்ல...haniff France ல இருக்காருனு சொல்ல வெச்சுட்டீங்க :-)

Priya said...

Indha patta innum kekkala. ana, I like think kind of re-mix songs. Ennoda favorite 'en aasai mythiliye'.
I think this works better for dabbanguthu songs, than melodies.

Priya said...

//makkal vera puliyotharai kodukirathukku payanthukittu naan thaan haniff kira perla first comment poduratha solraanga.. //

Neengale unga vaayala othukittingale. Pondy, France nu adichu vitta nambiduvoma enna?

Arunkumar said...

பழைய பாட்ட காப்பி அடிச்சு புதுசா போட்டா ரசிக்கிறீங்க.

நம்ம தேவா "Back Street Boys"அ காப்பியடிச்சு மேற்கத்திய இசையை தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்தா திட்றீங்க...

நன்றி கெட்ட உலகமடா இது :)

EarthlyTraveler said...

"old is gold "always.They are golden melodies.--SKM

மு.கார்த்திகேயன் said...

//ஆனா பாட்டுல நடன அசைவுகள் முகம் சுளிக்கிற மாதிரி தான் இருந்தது,//
eppovellaam iNtha maatiri asaivukal illaama paadalkaLE varRathillai vethaa..enna seyya..
// ஆனா அர்ஜுன் ரொம்ப நாள் கழிச்சு சூப்பரா இருக்கார் இந்த பாட்டுல//
hmm..arjun rasikaiyaa neenga vethaa

மு.கார்த்திகேயன் said...

//I'm from pondicherry, now living & working in France, tamil blogs patri terinthu athil romba interest ipothu, neengal sonnathu poll oru bothai , avalavu taan ,neengal todarnthu esuthungal, continue//

Oh.. Great to know haniff..

Thanks for dropping here regularly

மு.கார்த்திகேயன் said...

//enna Maams....oru rendu naal ooruku poyitu varadhukulla naalu post potuteenga //

mapla, evlo post podurathukkum oru karanam irukku.. solren innum moonu NaaLla

மு.கார்த்திகேயன் said...

//sema gramathu kuttu paatu//

original versionae kalakalaa irukkum mapla.. ithula innum merukeththi irukkaanGka

மு.கார்த்திகேயன் said...

//Appuram pudhu photo supper...oru naayagan uruvaagiraan //

O..Thanks Mapla..

Maplana Mapla thaan..

மு.கார்த்திகேயன் said...

//I think first remake song happened in the S.J.Surya and Simran movie.//

Anon, athu thaan thottaal poo malarum song, new padathula..postla solli irukkenappaa

கோவி.கண்ணன் [GK] said...

கார்திகேயன்,

என்னடி முனியம்மா பாடலை இசை அமைத்தவர் சங்கர்கனேஷ் அல்ல, அந்த பாடலை பாடிய டி.கே.எஸ் நடராஜன் தான். ரீமிக்ஸ் பாடல்காட்சிகளில் இருக்கிறார். 80 களில் இந்த பாடல் மிகவும் பிரபலம்.

மு.கார்த்திகேயன் said...

/எப்படியோ அது நீங்க இல்ல...haniff France ல இருக்காருனு சொல்ல வெச்சுட்டீங்க //

நாட்டாமை..தீர்ப்ப மாத்துங்க

மு.கார்த்திகேயன் said...

//I think this works better for dabbanguthu songs, than melodies.//

super point priyaa.. innum yaarumE intha mmathiri remixai meldoy paattukku pOdala.. very good observation priya!!

மு.கார்த்திகேயன் said...

//Neengale unga vaayala othukittingale. Pondy, France nu adichu vitta nambiduvoma enna?
//

priya..enna ithu Naattaamai kooda chernthukittu thalaivarai chanthekap padalaamaa

மு.கார்த்திகேயன் said...

//நம்ம தேவா "Back Street Boys"அ காப்பியடிச்சு மேற்கத்திய இசையை தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்தா திட்றீங்க...
//

அருண். தேவாக்கு இப்படி ஒரு சப்போர்ட்டா..

மு.கார்த்திகேயன் said...

//"old is gold "always.They are golden melodies.//

correctaa sonneenga SKM

Anonymous said...

ரீமிக்ஸ் பிரபலமா ஆனதுக்கு முக்கிய காரணம்ன்னு குறிப்பிடனும்ன்னா ஆதித்யனைதான் குறிப்பிடனும்.

அவர்தான் முதன் முதலில் "பழைய பாட்டு புதிய மெட்டு"ன்னு ரெண்டு மூனு ஆல்பம் வெளியிட்டார். அதுவரையில் பழைய பாட்டே கேட்காத நான் (எங்க அம்மா கேட்டுகொன்டிருந்தாலும், வானொலியை off பண்ணிடுவேன்), இப்போ நிறைய பழைய பாடல்களை என் computer-ல வைத்திருக்கிறேன்.

Anonymous said...

என்னடி முனியம்மா பாடலை இசை அமைத்து பாடியது TKS நடராஜன் னு நினைக்கிறேன்..

Remix is ok.ஆனாலும் பழைய பாடல கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து விடுறோம்...

paliya songskum ethavuthu link kooduthuta nalla irukkum

எல்லாரையும் திரும்பி பாக்க வைக்கிறதுனால ... Good wrk..