Sunday, October 15, 2006

மகாஜனங்களே.. ராதிகாவே சொல்லியாச்சு.. கோக்ககோலா குடிங்க..

ஏதேச்சையா சன் டிவி பாக்க வாய்ப்பு கிடைச்சது. இப்போ எல்லாம் சீரியல் மற்றும் மற்ற சினிமா நிகழ்ச்சிகளை எல்லாம் பாக்குறதை விட விளம்பரமே பாக்கலாம்னு பாத்துகிட்டு இருந்தேன்..

இதுவரைக்கும் தனது விளம்பரங்களை வித்தியாசமா எடுத்துகிட்டு இருந்த கோகோ-கோலா விளம்பரத்துல ராதிகா.. கோக்ல வேற எந்த மாதிரியான வேதியியல் பொருளும் சேக்கல.. எல்லாம் முறையா பரிசோதித்து தான் தர்றாங்க.. அதனால தைரியமா நீங்க கோக்கை நம்பி குடிக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. நமக்கு இதுல ஏதாவது சந்தேகம் இருந்தா நாமும் கோக் தயாரிக்கிற தொழிற்சாலைக்கு போகலாமாம்.

எனக்கு பொது அறிவு ரொம்பக் கம்மி.. ராதிகா, யாருக்கும் தெரியாம ஏதும் டாக்டர் பட்டம் வாங்கி இருக்காங்களா.. இனிமேல் காய்ச்சல் தலைவலின்னு வந்தா அவங்க கிட்ட போய் மருந்து கேக்கலாமா.. ஏங்க பணத்துக்காக தான் நடிக்கிறீங்க.. கொஞ்சம் பொதுநலத்தையும் மனசுல வச்சு நடிங்க.. யாராவது கொஞ்சம் அழுத்தி கேட்டாலோ, பிரச்சனையை பண்ணினாலோ, அய்யோ.. எனக்கு ஏதும் தெரியாது.. நான் சும்மா விளம்பரத்துக்காக தான் நடிச்சேன்னு ரொம்ப கூலா சொல்லப்போறீங்க..

ஆமா, பொழப்பை கெடுத்து நாலஞ்சு ஆராய்ச்சியாளர்கள் டெஸ்ட் பண்ணி ஒரு லிஸ்ட் போட்டாங்களே, கோக்ல என்ன என்ன மோசமான கிருமிகள் இருக்குன்னு.. அப்போ அதெல்லாம் பொய்யா.. கோக்கை டாய்லெட் கிளீனரா எல்லாம் பயன்படுத்துற அளவுக்கு வேதியியல் பொருள் இருக்குன்னு சொன்னாங்களே.. அப்போ அதென்ன..

ஏதோ ஆரோக்கிய நாலரை பால் குடிங்கன்னு விளம்பரத்துல சொன்னீங்க.. அதுக்காக நீங்க சொல்றதை எல்லாம் நம்புவாங்கன்னு நினச்சீங்களா.. ஏதோ ஒரு டிவி கம்பெனியை நடத்தினோமா, நாலு காசு சம்பாரிச்சோமா அப்படின்னு இல்லாம இதெல்லாம் நமக்கு தேவையா.. ஏதோ சொல்றதை சொல்லிட்டோம்.. கோக் குடிச்சு யாருக்காவது ஏதுன்னா, இனிமே நாம ராதிகா வீட்டுக்கு தாராளமா போகலாம். சம்பாரிச்ச காசுல நமக்கு மருத்துவம் பார்ப்பாங்க..

49 பின்னூட்டங்கள்:

said...

கார்த்தி, கொஞ்சம் அலைன்மெண்ட மாத்துங்க. நெருப்புநரியில படிக்கவே முடியலை. அப்புறம் இந்த காமெண்ட் பாப் அப்பையும் எடுத்துடுங்க. பாப் அப் பிளாக்கரில் மாட்டுது.

நன்றி.

said...

இலவசக்கொத்தனார், பாப் அப்பை எடுத்துவிட்டேன்.. ஆனால் னெருப்பு நரியில் ஒழுங்காக வர, பிளாக்கரில் என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் சொல்லி உதவ முடியுமா..

நன்றி..உங்கள் யோசனைகளுக்கு

said...

Habba.. top 3la vandhutten.. comment panna.. :) Nijamaavae ippo vara padangala vida advertisements romba colourfulla varudhu :D

said...

thala suntv'ya enga paartheenga(tv'lannu sollidadheenga, cable connection vechurukeengalanna inga??)

umakku oru shottu, radhikavukku vitta kuttukku! naan indha kandraaviyellam kudikkardhe illa, namakku eppavume maaza'vo or frooty'o illa occasionala mountain dew'o dhaan! adhanala kudikkaravanga paarthu irungappa!

said...

:-) அப்படியே நீங்கள் பயன்படுத்திய தலைப்பில் நான் இது போன்ற ஒரு பதிவு போட வேண்டுமென்று முதல் முறையாக அந்த விளம்பரத்தை ராதிகா டாக்ரம்மா ஆதாரப்பூர்வமா வந்து சொன்னவுடன் தோணிச்சு. ஆனால், நீங்க போட்டுடீங்க.

எல்லாம் நேரந்தான் வேற என்னாத்தா சொல்ல. கேக்றவன் கேணையென இருந்தா... ;-))

said...

kasu kudtha namma aalunga enna vena pannuvaanga.....podhu nalama appadina...ivangaluku ellam podu nalam...ulaga azhaginga solra world peace madhiri dhan :)

said...

it's very unfortunate. even sharuk, sachin supports for these pepsi, coke. cha!

btw, read your rakkama kaiya thattu also! :D

Anonymous said...

very true....kaasukkaaga ennellam pannaraanga...cha...

even aamir kahn did similar ad....and shah rukh too...avar inga ban pannina U.S'la poi kudipaaraam... :/


ok...inime ellarum aarogya paal kudinga... :)

said...

கார்த்திக்!
யாரு சொன்னா என்ன, நம்க்கு சுய அறிவு வேணும் இல்லாட்டி இப்படி தான். நம் மக்கள்(என்னையும் சேர்த்து தான்) என்று தான் திருந்த போகின்றார்களோ........

இளநீர் குடிடா என்று எவனும் விளம்பரமும் எடுக்க மாட்டான், அப்படியே எடுத்தாலும் நம்ம பெரிய ஸ்டார்கள் எவரும் நடிக்கவும் மாட்டார்கள். ஏன் என்றால் இளநீர்க்காரன் அம்புட்டு காசு கொடுக்க மாட்டான்ல.

said...

நம்ம இங்க உக்காந்து கரடியா கத்திக்கிட்டு இருக்கறதுல புண்ணியமே இல்ல மகா ஜனங்களே... கேரளாவில் கோலா-பெப்சி விற்பதற்கும், உற்பத்திக்கும் அரசு தடை போட்டிருக்கிறது, ஆனால் அதற்கு எதிராக கோலாவும் பெப்சியும் நீதிமன்றத்தை நாடி அரசுக்கு எதிராக தடை வாங்கி இன்னும் விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதை என்ன சொல்வது. கடைக்காரர்கள் விற்கும் வரை, சாமானியர்கள் சினிமாகாரன் சொல்வதை கேட்பதுவரை இந்த தரித்திரம் தொலையாது, அசின் அக்கா ஒரு சோப்பு போட்டு குளிச்சா கார்த்தியே அந்த சோப்பு போட்டு குளிக்க தயார்(கார்த்தி ஒரு உவமைக்காக சொன்னேன்.. கோவிச்சுக்காத) அப்படி இருக்கும் போது நம்ம என்னத்த கத்தி என்னவாக போதுனு கேக்குறிங்களா...??? ஒரு கை தட்டினாதான் ஓசை இருக்காது... எல்லாரும் சேர்ந்து தட்டினா கோலா-பெப்சி கம்பெனியின் முதுகு பிஞ்சு போகும்...

முன்னே வியாபாரத்துக்காக வந்து இருந்து காலனி ஆக்கினவங்க இவங்கதான்.. இப்போ வேற அவதாரம் ஆனா பண்ணப்போறது என்னவோ ஒன்னுதானு தோனுது... கோலா-பெப்சி நிறுவனங்கள் தங்களோட சம்பாத்தியத்த எல்லாம் இந்தியாவிலயா முதலீடு பண்றாங்க??? கோடி கோடியா கொண்டு போறது நம்ம பணமய்யா... இப்போவாவது முழிச்சுக்குவோமா....???

அன்புடன்,
மனசு...

said...

Annan sonna correctaa than irukum -Chithi Radhika sonna correctaa enna? Enga anna karthi solrathu than rightu!

Rakkama kaiya thattu la group dancer akitingalay anna.. hmm enperoda inum sila nalavanga perellam irunthathay, avanga yarum koodava intha nyayatha ketkalai?

said...

வேதா, முதல்ல சோடா குடிங்க இந்தாங்க :)

அதானே, நா தான் சொல்லிருக்கேன் இல்ல, சுயமா சிந்திக்கணும்னு! ராதிகா ஆவது?

தீக்ஷ், நாம நல்லவங்கனு நீங்களே சொல்லிட்டீங்க, நமக்கு எல்லாம் சண்டை போட தெரியுமா, இல்ல நியாயம் தான் கேக்க தெரியுமா?

said...

G3.. vilambaram colorfullaa thaan varuthu..athuvum antha 10,20 second la solla vantha visayaththa kummunnu solraanga..

said...

IA, en friend veettukku pOnen, anga connection irukku..

//umakku oru shottu, radhikavukku vitta kuttukku! //
NanRi..NanRi IA

said...

//அப்படியே நீங்கள் பயன்படுத்திய தலைப்பில் நான் இது போன்ற ஒரு பதிவு போட வேண்டுமென்று முதல் முறையாக அந்த விளம்பரத்தை ராதிகா டாக்ரம்மா ஆதாரப்பூர்வமா வந்து சொன்னவுடன் தோணிச்சு. ஆனால், நீங்க போட்டுடீங்க.//

தெக்கிக்காட்டான், பதிவை நீங்க போட்டா என்ன..நான் போட்டா என்ன..விஷயத்தை சொல்லிடோம்ல..அது தான் நமக்கு வேணும்..

//எல்லாம் நேரந்தான் வேற என்னாத்தா சொல்ல. கேக்றவன் கேணையென இருந்தா//

இப்படித்தான் ஆண்டாண்டுகாலமாய் இருக்கோமே..

said...

//kasu kudtha namma aalunga enna vena pannuvaanga.....podhu nalama appadina...ivangaluku ellam podu nalam...//

correct Mapla..

//ulaga azhaginga solra world peace madhiri dhan//

Mapla, romba romba unmaiyaana lines

said...

//it's very unfortunate. even sharuk, sachin supports for these pepsi, coke. cha! //

enna panrathu ambi..ellorukkum oru publicity thevaipaduthu, moneyoda.. :-((

said...

//குடிநீருக்கே தட்டுப்பாடுள்ள நம் நாட்டில் நிலத்தடி நீரை சுரண்டும் இந்த பானங்களை சமூக நலனில் அக்கறை கொண்ட நாம் புறக்கணிப்போம்//

ஆயுத எழுத்து படத்துல மணி நல்லா சொல்லி இருப்பர், நிலத்தடி நீரை இந்த மாதிரி விஷயதுக்காக சுரண்டுறதை பத்தி..

//ராதிகாவிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்லை,//

ராதிகாவுக்கு பொதுநலமா.. அட போங்க, வேதா..ஏன் எப்படி ஜோக் அடிக்கிறீங்க

said...

//even aamir kahn did similar ad....and shah rukh too...avar inga ban pannina U.S'la poi kudipaaraam//

Gopal, avangka enna pesinaalum oru matter..newsla vanthu periya all akiduvaangka.. Nammaala enna pannamudiyum.. avanga evlo pesinaalum marupadiyum avanga padaththai paakka thaan pOrOm

said...

//இளநீர் குடிடா என்று எவனும் விளம்பரமும் எடுக்க மாட்டான், அப்படியே எடுத்தாலும் நம்ம பெரிய ஸ்டார்கள் எவரும் நடிக்கவும் மாட்டார்கள். ஏன் என்றால் இளநீர்க்காரன் அம்புட்டு காசு கொடுக்க மாட்டான்ல//

சிவா, இதே விஷயத்தை இம்சை அரசன் படத்துல கையாண்ட விதம் அருமை.. அதுமாதிரி பண்ணனும்..அது தான் சரி..

said...

//கோடி கோடியா கொண்டு போறது நம்ம பணமய்யா... இப்போவாவது முழிச்சுக்குவோமா.//

மனசு,
ஹிம்ம்ம்..வாய்ப்பே இல்லை.. என்னத்த முழுச்சு..என்னத்த திருந்தி..அட போங்கப்ப..

said...

//Annan sonna correctaa than irukum -Chithi Radhika sonna correctaa enna? Enga anna karthi solrathu than rightu!//
Ahaa..kilambittaangappa..kilambittaanga..

//Rakkama kaiya thattu la group dancer akitingalay anna.. hmm enperoda inum sila nalavanga perellam irunthathay, avanga yarum koodava intha nyayatha ketkalai//

ennaama Sis, appadi sollitta..evlo..azhagaa..ungalai ellaam paattula fix panni irukken..eppadi sollittiyE maa.. ippadi ellaam pOrkodi thookkalaama annan meethu..

said...

//தீக்ஷ், நாம நல்லவங்கனு நீங்களே சொல்லிட்டீங்க, நமக்கு எல்லாம் சண்டை போட தெரியுமா, இல்ல நியாயம் தான் கேக்க தெரியுமா//

பொற்கொடி..அப்படி எல்லாம் சொல்லப்படாது.. அது தான் உங்க நல்ல மனசுக்கு ரிவர்சிபிள் சேலை தர்றோம்ல..

said...

அட காசுக்கு மாறடிக்கரவங்க சொல்றது எல்லாம் நாம் எதுக்குங்க கேட்கனும்...
என்னோட சொந்த அனுபவத்துல சொல்றேன்...கோக் குடிக்கனும்னா அதுல கொஞ்சம் ரம் கலந்து குடிங்க..அப்போ கோக்கில் இருக்கும் எல்லா நச்சு பொருட்களும் செத்து விடும் :-)

said...

@நாகை சிவா, போன போஸ்ட்ல சரியா சொன்ன பங்கு...நம் நட்புக்கு மூல காரணமா இருந்த நயன் வாழ்க வாழ்க.... :-)

கேட்டியே ஒரு கேள்வி..இன்னும் நயன மறக்கலியானு...எங்க மறக்கறது நானும் வேற ஏதாவது பிகர் கிடைக்குமானு பார்த்து எட்டு அடி ஏறினா (பாவனா) மக்கள் 10 அடி இறக்கி விடறாங்க (நயன்)...நான் என்ன பண்ணட்டும்.. :-)

said...

கார்த்தி கோகோ கோலா எல்லாம் நம்ப மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடவுக்கும்,பார்மர் மாம்பழச்சாறுக்கும் ஈடு ஆகுமா? ராதிகா அக்கா அதுக்கு ஏன் விளம்பரம் கொடுக்க மாட்டேன்ங்கிறாக.பணம் போதாதோ/

said...

பதிவுக்கு நன்றி கார்த்தி,

நான் பார்த்தது ஒரு சுவரொட்டி விளம்பரம். அதில் "உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கு கோக் குடிங்க" என்று ராதிகா நிற்கிறார்.

பணம் என்று வந்து விட்டால் மூளையைக் கழற்றி வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. இருக்கிற பணத்தை மேய்த்தல் போதாதா? இந்த வழியில் இன்னும் பணம் தேவைதானா?

மா சிவகுமார்

said...

இந்த comment 'அடி பாவனா கையத்தட்டு'க்கு:
அடடா அடடா என்ன ஒரு கற்பனை! நீங்கலாம் டூயட் பாடிவீங்க. நான் மட்டும் குப்பை பெருக்கணுமா? சரி பட்டு புடவைக்கு sponsor பண்றேன்னு சொன்னதால அசின் வர பாதைய பெருக்கறேன்.

said...

ராதிகா in pepsi ad பத்தி ஒரு தமிழ் magazine ல கூட படிச்சேன். அவங்களுக்கு எதிரா ஒரு protest ஆரம்பிச்சிருக்கு போல இருக்கு. சினிமா நடிகர்கள் சமூக அக்கரையோட நடந்துக்கணும். அது நடக்கப் போறது இல்ல. மக்கள் தான் அவங்கள தூக்கி வச்சிட்டு ஆடி, அவங்க ad பண்ணறதெல்லாம் வாங்கறத நிறுத்தணும்.
ஷாருக் சொன்னாராம் - இந்தியால pepsi ய ban பண்ணினா america ல போய் குடிப்பேன்னு. இவங்களலாம் என்ன பண்றது?

said...

//நீங்கலாம் டூயட் பாடிவீங்க. நான் மட்டும் குப்பை பெருக்கணுமா//

பிரியா..அப்படி எல்லாம் இல்லை.. நான் உங்களை எல்லார் மாதிரி குனித்த புருவமும் பாட விடலாம்னு தான் இருந்தேன்..ஆனா..இந்த 'சுத்த' யோசனை வந்த பிறகு உங்களுக்கு இந்த வரிகளை கொடுத்தேன்..

//பட்டு புடவைக்கு ஸ்பொன்ஸொர் பண்றேன்னு சொன்னதால அசின் வர பாதைய பெருக்கறேன்//

பிரியா, உங்களுக்குத் தான் அசின் மேல எவ்வளவு பாசம் :-))

said...

//சினிமா நடிகர்கள் சமூக அக்கரையோட நடந்துக்கணும்//

எந்த சினிமா நடிகர்கள் சமூக அக்கறையோட நடந்துகிட்டு இருக்காங்க.. நடிகர் சங்க கடனை அடைக்க ஷோ எல்லாம் நடத்துவாங்க..சுனாமி நிதிக்காக அல்ல..

said...

//கோக் குடிக்கனும்னா அதுல கொஞ்சம் ரம் கலந்து குடிங்க..அப்போ கோக்கில் இருக்கும் எல்லா நச்சு பொருட்களும் செத்து விடும் //

நாட்டாமை, அப்போ ரம் குடிக்காதவங்க என்ன செய்றதாம்..

said...

//நானும் வேற ஏதாவது பிகர் கிடைக்குமானு //

நாட்டாமை..ஏன் இப்படி இருக்கீங்க.. உங்களுக்கு கண்ணுபடபோகுதய்யா தான்..நோ முத்துமணிமாலை டூயட்...

said...

//மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடவுக்கும்,பார்மர் மாம்பழச்சாறுக்கும் ஈடு ஆகுமா//

தி.ரா.சா சார், அந்த சுவைக்கு வேற எதுவும் பக்கத்துல கூட வரமுடியாது..

said...

//பணம் என்று வந்து விட்டால் மூளையைக் கழற்றி வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. இருக்கிற பணத்தை மேய்த்தல் போதாதா? இந்த வழியில் இன்னும் பணம் தேவைதானா//

எப்படி கேட்டாலும் யாரும் நிறுத்த போவதில்லை சிவகுமார்.. இவங்க காசை மட்டுமே பாக்குறவங்க.. இவங்ககிட்ட பேசி பயன் இல்லை..

said...

I agree your point.Avanga kasukku eppdi venumnalum sollvanga nadipanga.AAAnu vaya pulandhu avangala deivam solli nambra jangala dhan solanum.

But Ads are very interesting to watch.
BTW, I read your short story (very nice) and Bavana pattu (nalla imagination.LOL!)--SKM

said...

its far far better to drink Juices instead of aerated soft drinks

said...

//AAAnu vaya pulandhu avangala deivam solli nambra jangala dhan solanum.//

Engaa jalangalEyE thittanum SKM.. intha maathiri alukalukku samuka akkarai konjam irunthaalum pOthumE

//BTW, I read your short story (very nice) and Bavana pattu (nalla imagination.LOL!)//

romba thanks SKM

said...

Bala..super point.. pesaama fruit juice kudichchittu pOkalam.. udambukkum romba nallathu..

said...

Karthi,

The text alignment would be Justified. If you change that to Left aligned, the blog should be visible properly in Firefox.

Try it.

said...

//பார்மர் மாம்பழச்சாறுக்கும் ஈடு ஆகுமா? //
TRC Sir athu 'parner' thanay,illa enaku maranthu pocha?
please clarify
Deeksh

said...

தீக்ஷிண்யா உனக்கு பேரு மாத்திரம் அல்ல ஞாபகசக்தியும்தான் தீக்ஷ்ண்யம்.வத்தலகுண்டுவிலிருந்துவரும் அதன் பெயர் பார்னர்தான்.1970- 1973மதுரையில் வேலைபார்த்தபொழுது குடிப்பதுண்டு.தவற்றுக்கு வருந்துகிறேன் சுட்டி காட்டியதற்கு நன்றி.

said...

ahaa.. i love that taste TRC sir

Anonymous said...

Coca kudikka sonnataal taan ,katchiyai vittey AMMA thookitaangalam :)

said...

//Coca kudikka sonnataal taan ,katchiyai vittey AMMA thookitaangalam//

irukkalaam..yaar kandathu

said...

கார்த்தி,
நெருப்பு நரியில தமிழ் எழுத்து சரியா வரணும்னா - பிளாக் போஸ்ட் பண்ணும்போது எழுத்துக்களை "அலைன் லெஃப்ட்" கொடுங்க... "ஜஸ்டிஃபை" கொடுக்க வேண்டாம்... ஓகேயா...

said...

ஆஹாஹா... ஏற்கனவே ஃப்ரீ மேஸன் சொல்லிட்டாரோ... இந்த ஐடியாவை...

said...

கார்த்திகேயன் இப்படியெல்லாம் விளம்பரம் வருகிறதா?
1. இந்தியா பெருத்த சனத்தொகை கொண்ட நாடு.
2. இங்க எல்லாதையும் வளைச்சுப் போட்டா நல்ல பிசினஸ்
3. ஆராய்ச்சியாளர் சுனிதா ராவ் (பேர் சரியா ) மாதிரியானவங்க ரொம்ப வேலை மெனக்கெட்டு ஆராய்ச்சி செஞ்சு முடிவுகளை உறுதிப்படுத்தி வெளியிட்டிருக்காங்க - அதெல்லாம் தடுத்துறலாம்; அல்லது அந்தந்த மாநிலத்தில் மக்கள் யார் சொன்னா கேப்பாங்களோ ( நமக்கு சித்தி ) அவங்களை சொல்லவச்சிரலாம்

நாமளே காசு கொடுத்து மண்ணு வாங்கி நாமே தலைலயும் போட்டுக்குவோம் வாயிலயும் போட்டுக்குவோம். ஐ நல்லாயிருக்குபோம், போடாதவனை விசித்திர பிறவியாக்கிடுவோம்.


நாட்ல இருக்குற கடைசி சொட்டு நீரையும் காலி செஞ்சபிறகுதான் தெரிஞ்சுக்குவோம் காசால என்ன முடியாதுங்கறதை- இது எங்கோ படித்த பழமொழி

said...

//நாட்ல இருக்குற கடைசி சொட்டு நீரையும் காலி செஞ்சபிறகுதான் தெரிஞ்சுக்குவோம் காசால என்ன முடியாதுங்கறதை//

முதல் வருகைக்கு நன்றி மாதங்கி..

மக்களுக்கு மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சி வராத வரை.. இது தொடர்ந்து கொண்டே இருக்கும்..