கோழி குழம்பு புராணங்கள்
(சைவம் சாப்பிடுபவர்கள் கொஞ்சம் இந்தப் பதிவை பொறுத்துகொள்ளுங்கள்)
நான் சென்னைக்கு 2001 டிசம்பரில் என் எம்.சி.ஏ படிப்பின் கடைசி செமஸ்டர் புராஜெக்டுக்காக வந்த போது, எனக்கு குக்கரில் எப்படி சாதம் வைப்பது என்பது கூட தெரியாது. ஒரு நாள் வைத்து குக்கர் முழுவதும் கரியாகிப் போனது தான் மிச்சம். கேஸ் ஆன் பண்ணுவதிலிருந்து கரண்டி பிடிப்பது வரை எனக்கு புது விஷயமே. இன்று விட்டால் சமையல்கட்டில் கபடியே விளையாடுவேன். அன்றைய தேதியில் எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் சப்பாத்தி மாவு பிசைந்து வைத்தால் அதை அழாகான வட்ட வடிவ சப்பாத்தியாய் தேய்த்து தருவது தான். மற்றபடி யாராவது வெங்காயம் நறுக்கினால் கூட விழுந்தடித்து ஓடுவேன். இது இல்லாமல் அசைவத்தில், கோழியின் தலையை பிடித்து லாவகமாக அருவாள்மனையில் அறுக்கத் தெரியும். அருவாள் மனையை என் காலில் மிதித்து, கூடவே கோழியின் இரண்டு கால்களையும் அதே காலால் மிதித்து கொள்வேன். இறக்கைகளை ஒரு கையால் பிடித்து அதே கையால் கழுத்தையும் சேர்த்து பிடிப்பேன். இன்னொரு கையால் வாய் பகுதியை பிடித்து அருவாள்மனையில் வைத்து மெதுவா அறுப்பேன். கோழி ரத்தத்தையும் ஒரு கிண்ணத்தில் பிடித்து தனியாக வைப்பேன். ரத்த வருவல் சுவையே அலாதிதான். அதுவும் அறுத்த பின், கொஞ்ச நேரம் விட்டால் கூட கோழியின் முடிகளை பிய்ப்பது கஷ்டம் என்பதால் அதனையும் அதே ஜோரில் பிய்த்தெறிவேன். இப்போதெல்லாம் பெரும்பாலும் பிராய்லர் கோழி தான். அதுவும் அதன் முடியை ஈசியா உரிக்கணும்ங்கிறதுக்காக, கோழி உயிர் போன பிறகு சுடிதண்ணில போட்டு முக்குவாங்க. என் வீட்டுக்கு முன்னாடி இருக்க ஒரு ஐயா, அப்படி எல்லாம் செய்யக் கூடாது..கோழி ருசியா இருக்காதுன்னு சொல்வார்.. அது கொஞ்சம் நிஜமும் கூட.. முதன் முதல் இப்படி கோழி அறுக்க கற்றுக்கொண்டதே ஒரு சுவராஸ்யமான விஷயம் தான்.
ஒரு முறை திண்டுக்கலில் இருந்து செந்துறை, திருமலைக்கேணி போகும் வழியில் இருக்கும் ராஜக்காபட்டி கல்லுப்பட்டிக்கு சென்றிருந்தேன். என் அம்மாவோட அம்மா, அம்மாச்சி இருக்கும் ஊர். அங்கே சென்றிருந்த போது, கோழிக்குழம்பு வைக்கவேண்டும் என்று என் அம்மாச்சி சொன்னார்கள். ஆனால் அப்போது என் மாமாவோ, என் சித்தப்பாவோ யாரும் இல்லை. சரி..நானே செய்கிறேன் என்று அந்தப்பக்கம் பறந்து விளையாடி கொண்டிருந்த இரண்டு கோழிகளை பிடித்து மேலே சொன்னவாறு சமையலுக்கு தயார் செய்தேன். அப்படி அறுத்துகொண்டிருந்த போது ரெண்டு வயதான பெண்கள் வீட்டுக்கு வந்தாங்க.. வந்தவங்க நான் கோழியில் லாவகமா பிடிச்சி அறுக்கிறதை பார்த்துட்டு..ஏய் அங்கம்மா (என் அம்மாச்சி பேரு) உன் பேராண்டி என்னமா பிடிச்சு அறுக்கிறான் இந்த சின்ன வயசுல (ஒரு பதிமூணு வயசு இருக்கும் அப்போ எனக்கு) அப்படின்னாங்க.. ஏய்..கண்ணு போடாதீங்கடி என் பேரன் மேல..காத்தி (என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க) சாயந்தரம் சொல்லு..சுத்திப் போடுறேன்னு சொன்னாங்க.. யெப்பா..எனக்கு பெருமை தாங்கல அப்போ.. கோழிகளை சிறு சிறு துண்டாக்கும் போது கொஞ்சம் உஷாரா இருக்கணும். ஏன்னா அதுல ஈரல் பக்கத்துல பச்சைகலர்ல ஒண்ணு இருக்கும்.. அதை அப்படியே துண்டா அறுத்து தனியா எடுத்திடணும். இல்லைனா கறி கசக்கும். என் அம்மாச்சி என்னை கோழி தலையை சாப்பிட விட மாட்டாங்க.. பசங்க எல்லாம் கோழி தலையை சாப்பிடக்கூடாதாம்..
ஆனா என் அப்பாவோட அம்மா, நாங்க அப்பம்மான்னு தான் கூப்பிடுவோம். அவங்க சமைச்ச காலத்துல, கோழி தலையை எனக்குன்னு தனியா எடுத்து வச்சிருவாங்க.. பேரப்பிள்ளைக கூட்டத்துல அசைவம் சாப்புடுற ஒரே ஆள் நான் தான். மத்தவங்க எல்லோரும் சைவம் தான். கோழிகுழம்பு வைக்கிற நாட்களில நான் ஒரு வெட்டு வெட்டிகிட்டு இருப்பேன்.. அந்த பக்கம் இவங்க ரசமும், தயிரும் சாப்பிடுவாங்க.. பாக்கவே பாவமா இருக்கும்.. ஆனா அவங்களை பொறுத்தவரை அது தான் அவங்களுக்கு அமிர்தம்.. ஏனோ அசைவச் சுவையை அவங்க ருசிச்சதே இல்லை.. இப்பவும் எங்கே அசைவம் கிடச்சாலும் ஒரு புடி புடிப்பேன்..
ஏதாவது கோவிலுக்கு கோழிகளை நேர்ந்துவிட்டால் அதை அவர்கள் அறுப்பதே நமக்கு ஒரு மாதிரியா இருக்கும். சாமிக்கு முன்னடி அந்த கோழியை ஒருவர் பிடித்து கொள்வார். இன்னொருவர் வந்து கழுத்தை அறுத்து அந்த கோழியை தூக்கி எறிவார். அது மேலும் கீழுமாய், கிழக்கு தெற்காய் கழுத்தில்லாமால் பறக்கும்.. உண்மையில் அப்படிப் பார்க்கும் போதெல்லாம் அந்த கோழியை பார்த்து பாவப்பட்டிருந்தாலும் சாப்பிடும் போதும் ஏனோ அதெல்லாம் தெரிவதில்லை.
சென்னைல இருக்கிறப்போ ஞாயிற்றுகிழமையானாலே கோழி தான். அதுலையும் சூப், குழம்பு அல்லது கிரேவி, வருவல், கூடவே முட்டைன்னு அன்னிக்கு சமயல் சும்ம பக்கத்து வீட்டை எல்லாம் கூப்பிடும் சாப்பிட.. நானும் என் கல்லூரி நண்பன் கிரிஷ்ணகுமாரும் கோழிப் பிரியர்கள். கல்லூரியில் இருக்கும்போதே தினமும் எதிரில் இருக்கும் கடையில் தினமும் சூப் வாங்கி குடிப்போம். எங்க கூட தங்கி இருந்த பார்த்தசாரதி வைக்கிற கோழி ஐயிட்டங்களே சூப்பரா இருக்கும். அவனுக்கு எல்லோரும் வச்சிருக்க செல்லப் பேர் 'கோழிப் பார்த்தா'.. வெங்காயும், தக்காளி,இஞ்சி, பூண்டு, மல்லி, புதின, சிக்கன் மசல பொடி போட்டு அவன் செய்ற கிரேவி என்னிக்கும் எங்க மத்தில ரொம்ப பிரபலம். யார் வந்தாலும் வீட்ல கோழி சமையல் தான்.
இப்போ இங்கே வந்த பிறகு போன ஞாயிறு தான் சிக்கன் கிரில் போட்டு சாப்பிட்டோம்.. நல்லா சுவையா வந்தது..முதல் தடவையிலே.. என்ன இருந்தாலும் நம்மூரு டேஸ்ட் நம்மூரு டேஸ்ட் தான். அதுவும் என் அம்மா வைக்கிற சிக்கன் குழம்பு ஒரு தனி ரகம் தான். என் அப்பா வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர். அதனால் எவ்வளவு உரப்பு இருந்தாலும் தெரியாது. ஆனா அவருக்கு எதுவுமே உரப்பு நன்றாக இருக்கணும். ஒரு முறை என் நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அதனால் என் அம்மா சிக்கன் குழம்பும், சிக்கன் 65-வும் செய்திருந்தார்கள். நான், என் அப்பா நண்பர்களோடு மதிய உணவு சப்பிட்டு கொண்டிருந்தோம். என் அப்பா என் அம்மாவிடம் என்ன குழம்பில் உரப்பே இல்லை என்று கேட்டுகொண்டிருந்தார். நான் இந்தப் பக்கம் என் நண்பர்கள் கண்ணில் நீர் வர சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இரண்டு பக்கமும் பாத்து நடுவுல உக்கார்ந்து நான் சிரிச்சுகிட்டு இருந்தேன்.
32 பின்னூட்டங்கள்:
first aa?
firstE thaan Arun..
Present Sir! no idea about this stuffs.
கோழிப்பதிவு சூப்பரூங்கோ
this remains me of my catering college experience..i was strict vegetarian while i am at catering college.now iam getting masters here in US that too in food science- emphasis in meat science:-)
shankar
//Present Sir! no idea about this stuffs. //
Sorry ambi :-))
//கோழிப்பதிவு சூப்பரூங்கோ//
நன்றி கானா பிரபா
//now iam getting masters here in US that too in food science- emphasis in meat science//
Good to know shankar :-))
கொக்கரக்கோ கும்மாங்கோ :)
கோழி குருமா பார்சல் அனுப்பீருங்க :)
karthi....naa sudhdha saivam paa....
பார்த்து!! சிக்கன் குனியா U.S.க்கு வந்திடபோது!
நல்ல வேளை.. நான் இப்பதான் lunchக்கு போவிட்டு வந்தேன். பசியில்லை. இல்லனா இன்னேரம் கடையில போய் உட்கார்ந்து இருப்பேன். பசியை உண்டு பண்ணிட்டீங்க..
உங்க பதிவை படிச்சதிலிருந்து "கோழி வெடக் கோழி"ன்னு என்னுடைய குட்டி cousin பாடுவதுதான் நினைவுக்கு வருது! ;)
Aaha.. Kozhi mannara iruppeenga pola irukkae :)
Nethu naangalum kanla neer vara thaan saapitom.. Paavi payan dhaabala chilly fish ketta ekka chakka kaarama kuduthuttan :)
Ungal pathivu padithen rasithen(sari appuram paarpom ,pasikuthu ,oru chicken 65 saapittu varen ) ;)
ம்ம்ம்ம்ம், உள்ளேன் ஐயா, அதுக்கு மேலே ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.
//கோழி குருமா பார்சல் அனுப்பீருங்க //
அடுத்த விஸிட் அப்போ, தன்தாலே போச்சு அருண்
//karthi....naa sudhdha saivam paa.... //
suththa saivamaa..enna leo solreenga.. :-(
//நல்ல வேளை.. நான் இப்பதான் lunchக்கு போவிட்டு வந்தேன். பசியில்லை. இல்லனா இன்னேரம் கடையில போய் உட்கார்ந்து இருப்பேன். பசியை உண்டு பண்ணிட்டீங்க..//
இந்த பதிவை எழுதி முடிச்ச வுடனே எனக்கும் பயங்கரமா பசிக்க ஆரம்பித்தது மை பிரண்ட்..
//ஒரே ரத்தக் களரியா இருக்கு தலைவா //
ரொம்ப சாரி கொ.ப.செ.. அட்டென்டன்ஸ் போட்டதுக்கு ரொம்ப நன்றி
//Nethu naangalum kanla neer vara thaan saapitom.. Paavi payan dhaabala chilly fish ketta ekka chakka kaarama kuduthuttan //
dhaaba fisha.. G3..enakku athai koncham ruchi paakka asai vanthuduchchE..
//oru chicken 65 saapittu varen//
Ahaa.. chickenukkellam ithu romba mOsamaana NaaLunnu ninaikiren. haniff, supera oru chicken-65 enakkum parcel pannunga :-)
அய்யோ அய்யோ...அதுவும் அந்த நாட்டு கோழி ருசியே ருசி...என்னமா ரசிச்சு எழுதி இருக்கீங்க...வாயெல்லாம் ஜொள்ளு
:-)
கொஞ்சம் படிச்சி பாத்தேன். அதுக்கு மேல முடியல. பாவம் கோழிகள்.
enna oru post....aduvum kozhiya appadiye part part-a pirichi.....nalaki namma ootla kozhi kuzhambudhaan appu :))
ahaaaa...etho koli kari appadingiringa..kannulaya pada matten enguthu...enga irukku athu???
//அய்யோ அய்யோ...அதுவும் அந்த நாட்டு கோழி ருசியே ருசி...என்னமா ரசிச்சு எழுதி இருக்கீங்க...வாயெல்லாம் ஜொள்ளு
//
அய்யோ ஷ்யாம்.. அத ஏன் கேக்குறீங்க.. இந்த பதிவ எழுதி முடிச்ச பின்னாடி கோழி கனவாத் தான் வருது..
//கொஞ்சம் படிச்சி பாத்தேன். அதுக்கு மேல முடியல. பாவம் கோழிகள். //
சாரி ப்ரியா.. ரொம்ப பேர் படிச்சிட்டு வருத்தப் பட்டீங்கன்னு நினைக்கிறேன்..இனிமே இந்த மாதிரி ரத்தக் களரி போஸ்ட் போடாம பாத்துக்குறேன்
//enna oru post....aduvum kozhiya appadiye part part-a pirichi.....nalaki namma ootla kozhi kuzhambudhaan appu //
mapla.. nalla kozhiyai adichchu sappidu..maaman vantha kattayam kozhi thaan veetla..okvaa
//ahaaaa...etho koli kari appadingiringa..kannulaya pada matten enguthu...enga irukku athu//
athaan anGkE..ada..inGkE..ippdi paranthukittE irukkE..chari..appadiye muniyaandi vilas oru ravund kattunga
//அய்யோ அய்யோ...அதுவும் அந்த நாட்டு கோழி ருசியே ருசி...என்னமா ரசிச்சு எழுதி இருக்கீங்க...வாயெல்லாம் ஜொள்ளு
:-) //
நம்மளும் நாட்டமை மாதிரியே...
நம்மக்கு பெப்பர் chikken na uir... athuvum ennoda akka seirathu too tasty..
என்ன கார்த்தி இப்படி நாம இங்க தனியா இருக்கறப்ப feel பன்ன விட்டுடீங்களே
:(
//நம்மக்கு பெப்பர் chikken na uir... athuvum ennoda akka seirathu too tasty..
என்ன கார்த்தி இப்படி நாம இங்க தனியா இருக்கறப்ப feel பன்ன விட்டுடீங்களே//
என்ன மணி.. நானும் அதையே நினச்சு புலம்பி உங்களையும் உள்ளே எழுத்து விட்டுட்டேன் போல..
oreay ratha kalariyaa irukku...edhukkunna ippadi oru vanmurai
Oh..sorrynga sreeni.. EthO en anupavaththa sollap pOi athula vanmurai athikama irunthuduchchu
Post a Comment