Sunday, October 22, 2006

காதலனே கண்கண்ட தெய்வம் - பகுதி 1

(சென்னையில் சமீபத்தில நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சு எழுதின கதை.. இது ஒரு வார தொடர்கதை..கதைக்குள்ளே போறதுக்கு முன்னாடி, உங்க வலது பக்கம் கொஞ்சம் பாருங்க.. பிரதமர் கூட அரசியல் விஷயங்களை பற்றி பேசிகொண்டிருந்த போது எடுத்த போட்டோ)

அந்த குளக்கரையோரம், எப்பவும் ஆள் நடமாட்டம் இல்லாம வெறிச்சோடி கிடக்கும்.. வெறும் கருவேல முள்காடாய் இருக்கும்.. சின்ன வயசுல சண்முகம் வீட்டுக்குத் தெரியாம பீடி குடிக்க ஆரம்பிச்ச நாள் முதலா அவனுக்கு இது தான் சொர்க்கம்.. இப்போ ஆட்டோ ஓட்ற தன் நண்பன் காளிதாஸோட இங்க அடிக்கடி வருவான்.. டாஸ்மாக்ல சரக்கெல்லாம் வங்கிட்டு ராவுத்தர் பாய் கடைல சிக்கன் பிரியாணியும் ரெண்டு முட்டை வருவலும் வாங்கிட்டு இங்க, சூரியன் உச்சில இருக்கப்ப வந்தாங்கன்ன, சூரியன் டாட்டா கம்மிக்கிற வரை கும்மாளம் தான்..

சண்முகம் பக்கா பொறுக்கி.. காசு கொடுத்து எதை செய்ய சொன்னாலும் செய்வான்.. சில சமயம் சில பேர் இவன் போதைக்கு ஊறுக்காய் ஆகி ரத்தம் சிந்தியதெல்லாம் உண்டு.. அம்மா கிடையாது.. அப்பா மட்டும் தான்.. எவ்வளவு கண்டிச்சு பாத்தும் திருந்தாதனால அப்படியே விட்டுட்டார்.. இப்போ அந்த முள்செடி மரமா வளர்ந்து காளிதாஸுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கு.. வந்த புதுசுல களிதாஸுக்கு இவனைப் பாத்தாலே ரொம்ப பயமா இருக்கும்.. ஆனா ஒரு தடவை இவனுக்காக சண்முகம் ஒருத்தவனை அடிசிட்டான்.. அதில இருந்து, சண்முகம் என்ன சொன்னாலும் அது இவனுக்கு வேத வாக்கு..

அப்படித்தான் இன்னிக்கும் தண்ணியடிக்க வந்தாங்க.. காசுகொடுத்து பொம்பள சுகத்த அனுபவிக்கிறதெல்லாம் இவனுக்கு புளிச்சு போச்சு.. காளிதாஸ்.. நீ என்ன சொன்னாலும் பரவாயில்ல.. இன்னிக்கு நான் அதை செய்யத்தான் போறேன்.. கழுத.. இதைக் கூட செய்யலைனா அப்புறம் ஊருக்குள்ள நான் என்னடா சண்டியரு.. எவளையாவது இன்னிக்கு தொடணும்.. என்னமா வர்றாளுக ஒவ்வொருத்தியும்.. சண்முகதுக்கு இப்போ போதை தலைகேறிவிட்டது.. நான் சொல்ற மாதிரி நீ செய்..அது போதும்.. நீ வரலைனா கூட பரவாயில்ல.. உன் ஆட்டோவை மட்டும் கொடு.. நான் பாத்துக்குறேன்.. காளிதாஸுக்கு பயம் ஒரு பக்கம் இருந்தலும் இந்த மாதிரி த்ரில் ரொம்ப பிடிக்கும்.. ரொம்ப நேரம் போராடி, வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டான்.. சண்முகம் பிளான் என்னன்னா.. நாளைக்கு காலைல உங்களுக்கு பேப்பர் படிச்சாலே தெரியும்.. ஆபீஸ் முடிந்து வீடு திரும்பிய கால்சென்டர் பெண் மாயம்னு நியுஸ் படிச்சா அதுக்கு காரணம் இந்த சண்முகம் தான் தெரிஞ்சுக்கோங்க.

கதிர்..நீதான் என் வாழ்க்கை.. நீ இல்லாம என்னால இனிமே இருக்க முடியாது.. நீ சொன்ன மாதிரி நான் தோத்துட்டேன்..பந்தயத்துல தோத்துட்டேன்..நீ இல்லாம என்னால வாழமுடியாதுங்கிறதை நான் ஒத்துக்குறேன்.. டேய்..டேய்.. உன்னோட இந்த கருகரு மீசை தாண்ட என்னை விழவச்சது.. கதிரும் காவியாவும் ஒரே கம்பெனில, ஒரே டீம்ல வேலை பாக்குறவங்க.. லஞ்ச் முதல் டீ வரை ரெண்டு பேரும் சேர்ந்தே தான் போவாங்க.. சும்மா டீம் மெம்பரா இருந்த பழக்கம் மெல்ல நண்பர்களாகி, இப்போ காதல்ல நிக்குது. கதிருக்கும் காவியான்னா உசுரு..கதிர் தன்னோட வீட்லயும் சொல்லிட்டான்.. இடையில கொஞ்ச உரசல்கள்..ஊடல்கள்.. அதுக்கு பிறகு காவிய பேசின வார்த்தை தான் மேல இருக்கிறது..

கதிர் காலேஜ் படிக்கிறப்போ தன்னோட கூட படிச்ச அமுதாகிட்ட ஏற்பட்ட காதலை கடைசி வரை சொல்லாம கடைசில அவள் கல்யாணதிற்கு போய் தோழனாவே ஆசிர்வாதம் பண்ணிட்டு வந்தவன்..கூட படிக்கிற தோழிகிட்ட எப்படி சொல்றது.. கையில வேலையும் இல்லை.. அமுதா தன்னை காதலிக்கிறாளான்னு தெரியாதுன்னு பல குழப்பதிலேயே காலம் கடத்தினவன்.. அந்த சொல்லாத காதலை ஒரு நாள் காவ்யாகிட்ட சொல்லிகிட்டு இருந்தப்போ தான் இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு தீ பரவி காதலில் முடிந்தது.. அப்போ.. என்னன்ன நினைச்சானோ அதெல்லாம் இப்போ கையில இருக்க, மனசுல அப்படியொரு உணர்வு வந்தவுடனே காவ்யா கிட்ட காதலை சொல்ல, இதுக்குத்தான் காத்திருந்ததை போல காவ்யாவும் அதை ஒத்துக்கொண்டாள்..

கடவுள் எழுதுற கதைல ஒரு பிரச்சனையும் இல்லாம காதல் ரொம்ப சுலபமா நிறைவேறிடுமா என்னா...


இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் திங்கட்கிழமை...

40 பின்னூட்டங்கள்:

Syam said...

sari first comment ah potutu thoonga poren vaathyaare...kaalaila padichitu comment podaren...hope u had a great diwali...poto kalakuthungoov :-)

Unknown said...

பிரதமர் கூட அரசியல் விஷயங்களை பற்றி பேசிகொண்டிருந்த போது எடுத்த போட்டோ)

sema comedy Karthik!!! :))

Anonymous said...

Karthik b.s. ...

இப்போ அந்த முள்செடி மரமா வளர்ந்து காளிதாஸுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கு..

sooprabbu! :)

இன்னிக்கு நான் அதை செய்யத்தான் போறேன்.. கழுத.. இதைக் கூட செய்யலைனா அப்புறம் ஊருக்குள்ள நான் என்னடா சண்டியரு.. எவளையாவது இன்னிக்கு தொடணும்..

idhellava Policy! :)

Porkodi (பொற்கொடி) said...

அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிந்து தொங்க வேண்டாமா :) தொங்கறது உறுதி!

கடல்கணேசன் said...

//அந்த சொல்லாத காதலை ஒரு நாள் காவ்யாகிட்ட சொல்லிகிட்டு இருந்தப்போ தான் இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு தீ பரவி காதலில் முடிந்தது..//

நல்ல டெக்னிக் தல.. அடுத்தவாட்டி இதுதான் ஃபார்முலா.. விடவே மாட்டேன்.

Geetha Sambasivam said...

சுப்ரீம் பிரதமர் நான் ஒருத்தி இருக்கிறப்போ எந்தப் பிரதமர்கூடப் பேசிட்டிருக்கீங்க? என் கிட்டே அனுமதி கேட்கவேண்டாம்?நல்லாவே இல்லை நீங்க செய்யறது வர வர.:D

ambi said...

அசல் அரசியல் வாதி மாதிரியே இருக்கியே பா! மீசை மட்டும் இன்னும் அடர்த்தியா இருக்கனும்! ;D

கதை.. ம்ம்ஹும், கொஞ்சம் சமூக சிந்தனையோட எழுதலாமே! காதல் தான் வாழ்க்கையா என்ன? (no offense karthi)

Porkodi (பொற்கொடி) said...

அம்பி, ஆடு வெட்டறது ப்பாவம்னு கசாப்பு சொன்னானாம்!அந்த கதையா இருக்கு, நீங்க காதல் பத்தி சொல்றது ;) (என்ன பஞ்சாப் ஆப்படிச்சுட்டாளா?)

Janani said...

Superba irukku kathai. Athu ennaellarum kathai ezhutha arambichuteenga????

But do keep continuing

Anonymous said...

thodar kadhaiya...range...kalaasiputeenga... :))

seriyaana politician luk dhaan... :)

Priya said...

கார்த்திக் என்ன இது, வார பத்திரிகை எதுலயாவது வேலை பாத்தீங்களா? தீபாவளி மலர், இப்ப தொடர்கதையா?
க்தை நல்லா ஆரம்பிச்சிருக்கு.

அப்புறம் அந்த photo பாத்து எனக்கு வாயடச்சி போச்சு. Bush ஆடிப் போயிருக்காறாமே??

Priya said...

@ambi,
//கொஞ்சம் சமூக சிந்தனையோட எழுதலாமே! காதல் தான் வாழ்க்கையா என்ன?//
கதை சமூக சிந்தனையோட தான் போகும்னு நினைக்கறேன் அம்பி..
சரி, காதல் இல்லாம வாழ்க்கையா? (உங்களுக்கு கசந்து போச்சுனா எல்லாருக்கும் அப்படியா?)

மு.கார்த்திகேயன் said...

Shyam, Celebrated diwali with sweets along the wishes of god. NOthing Special. Ironical thing is I saw Rajni's Velaikaran on that day :-))

மு.கார்த்திகேயன் said...

Thanks for comments Karthik BS

மு.கார்த்திகேயன் said...

வேதா, தீவாளி அன்னிக்கு சும்ம கோவிலுக்கு போலாம்னு வேஷ்டி சட்டை போட்டேன்.. நண்பர்கள் நல்லா இருக்குன்னு சொன்னவுடன், க்ளிக்கிய போட்டொ அது.. இனிமேல் கட்சி போஸ்டர்ல இந்த போட்டோவையே போடுங்க செயலாளரே..

மு.கார்த்திகேயன் said...

தாரை தப்பட்டைகள் சவுண்டு ஏற்கனவே காதை பிளக்குது,பொற்கொடி..

மு.கார்த்திகேயன் said...

//நல்ல டெக்னிக் தல.. அடுத்தவாட்டி இதுதான் ஃபார்முலா.. விடவே மாட்டேன்//
சும்மா கதை எழுதறப்போ கிடச்ச ஐடியா அது கணேசன்.. ஆஹா காலேஜ்ல யார்கிட்டயோ மனசை பறிகொடுத்த மாதிரி தெரியுது..உண்மையா கணேசா

மு.கார்த்திகேயன் said...

அய்யோ தலைவியே.. நான் உங்க கூட பேசிகிட்டு இருந்ததை தான் அப்படி சொன்னேன்.. எப்பவுமே நீங்க என்னை தப்பாவே நினைக்கிறீங்க தலைவியே..

மு.கார்த்திகேயன் said...

//அசல் அரசியல் வாதி மாதிரியே இருக்கியே பா! மீசை மட்டும் இன்னும் அடர்த்தியா இருக்கனும்!//


அம்பி, நன்றி.. மீசையை கொஞ்சம் இறக்கிவிடலாம்னு நினச்சேன்.. வீட்ல போட்டோ பாத்தா திட்டுவாங்க..அதனால அப்படி எல்லாம் மீசை வைக்கிறதே இல்லை, இப்போவெல்லாம்..

மு.கார்த்திகேயன் said...

/அம்பி, ஆடு வெட்டறது ப்பாவம்னு கசாப்பு சொன்னானாம்!அந்த கதையா இருக்கு, நீங்க காதல் பத்தி சொல்றது ;) (என்ன பஞ்சாப் ஆப்படிச்சுட்டாளா?)//

பொற்கொடி, நல்லா கேளு உங்க அண்ணனை.. அம்பி..இது முழுக்க முழுக்க காதல் கதை அல்ல.. சமூக கதைதான்.. கசப்பு மருந்துல தேன் தடவுற மாதிரி..

மு.கார்த்திகேயன் said...

//Superba irukku kathai. Athu ennaellarum kathai ezhutha arambichuteenga//

ஓ நன்றி ஜனனி.. வாரத்துக்கு ஒரு கதை தான் ஜனனி..

மு.கார்த்திகேயன் said...

//seriyaana politician luk dhaan//
thanks golmaal gopal

மு.கார்த்திகேயன் said...

//கார்த்திக் என்ன இது, வார பத்திரிகை எதுலயாவது வேலை பாத்தீங்களா? தீபாவளி மலர், இப்ப தொடர்கதையா?
க்தை நல்லா ஆரம்பிச்சிருக்கு.

அப்புறம் அந்த photo பாத்து எனக்கு வாயடச்சி போச்சு. Bush ஆடிப் போயிருக்காறாமே?? //

ப்ரியா, என் நண்பன் சென்னையில நடந்த கொடுமையை, அந்த செய்தியை அனுப்பி வச்சிருந்தான்.. படிச்சவுடன் மனசு கனமாயிடுச்சி.. அது தான் அதுக்கு உருவம் கொடுத்து உயிர் கொடுத்து இந்த கதை..

எங்கேயும் வேலை எல்லாம் பாக்கல ப்ரியா.. ஆனா நிறைய படிச்சிருக்கேன்.. அண்ணன் புஷ் கூப்பிட்டு பேசினாரு.. அவர் பதவிக்கு உலை வைக்க வேன்டாம்னு கேட்டுகிட்டாரு..(இதெல்லம் உனக்கு ரொம்ப ஒவருடா கார்த்தி)

மு.கார்த்திகேயன் said...

//கதை சமூக சிந்தனையோட தான் போகும்னு நினைக்கறேன் அம்பி..
சரி, காதல் இல்லாம வாழ்க்கையா//


நன்றி ப்ரியா.. என் மேல இவ்வளவு நம்பிக்கையா ப்ரியா.. உண்மை தான்..இது சற்று சமூகத்தை அலசி பாக்குற கதை தான்..

Anonymous said...

hmm..kalakkal thaan...
innum eludhunga

G3 said...

Startingla ஒரு வார தொடர்கதை-ya one week odara storynnu("ஒரு வார" தொடர்கதை) thappa purinjikkitten..

appuram kadasila "இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் திங்கட்கிழமை..."-nnu padichadhum dhaan idhu ஒரு "வார தொடர்கதை"-nnu purinjudhu :)

Chorry.. Interpretation error :)

Syam said...

கதை நல்லா விருவிருப்பா போகுது ஆனா இன்னும் ஒரு வாரம் வெய்ட் பண்ணனுமா :-)

Priya said...

//அண்ணன் புஷ் கூப்பிட்டு பேசினாரு.. அவர் பதவிக்கு உலை வைக்க வேன்டாம்னு கேட்டுகிட்டாரு..//
பதவி நிலைக்கணும்னா கரை வேஷ்டிக்கு மாறணும்னு சொன்னிங்களா?

// என் மேல இவ்வளவு நம்பிக்கையா ப்ரியா.. //
இல்லைனா உங்க கட்சில இருப்பேனா?

மு.கார்த்திகேயன் said...

Thanks Dreamzz

மு.கார்த்திகேயன் said...

ayyO parava illai G3.. ithukellam sorry a.. Hope u had a great diwali

மு.கார்த்திகேயன் said...

நன்றி ஷ்யாம்....

ஷ்யாம், தினமும் கதை எழுதின போரடிக்குமேன்னு தான்...

மு.கார்த்திகேயன் said...

ப்ரியா..நீங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கைக்கு நன்றி.. அடுத்த துணை முதல்வர் நீங்க தான்..

Bharani said...

Maams...bayanga twist ellam vachi ezhudhi irukeenga....adutha vaaram varaikum kaathu irukanuma...seekiram special episode onnu ezhudhidunga :))

EarthlyTraveler said...

//பிரதமர் கூட அரசியல் விஷயங்களை பற்றி பேசிகொண்டிருந்த போது எடுத்த போட்டோ//appdeengala?Nalla joke.

sari,unga thalaivar padam paathacha?--SKM

Geetha Sambasivam said...

கார்த்திக், அதெல்லாம் மேலிடத்தைக் கலந்து பேசாமல் துணை முதல்வர் பதவியெல்லாம் தாரை வார்க்க முடியாது, சொல்லிட்டேன், வரவர உங்க போக்கு சரியாவே இல்லையே? உங்கமேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான காரணத்தைச் சொல்லவும். :D

நாகை சிவா said...

மாப்பி, படம் நல்லா இருக்கு, ஆனா அதுக்கு நீ கொடுத்த பாரு ஒரு டிஸ்கி செம காமெடி. ஆனா அப்புறம் பாத்தா நீ தலைவலிக்கிட்ட பேசி இருக்க. இத என்னனு சொல்ல.....

கதைய பத்தி அப்பால சொல்லுறேன்

மு.கார்த்திகேயன் said...

//bayanga twist ellam vachi ezhudhi irukeenga....adutha vaaram varaikum kaathu irukanuma...seekiram special episode onnu ezhudhidunga //

thinamum kathai ezhuthina bore adikumla athu thaan..hehehe wait for just 7 days Mapla

மு.கார்த்திகேயன் said...

//unga thalaivar padam paathacha//

innum paakkala SKM :-((

But reviews paaththathilla.. athu thaan No.1

மு.கார்த்திகேயன் said...

//அதெல்லாம் மேலிடத்தைக் கலந்து பேசாமல் துணை முதல்வர் பதவியெல்லாம் தாரை வார்க்க முடியாது, சொல்லிட்டேன், //

மேடம்.. அதெல்லாம் முடியவே முடியாது.. என்னோட ஆதரவு இருக்கிறதால தான் நீங்க கட்சி தலைவியா இருக்கீங்க..

ப்ரியாவுக்காக துணை முதல்வர் பதவி தர்றதுல எந்த மாற்றமும் இல்ல.. அது அவங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கைக்கான பரிசு..

//வரவர உங்க போக்கு சரியாவே இல்லையே? உங்கமேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான காரணத்தைச் சொல்லவும்//

ஹிஹிஹி..நீங்க தமிழ் நாட்டு காங்கிரஸ் தலைவர் மாதிரி.. நாங்க தான் மேலிடம்.. ஹாஹாஹா

மு.கார்த்திகேயன் said...

//அப்புறம் பாத்தா நீ தலைவலிக்கிட்ட பேசி இருக்க. இத என்னனு சொல்ல//

சிவா மாம்ஸ்..என்ன பண்றது தலைவியாயிட்டாங்களே..எல்லாத்தையும் பொறுத்துக்க தான் வேண்டி இருக்கு