Saturday, November 04, 2006

நான் வளர்கிறேனே அம்மா (300வது பதிவு)

இது எனது முந்நூறாவது பதிவு..

முதல் பதிவு எழுதும் போது, இருந்த மனநிலையே வேறு. இது ஏதோ டெக்னிக்கல் விஷயம் பேசுவதற்காக மட்டுமே என்று நினைத்திருந்தேன். ஒரு வருடமாக அப்படித்தான் டெக்னிக்கல் விஷயங்களாய் எழுதி வந்தேன். ஒரு வருடமா..என்று கேக்காதீர்கள்.. அந்த ஒரு வருடத்தில் நான் இட்ட பதிவுகள் பதினொன்று தான்.

அதன் பிறகு ஏதேச்சையாய் பாலாஜியின் ஆங்கில பதிவுகள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடையா சினிமா பதிவுகள் ஏற்கனவே சினிமா மோகம் அதிகம் உள்ள என்னை சினிமா பற்றியே எழுத தூண்டியது. எனது பார்வையையும் மாற்றி டெக்னிக்கல் விஷயங்களை விடு வெளியே வந்தேன். முதன் முதலாக என்ன எழுதுவது என்று தெரியாமல் ரொம்ப நேரம் திணறி மெலடி மன்னன் கே ஜே யேசுதாஸ் பற்றிய ஒரு சிறிய பதிவை இட்டேன். அப்போ, வெறும் சினிமா செய்திகளாய் (அப்போ சிட்டுக்குருவி எல்லாம் இல்லை) தான் போட்டு வந்தேன். பாலாஜி இப்போதும் எனது பதிவுகளை படிக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி பதிவுகளாய் போட்டு தாக்குவதற்கு அவரே காரணம்.பிளாக் உலகில் எனக்கு நிறைய கற்று தந்தது அவரது பதிவுகள் தான். அவர் தான் எனக்கு பிளாக் உலகில் தொடக்கநிலை பள்ளியின் ஆசிரியர் போல..

இப்படி எழுத ஆரம்பித்த காலத்தில் எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்தது எனது அலுவலக நன்பன் வெங்கட். சினிமாவில் செய்திகளை மட்டுமே எழுதிகொண்டு இருந்த போது, படத்தின் விமர்சனங்களையும் எழுதலாமே என்று நினைத்து முயற்சித்து எழுதியது தான் சேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் விமர்சனம். ஆரம்பித்த விஷயங்களில் தொடராமல் அப்படியே இடையில் விட்டுவிட்டது இந்த திரைவிமர்சனப் பகுதி தான்.

அப்படியே பல பதிவுகளுக்கும் போனதில், தமிழிலும் எழுதலாம் என்று தெரிந்து கொண்டேன். தமிழில் எழுத முடிவு ஆயிற்று. ஆனால் என்ன எழுதுவது என்று ஒரே குழப்பம். அப்படி யோசனையில் இருந்த போது, சரி நம்ம கதையை எழுதலாம்னு போட்டது தான் கபடி பற்றிய எனது முதல் முழுநீள தமிழ் பதிவு. அப்புறம் ஓணான் வேட்டையும், மைக்கும் சோடாவும்னு நிறைய பதிவுகள் போட்டாலும் அந்த முதல் தமிழ் பதிவின் போது இருந்த ஆனந்தம் அளவிடற்கரியது.. சொல்லில் சொல்ல முடியாதது. பின்னூட்டம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல், கடை திறந்தும் வாங்க வராமல் கவலைப்படும் ஒரு தொழில்காரனாய் நான் உண்மயிலே மனம் ரொம்ப நொந்துஇருக்கிறேன். அந்த சமயங்களில் அறிமுகமானவர்கள் தான் நண்பன் பில்பெர்டும், கீதா மேடமும், என் மச்சான் அம்பியும், நாட்டாமை ஷ்யாமும், மாப்ள பரணியும், தோழிகள் வேதாவும், உஷாவும், நாகை சிவாவும், சசியும். (நண்பர்களின் பெயரில் நீங்கள் தட்டினால், அவர்கள் எனக்கு எழுதிய முதல் பின்னூட்டத்தை பார்க்கலாம்)

எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை, ரஜினி, அஜித், அசின் இவர்களை பற்றி தான் அதிக பதிவுகள் எழுதி இருக்கிறேன். (இவர்களின் பெயரில் நீங்கள் தட்டினால், அவர்கள் பற்றி எழுதிய முதல் பதிவை நீங்கள் படிக்கலாம்). அதிலும் அஜித் பற்றி மட்டுமே நான் போட்ட பதிவுகளின் எண்ணிக்கை இருபத்தைந்தை தாண்டும்.

அப்புறம் பதிவுகள் தமிழ்மணத்தில் இட்டால் நிறைய பேர் படிப்பார்கள் என்று அறிந்து அதில் இணைத்தேன். ஆனால் தினமும் சென்று அங்கு அப்போது இட்ட பதிவை புதுப்பிக்க வேண்டும் தெரியாது. ஒரு மூன்று மாதத்திற்கு முன்னால் தான் அதையும் செய்தேன். இப்போதான் நிறைய பேருக்கு இந்த பதிவுகள் எல்லாம் சென்றடைகிறது.

டிசம்பர் மாதம் கடைசியில் எனது 50வது பதிவையும், மார்ச் மாதம் முதல் தேதி எனது 100வது பதிவையும், ஜூன் மாதம் இறுதியில் எனது 200வது பதிவும் வெளிவந்திருக்கிறது.

எனது ஒவ்வொரு பதிவையும் படித்து, அது எப்படி இருந்தாலும் ஆஹா ஓஹோன்னு பாராட்டி எனது கனவுகளுக்கு உயிர் கொடுத்த உங்கள் ஒவ்வொருத்தருக்கும் நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கிறேன்..

அதன் பிறகு திராசா சார், பிரியா, பொற்கொடி, கோல்மால்கோபால், இந்தியதேவதை, பாலா.ஜி, தங்கை தீக்க்ஷன்யா, ஜனனி, G3, சண்டக்கொழி, அருண்குமார், SLN, மது, கடல்கணேசன், Dreamzz , karthik BS என பெரிய நண்பர்கள் கூட்டமும் வந்து சேர்ந்தது. அப்பப்ப வந்து போகும் கைபுள்ளைக்கும், கேகேவுக்கும், பொன்னாவுக்கும் நன்றி. இவர்கள் எல்லோருக்கும் நான் மிகவும் கடமைபட்டிருக்கிறேன்.

அவசரத்தில் சில பெயர்கள் விட்டு போயிருக்கலாம். எல்லோருக்கும் எனது நன்றி. இவனை எல்லொரும் வாழ்த்துங்கள் வளர..உங்க எல்லொருக்கும் ரொம்ப நன்றி.. நன்றி.. இந்த அடியேன் இன்னும் பல பதிவுகள் எழுதி சிறக்க வாழ்த்துங்கள்..

(சிறப்பு பதிவாய் தொடரும்)

57 பின்னூட்டங்கள்:

said...

haiyaaaaa... naan dhaan firstu!

Unga blogoda 300 padhivu potadhunaala ENAKKU sweet tharanumey!

said...

வாழ்த்துக்கள் கார்த்திக்,

300 பதிவுகள்... யப்பா சான்ஸே இல்லே!!!!!

said...

வாழ்த்துக்கள், 300 --> 3000 --->> 30000 --->> என்று வளர.

உங்கள் பழைய பதிவுகளை படிக்காத என் போன்றோர்க்கு, ஒரு ready reference கொடுத்து விட்டீர்கள். நன்றி

Cheers
SLN

said...

hmm... enna pathiyum oru reference senjirkeengala? Thanks ba! :)

Appurom, naan Blog aaramichum 1 year aiduchu.. So adha pathi oru post senjirken..... Inna oru coincidence paathingala! :)

said...

Karthi,
Congrats and best wishes to go places !
enRenRum anbudan
BALA

said...

உங்களோட "கபடி" தமிழ்ப்பதிவுக்கு முன்னாலேயே வந்து உங்க பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். அதெல்லாம் நான் ஞாபகசக்தியில் யானையாக்கும். என்னை ஏமாற்ற முடியாது.D
முந்நூறு பதிவு கண்ட கார்த்திக் சீக்கிரம் ஆயிரம் பதிவு, 3,000 பதிவு என்று காண என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்........
வளர்க.....

said...

idhukudhan romba cinema parka koodhadhu-nradhu! Paarunga, enna sentimental-a oru post pottu engalai ellam kanneeer vida vaikareenga...hmm, parvalla..vazhthukkal!!! I remember ur first snap, Poovellam kettu par Surya madhirilerndhu, inni snap DMDK thalaivar vijayakanth level-ku valarndhirukeenga ;)

said...

300 பதிவுகளா .... நடக்கட்டும் .. நடக்கட்டும் ....
வாழ்த்துக்கள்.

said...

Congrats Karthikeyan!! Wish u to put much more posts.... futher :)

said...

வாழ்த்துகள் கார்த்திக்!

said...

300 padhivugalngardhu great dhaan karthi! thodardhu ezhudhungal! sorry indha oru vaarama oppicula nammala gummitaanga ungaloda matha padhivugala appuramettu padichuutu comment podaraen! adutha vaaramum idhe gadhi dhaan! :(

said...

வாழ்த்துக்கள் கார்த்திக்!!

said...

//Unga blogoda 300 padhivu potadhunaala ENAKKU sweet tharanumey//

karthik..sweets nichchayamaa tharren

said...

//வாழ்த்துக்கள் கார்த்திக்,

300 பதிவுகள்... யப்பா சான்ஸே இல்லே!!!!! //

ரொம்ப நன்றி ராம்.. எல்லாம் எறும்பு மாதிரி மெல்ல மெல்ல போட்டது தான்..

said...

//வாழ்த்துக்கள், 300 --> 3000 --->> 30000 --->> என்று வளர.

உங்கள் பழைய பதிவுகளை படிக்காத என் போன்றோர்க்கு, ஒரு ready reference கொடுத்து விட்டீர்கள். நன்றி//

நன்றிங்க SLN.. உங்களைப் போன்ற தொடர் வாசிப்பாளர்களின் ஆதரவால் தான் உற்சாக வார்த்தைகளால் தான் என்னால் இதை சாதிக்க முடிந்தது..

said...

//hmm... enna pathiyum oru reference senjirkeengala? Thanks ba!//

Karthik..neengallem ennoda urchaaka taaniks..

//Appurom, naan Blog aaramichum 1 year aiduchu.. So adha pathi oru post senjirken..... Inna oru coincidence paathingala!
//

Hey Congrats Karthik..

said...

//Karthi,
Congrats and best wishes to go places !
enRenRum anbudan
BALA //

Thanks Bala..

said...

//உங்களோட "கபடி" தமிழ்ப்பதிவுக்கு முன்னாலேயே வந்து உங்க பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். அதெல்லாம் நான் ஞாபகசக்தியில் யானையாக்கும். என்னை ஏமாற்ற முடியாது//

நீன்ட நேரம் தேடியதில் அதுதான் அகப்பட்டது தலைவியே.. என்ன இருந்தாலும் நீங்கள் தந்த அந்த உற்சாக வார்த்தைகள் என்னும் என் நெஞ்சாக்கூட்டில் இருக்கிறது..

//முந்நூறு பதிவு கண்ட கார்த்திக் சீக்கிரம் ஆயிரம் பதிவு, 3,000 பதிவு என்று காண என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

உங்களோட வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிங்க தலைவியே

said...

//வாழ்த்துக்கள்........
வளர்க..... //

நன்றிங்க தருமியே

said...

//idhukudhan romba cinema parka koodhadhu-nradhu! Paarunga, enna sentimental-a oru post pottu engalai ellam kanneeer vida vaikareenga...hmm, parvalla..vazhthukkal!!!//

:-)) Thanks Usha


// I remember ur first snap, Poovellam kettu par Surya madhirilerndhu, inni snap DMDK thalaivar vijayakanth level-ku valarndhirukeenga//

Ahaa.. vijayakanth levelukku usaththiteengalE usha.. Ana nalla memory ungalukku..

suryaannu sonnathukku romba thanks.. innikku muzhusum naan thoonga maatten :-))

said...

//300 பதிவுகளா .... நடக்கட்டும் .. நடக்கட்டும் ....
வாழ்த்துக்கள். //

ரொம்ப நன்றிங்க இன்பா...

said...

யம்மாடியோவ்! முந்நூறு பதிவுகளா? இந்த மூனுக்கப்புறம் ரெண்டு சைபர் வருமே அந்த முந்நூறுங்களா?
குருவே சரணம்!!
:)

கார்த்தியின் கனவுலகத்தின் பரிணாம வளர்ச்சியை நன்றாக விளக்கி அதற்கு உறுதுணையாய் இருந்தவர்களையும் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். எங்கேயோ போயிட்டீங்க! அப்பப்போ வந்தாலும் என்னையும் ஞாபகம் வச்சிருந்து பேரையும் போட்டுட்டீங்க. ரொம்ப டேங்ஸுங்க.

தல "வைட்" மேன்மேலும் எழுதவும் சிறக்கவும் மனமாற வாழ்த்துகிறேன்.

said...

//Congrats Karthikeyan!! Wish u to put much more posts.... futher //

Than you very much jeevan..

said...

//வாழ்த்துகள் கார்த்திக்! //

ரொம்ப நன்றிங்க மதி

said...

//300 padhivugalngardhu great dhaan karthi! thodardhu ezhudhungal! sorry indha oru vaarama oppicula nammala gummitaanga ungaloda matha padhivugala appuramettu padichuutu comment podaraen! adutha vaaramum idhe gadhi dhaan//

thanks IA.. paravaa illai.. next week la irunthu naanum appadith thaan :-((

said...

//வாழ்த்துக்கள் கார்த்திக்!! //

ரொம்ப நன்றிங்க கப்பி பயலே

said...

//கார்த்தியின் கனவுலகத்தின் பரிணாம வளர்ச்சியை நன்றாக விளக்கி அதற்கு உறுதுணையாய் இருந்தவர்களையும் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். எங்கேயோ போயிட்டீங்க! அப்பப்போ வந்தாலும் என்னையும் ஞாபகம் வச்சிருந்து பேரையும் போட்டுட்டீங்க. ரொம்ப டேங்ஸுங்க.

தல "வைட்" மேன்மேலும் எழுதவும் சிறக்கவும் மனமாற வாழ்த்துகிறேன்.//


இவ்வளவு நாட்கள் தாக்குபிடிப்பதற்கு உங்களை மாதிரி நன்பர்களின் உற்சாக வார்த்தைகள் தான் காரணம் கைபுள்ள. நான் தான் உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லனும்

said...

neenga ivalo eludirkinganu enakku theriyave illa... adanale enna..neena thaan link kuduthurkingale... poi paditcha pogudu...

march to june - 100 posts... Hats off man :)

melum melum valara vaalthikkal karthik.


(thanglish-ku mannikavum)

-Arun

said...

முன்னூறு...
இன்னும் வெற்றியோடு நீ(ங்கள்) முன்னேறு...

(சும்மா...)

வாழ்த்துக்கள் கார்த்திக்

said...

Congrats Karthil! 300 posta? yappa..
indha rate la oru naalaikku 2 post pottutu poningana seekiram 1000 reach ayiduvinga.
Thanks for mentioning my name :)

said...

300 வது பதிவு அடிச்ச தலைவர் வாழ்க(அப்பாடி முதல்ல கட்சி கடமையை செஞ்சுடுனும்) ஆகா ஒவ்வொருத்தரும் பேரை போட்டு அங்க வலைப்பக்கத்திற்கு தான் இணைப்பு கொடுப்பாங்க,நீங்க நாங்க கொடுத்த முதல் பின்னூட்டத்தை கொடுத்து கலக்கிட்டீங்க:) வாழ்க! வளர்க!

said...

ofcourse, inum unga blog padikiren... tamil blog aakitenga. so englishla comments poda manasu varala avlo dhaan :) Congrats on 300th post :)

said...

கார்த்திக் முத்துராஜன்,
300 பதிவுகள் என்னும்போது
பிரமிப்பாக இருக்கிறது.
இன்னும் நிறைய எழுதி எங்களுக்கெல்லாம்(புதியவர்களுக்கு)
பதிவுலகத்தில் ஊக்கம் வரவேண்டும்.
வாழ்த்துக்கள்.

said...

Adada.. 2 varushama bloga ottitirukkeengala.. Vaazhthukkal unga 2 varuda payanathukkum 300-vadhu padivirkkum. Seri.. Sweeta correcta anuppidunga.. Aaha.. Unga listla en pera? G3 engayo parakka effect irukkae.. :D

said...
This comment has been removed by a blog administrator.
said...

300 vudhu potta dindigal dhadi thandavarayan kkum oru oh

said...

Congrats annathe... kalakareenga...

Ennai pathyum oru reference thandathuk nandri hai

keep going !!!!!

said...

ஒர் தாய் தன் குழந்தயை சுமப்பது 300 நாட்கள். அது போல கார்த்தி நீயும் 300 பதிவுகளை சுமந்து எங்களுக்கு அளித்ததற்கு நன்றி.

said...

300aa?WOW!appuram aagadha?kaalaiyil ondru maalaiyil ondru nu neenga post podra speedkku enakku padikka kooda mudiyala. Vaazthukkal. Paaraattukkal.
thalaivar men melum valara vazhuthukkal. --SKM

said...

//neenga ivalo eludirkinganu enakku theriyave illa... adanale enna..neena thaan link kuduthurkingale... poi paditcha pogudu...

march to june - 100 posts... Hats off man :)

melum melum valara vaalthikkal karthik.//

Thanks Arun..Really thanks man

said...

//முன்னூறு...
இன்னும் வெற்றியோடு நீ(ங்கள்) முன்னேறு...
//

வாழ்த்துகளுக்கு நன்றி வெட்டிபயலே

said...

//Congrats Karthil! 300 posta? yappa..
indha rate la oru naalaikku 2 post pottutu poningana seekiram 1000 reach ayiduvinga.
Thanks for mentioning my name//

Thanks priya.. ungalai maathiri regular readers tharra atharavu thaan ennai inge izhuththu vanthathu priya

said...

//300 வது பதிவு அடிச்ச தலைவர் வாழ்க(அப்பாடி முதல்ல கட்சி கடமையை செஞ்சுடுனும்) ஆகா ஒவ்வொருத்தரும் பேரை போட்டு அங்க வலைப்பக்கத்திற்கு தான் இணைப்பு கொடுப்பாங்க,நீங்க நாங்க கொடுத்த முதல் பின்னூட்டத்தை கொடுத்து கலக்கிட்டீங்க:) வாழ்க! வளர்க! //


வாழ்த்துகளுக்கு நன்றி வேதா.. உங்களை மாதிரி நண்பர்கள் தினமும் கொடுத்த ஆதரவு தான் என்னை இங்கே வரை அழைத்து வந்தது.

வித்தியாசமான முயற்சியாய் இருக்கட்டுமே என்று நீங்கள் தந்த முதல் பின்னூட்டதுக்கு லிங்க் கொடுத்தேன் வேதா

said...

//ofcourse, inum unga blog padikiren... tamil blog aakitenga. so englishla comments poda manasu varala avlo dhaan :) Congrats on 300th post//

Thanks balaji.. neenga padikkireengannu sonnathu enakku unmayile romba santhosama irukku.. parava illai balaji.. neengka thaglishlayum comment tharalaam.. :-))

said...

//கார்த்திக் முத்துராஜன்,
300 பதிவுகள் என்னும்போது
பிரமிப்பாக இருக்கிறது.
இன்னும் நிறைய எழுதி எங்களுக்கெல்லாம்(புதியவர்களுக்கு)
பதிவுலகத்தில் ஊக்கம் வரவேண்டும்.
வாழ்த்துக்கள். //

நன்றிங்க வல்லிசிம்ஹன்..300 என்னும் பிரமிப்பில்லை இருன்து னானும் இன்னும் விடுபடவில்லை

said...

//Adada.. 2 varushama bloga ottitirukkeengala.. Vaazhthukkal unga 2 varuda payanathukkum 300-vadhu padivirkkum. Seri.. Sweeta correcta anuppidunga.. Aaha.. Unga listla en pera? G3 engayo parakka effect irukkae..//

thanks G3.. enna appadi solliteenga.. pakkathula paarunga naanum paranthukittu thaan irukken, ungalai maathiri nanbarkaloda atharavaala

said...

//300 vudhu potta dindigal dhadi thandavarayan kkum oru oh //

Thanks da Madhu

said...

//Congrats annathe... kalakareenga...

Ennai pathyum oru reference thandathuk nandri hai

keep going !!!!!

//

Thanks Janani Sister

said...

/ஒர் தாய் தன் குழந்தயை சுமப்பது 300 நாட்கள். அது போல கார்த்தி நீயும் 300 பதிவுகளை சுமந்து எங்களுக்கு அளித்ததற்கு நன்றி.//

நன்றிங்க திராசா சார்.. வித்தியாசமான முறையில் இருந்த உங்க பாராட்டு மிகவும் அருமை

said...

//300aa?WOW!appuram aagadha?kaalaiyil ondru maalaiyil ondru nu neenga post podra speedkku enakku padikka kooda mudiyala. Vaazthukkal. Paaraattukkal.
thalaivar men melum valara vazhuthukkal.//

Thanks SKM.. ungalai maathiri nanbarkal irukkirathaala thaan ennalaa intha usarathukku varamudinthathu

C.M.HANIFF said...

Congrats karthik, Vaashga Valarga :)

said...

//Congrats karthik, Vaashga Valarga //

Thanks haniff...

said...

Congrats karthi, i'm sooo happy that day by day your writing style nourishes. Thatz d spirit. :)

sorry, weekend, so delayed comment. :)

said...

/Congrats karthi, i'm sooo happy that day by day your writing style nourishes. Thatz d spirit//

Thanks ambi.. Neengallaam kooda iruntha innum niraiyaa sathikkalaa, ambi

said...

CONGRATS BROTHER! WHEN U FIRST CREATED YOUR BLOGSITE, YOU HAD INVITED ME BY MAIL. I REMEMBER HOW YOUR INITIAL POSTS USED TO BE, MOSTLY TECHIE.. RIGHT? THEN WHEN I SWITCHED MY COMPANY, I LOST THE LINK. BUT AM VERY HAPPY TO BE BACK TO YOUR WEBSPACE..
-Deeksh

said...

300 க்கு வாழ்த்துக்கள்.. இன்னும் சாதனைகளை முறியடிக்க இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..