Thursday, November 30, 2006

பில்லா அஜித் முரட்டுக்காளை விஜய்

ஹிந்தி டான் படம் வந்ததிலிருந்து எப்போ இது மாதிரி பழைய ஹிட்டான ரஜினி,கமல் படங்களை தமிழ்ல ரீமேக் பண்ணப் போறாங்கன்னு ஒரே பேச்சு.. இது ஒரு படி மேல போய், தான் ரஜினியின் முரட்டுக்காளையை ரீமேக் பண்ணினா நடிக்க ரெடின்னு விஜய் ஒரு பேட்டில சொல்ல..இப்போ இதை மையமா வச்சு தான் எல்லாப் பக்கமும் அரட்டையே.. இப்போ புதுசா கிடைச்ச நியூஸ் படி அமிதப்போட 'டான்' ரீமேக்ல ஷாருக் நடிச்ச மாதிரி ரஜினியோட பில்லால அஜித் நடிக்கப்போறாராம். முரட்டுக்காளைல விஜய் ரஜினியோட கெட்-அப் (அதே மாதிரி ஹேர்-ஸ்டைல்ல) ல வந்து பொதுவாக எம்மனசு தங்கம்னு பாடினா எப்படி இருக்கும்.. ஏற்கனவே இதே மாதிரி ஹேர்-ஸ்டைல்ல விஜய் வசீகரா-லையும் பகவதி-ல ஒரு பாட்டுலையும் வந்ததையும் நினைவுகூர்ந்து ஒப்பீடு செய்து பாருங்க..

அடுத்து அஜித் பில்லாவா நடிச்சா எப்படி இருக்கும்.. ரஜினியோட அந்த ஸ்டைல் மறுபடியும் வருமா இவருக்கும்.. ஒரு வேளை வாய் முழுக்க வெத்தலையை போட்டுகிட்டு வெத்தலையை போட்டேண்டினு அஜித் பாடினா கரகோசம் விண்ணை பிளக்குமா.. வரலாறுல அஜித் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்துல நடிச்சதால இதுக்கு தேர்வாகி இருக்காரா..

இதை பத்தி பேச ஆரம்பிச்சவுடனே எல்லா ரஜினி,கமல் படங்களையும் தூசி தட்டி, இதுல இவர் நடிச்சா எப்படி இருக்கும்..அதுல அவர் நடிச்சா எப்படி இருக்கும்னு எங்க பாத்தாலும் ஒரே கதை தான்.. அந்த மாதிரி சமீபத்துல ஒரு சினிமா வலைப்பக்கதுல பட்டியல் போட்ட படங்கள் தான் கீழே பட்டியல் இடப்பட்டிருக்கிறது..

1. அக்னி நட்சத்திரத்துல பிரபுவா அஜித்தும், கார்த்திக்காக விஜயும்
2. நெற்றிக்கண் படத்துல அஜித்
3. நான் சிகப்பு மனிதனா விஜய்
4. தில்லுமுல்லு பண்றவரா சூர்யா
5. சிகப்பு ரோஜாக்கள் கமலாக அஜித்
6. நாயகன் கமலாக விக்ரம்

இந்த வெற்றிபடங்கள் எல்லாம் இன்னும் எத்தனையோ கிராம டூரிங் தியேட்டர்களில் ஓட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.. இதை எல்லாம் துடைத்து இந்த கால புதிய டெக்னிக்கல் விஷயங்களை புகுத்தி மேற்சொன்ன நடிகர்களை வைத்து எடுப்பதால் பழைய படங்களோட நிலைமைகள் என்னவாகும்.. என்ன தான் சொன்னாலும் ஷாருக்கின் டான் பார்த்தவர்கள் அமிதாப்பின் டான் மாதிரி இல்லை என்று தான் சொல்கிறார்கள்.. ஷாருக்கின் ரசிகர்கள் வேண்டுமென்றால் ரசிக்கலாம். அதே போலத் தான் இந்த படங்களும் அமையப் போகிறது..புதிதாய் மறுபடியும் எடுத்தால்..

ரஜினியின் ஸ்டைல் கலந்த அந்த துள்ளல் நடிப்பும், கமலின் உணர்வுபூர்வ நடிப்பும் இன்னொருவரால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களா.. நினைத்து பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.. அவனவன் புதுப் புது கதைகளங்கள்.. புதிய டெக்னிக்கல் விஷயங்கள் என்று முன்னே போய் கொண்டிருக்கிற காலக்கட்டத்தில் இவர்களின் எண்ணங்களைப் பாருங்கள்..

என்னை பொறுத்தவரை, அடுத்த ரஜினியாக வேண்டும், கமலாக வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டிருக்கிற நடிகர்கள் அவர்களின் படங்களை ரீமேக் செய்யும்போது தாங்கள் நடித்தால் அந்த நடிகரின் ஸ்தானத்தையே பிடித்ததாக நினைத்து செய்வதாகத் தான் படுகிறது.. அண்ணாமலை ரஜினி மாதிரி நெற்றியில் சாம்பலை பூசிக்கொண்டு நீ எந்த ஊரு நான் எந்த ஊரு என்று ஆடும் இவர்கள் இன்னும் எத்தனையோ மைல்கல் பயணிக்கவேண்டும் அந்த நாற்காலிக்கு என்று என்றைக்கு தான் புரிந்து கொள்ளப்போகிறார்களோ.. கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

28 பின்னூட்டங்கள்:

said...

first ???

said...

Yes...Arun

said...

//5. சிகப்பு ரோஜாக்கள் கமலாக அஜித்//

அஜித் 10 வருசம் முன்னாடி இதை செஞ்சிருந்தா நல்லாயிருந்திருக்கும். இப்ப அவர் இருக்கிற உருவத்தில இந்த கேரக்டரை செஞ்சா... நான் அழுதுடுவேன்.. என்ன கொடுமை சரவணன் :-(

//6. நாயகன் கமலாக விக்ரம்//

இது ஓகேன்னு நினைக்கிறேன்

first உருப்படியான மறுமொழி? :-D

said...

சேதுக்கரசி, உங்க பின்னூட்ட மழைக்கு ரொம்ப நன்றிங்க..

நீங்களும் எழுதலாமே அரசி

said...

நண்பர்கள் சிலர் என்னையும் பதிவு போடச் சொல்றாங்க. அந்தக் கூட்டத்துல நீங்களும் சேர்ந்துட்டீங்களா? :-) முதல்ல எனக்கு வலைப்பூ ஆர்வமே இல்லை, இப்ப தான் வாசிக்கிற ஆர்வமாவது வந்திருக்கு. பதிவு போட்டு அதுக்கு எந்நேரமும் அலக்குடுக்க நேரமிருக்குமான்னு நினைச்சாத் தான் பயமா இருக்கு. ஆனா 2007-இல் எதுக்கும் உஷாரா இருங்க.. :-)))

said...

தயாராய் தான் இருக்கிறோம் அரசி.. திருக்குறள் மாதிரி இரண்டு வரில இருந்து ஆரம்பிங்க..2007ல பெரிய பதிவாய் போடலாம் அரசி...

said...

/ரஜினி மாதிரி நெற்றியில் சாம்பலை பூசிக்கொண்டு நீ எந்த ஊரு நான் எந்த ஊரு என்று ஆடும் இவர்கள் இன்னும் எத்தனையோ மைல்கல் பயணிக்கவேண்டும் /
சரியா சொன்னீங்க இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி மத்தவங்களை காப்பி அடிக்கறதை பண்ணப்போறாங்களோ,பாக்குற நமக்கு தான அந்த கஷ்டம் புரியும்:)

said...

ஏற்கனவே தமிழ் டைரக்டர் கனவான்கள் யோசிக்கிறதே இல்ல..இப்ப இது வேறயா... என்ன நடக்க போகுதோ....

Anonymous said...

பழைய படம் பழைய படம்தான். ரீமிக்ஸ் மாதிரி எல்லாத்தையும் ரீமேக் பன்றதுல்ல அர்த்தம் இல்லை.

எந்த நடிகரும் ரீமேக்ல நடிச்சா, ஒரிஜினல் படத்தின் நாயகனின் ஸ்டைலை காபிதான் அடிக்கிறாங்க. அதுக்கு நாம் பழைய படமே பார்த்துட்டு போயிரலாமே!!! என்ன கார்த்திக்.. நான் சொல்வது சரிதானே?

said...

romba correct maams....namba ooruku idhu maadhiri remake pannina kandiapa odaathu :)

said...

//ரஜினியின் ஸ்டைல் கலந்த அந்த துள்ளல் நடிப்பும், கமலின் உணர்வுபூர்வ நடிப்பும் இன்னொருவரால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களா//......thalakizha ninnalum adhu kitta kooda nerunga mudiyaadhu....

said...

//கடவுளுக்குத் தான் வெளிச்சம்//....sivakasi parthutu thooku maathikitu iruparu avaru :(

C.M.HANIFF said...

old is gold ;)

said...

//பாக்குற நமக்கு தான அந்த கஷ்டம் புரியும்//

அப்படிப்பட்ட படங்களை பாக்குறது எவ்ளோ பெரிய கொடுமைங்கிறது அந்த நடிகர்களுக்கு தெரியவா போகிறது வேதா..

said...

// தமிழ் டைரக்டர் கனவான்கள் யோசிக்கிறதே இல்ல//

கரெக்ட் மணி.. இந்த வருஷத்துல வந்த நூறு படங்கள்ல மிக சிலப் படங்களே கதை வித்தியாசமா இருந்தது.. உதாரணமா, சித்திரம் பேசுதடி, ஈ

said...

//அதுக்கு நாம் பழைய படமே பார்த்துட்டு போயிரலாமே!!! என்ன கார்த்திக்.. நான் சொல்வது சரிதானே//

சரியா சொன்னீங்க மை பிரண்ட்.. சும்மா சாதாரணமா நடிச்சாலே காப்பி தான் இதுல..ரீமேக்னா சொல்லவே தேவை இல்லை

said...

கார்த்தி:

இதோ ஒரு சினிமா சம்பந்தப் பட்ட விசயம்...

கீழே உள்ளதை பார்த்து எதுனா எழுதுங்க,,,
http://viduthalai.com/20061129/page2.html

said...

//romba correct maams....namba ooruku idhu maadhiri remake pannina kandiapa odaathu//
summa hypela sila naal odinaa undu mapla..

//......thalakizha ninnalum adhu kitta kooda nerunga mudiyaadhu....//
correct mapls

//....sivakasi parthutu thooku maathikitu iruparu avaru//

inimel avatharam kooda edukka maattaaru..enge intha maathiri padanGkaLai paakka vettuduvaanGkalo nnu

said...

//old is gold //

perfectly correct haniff

said...

ஆகா இவனுங்கள அந்த ரோல்ல நினைச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு...அத பண்றேன்னு போய் அந்த ஒரிஜினால்டிய கெடுக்காம இருந்தானுங்கனாளே பெரிய விசயம் :-)

said...

கற்பனை வரட்சி போல - பழைய பாடல்கள் remix, இப்ப படங்களும்..
அவங்களா இவங்க நடிச்சி எவ்ளோ திறமை கம்மினு prove பண்ண போறாங்க, அவ்ளோ தான்.

Anonymous said...

//தில்லுமுல்லு பண்றவரா சூர்யா//
super idea!

//அண்ணாமலை ரஜினி மாதிரி நெற்றியில் சாம்பலை பூசிக்கொண்டு நீ எந்த ஊரு நான் எந்த ஊரு என்று ஆடும் இவர்கள் இன்னும் எத்தனையோ மைல்கல் பயணிக்கவேண்டும் அந்த நாற்காலிக்கு என்று என்றைக்கு தான் புரிந்து கொள்ளப்போகிறார்களோ.. //
athu correct thaan..ennaiku ajith, naanum vijayum adutha rajini kamal endru petti koduthaano annaiyilrundhu down thaan!

said...

//ரஜினியின் ஸ்டைல் கலந்த அந்த துள்ளல் நடிப்பும், கமலின் உணர்வுபூர்வ நடிப்பும் இன்னொருவரால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களா//

avanga range veranga... ippo ellam oru padam rendu padam hit aanale periya star range-ku nenachikuraanga :(

said...

//அத பண்றேன்னு போய் அந்த ஒரிஜினால்டிய கெடுக்காம இருந்தானுங்கனாளே பெரிய விசயம் //

ஷ்யாம், உண்மையிலே என்ன பண்ண காத்திருக்காங்களோ

said...

//இவங்க நடிச்சி எவ்ளோ திறமை கம்மினு prove பண்ண போறாங்க//

அந்த கொடுமையை பாக்கத் தான் நாம இருக்கோமே ப்ரியா

said...

//ennaiku ajith, naanum vijayum adutha rajini kamal endru petti koduthaano annaiyilrundhu down thaan//

eppadiyo.. aduththa thalaimurai rajini kamala ivangalai chiththarichchu usipeththunathu naama thaane..

said...

// ippo ellam oru padam rendu padam hit aanale periya star range-ku nenachikuraanga //

absolutely correctnga Arun

said...

தலையை கலாய்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன். (சும்மா)

--------

இதுக்கே இப்படிங்கிறீங்க!

இயக்குனர் பேரரசு தனது படத்தையே 6 மாததிற்கு ஒரு ரீ-மேக் செய்கிறாரே!

படங்கள்:
1.பொங்கல்-2005(கரீட்டா?)-- திருப்பாச்சி

2.தீபாவளி-2005---- சிவகாசி


4.பொங்கல்-2006- திருப்பதி