Tuesday, November 21, 2006

காதலனே கண்கண்ட தெய்வம் - பகுதி 3

காதல் ஆக்க்ஷன் நகைச்சுவை என எல்லா ரசமும் கொண்ட தொடர்கதை...

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

தூரத்தில் இன்ஸ்பெக்டர் இன்பவேலன் தனது ஜீப்பில் வந்து கொண்டு இருந்ததை பார்த்ததும் அப்படியே காளிதாஸை இழுத்து கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு அடர்ந்த புதருக்குள் ஒளிந்தான் சண்முகம். இன்ஸ்பெக்டர் ஜீப் இந்தப் பக்கமே வராமல் வேற பக்கம் போவதை பாத்து பெருமூச்சு விட்டான் சண்முகம். காளிதாஸ்..டேய்.. வாடா போலாம்.. அந்த இன்ஸ்பெக்டர் நாய் அந்த பக்கம் போகுது..வா நாம போகலாம்னு கூப்பிட்டாலும் ரெண்டு ரவுண்டு ஓவரா விட்டதுல காளிதாஸால நடக்கவே முடியல.. அவனை அள்ளி ஆட்டோல போட்டுகிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக ஆட்டோவில் கிளம்பினான் சண்முகம்.

சண்முகம் பிளான் பண்ணின அந்த திங்கள் கிழமை...

அந்த கம்பெனியின் கேன்டீன்..
கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது..

காவ்யா.. இன்னைக்கு அம்மா திருநெல்வேலி போறாங்க..அதனால அவங்கள கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்ல ரயிலேத்திவிடணும். அதனால சீக்கிரம் கிளம்பிடுவேன். நீ ஏதாவது ஷேர் ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டல் போயிடுடா..சரியா.. சூடா இருந்த கேண்டீன் டீயை ருசித்தபடி கொஞ்சலுடன் காவ்யாவுடன் பேசிகிட்டு இருந்தான் கதிர். காவ்யாவுக்கு என்னமோ அவன் விட்டு ரொம்ப நாள் பிரியப் போறதா கவலை. அவன் பேசினதுக்கு கூட இம் கொட்டாமல்.. சூடான அந்த காபியையே பார்த்து கொண்டிருந்தாள். ஏய்..கவி..என்ன கப்பல் கவிந்த மாதிரி இருக்க.. அது தான் உன் ஹீரோ முன்னாடியே உட்கார்ந்து இருக்கார்ல.. நீ கன்னிதீவுல இருந்தாலும் வந்து காப்பாத்துவாருல.. என்று கிண்டலடித்துகொண்டே வந்தாள் பாவனா.. கூடவே பவித்திராவும்.. போங்கடி.. என்னை வம்பிழுக்கலைனா உங்க ரெண்டு பேருக்கும் பிஸாவே உள்ள இறங்காதே.. அழகான விழிகளில் நடனமாடியபடியே கோபப்பட்டாள் காவ்யா.. இவள் என்ன செய்தாளும் அழகு.. சின்னப் புருவம் கூட என்னமாய் பேசுது காவியங்கள் என்று அவளை ரசித்தபடியே உட்கார்ந்து இருந்தான் கதிர்.. தோ பாருங்கடா.. இங்கே ஐயா ஆஸ்திரேலியாவுல டூயட் பாட கிளம்பிட்டாரு.. பவி..வாடி..நம்ம இங்க இருந்தா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நம்மள குரூப் டான்ஸர் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிடுவாங்க என்றபடி பவித்ராவை தள்ளிகிட்டு போனாள் பாவனா. பாவனா, பவித்ரா, காவ்யா, கதிர் எல்லோரும் ஒரே டீம்.. இவங்க நாலு பேரும் ஒரு மினி குரூப்.. ஆட்டம், பாட்டம், கும்மாளம்னு தான் இருப்பாங்க இவங்க நாலு பேரும் ஒண்ணு சேர்ந்தாலே..

ஆபீஸ்ல அந்த வீல் வச்ச சேர்லயே தான் இந்த பக்கம் அந்த பக்கம்னு போவா பவித்ரா.. சேரை உருட்டிகிட்டு பாவனா பக்கத்துல வந்தா பவித்ரா..பாவனா.. இன்னைக்கு நான் சீக்கிரம் கிளம்புரேண்டி..அம்மாவை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகனும்.. அண்ணனை பத்தி தான் தெரியுமே.. நீ பாத்து கிளம்பிக்கடி..சரியா.. பை..னு சொல்லிவிட்டு சேரிலேயே நகர்ந்து அவளோட சீட்டுக்கு போய் கைபையை எடுத்துகிட்டு கிளம்பினாள் பவித்ரா..

ஆபீஸ் முடிஞ்சு வேண்டாவெறுப்பாய் கிளம்பினாள் காவ்யா.. இப்பவெல்லாம் கதிரை பிரிஞ்சு இருப்பதே கொடுமையான நேரமாயிடுச்சு காவ்யாவுக்கு.. சொல்லமுடியாத உணர்வாய் இருந்தது அவளுக்கு..யார்கூடவும் மொத மாதிரி கலகலப்பாய் பேச முடியல.. அப்படியே நடந்து வேளச்சேரி பஸ்ஸ்டாண்டுக்கு வந்தாள்.. ஹ்ம்ம்..எவ்வளவு நேரம் நின்னுகிட்டு இருந்தாலும் பஸ் வராது.. வந்தாலும் கூட்டம் தாளாது.. பேசாம ஏதாவது ஆட்டோ இருந்தா கிளம்பிடவேண்டியது தான் என்று அவள் நினைத்த சமயத்தில் ஒரு ஷேர் ஆட்டோ அவள் பக்கத்தில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய காளிதாஸ் எங்கேமா போகணும். என்று காவ்யாவை பார்த்து கேட்டான். கொட்டிவாக்கம் போகணும்..என்றாள் காவ்யா.. அங்கே தாம்மா போறோம்..ஏறிக்கோ..போலாம் என்று காளிதாஸ் சொல்ல ஆட்டோவுக்குள் ஏறி அமர்ந்தாள்.. தூரத்தில் நின்றுகொண்டிருந்த சண்முகம் மெதுவாக சிரித்துகொண்டே ஷேர் ஆட்டோவை நோக்கி நடக்க ஆரம்பித்தான். டீக்கா பேண்டு சட்டை போட்டு இன் செய்து..ஷூ எல்லாம் போட்டு ஏதோ பெரிய கம்பெனியில் வேலை செய்பவன் போல ஷோக்கா இருந்தான் சண்முகம். அது தான் சண்முகம்.. எந்த வேலை செய்தாலும் அவ்ளோ பெர்ஃபெக்க்ஷன்.

இன்னைக்கு அம்மாவை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போக பவித்ரா வீட்டுக்கு சீக்கிரம் வந்துட்டா.. இன்னைக்கு பாவனா தனியாத்தான் ஆபீஸ்ல இருந்து கிளம்புவாள்.. எப்படியும் அவள் கிட்ட என் காதலை சொல்லிடணும்.. இப்படி ஒரு அணையா தீய மனசுல வச்சுகிட்டு ஒரு வேலையும் செய்ய முடியல.. பழமோ காயோ இன்னைக்கு சொல்லிட வேண்டியது தான் என்று வீட்டிலிருந்து காக்கிச் சட்டையில் இல்லாமல் அழகான இளைஞனாய் டி-சர்ட் ஜீனில் பைக்கில் கிளம்பினான்.. நாலு தடவை கண்ணாடியில் முகம் பார்த்தான்.. ஐந்து தடவை தலை வாரினான். எப்படியும் வேளசேரில தான் பஸ் ஏறுவா.. அங்க போய் பிடிக்கணும் என்றவாறு பைக்கில் வேகமெடுத்தான் வேளச்சேரிக்கு..

எக்ஸ்க்யூஸ்மீ.. ஆட்டோ எங்கே போகுது.. கேட்டுகொண்டே காளிதாஸை நெருங்கினான் சண்முகம். கொட்டிவாக்கம் போகுது சார்..ஏறி பின்னால உக்காரு சார்..போகலாம்..என்று சண்முகத்தை பார்த்து ஒரு கள்ளச் சிரிப்புடன் சொன்னான் காளிதாஸ்.. சண்முகம் ஏறி உக்கார்ந்தான்.. சே..என்ன ஒரு மல்லிகைப்பூ வாசனை.. காசு கொடுக்குற எவகிட்டயும் இந்த வாசனை வர்றதில்லையே என்று நினைத்து கொண்டான்..

சார்..ஆட்டோ திருவான்மியூர் போகுமா என்றவாறு ஒரு இளைஞன் கேட்டான்..காளிதாஸுக்கு உடம்பு படபடத்தது...திருவான்மியூர்ல எங்க போகணும் என்று கேட்டான் சன்னமான குரலில்.. தியாகராஜர் தியேட்டர் ஸ்டாப்புக்கு போகனும்..போகுமா.. என்றான் அவன்..இல்லப்பா..வண்டி இப்படியே உள்ளாற போயிடும்..அந்தப் பக்கமெல்லாம் போகாது என்றான்.. பதில் சொல்லி முடிக்குமுன்னே அவனுக்கு மூச்சு வாங்கியது.. அந்த இளைஞன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். ஆட்டோவை உடனே கிளப்பிட வேண்டியது தான் என்று டிரைவர் சீட்ல போய் உக்கார்ந்தான்.

அதே நேரம் ஆட்டோ அருகில் பாவனா வந்தாள்..எக்ஸ்க்யூஸ்மீ..ஆட்டோ எங்கே போகுது என்று காளிதாஸை பார்த்து கேட்டவள் காவ்யாவை பார்த்தாள்.. ஹே.. கவி.. எங்கே.. கொட்டிவாக்கதுக்கு தானே..பவித்திரா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டாள்..நானும் வர்றேன்..என்றவாறு ஆட்டோக்குள் பார்த்தாள். ஏங்க..கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்களேன்..அவ என் பிரண்ட்..நான் அவள் பக்கத்துல உட்கார்ந்துக்குறேன்..என்று பாவனா சண்முகத்தை பார்த்து கேட்டாள்.. அவனும் வேறு வழி இல்லாமல் இந்த நகர்ந்து உட்கார்ந்தான்.. பாவனா ஏறி காவ்யா பக்கத்துல உட்கார்ந்தாள்..

பாவனா ஏறி உக்கார, தூரத்தில் இருந்து இன்பவேலன் அவளை பார்த்தான்.. சரி..பக்கத்துல போய் அவளை கூப்பிடலாம்னு ஆட்டோ பக்கத்துல போனான்..பாவனா அந்தப் பக்கம் திரும்பி காவ்யாகிட்ட ஏதோ கதையடித்து கொண்டிருந்தாள்.. இன்பவேலன் அவளை கூப்பிட நினைக்க, காளிதாஸ் இவனை பார்த்ததும் ஆட்டோவை வேகமா கிளப்பினான்.. இன்பவேலன் காலிதாஸையும் பின்னால் உட்கார்ந்து இருந்த சண்முகத்தையும் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.. அந்த கணப்பொழுதில் ஆட்டோ இவனை கடந்து தரமணி ரோட்டில் வேகமெடுத்தது..

அதே நேரம்..ஆஹா..ஒண்ணுக்கு ரெண்டு பட்சி..எப்படியாவது அந்த இன்பவேலன் கண்ணுல மண்ணை தூவிட்டா இன்னிக்கு முழுவதும் விடிய விடிய சொர்க்கம் தான் என்று நினைத்துகொண்டே தன் பாக்கெட்டில் இருந்த மயக்க ஸ்ப்ரேயை மெதுவாக எடுத்தான் சண்முகம்.

(தொடரும்)

21 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ungke post padikkum mun, oru attendence podduduren! hehehe!!!

said...

welcome my friend :-))

said...

Aaha.. first comment indha vaatiyum missa? paravaa illa next tie try pandren :)

Hehe.. Kadhaiya cinema rangukku kondu poreenga... Supera irukku.. Adutha episodela chasing scene fight scenelaan irukkum pola :)

Andha chairliyae poi pesaradhellam enga oppicela dhinam dhinam nadakkum sangadhigal.. Appadiyae livelya kadhaiya kondu poreenga.. Vaazhthukkal :)

said...

நல்லாத் தான் கொண்டு போறீங்க. சரி, வழக்கமான முடிவு வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்.
நறநறநற, நீங்க கமெண்ட் கொடுக்காட்டியும் நான் வந்து கொடுத்திருக்கேன். நினைவு வச்சுக்குங்க. அப்புறம் இருக்கு உங்களுக்கு ஒரு ஆப்பு! :D

said...

//Kadhaiya cinema rangukku kondu poreenga... Supera irukku.. Adutha episodela chasing scene fight scenelaan irukkum pola //

AmA G3, ella scene unndu.. kathai makkalai summa ukkaarnthu pakka vaikkanum.. commerciala irunthaaththaan padikiravangalukkum pidikkum illiyaa..

//Andha chairliyae poi pesaradhellam enga oppicela dhinam dhinam nadakkum sangadhigal..//

G3, Naane appadi panra alu thaan

said...

//கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்.//
medam, next story vena viththiyaasama irukkum.. ana ithu first naala konjam masala ellaam seththu koduththirukken.. appathaane padikiravangalukku pidikkum

//
நறநறநற, நீங்க கமெண்ட் கொடுக்காட்டியும் நான் வந்து கொடுத்திருக்கேன். நினைவு வச்சுக்குங்க. அப்புறம் இருக்கு உங்களுக்கு ஒரு ஆப்பு! //

oru naal late a vantha ippadiyaa vanathukkum poomikkum kuthikkirathu..hmmm

said...

/நம்ம இங்க இருந்தா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நம்மள குரூப் டான்ஸர் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிடுவாங்க/
விவிசி:)
/இவள் என்ன செய்தாளும் அழகு.. சின்னப் புருவம் கூட என்னமாய் பேசுது காவியங்கள்/
அட அட என்னே உவமை:) ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க,அனுபவமோ?;) பின்ன நம்ம தலைவர் கடலை சாகுபடியில் நிபுணர் ஆச்சே;)

பயங்கர சஸ்பென்ஸ்ல முடிச்சுட்டீங்க, அடுத்த பாகம் ஒரே ஆக்ஷன் கலந்து இருக்குமோ?:) நல்லா கொண்டு போறீங்க கதையை:)

Anonymous said...

haa...namma first 10 commentla vandhutomla :)

kadhai supernga...aana, munnadi pagangal inime thaan thedi padikanum LOL

aduthathu eppo?

said...

//நம்ம இங்க இருந்தா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நம்மள குரூப் டான்ஸர் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிடுவாங்க என்றபடி பவித்ராவை தள்ளிகிட்டு போனாள் பாவனா. பாவனா//

கற்பனை செஞ்சு பார்த்துக்கிட்டேன். சிரிப்பு வந்தது..

கார்த்திக்.. நீங்க பண்றது நல்லாவேயில்லை.. ஒருநாளைக்கு நாலு போஸ்ட் போடும் நீங்கள் இந்த சஸ்பென்ஸ் கதையை மட்டும் தள்ளித் தள்ளிப் போடுவது நியாயமில்லை...

சீக்கிரம் சொல்லுங்கப்பா, என்ன ஆச்சுன்னு..

said...

vazhakam pola interestinga kondu poi kitte irukeenga Maams....naanum ippadi edachum ezhudhanumnu try panren....hmmm...mudiyala :)

said...

செம திரில்லிங்கா கொண்டு போறீங்க...இன்னும் எத்தனை எபிசோட் இருக்கு :-)

said...

//Andha chairliyae poi pesaradhellam enga oppicela dhinam dhinam nadakkum sangadhigal..//

@g3, unga aapicela pesarathu mattum thaana nadakuthu...velai ellam yaarum seira maathiri theriala :-)

said...

//கார்த்திக்.. நீங்க பண்றது நல்லாவேயில்லை.. ஒருநாளைக்கு நாலு போஸ்ட் போடும் நீங்கள் இந்த சஸ்பென்ஸ் கதையை மட்டும் தள்ளித் தள்ளிப் போடுவது நியாயமில்லை//

@KG, கரெக்டா சொன்னீங்க...அடுத்த பாகம் படிக்கறதுக்குள்ள பழசு மறந்துடுது :-)

Anonymous said...

ippothiku only attendance... appalika vanthu yella part'a yum kanukuren...

said...

//பயங்கர சஸ்பென்ஸ்ல முடிச்சுட்டீங்க, அடுத்த பாகம் ஒரே ஆக்ஷன் கலந்து இருக்குமோ?:) நல்லா கொண்டு போறீங்க கதையை:)
//

இதை படமா எடுத்தாக்கூட சும்மா மசால படம் மாதிரி விறுவிறுன்னு போகணும் வேதா.. அதனால எந்த வித்தியாசமான முடிவாகவும் இருக்காது

said...

//kadhai supernga...aana, munnadi pagangal inime thaan thedi padikanum LOL
//

kattaayam padinga dreamzz.. theda ellaam vendaam..link koduththu irukkene..

said...

/கார்த்திக்.. நீங்க பண்றது நல்லாவேயில்லை.. ஒருநாளைக்கு நாலு போஸ்ட் போடும் நீங்கள் இந்த சஸ்பென்ஸ் கதையை மட்டும் தள்ளித் தள்ளிப் போடுவது நியாயமில்லை...
//

கணேசன்..சொல்லிட்டீங்கள்ல சீக்கிரம் அடுத்த பாகத்தை போட்டுடுறேன்

said...

//naanum ippadi edachum ezhudhanumnu try panren....hmmm...mudiyala //

mapla..nee thaan super-a ezhuthuviye.. maram valarththappo padichchene..

said...

//அடுத்த பாகம் படிக்கறதுக்குள்ள பழசு மறந்துடுது//

நாட்டாமை..சீக்கிரம் அடுத்த பதிவை போடுறேன்..

said...

நல்லா போகுது கதை.characters லாம் recall பண்ணி படிச்சேன் :)

said...

:-(( Sorry priyaa, for this long gap..