Wednesday, October 04, 2006

தீபாவளி திரைப்படங்கள் - ஒரு முன்னோட்டம்


தர்மபுரி
சட்டம் ஒரு இருட்டறை படத்துல நான் விஜயகாந்துக்கு மேக்-அப் போட்டேன். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதுக்கு பிறகு நாங்கள் இருவரும் இந்த படத்துல தான் ஒண்ணு சேர்கிறோம்னு சொல்ற ஏ.எம்.ரத்னம் தயாரிப்புல, பஞ்ச் டயலாக் மன்னன் பேரரசு இயக்கத்துல கேப்டன் நடிக்கிற படம் தர்மபுரி. படத்துல பஞ்ச் டயலாக்குகளுக்கு பஞ்சமில்ல.. கேப்டன் வேற ஒண்ணு ரெண்டு மூணுன்னு வரிசை கட்டி பட்டைய கிளப்ப போறாரு.. படத்தோட இப்போதைய ஹைலைட், டைரக்டர் பேரரசு ஒரு பாட்டை சொந்த குரலில் பாடியிருப்பது தான். (ஆண்டவா நீ தான் காப்பாத்தணும்)வரலாறு
புலி வருது புலி வருதுன்னு போன தீபாவளில இருந்து சொல்லி, அந்த புலி இதோ இப்போ வருது, வரலாறுன்னு புதுப் பேர் வச்சுகிட்டு. முதல் முறையா அஜித் மூன்று வேடத்துல நடிக்கிறாரு.. வில்லன்ல அஜித்துக்கு கை கொடுத்த கே எஸ் ரவிகுமார் இயக்கிய படம்.. டிரெய்லர் எல்லாம் பாக்க பக்காவ இருக்கு. ஏ ஆர் ரகுமான் இசைல பாடல்கள் கேக்குறவிதமா இருக்கு. படம் வெளிவர்றதுல வரலாறு படைத்த இந்த படம், படம் வந்த பிறகு வசூல்ல வரலாறு படைக்குமா?வல்லவன்
மன்மதனை இயக்கியது சிம்பு தான்னாலும் அந்த படத்தோட டைட்டில் கார்டுல முருகன் பேரு தான் வந்தது. அதனால, இந்த படம் தான் சிம்பு இயக்குற முதல் படம். சந்தியா, ரீமா சென், நயன்தாரான்னு கோலிவுட்டின் இளமை அரசிகள் படத்துல இருக்காங்க. யுவன் மியுஸிக்ல பாட்டெல்லாம் ஏற்கனவே பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டு.. படம் ஹிட்டாகுமா.. இன்னும் 17 நாளே உள்ளது..பொறுத்திருப்போம்.

தலைமகன்
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 100வது படம். அரசியல் விளையாட்டுகளுக்கு பிறகு, வெளிவர்ற படம். படம் ஆரம்பிக்கிறப்போ டைரக்டர்னு யாரோ பாலாஜின்னு ஒருத்தர் பேர் இருந்தது. இப்போ சரத்குமாரே அந்த வேலைய செய்யறாரு. ராதிகாவின் ரேடான் பிக்சர்ஸ் தயாரிப்புல, டைரக்டர் சேரனோட திரைக்கதைல, கேரளத்து நயன்தாரா சரத் ஜோடியா நடிக்கிற இந்த படத்துக்கு J. பால் இசை அமைகிறாரு. ரொம்ப நாளா மிகப்பெரும் ஹிட் ஏதும் கொடுக்காத சரத், தலைமகன் மூலமா தீபாவளி வசூல்ல முதல்மகனா வருவாரா..?

வட்டாரம்
சரண் தன்னோட பட்டாளத்தோட, இதயத்திருடன் தோல்விக்கு பிறகு மறுபடியும் களமிறங்கி இருக்கும் படம் வட்டாரம். ஆர்யா நடிக்கிற இந்த படத்துல அவருக்கு காட்ஃபாதர் மாதிரி நெப்போலியன் நடிக்கிறார். வைரமுத்து வரிகளுக்கு பரத்வாஜ் இசையமைக்க, தனது சொந்த கம்பெனிக்காக இந்த படத்தை தயாரிக்கிறார் சரண்.


ஆர் பி சௌத்திரி தயாரிப்புல, அவரோட மகன் ஜீவா நடிக்க, இயற்கை படத்துக்கு சிறந்த திரைக்கதைக்காக தேசிய விருது வாங்குன ஜெகநாதன் படத்தை இயக்குறார். ஸ்ரீகாந்த் தேவா மியுஸிக்ல, நயன்தாரா கிளப் டான்சராக நடிக்கிற இந்த படம், ஒரு ரவுடியோட வாழ்க்கை பற்றியது. படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கலக்கல இருக்கிற மாதிரி படமும் இருக்குமான்னு.. தீபாவளி அன்று தெரியும்

இன்னும் அர்ஜூனின் வாத்தியார், எஸ் ஜே சூர்யாவின் திருமகன், ஸ்ரீகாந்தின் கிழக்கு கடற்கரை சாலை ன்னு நிறைய படங்கள் இருந்தாலும், அவகள் தீபாவளி அன்னிக்கி ர்லீஸ் அகுமான்னு தெரில..

இந்த வருஷாம் நயன்தாரா நடிச்ச மூன்று படங்கள் வெளிவருது. இளைய நட்சத்திரங்களில் அஜித்தை தவிர, விஜய், விக்ரம், சூர்யான்னு யார் படங்களும் வரல..

முதல் வார வசூல்ல ரஜினிக்கு அடுத்து ராஜான்னு பேர் வாங்குன அஜித்துக்கு வரலாறு அந்த பேரை தக்கவைக்குமான்னு தெரில.. வரலாறு 11 கோடிக்கும், வல்லவன் 8 கோடிக்கும், தர்மபுரி 7 கோடிக்கும் விற்பனைஆகி உள்ளன.. இதே மாதிரி வசூலும் இருக்குமா.. உங்களை மாதிரியே நானும் காத்திருக்கிறேன்.

25 பின்னூட்டங்கள்:

said...

diwali-ya edirparkarathuku oru karanam annaki release agura cinema than....suuper preview mams.....i am waiting for thala movie....apart from that i am expecting E....as iyarkai was quite good.....parpom.....

thala padam jeyika ellam valla aandavanai prathipom :)

said...

e ennavo sci-fi padam irukum nenakren.. araichi next generation adu idu nu.. deepavali pudu dress pattasu sweet iduku apram thanga idelam :))

said...

super round up.neenga kaeta tag eluthitain anna (worst dream).

said...

யாருப்பா இங்க, தமிழ் வலைப்பதிவுல இங்கிலிஸ்ல பின்னூட்டம் போடறது, ராஸ்கல்ஸ்...என்ன இது சின்னபுள்ளத் தனமா இருக்கு :-)))))

****

தீபாவளி படங்கள் முன்னோட்டம் கலக்கல், பாராட்டுக்கள் !!

****

வரலாறு ஜெயித்தால் அஜித் பிழைப்பார், இல்லாவிட்டால் பேரரசுவிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்து விடலாம் :-))

****

விஜய்காந்த் ஏற்கனவே பஞ்ச் பேசி கொல்வார், இப்ப வேற பேரரசுவோட சேர்ந்தா, யப்பா.... நினைக்கவே பயமாயிருக்கு, யாரவது பாத்துட்டு விமர்சனம் சொல்லுங்க்ப்பா (படம் வந்தப்பறம்)..

said...

correct mapla.. diwalinaale enna padamellam release akuthunnu paakkurathe oru periya velaiyaa irukkum..

Nichchayama varalaaru ajithkkku verripadamaath thaan irukkum mapla

said...

பொற்கொடி..தீபாவளி பட்டாசு புது துணி இனிப்புகள்னு இருந்தாலும் படங்கள் தான சூடான கார வகைகள்

said...

ஈ சயன்ஸ் ஃபிக்சன் படமெல்லாம் இல்ல பொற்கொடி.. ஒரு ரவுடியோட கதையாம்..படத்தோட டைரக்டரு சொன்னாரு

said...

thanks sister.. surea unga dreams post padikkiren

said...

சோம்பேறி பையா.. முதல் வருகைக்கு நன்றி..

//தீபாவளி படங்கள் முன்னோட்டம் கலக்கல், பாராட்டுக்கள் //
பாராட்டுக்களுக்கு நன்றி..

//வரலாறு ஜெயித்தால் அஜித் பிழைப்பார், இல்லாவிட்டால் பேரரசுவிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்து விடலாம்//
அஜித் நிச்சயம் வரலாறுல வரலாறு படைப்பார்

//விஜய்காந்த் ஏற்கனவே பஞ்ச் பேசி கொல்வார், இப்ப வேற பேரரசுவோட சேர்ந்தா, யப்பா.... நினைக்கவே பயமாயிருக்கு, யாரவது பாத்துட்டு விமர்சனம் சொல்லுங்க்ப்பா (படம் வந்தப்பறம்)..
//
தர்மபுரி நினைச்சாத் தான் பாவமா இருக்கு

said...

good info! but i rarely used to see films. epdiyum inthiya thollaikaatchigalil vanthu vidum, illa!

better vijaykanth can concentrate in poltics alone. pothum saami, reelu anthu pochu!nu naangalum evloo naala polambaroom? kekka maatengraare! :D

said...

Unga blog pudhu title juuper mams :)

said...

ஆகா சன் டிவி டாப் 10 பார்த்த எபெக்ட்டு...பார்க்கலாம் அஜிம் வரலாறு படைப்பாரா இல்ல வரலாறு ஆயிடுவாரானு :-)

said...

நல்ல முன்னோட்டம்...
நான் வரலாறு தவிர வேர எதுவும் பாக்க மாட்டேன்..
Gabdun ஏன் இப்டி பயமுறுத்தறார்?

said...

None of the movies inspire any confidence. Even if varalaaru turns out to be any good, the movie isnt going to do good business just bcos of the 'old feel' to it. Indha maadhiri vandha endha padam nallaa Odi irukku-nnu sollunga?! Vattaaram will be a good time pass, in the usual Saran formula.

said...

aaha idhu dhaanya seidhi! superapu!

said...

//better vijaykanth can concentrate in poltics alone//

correcta sonneenga ambi.. ana varalaarai paarunga

said...

//Unga blog pudhu title juuper mams //

Thanks Mapla :-))

said...

//சன் டிவி டாப் 10 பார்த்த எபெக்ட்டு//

நன்றி நாட்டாமை

said...

//நல்ல முன்னோட்டம்...
நான் வரலாறு தவிர வேர எதுவும் பாக்க மாட்டேன்//

Thanks priya.. ithu ithu spiritu priya..

said...

//Vattaaram will be a good time pass//

But i dont think filbert.. his last two movies are not good. and ithayathirudan is great flop.. but let see

said...

//aaha idhu dhaanya seidhi! superapu//

Thanks IA!

said...

GodFather Thala AAZHWAR.....

sure VARALAARU.....the movie of THALA will rock....no worries dude....

said...

Correct Leo.. Thala intha diwalila kalakuraaru

said...

Nice Update Muthu!

I am looking forward for Ee. I wonder on the Jaganathan's Earkai, the picturatice was beautiful and Jeeva's acting would be another + point for this film. I always like the Sharan-Bharathwaj-Vairamuthu combination it works well n much movies. think vattaram would be on this list.

said...

//இயற்கை படத்துக்கு சிறந்த திரைக்கதைக்காக தேசிய விருது வாங்குன ஜெகநாதன் படத்தை இயக்குறார்.//

எஸ்.பி.ஜனநாதன் என்பதே சரியென்று நினக்கிறேன்.
அருமையாக கதை சொல்லும் திறமை இருக்கு இவரிடம்.