Wednesday, November 29, 2006

ஏடிஎம்ல பணம் எடுக்கிறப்போ திருடர்ட இருந்து தப்பிக்க..

சமீபத்தில் வந்த ஒரு இ-மெயில் இது.. செய்திகளில் படித்தது போலவும், கேட்டது போலவும், யாரேனும் உங்களை ஏடிஎம்-ல் பணம் எடுத்து தர மிரட்டினாலோ, துன்புறுத்தினாலோ அதிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருப்பதாக அந்த இ-மெயில் குறிப்பிடுகிறது..

அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நீங்கள் உங்கள் ஏடிஎம் 'பின்' (PIN) எண்ணை திருப்பி அடித்தால் (அதாவது 1234 என்பது உங்கள் 'பின்' (PIN) என்றால், 4321 என்று அடிக்க வேண்டும்), அதை ஏடிஎம் மிஷின் புரிந்துகொண்டு, நீங்கள் கேட்ட பணத்தை தந்துவிட்டாலும் உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்து உங்களின் அவசரத் தேவைக்கு அங்கே உடனே போலீஸை அனுப்பி வைக்குமாம்.

உண்மையா என்று தெரியவில்லை. உண்மையாய் இருந்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும். இந்த இ-மெயில் சென்னையில் உள்ள ஒரு கணினி நிறுவனத்திலிருந்து அதன் பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக தெரிகிறது. இதைப் பற்றி சமீபத்தில் ஒரு டி.வி நிகழ்ச்சியில் சொல்லப்பட்டதாகவும், இந்த முறை பலபேருக்கு தெரியாமல்
இருப்பதாகவும் சொல்கிறது..

வங்கியில் பணி புரியும் நண்பர்கள் அல்லது இதை பற்றி தெரிந்த நன்பர்கள் சொல்லலாமே இது உன்மையா என்று.

21 பின்னூட்டங்கள்:

said...

இந்த இ-மெயில் எங்களுக்கு வந்தபோது என் நண்பன் கேட்டது : 'என் பின் நம்பர் 8888. இதுக்கு எப்படி வேலை செய்யும்?'

said...

போன வாரம் லீவுல போயிட்டதால அருள்குமார் பதிவு வாசிக்கலீங்களா :-) இருப்பினும், தகவலுக்கு நன்றி

said...

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/atm.html

said...

5005 அப்படின்னு இருந்தா என செய்ய?

said...

ஏறகனவே யாரோ கேட்ட கேள்வி..
எனது பின் நம்பர் 4004
நான் இப்ப என்ன பண்ண..(மாதவன் ஸ்டைலில்..)

said...

எனக்கும் இந்த mail வந்தது கார்த்திக். உண்மையா இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மினு நினைக்கறேன்.

said...

அப்படி யாரவது நம்மள மிரட்டி ஏடிஎம் ல காசு எடுத்து குடுக்க சொன்னா..நம்ம தல ஸ்டைல்ல பேச்சு பேச்சாதான் இருக்கனும் காசு எல்லாம் கேக்கபடாதுனு சொல்லனும் :-)

said...

என்னங்க ATM லே இருந்து பணம் எடுக்கறப்பக் கூடவே நிற்கும் 'கொள்ளையள்' ( பெண்பால்?)கிட்டே
இருந்து எப்படித் தப்பிக்கணுமுன்னு சொல்லித்தந்தா நல்லா இருக்குமுன்னு என் மறுபாதி இங்கே
புலம்பிக்கிட்டு இருக்கார். இதுக்கு ஒரு வழி சொல்லிருங்க, பாவம்:-)

said...

உண்மையாய் இருந்தால் கண்டிப்பாக ரொம்ப உபயோகமாக இருக்கும்.

said...

//வங்கியில் பணி புரியும் நண்பர்கள் சொல்லலாமே இது உன்மையா என்று.//

சொல்லலாமே....

கிடையாது, லேது, நஹி ஹொதா, நாட் பாசிபிள்.

:)

said...

மக்களே, ஏதோ வந்த ஒரு ஃபார்வர்டை போட்டேன்..ஹிஹிஹி..இப்படி எல்லாம் கேள்வி கேட்ட அழுதுடுவேன்..

உங்கள் பின்னூட்டதுக்கெல்லாம் ரொம்ப நன்றிங்கோ மக்களே

said...

//மக்களே, ஏதோ வந்த ஒரு ஃபார்வர்டை போட்டேன்..ஹிஹிஹி..இப்படி எல்லாம் கேள்வி கேட்ட அழுதுடுவேன்..//

:))))

Anonymous said...

எனக்கும் இது ஈ-மெயிலில் வந்தது. இது நமக்கு கிடைத்த மாதிரி கொள்ளையனுக்கும் கிடைச்சிருக்கும்தானே!! அவங்க உஷார் ஆகியிருப்பாங்களே!!!!

said...

urbanlegends.com
snopes.com
மாதிரித் தளங்கள்ல போய்ப் பார்த்தா உண்மையா உதாரான்னு ஓரளவு தெரியவரும்.

said...

namma ooru police ellam mudinjadukku apparam vandu thaan palakkam... so ella panamum ponadukku approma vanduttu police vera konjam lanjam ketta makkal enna seivaanga?

(just kidding... unmaya irukka chance illenu nenaikiren)

said...

no karthik, later a bank send a reply that it's not true.

pasthu, namba a/c la panam irukanum, appa thaan ATM velai seyyum, illati athuvum kaari thuppum. he hee :)
venumna syama kettu paaru, avanuku nalla exp ithula. :)

ATM la linela nikkara ponna epdi pickup pannanum?nu makkal kitta keppiya, adha vitupottu..? :)

said...

// ஏடிஎம்ல பணம் எடுக்கிறப்போ திருடர்ட இருந்து தப்பிக்க..//

ஆமா.. தலைப்பை இப்பத்தான் சரியா கவனிச்சேன் (அப்ப இதுவரைக்கும் என்ன பண்ணீங்கன்னு கேக்கக்கூடாது!) அதென்ன "திருடர்"னு மரியாதையெல்லாம் குடுக்கறீங்க :-D

said...

இது டுபுக்குங்க...

அடுத்த தடவை திருடர்(ன்) உங்ககிட்ட ஏடிஎம்ல பின் கேட்டா 'பின்'னால குத்திட்டு ஓடிருங்க...

இல்லைன்னா பின்னால கத்தியால குத்திருவார்(ன்)

said...

idea nallathaan iruku....aana try panni parka mudiyaadhu pola iruke Maams......naama try panni parka poi....adhu work agi police vandhu nambala puduchidichinna :(

Anonymous said...

//உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்து உங்களின் அவசரத் தேவைக்கு அங்கே உடனே போலீஸை அனுப்பி வைக்குமாம்.
//

ada puthu thagavalairukke! nijamaava?

apparam neenga potta padam!
horrifying!
enna kodumai ithu saravanan!

said...

நண்பர்களே, இந்த தகவல் பொய்னு நீங்க சொன்னத வச்சும் நண்பன் குரு அனுப்பிவச்ச ஒரு மெயிலும் தெரிஞ்சது.. அதனால அதனால நான் எஸ்கேப் உட்டுக்குறேன்