Tuesday, June 13, 2006

மைக்கும் சோடாவும்

நான் அப்போ பதினோராம் வகுப்பு படிச்சுகிட்டு இருந்தேன். எங்க ஊர்ல ரஜினியோட பிறந்தநாளை கொண்டாட ரசிகர் மன்றம் முடிவு செய்தது. நான் ரஜினியோட வெறித்தனமான ரசிகன். அப்போ நான் ரசிகர் மன்றதுல உறுப்பினர் இல்லைனாலும் தலைவர்க்காக வேலை எல்லாம் செய்வேன். (இன்னிக்கும் பதிவு செய்யப்படாத எத்தனையோ ரசிகர்கள்ல நானும் ஒருவன்) அதுவும் இல்லாம, அந்த சின்ன ஊர்ல, மன்றதுல இருந்த எல்லோரும் எனக்கு தெரிஞ்சவங்க தான். டிசம்பர் 11 இரவு, நெறைய பேர்கிட்ட சொல்லி, வாழை மரம், பச்சை தென்னை மட்டைகள்னு வாங்கி வந்து விதீயெல்லாம் கட்டினோம்.
அப்போ பாத்தா எங்க வீதியே ரொம்ப வித்யாசமா இருக்கும்.. பல வீட்ல இருந்து உரல்களை தள்ளிகிட்டு வந்து, அதை எல்லாம் அடுக்கி, மேல பலகைகளை வைத்துக் கட்டி மேடை போடுவோம். மேடைக்கு மேலே எல்லாம் பந்தல் கட்றது இல்லை.. பின்னால மட்டும் சில சேலைகளை இரவல் வாங்கி விசிறி மாதிரி தொங்க விட்டிருப்போம்.. அன்னிக்கு முழுவதும் ஒரே ரஜினி பாடல்கள் தான்.. கிட்டதட்ட அந்த சின்ன ஊர்ல பத்து குழாய்களும் நாலு ஸ்பீக்கர்களுமாய் போட்டு காது பிளக்க சவுண்டு இருக்கும்.. அதுவும் அப்போ பாட்ஷா படம் வந்த சமயம்.. ஒவ்வொரு பாட்டுக்கு முன்னாடியும் படத்திலிருந்து வசனம்.. அப்புறம் பாட்டுன்னு நான் பாட்டு பதிவு பண்ணி வைத்திருந்தேன். எனக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமா இருக்கும்.. என் மாமாக்கள் எல்லாம் கமல் ரசிகர்கள்.. அதனால அவங்களை ஓட்டிக்கிட்டு இருப்பேன் நான்.. இதை எல்லாம் என் அப்பா ரொம்ப அமைதியா பாத்துகிட்டு இருப்பார்.. அப்பாவும் ஒரு காலத்துல அதிமுகவுல மாவட்ட பிரதிநிதி..அப்புறம் அரசியல் எல்லாம் வேண்டாம்னு அம்மா சொன்னதால, அரசியலுக்கு முழுக்கு போட்டுட்டார்..

இரவு.. மீட்டிங் ஆரம்பிக்கிற நேரம்..சீரியல் பல்பு எல்லாம் போட்டு.. பத்தடிக்கு ஒரு டீயூப் லைட் கட்டி அந்த இடமே பயங்கர பிரகாசமா இருக்கும்.. பல நாடகத்துல நடித்திருந்தாலும் அதுவே எனது முதல் மேடை பேச்சு. எனக்கு முழுவதும் ஞாபகம் இல்லைன்னாலும் சில மனசுல அப்படியே இருக்கு..அதில் சில 'நம்ம தலைவர் கோடு போட்டால் நாங்கள் ரோடே போடுவோம்..அவர் புள்ளி வைத்தால் நாங்கள் கோலமே போடுவோம்..இன்று தியேட்டரில் பறக்கும் நம்ம கொடி நாளை கோட்டையில் பறக்கும்..அன்றைக்கு இந்த தமிழ்நாடே சிறக்கும்..' ..இன்னமும் என் மனசை விட்டு நீங்காத வார்த்தைகள்..

இதை பத்திப் பேசுறப்போ, நான் எட்டாவது படிச்சப்போ நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. ஒரு நாள், ஆங்கில பாட டீச்சர், அவங்க பேரு கூட நீலான்னு நினைக்கிறேன்.. ஒவ்வொருத்தரும் எதிர்காலத்துல என்னாவாக ஆசைபடுறீங்கன்னு கேட்டாங்க.. மத்த பசங்க எல்லாம் இஞ்சீனியர், டாக்டர் அப்படின்னு சொல்லிகிட்டே வந்தாங்க.. நான் எழுந்து சிஎம் ஆகணும்னு சொன்னேன்.. உடனே என்னை முன்னாடி வந்து ஆங்கிலதுல என்ன பண்ணுவேன்னு பேச சொன்னாங்க.. நானும் பாலாறு ஓடும்.. தேனாறு பாயும் அப்படின்னு அள்ளி விட்டேன்.. அப்போ என்னோட நண்பன் வேலுமணி எந்திருச்சு, ரொம்ப நேரம் பேசிட்ட..இந்தாடா சோடான்னு சும்மா கையால் டொக்குன்னு சவுண்டு விட்டான்.. உடனே டீச்சர் வெளில போடான்னு அவனை அனுபிச்சுட்டாங்க..

இப்போ கூட பாக்குறப்போ எல்லாம் நாங்க அவனை சோடா வேலுன்னு தான் கிண்டல் பண்ணுவோம்.. அவனும் வாடா சிஎம் அப்படின்னு பதிலுக்கு கிண்டல் பண்ணுவான்..

17 பின்னூட்டங்கள்:

Bharani said...

soda matter-thanga ultimate comedy...sema timely reaction...unga teacher-ku rasika theriyalaye ....pavam :)

Filbert said...

தலைவர் பிறந்த நாளை இப்படி கொண்டாடணும்-னு ரொம்ப ஆசை. நீங்க எழுதி இருக்கிறது வாசிக்கவே நல்லா இருக்கு. தலைவர் பிறந்த நாள்னா எனக்கு உடனே ஞாபகம் வர்றது 1995-ல பிறந்த நாள் அன்னைக்கு தலைவர் தூர்தர்ஷன்-ல கொடுத்த பேட்டி தான். இப்போ நம்மளால முடிஞ்சது நம்ம blog-ல ஒரு post போடுறது தான் :)

ambi said...

hahaaa, soda matter is too good.. your teacher might have appreciated his timing sense..

Unknown said...

enjoyed reading...

Sasiprabha said...

Karthi sir, pudhu katchi aarambikkira idea edhaavadhu irukka. Illa irukkura katchiyileye edhaavadhu onnula adippadai thondanaa irundhu valarndhu CM aaga poreengala. Ungal latchiyam nalla latchiyam. Vaazhthukkal. CM aanappuram marandhudaadheenga. Eppidinnaalum sari enakku enga thogudhila mattum oru seat koduthurunga..

Sasiprabha said...
This comment has been removed by a blog administrator.
Sasiprabha said...

Thalaivar pirandha naal kondaaduradhu super. School busil pogumpodhu, ennoda senior anna kooda sendhu "Twinkle twinkle little star, Rajini enga super star" appidinnu sathampottu paadittu povom. Enakku vevaram therinju naan first paatha rajini film "Raagavendhra". Appa irundhu ippa varaikkum rajini fan thaan. Aana perandha naal ellaam kondaduradhu illai. Aana "RajinifansDiscussions@ yahoogroups.com" appidingara groupla naanum oru member. Avvalavudhaan.

மனசு... said...

டேய் கார்த்தி...நீ எட்டாவது படிக்கிறப்போவே இங்கிலீசுல பேசிருக்கடா... நீ பெரிய ஆளுதான்... அது சரி அது எப்படி நீ மட்டும் அடிக்கடி பதிவு போடுற.... வேலை அதிகம் இல்லியோ... போன வாரம் நான் ஊருக்குள்ள இல்ல...அதான் பதில் போட முடியல... இனி பதில் அடிக்கடி வரும்...

அன்புடன்,
மனசு...
பி.கு. இந்த மனசு... பயன்பாட்டு அறிவியல் செந்தில்தான்... மறந்துடாதேடா..

மு.கார்த்திகேயன் said...

Yes Bharani, Ambi..Soda matter is too hilarious when i imagine that now

மு.கார்த்திகேயன் said...

You both are correct, filbert and sasi.. Now it have changed in the way of celebrating thalaivar bday..

மு.கார்த்திகேயன் said...

Thanks Bala G for dropping here

மு.கார்த்திகேயன் said...

Vaada senthil.. Hope I can expect more from you hereafter..

Syam said...

Karthi thanks for visiting my blog, appuram unga soda matter padicha udaney thaan enaku rajini mandram nyabagam varuthu, coimbatore la padichitu irundha time rajini mandrathutan sema close touch vechu irundhen...ellam osi ticket ku thaan...

Geetha Sambasivam said...

கார்த்திக்,
சென்னைலே இருந்துக்கிட்டு போளி பத்திக் கேட்டால் எப்படி? மேற்கு மாம்பலத்தில் கிராண்ட்
ஸ்நாக்ஸ் கடை எதிலே வேணாக் கிடைக்கும். இல்லாட்டி இந்த வெங்கடேஸ்வரா ஸ்வீட் ஸ்டால் எல்லாம் இந்த போளி பூரணமே இல்லாமல் செய்வதிலே கில்லாடிகள். சாப்பிட்டுப் பாருங்க.அதுவும் மேற்கு மாம்பலம் தான்.

மு.கார்த்திகேயன் said...

Syam, Thalaivar Bday kondaturathu oru vizha thaan..illa? :-))

Veda, Welcoming you to my blog..

Mahesh, Thanks da

மு.கார்த்திகேயன் said...

கீதா..பேசாம போளி பத்தி ஒரு புத்தகம் எழுதுங்களேன்.. மேற்கு மாம்பலம் போறப்ப கட்டாயம் போளி சாப்புடுறேன்.

Gopalan Ramasubbu said...

Good Post.Me too Rajini fan :)