கனவு கண்டேன்.. நான் கனவு கண்டேன்
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா கனவு காணாம இருந்ததே இல்லை தூங்குறப்போ.. ஏதேனும் ஒரு கனவு வந்துடும். சில நாட்களின் என் கனவுகளை கேட்க ரசிகர் கூட்டம் வேற.. ஆபீஸ்லயும் ரூம்லயும். (அவங்க கேட்கலைன்னாலும் யார் சும்மா விட்டா.. துரத்தி போய் சொல்லாம விட்டது இல்லை.) ஆனால் ரொம்ப சுவாரசியமானது என் கனவுகள்.
சின்ன வயசுல பேனாவுக்கு மை ஊற்றியது தான் என் ஞாபகத்துல இருக்கிற முதல் கனவு. யாரையாவது முதல் தடவ பாக்குறப்போ, கொஞ்சம் கவரபட்டாலே போதும்.. அடுத்த ஒரு வாரத்துல என் கனவுல வந்துடுவாங்க.. அது டூவீலர்ல போறப்ப கிராஸ் பண்ற பெண்ணோ, இல்ல வேற யாரோ.. நிச்சயம என் கனவுல நுழைஞ்சுடுவாங்க.. சில சமயம் ஆபீஸ்ல தீர்வு கிடைக்காத பல விஷயங்களுக்கு என் கனவுகள் தீர்வு தந்து இருக்கு..
ஒரு தடவ, என் கனவுல, நான் என் சொந்தக்காரங்களோட எங்க ஊர்ல இருந்து ஏதோ ஊருக்கு சுற்றுலா போறோம். அப்படி போற வழில, ஒரு இடத்துல வண்டியை நிறுத்துறோம். நான் அப்படியே நடந்து பக்கத்துல இருந்த ஒரு சர்க்கஸ்க்குள்ள போயிடுறேன். உள்ளே நுழைஞ்சவுடனே நாலு பேர் என்னை சுத்தி வர்றாங்க.. நீ இங்கே தான் சாப்பிடணும்னு சொல்றான் அதுல ஒருத்தன்.. எல்லோரையும் பார்த்தா ஜப்பான் ஜாடையில இருக்காங்க.. எத்தனை சினிமா பாத்திருப்பேன்..இத மாதிரி.. நான் முடியாது ன்னு சொல்றேன்.. உடனே ஒருத்தன் என் காலுல கயிற போடுறான். சூப்பர் சுப்புராயன் சொல்லித் தராமலே நான் எல்லோரையும் பந்தாடுறேன்.. எனக்கு ஆச்சர்யம்..நானா அது என்று.. சுத்தி நிக்கிற எல்லோரும் கீழே விழுந்துடுறாங்க. அப்போ என்னை யாரோ ரெண்டு பேர் ஒரு குழிகுள்ள தள்ளுறாங்க..
தம்பி..பாத்தா நல்லவரா இருக்கீங்க.. எப்படியாச்சும் இந்த இடத்துல இருந்து தப்பிச்சு போய்டுங்க..அப்படின்னு சொல்றான் அதுல ஒருத்தன்.. "டேய்..எந்திருங்கடா..இங்க வந்து என் ஆளுகள அடிச்சுட்டு போய்ட முடியுமா.." எங்கேயோ கேட்ட குரல்.. நடிகர் பிரகாஷ்ராஜ்.. மூணு பேரும் எந்திரிச்சு மேல போனோம். ரெண்டு பெண்கள் தட்டுல சாப்பாடும் கையில குழந்தையோடவும் வந்தாங்க.. என் கூட நின்னவுங்களுக்கு ஒரு கை சாப்பாடு கொடுத்தாங்க..
வேண்டாம் வாங்காதீங்க அப்படின்னு நான் அவங்களை பாத்து கத்தினேன்.. கதறினேன்.. ஆன அவங்க அத வாயில போட்டாங்க..ஒரு நிமிஷதுல ரெண்டு பேரும்
சுருண்டு விழுந்தாங்க.. ஏன் இப்படி பண்றீங்க அப்படின்னு கேட்டுகிட்டே நான் திரும்பி பாத்தா அங்க பிரகாஷ்ராஜும் இல்ல.. அந்த பெண்களும் இல்ல.. ஒரு நூறு பேர் என்னை சுத்தி..என்னடா இதுன்னு அப்படியே ஒரு குதி குதிக்கிறேன்.. கால் ஸ்பிரிங் கணக்கா எம்பி நான் பக்கத்து பில்டிங்ல போய் விழுறேன்.
இப்படித்தான் என்னுடைய கனவுகள் எல்லாம். இதை கேட்ட என் நண்பர்கள் பேசாம நீ சினிமாவுக்கு போயிடு..அங்கதான் இப்படி எல்லா கதை விடுவங்கன்னு கிண்டல் பண்ணுவாங்க.. அது என்னமோ தெரியல.. சும்மா குதிரை கணக்கா கற்பனை ஓடும் கனவுல.. சில சமயம் பயப்படுற மாதிரி.. பாதி நைட் எழுந்து, தூக்கம் வராம இருந்தது எல்லாம் உண்டு இந்த கனவுகளால
ஒரு முறை திண்டுக்கலில் இருந்து பஸ் ஏதும் கிடைக்காம, அரசு பஸ்ல வந்தேன். 3+2 சீட் பஸ்..உட்காருவதற்கே சிரமமானது..என் பக்கத்திலோ கொஞ்சம் குண்டான ஆசாமி. ரொம்ப கஷ்டப்பட்டு உட்கார்ந்து இருந்தேன்.அப்படியே தூங்கி போனேன். தூங்கினா..நல்ல அகலமான படுக்கையறை..ரூம் ஏசி எல்லாம் போட்டு சும்மா குளுகுளுன்னு இருந்தது. அப்படிபட்ட ரூம்ல நான் நல்ல நிம்மதியா தூங்கிகிட்டு இருக்கேன்..இந்த கனவை கண்டுகிட்டே நான் சென்னையே வந்து சேர்ந்துட்டேன்.என்ன ஒரு கொடுப்பினை எனக்கு!!!
இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, நெப்போலியன் தோத்ததற்காக ரொம்ப வருத்தப்பட்டேன்..ரெண்டு நாலுல நெப்போலியன் என் கனவுல வந்து ஒரே அழுகை. கதறி கதறி அழுகை. கலைஞரை ரொம்ப பிடிக்கும். வாதம் செய்றப்போ யார்கிட்டயும் விட்டுதரவே மாட்டேன்.. அதனாலவோ என்னவோ, என் கனவுல யார்கிட்டயோ லஞ்சம் வாங்கினார். அதை பாத்ததால என்னைக் கொல்ல கூலிப் படை வேற.. ஹீரோ மாதிரி நானும் என்ன என்னவோ பண்ணி தப்பிக்கிறேன்.. இடையில ரெண்டு பேர் கூட பனி பொழியற இடத்துல டூயட் வேற.. என்ன கஷ்டமடா சாமி! இப்படியாக, என் கனவுகள் ஒரு தொடர்கதை.
எல்லாத்தையும் விட, அசின் எனக்கு தூங்கும்போது விசிறிவிட்டது தான் மறக்க முடியாத கனவு. எவ்ளோ நாளா அவங்க விசிறியாய் இருக்கோம். அவங்க நமக்கு விசிறியாவது விட்டாங்களேன்னு ஒரு ஆத்ம திருப்தி அன்னிக்கு காலைல எழுந்தப்போ இருந்தது.
15 பின்னூட்டங்கள்:
//எல்லாத்தையும் விட, அசின் எனக்கு தூங்கும்போது விசிறிவிட்டது தான் மறக்க முடியாத கனவு.//
venaam thambi, ithu nalla illai. naan unakku Annan maathiri, hence,asin unakku anni. got the point..? :)
btw, very peculiar dreams. writing is also soo good.. keep rocking..
ஆனா சாரி.. அசினை மட்டும் விட்டுத் தரவே முடியாது..
என்ன இது திடீர்னு வாலி வேஷம் போட்டுகிட்டு, தம்பி கூட போட்டி :-))
இது எங்க வீட்டிலே அடிக்கடி நடக்கிற ஒரு விஷயம். இப்போவெல்லாம் என் பையனும், பெண்ணும் கூட இந்த மாதிரி ஜோக் அடிக்கிறாங்க.
ஹெல்லொ. நான் கொடுத்த பின்னூட்டம் என்னோட ப்ளாக் சம்மந்தப்பட்டது. உங்க அசின் கனவுக்கு இல்லை. உங்களோட கனவுக்கு எல்லாம் ஒரு எல்லையே இல்லை.
yebba sami...parthu rasa.....winners are dreamers than...ana adukkuaga..asin yellam too much thala..:))
KRK, கனவு தானே கண்டுவிட்டு போவோம்.. அதுக்கு கூட ஒரு எல்லையா?
//எல்லாத்தையும் விட, அசின் எனக்கு தூங்கும்போது விசிறிவிட்டது தான் மறக்க முடியாத கனவு//
ஏங்க கனவுக்கும் ஒரு அளவு வேண்டாம் இது எல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி...correct KRK ithay ipdiye vida koodaathu... :-)
Enna karthik....vizphipa irukaratha vida kanavula irukara neram than jaasthi pola iruku....It was really fun to read ;)
ஷ்யாம், இன்ன இது KRK கூட கூட்டா.. ஏதோ கனவுல வந்து அசின் விசிறி விட்டதா தானே சொன்னேன்..அதுக்கே இப்படியா? அட போங்கப்பா..
நன்றி பரணி...
enna panrathu..mahesh..
ruchi irukira sappada eththanai thadava vena sapidalam..alavukku meerama :-))
கார்த்திக், என்ன உங்க தமிழ் பதிவுகள் எல்லாமே ஏதோ ஒரு நடிகையோட தான் முடியுது..என்ன விஷயம்?
அது சரி, சின்ன வயசுல டூ வீலர்ல போகும் போது பெண்கள் கிராஸ் பண்றதுனு எழுதியிருந்தியே கார்த்தி, அந்த டூ வீலர் சைக்கிள் தானே...??? ஏய் மறைக்காம சொல்லுப்பா....
அன்புடன்,
மனசு...!
மனசு, எப்படி வேனும்ணாலும் வச்சுக்கலாம்டா..ஆனா சைக்கிள் ஓட்டிய நாட்களில் வந்த கனவுகள் ஞாபகத்தில் இல்லைடா
Freud's interpretation of dreams padichu paarunga, it would be very interesting.
I will try to read that, Usha
Post a Comment