Sunday, November 12, 2006

ராவணன் வேஷத்தில் ரஜினிகாந்த்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 14

தமிழ் மக்கள் நாலு பேர் கூடிட்டாலே அவங்க பேசுறதுல கொஞ்சம் சினிமா இல்லாம இருக்காது.. அந்த அளவுக்கு சினிமா தமிழன் வாழ்வுல ஒரு விஷயமாகிடுச்சு.. எந்த வார, மாத புத்தகமா இருந்தாலும் சினிமாக்குன்னு சில பக்கங்கள் இல்லாம இருக்காது.. ஏன்னா சினிமா விஷயம் இருந்தால் தான் அந்த புத்தகமே முழுமையடையுது.. இது மட்டுமில்லாமல், சினிமா பத்திரிக்கைனே தனியா பல புத்தகங்கள் இருக்கு.. அதுலையும்.. நடிகர்களுக்குன்னு தனி புத்தகங்கள் வேறு இருக்கு.. பத்திரிக்கை மட்டுமில்லை..டிவிக்களும் தான்.. என்னிக்காவது ஒரு நாள் சினிமா நிகழ்ச்சி இல்லாம எந்த நிகழ்ச்சியாவது இருக்கா.. சுதந்திர தினம்னாலும் சினிமா ஆளுக தான் வந்து வாழ்த்து சொல்வாங்க.. பொங்கல்னாலும் அவங்க தான் வருவாங்க..

இப்படி இருக்கப்போ நாம மட்டும் விதி விலக்கா என்ன (ஏன் நம்ம பதிவுகள்ல சினிமா விஷயம் அதிகமா இருக்குன்னு நான் நினச்சப்போ வந்த சிந்தனைகள் (?).. இதே கேள்வி.. தலைவி கீதாவுக்கு வந்த மாதிரி உங்களுக்கும் வரலாம்ல..அது தான் இப்படி ஒரு தொடக்கம்)அதுவும் இல்லாம போன்ல எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு இந்த சிட்டுகுருவி எஸ்கேப் ஆகிடுச்சு..

ஒரு NRI ITA Films-ங்கிற பேனர்ல தயாரிக்கிற ராமேஸ்வரம்ங்கிற படத்துல முதன் முறையா ஜீவாவும் பாவனாவும் ஜோடி சேர்றாங்க.. படத்தை செல்வம் அப்படிங்கிற புது இயக்குநர் டைரக்ட் பண்றார். யுவன் இசை அமைக்கிற இந்த படத்தோட ஷூட்டிங் ஜனவரி 2007-இல் இருந்து ஆரம்பிக்குது.

ஆழ்வாருக்கு பிறகு அஜித் நடிக்கும் கிரீடம் படத்தோட பேர் மலையாளப் பேர் மாதிரி இருக்குறதால தமிழக அரசு வரி விலக்கு தருவாங்களோ அப்படின்னு படத்துக்கு மகுடம் பேர் வச்சிருக்காங்க.. ஆந்திராவில் டிசம்பர் முதல் வாரத்தில இருந்து படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்குது. ஆரம்பித்தில் யுவன் இசையமைப்பார் அப்படின்னு சொல்லப்பட்டது.. ஆனா இப்போ வெயில் படத்தோட இசையமைபாளர் G.V. பிரகாஷ் அந்த வேலையை செய்றார். திரிஷா அஜித் ஜோடியா ஆட்டம் போடுறார்.. ஆனா ஒரு பத்து வருஷதுக்கு முன்னாடி மகுடம்-ங்கிற படத்துல சத்யராஜ் நடிச்சிருக்கார். அதனால் பேரை மறுபடியும் மாத்துவதற்கான சாத்தியம் உண்டு. பார்ப்போம்.
உன்னை நினைத்து, பிரியமான தோழி படங்கள் சரியாக ஓடாததால் டைரக்டர் விக்ரமன் கொஞ்ச நாள் எந்த படமும் எடுக்காமல் இருந்தார். இப்பொழுது பரத், பாய்ஸ் ஜெனிலியா, இருவரையும் ஜோடியாக வைத்து சென்னைக் காதல் என்ற சிட்டியில் நடக்கும் ஒரு காதல் கதையை படமாக்கி வருகிறார். இந்த படத்தின் ஹைலைட்டான விஷயமே பரத்தும், ஜெனிலியாவும் உண்மையிலே காதல் வலையில் விழுந்துவிட்டனர் என்பது தான்.

ஆந்திராவை சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவர் தனக்கும் ஸ்ரீதேவிக்கும் 1991-இல் கல்யாணம் நடந்தது என்றும், இப்போது சேர்ந்து வாழ விரும்புவதாக ஐகோர்ட்டில் ஒரு கேஸ் போட்டர். ஆனா அதை நீதிமன்றம் நிராகித்தது.

ஹிந்தியில் பெரிய அளவில் எடுக்கப்போகும் ராமாயணம் படத்தில் ராவணன் வேஷத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க போவதாக வந்த செய்தியை இப்போது ரஜினி தரப்பு மறுத்துவிட்டது. இதே மாதிரி மஹாபாரதம் திரைப்படத்தில் அஜித் சகுனியாக நடிக்கப்போவதாக ஒரு புரளியும் சுத்திகொண்டு இருக்கிறது.

இப்போதைக்கு இதுதான் சிட்டுக்குருவி சொன்ன சினிமா செய்திகள்.. அடுத்து சிட்டுக்குருவியோட பார்ப்போம்.

23 பின்னூட்டங்கள்:

C.M.HANIFF said...

"Cinema sittu"kku mikka nanri ;)

Anonymous said...

ha..naan than firstu

//சினிமா விஷயம் இருந்தால் தான் அந்த புத்தகமே முழுமையடையுது.. //

romba correctu..

//முதன் முறையா ஜீவாவும் பாவனாவும் ஜோடி சேர்றாங்க//
thavari bharani kitta solladheenga..romba upset avaru LOL


//இப்போதைக்கு இதுதான் சிட்டுக்குருவி சொன்ன சினிமா செய்திகள்.. அடுத்து சிட்டுக்குருவியோட பார்ப்போம். //

cinema pathi pesina thappethuvum illa :)

thx for the infos

said...

குருவி எப்பவும் போல கலக்கிடுச்சு..

said...

நீங்களும் comment moderation enable பண்ணிட்டிங்களா? புளியோதரை குடுக்காம இருக்க தானே?

said...

/"Cinema sittu"kku mikka nanri //

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி Haniff

said...

//ha..naan than firstu//
dreamzz,haniff munthikittaarE..

//thavari bharani kitta solladheenga..romba upset avaru//

dreamzz, maplaikku theriyuma athu summa cine shooting thaannu.. maplaya kettu thaan antha padathukku date-E koduththa bhavanaa..illiyaa mapla

said...

/நீங்களும் comment moderation enable பண்ணிட்டிங்களா? புளியோதரை குடுக்காம இருக்க தானே? //

அப்படி எல்லாம் இல்ல ப்ரியா.. உங்களுக்கு புளியோதரை வேணும்னா சொல்லுங்க.. நியுயார்க் சரவண பவன்ல ஆர்டர் பண்ணி பார்சல் அனுப்பச் சொல்றேன்

said...

//ha..naan than firstu//

bharani, ennathu ithu appo c.m.haniff apdingara perula KM comment potukaraara :-)

said...

நேத்து சன் டிவில உங்க தல படத்தோட சினிமா விமர்சனம் போட்டாங்க...உங்க தல இன்னும் அப்படியேதான் அல(??!!)கா இருக்கார்...என்னமோ போன படத்துக்கும் இப்போ பரவால்லனு சொல்லலாம் :-)

said...

//bharani, ennathu ithu appo c.m.haniff apdingara perula KM comment potukaraara //

Naattaamai..theerppai maaththi sollunga..

said...

//நேத்து சன் டிவில உங்க தல படத்தோட சினிமா விமர்சனம் போட்டாங்க...உங்க தல இன்னும் அப்படியேதான் அல(??!!)கா இருக்கார்...என்னமோ போன படத்துக்கும் இப்போ பரவால்லனு சொல்லலாம் //

நாட்டாமை அடுத்த படத்துல பாருங்க

said...

Aaha.. unga chittu kuruvikku mattum news update ivlooooo fasta irukkudhu? kalakkudhu chittukuruvi :)

Anonymous said...

Bharath & Genelia in love? appe aduththathu ivanggethaan love birdsnnu sollungga!!! (ungge chittukuruvi kathalukku poddiya!!!) hehehe..

said...

//Aaha.. unga chittu kuruvikku mattum news update ivlooooo fasta irukkudhu? kalakkudhu chittukuruvi //

G3, ungaloda paaraattu comments paaththu athu romba kushi yaaki ithumaathiri news pudikkuthu

said...

//Bharath & Genelia in love? appe aduththathu ivanggethaan love birdsnnu sollungga!!! (ungge chittukuruvi kathalukku poddiya!!!) hehehe.. //

amanga my friend.. chittukkuruvi loves kku pOttiya thaan..

chittukkuruvi enna pannapOkuthO ;-))

said...

ellam newzum pudusu pudusa iruke...eppadi thalaviyoda innoru padam vara pogudhu :)

said...

ramayanathula amitabh vera nadika poradhu kelvipatten..unmaya maams :)

said...

//upset avaru //....upset-a...thalavi padam varathuku yaarachum upset aavaangala...aana jeeva-koodanradhu dhaan konjam idikithu :)

said...

// maplaya kettu thaan antha padathukku date-E koduththa bhavanaa//....pinna nammakita sollamaya...hee..hee....kaaptinathuku thanks Maams :)

சினிமா ஒற்றன் said...

//ஹிந்தியில் பெரிய அளவில் எடுக்கப்போகும் ராமாயணம் படத்தில் ராவணன் வேஷத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க போவதாக வந்த செய்தியை இப்போது ரஜினி தரப்பு மறுத்துவிட்டது//

கூனி வேடத்தில் குஷ்பு நடிப்பதாக ஒரு செய்தி பரவலாக பேசப்படுகிறதே! உண்மையா?

Anonymous said...

இது எப்டி இருக்கு ;D

ராமாயணத்தில் வாலி பாத்திரத்தில் விஜய டி. ராஜேந்தர்

அனுமாராக கமல், ஹாலிவுட்டிலிருந்து மேக்கப்மேன் கூட்டிக்கொண்டு வந்து தினம் 20 மணிநேரம் மேக்கப்னு கிளப்பிவுட்ருலாம்.

மகாபாரதத்தில் துரியோதனனாக எஸ்.ஜே.சூர்யா

திரெளபதியாக குஷ்பு, படம் ரிலீஸாகும்முன் பெண்கள் 5 கணவன் வைத்துக்கொள்வதில் தவறில்லை, பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம்னு ஒரு பேட்டி குடுத்தா போதும்.

ராவணனாக பிரகாஷ் ராஜ். சீதையை கண்டவுடன் "செல்லம்.. நீ வேணுண்டா செல்லம்"னு கலக்கலாம்.

said...

//கூனி வேடத்தில் குஷ்பு நடிப்பதாக ஒரு செய்தி பரவலாக பேசப்படுகிறதே//

ஒற்றன், இப்படி எல்லாம் கேள்வி கேட்டு, என்னை எல்லோர் முன்னாடியும் மன்னிப்பு கேக்க வைப்பீங்க போலத் தெரியுது.. எனக்கு ஒண்ணும் தெரியாதப்பா..

said...

//ராவணனாக பிரகாஷ் ராஜ். சீதையை கண்டவுடன் "செல்லம்.. நீ வேணுண்டா செல்லம்"னு கலக்கலாம்.
//

அனான், எப்படி இப்படி எல்லாம் .. ரொம்ப நல்லா இருக்கு உங்க கற்பனை