Thursday, October 12, 2006

ஆசையாய் ஒரு கொலை

அந்த இருட்டுக்கு பயந்து அன்று நிலா கூட வானத்தில் வாக்கிங் போகல.. அந்த நேசனல் ஹை-வே, கழட்டி போட்ட பெல்ட் மாதிரி நீண்டு இருந்தது..

அந்த ரோட்டோர மரமெல்லாம் தலைவிரி கோலமா காத்துக்கு தலை ஆட்டிகிட்டு இருந்தன.. தூரத்துல சில வீடுகள்ல விளக்குகள் எரிஞ்சுகிட்டு இருந்தன..

ரொம்ப தொலைவுல, ஒரு சாம்பல் நிற ஃபோர்ட் கார் மிதமான ஸ்பீடுல வந்துகிட்டு இருந்தது. முன்னாடி வர்ற வண்டிக்கு ஏத்தமாதிரி அந்த காரோட ஹெட்-லைட் கீழும் மேலுமா மாறி மாறி ஒளி அடித்துக்கொண்டு இருந்தது. கார் டிரைவர் சீட்டில் உக்கார்ந்து இருந்தவனுக்கு வயது இருபத்தேழில் இருந்து முப்பதுக்குள் இருக்கலாம். பணக்காரத்தனம் அவன்கிட்ட தெரிந்தது..கையில் பிரேஸ்லெட், மிடுக்கான விலையுயர்ந்த ஆடைன்னு இருந்தான். இடப்பக்கம் வகிடெடுத்து, தலை வாரப்பட்டிருந்தது. மீசை அழகா சிறிதாக வெட்டப்பட்டு இருந்தது.. ஒரு வரில சொல்லனும்னா கஜினி பட சூர்யா மாதிரி இருந்தான்.

நியுயார்க் நகரம் உறங்கும் போதுன்னு FMல ரகுமான் பாடிகொண்டு இருந்தார்..ஏசி போட்டு கார் சில்லுன்னு இருந்தது.. பின்னாடி சீட்ல ஒரு பெண்.. மார்பு துணியெல்லாம் கோனல் மானலாக விலகி கிடந்தது.. ஒவ்வொரு முறையும் எதிரில் வர்ற காரின் வெளிச்சம் அவள் முகத்தில் பட்டுச் சென்றது..ஆடை எல்லாம் இப்படி இருக்கிறதே என்ற சுயநினைவு கூட இல்லாமல் அவள் அப்படி கிடந்தாள்.அவள் ..இல்லை..அது ஸ்வப்னா..படித்த காலேஜுல எல்லோரையும் சொக்க வைத்தவள்.. இவள் வருகிறாளான்னு வழி பாத்து கிடந்தவர்களில், காரை ஓட்டுகின்ற இவனும் ஒருத்தன்..இவன் திலக்.. ஆசை ஆசையா ரெண்டு பேரும் காதலித்தார்கள்.. வீட்டை எல்லாம் எதிர்த்து கல்யாணமும் பண்ணிகொண்டாகள்.. ஆனா என்ன பண்ணுவது..ரெண்டு மாதத்திற்கு முன்னாடி ஆபீஸில் சேர்ந்த அனிதா ஸ்வப்னாவை விட அளகாய் தெரிந்தாள் திலக்கிற்கு..திலக்கிற்கு அனிதா தேவைப்பட்டாள்..இதோ இப்போ ஸ்வப்னா பிணமாக காரில்..

அந்த மெயின் ரோட்டை விட்டு இடது பக்கம் திரும்பிய ஒரு மண்சாலையில் காரை திருப்பினான். ரொம்ப தூரம் உள்ளே போன பிறகு மறுபடியும் இடது பக்கம் திரும்பி காரை நிறுத்தினான். அது ஒரு பெரிய குளம்.. அதன் கரை வரை அவளை..ஸ்வப்னாவை..அதை இழுத்துகொண்டு சென்றான்..கீழே படுக்க வைத்தான்..நடு வயிற்றில் அரைமுழ கத்தி சொருகிக்கிடந்தது.. அந்த இடத்தில் இருந்து ரத்தம் அவள் வயிற்றுப் பகுதி முழுவதும் பரவிக்கிடந்தது. ஒரு பாட்டிலில் இருந்த திரவத்தை அவள் மேல் ஊற்றினான்.. திரவம் பட்டவுடன் அவள் பாதி தண்ணியாகவும், மீதி ஆவியாகவம் வேக ஆரம்பித்தாள்.. இவன் காலால் அவளை எட்டி உதைத்தான்.. அவள் மெல்ல உருண்டு, குளத்தின் தண்ணீரோடு...

டேய்..குமாரு..தூங்குடா.. மணி இப்போ ரெண்டு ஆகுது.. யெப்பா.. ஒரு புத்தகத்த எடுத்தா படிக்காம உள்ள வைக்கமாட்டியே என்று அறை நண்பன் திட்டியதால் இதுவரை படித்துகொண்டிருந்த அழிக்கவந்தாள் அனிதா என்ற க்ரைம் நாவலை மூடிவைத்து தூங்கப் போனான் குமார்.

[இந்தக் கதையை நான் என் கல்லூரி ஆண்டு விழா புத்தகத்திற்காக எழுதினேன். வரிக்கு வரி கதை மறந்து விட்டதால் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு மறுபடியும் புதிதாக எழுதியுள்ளேன்]

42 பின்னூட்டங்கள்:

Bharani said...

Maams...Enna idhu kalakareenga....Ungalukulla ippadi our rajeshkumar thoongitu irukara...

kadai super-a irundhuchi....thodarnthu ezhudunga :))

Bharani said...

//ஆசையாய் ஒரு கொலை //.....title appadiye rajeshkumar novel maadhiriye irukudhu :)

Anonymous said...

chuuper appu... :)) story semma gripping...nice descripton...

prize vaanginengala indha storykku???

மு.கார்த்திகேயன் said...

//Ungalukulla ippadi our rajeshkumar thoongitu irukara...

kadai super-a irundhuchi....thodarnthu ezhudunga //

ரொம்ப தாங்க்ஸ் மாப்ள..கதை, கவிதை எல்லாம் கல்லூரி நாட்கள்ல எழுதினது மாப்ள..

மு.கார்த்திகேயன் said...

//itle appadiye rajeshkumar novel maadhiriye irukudhu//

athu maathiri irukkanumnu ninachchu ippadi vachchen maapla

மு.கார்த்திகேயன் said...

//story semma gripping...nice descripton...//

Thanks Gopal..

//prize vaanginengala indha storykku//

ithu summa bookla pOda mattum thaan.. but kavithaikku vaanginen, gopal

Unknown said...

nallaa irundhuchu...paaraattukkal

மு.கார்த்திகேயன் said...

@Bala, Thanks

மு.கார்த்திகேயன் said...

//அப்படியே க்ரைம் மன்னர் ராஜேஷ்குமார் ஸ்டைல கலக்கிட்டீங்க//

பாராட்டுக்கு நன்றி வேதா

மு.கார்த்திகேயன் said...

//novel thodaruma//

Naan oru padam eduththaa eppadi irukkum..full screenplay vum ezhuthap pOREn.. seekkiram olive.. thanks for parattuku

ambi said...

superrr, exactly in rajesh kumar style. But ipdi thappu pannavanuku punishment thara maathiri storya mudichu irukalaam illa? cha! how come he kill her sweet heart? Grrrrr.
(kathaikku kooda itellam othuka mudiyaathu ennala)

மு.கார்த்திகேயன் said...

ambi.. kavalaipadatha.. kathaila innoru twist vachchirunthen.. ana different-a oru pakka kathai maathiri mudikkalaamnu appadi mudichchittEn..

I really love to read rajeshkumar novels :-))

Unknown said...

Yeppa, chance-eh illa!

sema story! Unmayave oru mini-novel padicha effect enakku! :)

Keep it up!

மு.கார்த்திகேயன் said...

//sema story! Unmayave oru mini-novel padicha effect enakku//

Thanks karthik BS..thanks

நாகை சிவா said...

பங்கு எல்லாரும் சொன்னது தான்!
படிக்க ஆரம்பித்தவுடன் ராஜேஷ்குமார் நாவல் படிக்க ஆரம்பித்த மாதிரி இருந்தது. கடைசி பத்தி படிக்கும் போது குமுதம் ஒரு பக்க கதை போல இருந்தது.....


ஒரு வரி நான் ரொம்பவே ரசித்தேன் கார்த்திக். மிக மிக அருமையான உவமை. அமாவாசை இரவை இப்படியும் வர்ணிக்கலாம் போல என்று நினைத்துக் கொண்டேன்.....

உங்கள் எழுத்து நடை நல்லா இருக்கு. தொடர்ந்து கதைகள் எழுதுலாம்.

Ponnarasi Kothandaraman said...

Aaaha ;) ipdi kathai ellam podreenga..
Yaarathu copy adikka poranga :O
Hm..it was awesome! Well narrated :)

Priya said...

//அந்த இருட்டுக்கு பயந்து அன்று நிலா கூட வானத்தில் வாக்கிங் போகல.. அந்த நேசனல் ஹை-வே, கழட்டி போட்ட பெல்ட் மாதிரி நீண்டு இருந்தது..//
ஆரம்பமே கலக்கல் போங்க. திக் திக் னு படிச்சேன்.
எப்டிங்க இதெல்லாம், தினம் ஒரு post போடறீங்க. கதையெல்லாம் எழுதறீங்க. ரொம்ப பெரிய ஆள்ங்க.

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப நன்றி சிவா..உஙள் உற்சாகமான வார்த்தைகள் என்னொடைய மனசை நீரூற்றிய செடி மாதிரி ரொம்ப ஃபிரெஷா இருக்க வைக்குது

மு.கார்த்திகேயன் said...

Thanks ponna :-))

மு.கார்த்திகேயன் said...

//ஆரம்பமே கலக்கல் போங்க. திக் திக் னு படிச்சேன்//

ராஜேஷ்குமார் நாவல் நிறைய படிச்ச அனுபவம் தான் பிரியா..

//கதையெல்லாம் எழுதறீங்க. ரொம்ப பெரிய ஆள்ங்க//
பிரியா..உங்க சுத்த உணர்வை நினச்சுப் பாத்தா நான் ரொம்ப சின்ன்வங்க

Bharani said...

thala padathuku andha marquee AD juuper maams :)

Syam said...

//அந்த இருட்டுக்கு பயந்து அன்று நிலா கூட வானத்தில் வாக்கிங் போகல.. அந்த நேசனல் ஹை-வே, கழட்டி போட்ட பெல்ட் மாதிரி நீண்டு இருந்தது..

அந்த ரோட்டோர மரமெல்லாம் தலைவிரி கோலமா காத்துக்கு தலை ஆட்டிகிட்டு இருந்தன.. தூரத்துல சில வீடுகள்ல விளக்குகள் எரிஞ்சுகிட்டு இருந்தன..//

பேய் கதை மாதிரி ஆரம்பிச்சு...க்ரைம் கதையா தொடர்ந்து முடிக்காம விட்டுடீங்களே...நெக்ஸ்ட் எபிஸோட் வருமா இல்ல அவளோதானா :-)

Syam said...

சூப்பரா கதை எழுதறீங்க...எப்படிங்க இது எல்லாம் அஸின் வந்த ராசியா...இல்லயே காலேஜ் படிக்கும் போதுல இருந்து இருக்குனா அந்த டைம்ல வேற ஏதாவது லவ்ஸா :-)

மு.கார்த்திகேயன் said...

//thala padathuku andha marquee AD juuper maams //

dhinamum ovvoru vithama pattaiyai kilappuvom Mapla

மு.கார்த்திகேயன் said...

//நெக்ஸ்ட் எபிஸோட் வருமா இல்ல அவளோதானா //

அவ்ளோ தான் நாட்டாமை.. இது ஒரு பக்க கதை டைப்.. அதனால இப்படித்தான் முடியும்..

மு.கார்த்திகேயன் said...

//காலேஜ் படிக்கும் போதுல இருந்து இருக்குனா அந்த டைம்ல வேற ஏதாவது லவ்ஸா//

காலேஜ்ல இருந்து தான் ஷ்யாம்.. லவ்ஸ் எல்லாம் இல்ல ஷ்யாம்.. ஆனா கவிதை கதைனு எல்லாம் எழுதி இருக்கேன்..

Priya said...

தல கிட்ட PRO வா சேந்துட்டிங்களா என்ன? தூள் கிளப்பறீங்க..

மு.கார்த்திகேயன் said...

Priya.. Thala rasikarkal ellam thalaiyOda PRO thaan.. Naama panlEnna vera yaar pannuvaa priya..

Harish said...

edho rajesh Kumar novel padicha maadhiri irukku...kalakareenga...

மு.கார்த்திகேயன் said...

Thanks Harish.. first timennu ninaikiren.. adikadi vaangka

G3 said...

Aaha.. Kalakitteenga ponga :) Titleae kalaasala irundhudhu.. Description pakka.. Scene by scene kanla paakara maadiriyae irundhudhu.. Innum neraya kadhai ezhudha vaazhthukkal :)

Kavitha Jay said...

yea yea...super post...ehem...title oda first letter aa thana? lol...

Avial said...

unnoda inda comedy sense mattum maravae illa

மு.கார்த்திகேயன் said...

//Innum neraya kadhai ezhudha vaazhthukkal//

Thanks G3

மு.கார்த்திகேயன் said...

Thanks mysetry..adikadi vaanGka..

மு.கார்த்திகேயன் said...

//unnoda inda comedy sense mattum maravae illa //

Thanks da Madhu..Naama eppavum appadiththaanE

Geetha Sambasivam said...

கதை நல்லாவே வந்திருக்கு. காலேஜிலே எழுதும்போது எப்படி எழுதினீங்கனு தெரியாம எப்படி வித்தியாசத்தைக் கண்டு பிடிக்கிறது? மேலே தொடருங்க, இது மாதிரியாவே.

மு.கார்த்திகேயன் said...

ரொம்ப நன்றிங்க மேடம்..

none said...

Nalla ezhuthi irukeenga. Vazhthukkal.

மு.கார்த்திகேயன் said...

Thanks poornima

Anonymous said...

Nalla thriller , continue :)

மு.கார்த்திகேயன் said...

Thanks Haniff