Tuesday, October 10, 2006

ஆலமரம் இல்ல.. சொம்பும் இல்ல..

ஆலமரம் இல்ல.. பக்கத்துல எந்த சொம்பும் இல்ல.. ஆனா பஞ்சாயத்து செய்ய ஊர் ஆளுக உண்டு... கூடி நின்னு கதை கேக்க மக்களும் உண்டு.. ஒவ்வொரு தெருவுக்கும் சூரின்னு ஒரு ஆள் இருப்பாரு.. அதாவது, அவர் தான் அந்த தெருவுக்கு இன்சார்ஜ்.. இவர் தான் அந்த தெருவுல வரி வசூல் செய்றவரு.. மொத்தல்ல நமக்கு ஏதும் பிரச்சினைனா, இவர் கிட்ட தான் சொல்லனும். இவர் போய், மற்ற பஞ்சாயத்து ஆளுக கிட்ட சொல்லி அடுத்த தடவை பஞ்சாயத்து கூடறப்போ, இந்த வழக்கை ஆரம்பிச்சு வைப்பார். இந்த சூரிகள் தெருவுக்கு ரெண்டு பேர் இருப்பாங்க.. அதாவது, கிறித்துவ மக்களுக்கு ஒரு ஆள், இந்து மக்களுக்கு ஒரு ஆள்.. கிறித்துவ, இந்து மக்களுக்குன்னு தனிதனியாத் தான் பஞ்சாயத்து நடக்கும்.

ஆனா இதுவரை நான் எந்த பஞ்சயத்துலயும் முழுசா நின்னு வேடிக்கை பாத்ததில்ல.. ஆனா, எங்க வீடு பக்கத்துல தான் ரெண்டு பஞ்சாயத்துக்களும் நடக்கும்.. எப்பா.. பஞ்சாயத்து நடக்கிறப்போ..பயங்கர சவுண்டு அப்பப்போ வரும்.. ஆனா, இது சின்னகவுண்டர் படத்துல விஜயகாந்த் பண்ற மாதிரி ரொம்ப நடுநிலைமையாவெல்லாம் இருக்காது.. யார் அதிக சத்தம் தரமுடியுமோ, யாரு பெரிய ஆளுககிட்ட கொஞ்சம் நெருங்கினவரோ அவங்களுக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வரும்.. பாவப்பட்ட அப்பிராணி மக்களுக்கு, ஒண்ணும் கிடைக்காது.. மிஞ்சிப் போனா அவங்க சோகத்தோட போவாங்க.. இல்லைனா படத்துல எல்லாம் நீங்க பாக்குற மாதிரி புழுதி (மணல்) வாரி தூத்திட்டு போவாங்க. அப்போ அவங்களை பாக்கவே பாவமா இருக்கும்.

இந்த மாதிரி பஞ்சாயத்துன்னு இல்லாம, திருவிழாக்கூட்டமுன்னு ஒண்ணு நடக்கும்.அதாவது இதுல எப்போ திருவிழா வச்சுக்கலாம்..எவ்வளவு வரி வசூலிக்கலாம்னு முடிவு பண்ணுவாங்க. இந்த கூட்டம் எப்பவுமே இரவு பத்து மணி போலத்தான் நடக்கும்.. அப்போதாதான் வேலைக்கு போற எல்லோரும் வரமுடியும்னு.. இதுலயும் பல சண்டைகள் நடக்கும்.. ஊர் பெரிய ஆளுக, மணியாரு, நாட்டாமைன்னு (நம்ம ஷ்யாம் இல்ல) இருப்பாங்க.. அவங்களை பிடிக்காத கோஷ்டி (பெரும்பாலும் பஞ்சாயத்துல தங்களுக்கு சாதகமா தீர்ப்பு கிடைக்காம போனவங்க).. ஏதாவது பிரச்சினைய கூட்டுவாங்க.. அப்புறம் அங்க அங்க சலசலன்னு ஒரே சவுண்டா இருக்கும்.. அந்த நேரத்துல கூட்டதுல இருந்து ஒருத்தர் எந்திரிச்சு, ஏப்பா..இப்படி எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமா பேசிக்கிட்டே போனா என்ன ஆகுறது..சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா.. அப்படின்னு சொல்வாரு.. இன்னொருத்தர்..ஏப்பா..இப்போ இங்கே பொழப்பகெடுத்துகிட்டு எல்லோரும் வந்தது இதுக்கா..திருவிழா பத்தி பேசுங்கப்பான்னு சொல்வாரு.. உடனே கூட்டம் அமைதியாகி, திருவிழா தேதி, வரிப்பணம் எல்லாம் பேசி கலஞ்சுடும்..

சினிமாவுல தான் பஞ்சாயத்து எல்லாம் பெருசு.. இப்போ எல்லாம் பெரும்பாலும் கட்டப்பஞ்சாயத்து தான் நடக்குது.. பாவம்.. எப்பவுமே பாத்திக்கப் படுறது என்னவோ ஒண்ணுமில்லாத ஏழை சனங்க தான்..

30 பின்னூட்டங்கள்:

said...

yeppa nite la post podureenga...eppavum unga post la first comment pottathu illa...so first comment next reading the post :-)

said...

ரொம்ப சரியா சொன்னீங்க கார்த்தி...சினிமால பார்க்கும் பஞ்சாயத்துக்கும் உண்மை பஞ்சாயத்துக்கும் கண்டிப்பா நிறைய வித்தியாசம் இருக்கும்...ஆனா கூட்தத்துல சவுண்ட் விடுற பார்டிகள் மட்டும் ரெண்டு பக்கமும் இருப்பாங்க :-)

said...

கார்த்தி சினிமால மட்டும் தான் நாங்க பஞ்சாயத்து பாத்திருக்கோம்:) நீங்க பக்கா கிராமத்துல நேரடி ஒளிபரப்பே பாத்துருக்கீங்களா? ஆனா நீங்க சொன்ன மாதிரி உண்மையில் பஞ்சாயத்துக்கள் ஏழை மற்றும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் சாதகமாக இருப்பதில்லை. ஒதுக்கப்பட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக நியாயம் இருந்தும் தண்டனைக்குரியவராக பஞ்சாயத்து தீர்ப்பளித்ததாக நிறைய சம்பவங்கள் பற்றி படித்திருக்கிறேன்.

said...

idhu varai naan panchayathu nerla paathadhu illa....mudinja video record panni Youtubela podunga...oh sorry google video...Youtube-a thaan google vaangiyaache :)

Anonymous said...

Mokkai Mokkai yappa evlo Mokkai thaan poduveeeeengappaaaaaaaaaa

said...

யாருப்பா இது தலைவர் பதிவை மொக்கைன்னு சொல்றது? தலைவரே இது எதிர்கட்சியின் சதி ( எலே எடுறா வண்டியை, அடிறா சோடா பாட்டிலை)

said...

Oh thanks shyam.. mostly nite la thaan post poduven

said...

//கூட்தத்துல சவுண்ட் விடுற பார்டிகள் மட்டும் ரெண்டு பக்கமும் இருப்பாங்க //

அய்யோ சவுண்ட் பார்டிகள் தொல்லை தாங்க முடியது ஷ்யாம்.. இந்த மாதிரி ஆளுக பேசுறதுக்கு மைக்கே தேவை இல்லை..

ஆமா..ஷ்யாம் உங்க பஞ்சாயத்து எல்லாம் எப்படி இருக்கும்

said...

//ஒதுக்கப்பட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக நியாயம் இருந்தும் தண்டனைக்குரியவராக பஞ்சாயத்து தீர்ப்பளித்ததாக நிறைய சம்பவங்கள் பற்றி படித்திருக்கிறேன்//

இது தான் ரொம்பக் கொடுமையா இருக்கும் வேதா.. சில நேரத்துல பாக்குறப்ப நம்மளை அறியாமா கண்ணுல தண்ணியே வந்துடும்

golmaalgopal said...

//யார் அதிக சத்தம் தரமுடியுமோ, யாரு பெரிய ஆளுககிட்ட கொஞ்சம் நெருங்கினவரோ அவங்களுக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வரும்.. // cha ippidi dhaan irukkumaa panchayathu...

//ஆளுக்கு ஒரு பக்கமா பேசிக்கிட்டே போனா என்ன ஆகுறது..சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா..// idhu mattum cimemaleyum irukkum :))

//நாட்டாமைன்னு (நம்ம ஷ்யாம் இல்ல)// hee hee LOL :)

said...

@Bala, ippOthaikku ennaala mudiyaathu..oorukku ponavudane record panni pottudarEn

said...

@Anon, arasiyalla sagajampa

said...

//யாருப்பா இது தலைவர் பதிவை மொக்கைன்னு சொல்றது? தலைவரே இது எதிர்கட்சியின் சதி ( எலே எடுறா வண்டியை, அடிறா சோடா பாட்டிலை//

ippadi ippadi oru all thaan venum...

said...

//cha ippidi dhaan irukkumaa panchayathu...
idhu mattum cimemaleyum irukkum //

ippadththaan irukkum gopal.. yaaralum onnum panna mudiyaathu..

said...

//ஏப்பா..இப்படி எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமா பேசிக்கிட்டே போனா என்ன ஆகுறது//
ROTFL :) live layum apdi thanaa?

//Mokkai Mokkai yappa evlo Mokkai thaan poduveeeeengappaaaaaaaaaa //

@anon, எலேய்! யாரங்கே! தேவையான ஜாமான் செட்ட அள்ளி போட்டுகிட்டு 10 ஆட்டோவ அந்த ஏரியாவுக்கு அனுப்புங்க டா!
தல! பத்து போதுமா, இல்ல 50 அனுப்பட்டுமா? ரொம்பா நாளு ஆச்சு, தீவாளி எல்லாம் வருது, பார்த்து பண்ணுங்க அப்பு!! ;D

said...

Innum indha katta panjayathu irukkudhu.. Govt. sattam kondu vandhum thadukka mudiyala.. Idhu oru type panjayathunna, rendy pakkathu aalungalukkum therinja orutharai nadunilamaiyaa vechu nadakkaradhu innoru type.. Adhula yaarunaala naduvarukku kaariyam aaganumo(Adhu annikku night Qtr, biriyani virundha kooda irukkalaam) avanga pakkam ninnu gyayam sollitu poiduvaanga.. Arasiyalla idhellam sagajamappa..

said...

@Veda.. Soda bottle adikkiradhula edhaavadhu help venumaa.. Availadhaan amaidhi kaakanum.. Veliyila onnum avasiyam illa

said...

panchaayathukulla ivlo matter-a....naan idhu varaikum cinema thavira engayume panachaayathu parthathu illa maams :(

//அந்த நேரத்துல கூட்டதுல இருந்து ஒருத்தர் எந்திரிச்சு, ஏப்பா..இப்படி எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமா பேசிக்கிட்டே போனா என்ன ஆகுறது..சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா..//.....Panchanyathula idhu than comedy scene-nu nenaikaren :)

//எப்பவுமே பாத்திக்கப் படுறது என்னவோ ஒண்ணுமில்லாத ஏழை சனங்க தான்//.....correct-a sonnenga mams....kaasu irukaravan thappu panna bayapadhurahe illa....illadhavan thappu pannamaye thandanaya anubavikiraan....enna kodumai kadavule idhu :(

said...

//ஆமா..ஷ்யாம் உங்க பஞ்சாயத்து எல்லாம் எப்படி இருக்கும்//

ஆலமர பஞ்சாயத்து எல்லாம் நானும் சினிமாவுல பார்த்தது தான்...ஆனா இந்த கோயில் மேட்டர் நேர்ல பார்த்து இருக்கேன்...நீங்க சொல்ற மாதிரியே தான் இருக்கும் எங்க ஊர்லயும் :-)

said...

ஆஹா.. நங்களாம் நேர்ல பாக்காத பஞ்சாயத்தை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டீங்க.

இன்னமும் இப்படிலாம் அநியாயம் நடக்குதா? உங்க ஊர்ல இருக்கர உங்கள மாதிரி படிச்சவங்கலாம் ஒண்ணும் தட்டி கேக்க மாட்டிங்களா ஏழைகளுக்கு ஞாயம் கிடைக்க?

சரி, நம்ம நாட்டாமைய அங்க அனுப்புங்களேன். நியாயமா தீர்ப்பு சொல்லுவாரு..DC மக்களும் நிம்மதியா இருப்பாங்க.

said...

//live layum apdi thanaa?//
ama ambi.. appadi thaan..

//எலேய்! யாரங்கே! தேவையான ஜாமான் செட்ட அள்ளி போட்டுகிட்டு 10 ஆட்டோவ அந்த ஏரியாவுக்கு அனுப்புங்க டா!
தல! பத்து போதுமா, இல்ல 50 அனுப்பட்டுமா? ரொம்பா நாளு ஆச்சு, தீவாளி எல்லாம் வருது, பார்த்து பண்ணுங்க அப்பு!!//

கலாசல் அம்பி..இதுக்கு எவ்ளோ ஆதரவு பெருகும்னு நான் நினைக்கவே இல்லை.. அந்த மொட்டை பெட்டிஷன் போட்ட ஆளுக்கு பெரிய ஷலாம்.. என் நன்பர்களை தெரிந்து கொள்ள உதவியதற்கு :-)

said...

//Arasiyalla idhellam sagajamappa//

unmai unmai sasi

said...

//Soda bottle adikkiradhula edhaavadhu help venumaa.. Availadhaan amaidhi kaakanum.. Veliyila onnum avasiyam illa //

Sasi, ippOthaan nee pakkaa sabanaayakar :-))

said...

//Panchanyathula idhu than comedy scene-nu nenaikaren //

இது தான் பக்கா ஜோக்கா இருக்கும் மாப்ள

said...

//ஆலமர பஞ்சாயத்து எல்லாம் நானும் சினிமாவுல பார்த்தது தான்...ஆனா இந்த கோயில் மேட்டர் நேர்ல பார்த்து இருக்கேன்...நீங்க சொல்ற மாதிரியே தான் இருக்கும் எங்க ஊர்லயும் //

எல்லா மரத்தையும் இப்போ வெட்டிறதால, இப்படி கோவில்ல வைக்கிறாங்கன்னு நினைக்கிறேன்..இல்லையா ஷ்யாம்

said...

//நம்ம நாட்டாமைய அங்க அனுப்புங்களேன். நியாயமா தீர்ப்பு சொல்லுவாரு..DC மக்களும் நிம்மதியா இருப்பாங்க//

அப்போ DCல யாரு பஞ்சாயத்து பாக்குறது பிரியா..நட்டாமை போயிட்டா..

said...

வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியறது தான் நல்லது. அதைப் புரிஞ்சு கொண்டாலே போதும், மக்கள் மாயையில் இருந்து விடுபடலாம்.

said...

Thank u thalaivare.. ellaam unga anbum aasirvaadhamum dhaan.. (Ippidi edhaavadhu bit potu vechikitta pinnaadi use aagum illaya)

said...

சரியா சொன்னீங்க மேடம்..

said...

sasi..enna ice vachchaalum thalaivar kitta nadakkaathu