Friday, October 06, 2006

முதலமைச்சர் மு.கார்த்திகேயன்

எங்க ஊர்ல எல்லா கட்சிக்காரவங்களும் இருக்காங்க.. எல்லா நடிகருக்கும் ரசிகர் மன்றம் இருக்கு.. இதை எல்லாம் தினமும் பாத்து பாத்து வளர்ந்த நான், இங்கே சொன்ன மாதிரி (முழுசா படிங்க..கடைசில தான் மேட்டரே இருக்கு), விதி வலியதுன்னு எல்லோரும் நினைக்கிற மாதிரி, ஒரு நாள் தமிழக மக்களோட தலை எழுத்தை நிர்ணயிக்கிற முதல்வரானால்...

யார் யாருக்கு என்ன என்ன அமைச்சர் பதவி தருவேன்னு ஒரு பட்டியல் போட்டேன்.. ஏன் இவங்களுக்கு இந்த துறைன்னு யாருக்கும் சந்தேகம் வந்தா பின்னூட்டத்துல போடுங்க.. விளக்கம் தர்றேன். அதுமட்டும் இல்ல.. இன்னும் வேற யாருக்காவது நீங்க வேற துறை பரிந்துரையும் செய்யலாம்.

இந்த என் சிந்தனையில என் சொந்த பந்தங்களோட குறுக்கீடு எதுவும் கிடையாது. கட்சிக்காக இது வரை ஓடாய் தேய்தவங்களுக்கும், மக்களுக்காக உயிரை தர துடிப்பாய் இருக்கும் என் தொண்டர்களுக்கும் தான் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளுன்ன..

முதலமைச்சர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சித் துறை, கனிணித் துறை): கார்த்திகேயன்... அது நானே தான் (எல்லா முதல்வரும் பண்ற மாதிரி காவல்துறை என் வசமே இருக்கும்..மத்தவங்களுக்கு கொடுத்தது போக வேற என்னன்ன இருக்கோ எல்லாம் நம்ம கிட்ட தான்)

நிதி அமைச்சர் : என் மாப்ள பரணி..

கல்வி அமைச்சர் : தி ரா சா சார் (இவரை நினைத்தவுடன் அன்பழகன் நினைவுக்கு வருவதால்)

சட்டம் மற்றும் வருவாய் : நாட்டாமை ஷ்யாம் (இனிமே எல்லா வழக்குகளும் ஆலமரத்தடியில் தான் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை ஷ்யாம் மற்றும் நான் பதிவியேற்ற மேடையிலே கையெழுத்து போடுவோம்)

உள்ளாட்சி, கலை, விளம்பரம் மற்றும் செய்தி, உணவுத் துறை அமைச்சர் : எல்லோருக்கும் ஆப்பு அடிப்பவர், என் மச்சான் அம்பி (என் மச்சானுக்கு பதவி தருகிறேன் என்று யாராவது முணுமுணுத்தால், ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகிறேன்..இவர் சிறு வயது முதலே கட்சிக்காக உழைப்பவர், பலமுறை சிறை சென்றவர், இப்போது பஞ்சாப் குதிரையின் மனச் சிறையில் இருப்பவர்)

சுகாதாரத்துறை அமைச்சர் : சுத்த சிகாமணி, சுண்டல் மஹாராணி பிரியா (இவர் தமிழ்நாட்டுக்கே பினாயில் அடிச்சு சுத்தப்படுத்துவார்ன்னு நம்புறேன்)

மின்சாரத் துறை : என் மச்சினிச்சி பொற்கொடி (இவரும் பல்லாண்டு காலம் கட்சிப் பணியிலே இருந்து, இப்போது மகளிர் அணி தலைவராய் இருப்பவர்.. என் மச்சினிச்சி என்பதால் மட்டுமே நான் பதவி கொடுப்பவன் அல்ல.. உண்மை, நேர்மை, மக்களுக்காக அயராது உழைப்பவர் தமக்கே இந்தக் கழகம் உருவானது என்பதை சொல்லிகொள்ள நான் விரும்புகிறேன்)

போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் : இமயம் கண்டாள், குதிரையை வென்ற நல்லாள், கட்சியின் மூத்த உறுப்பினர் கீதா

அறநிலையத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் : சொல்லின் செல்வி, கவிதாயினி வேதா

வீட்டுவசதி மற்றும் சுங்க இலாகாத் துறை அமைச்சர் : என் அருமை தங்கை தீக்க்ஷன்யா

பொதுப்பணித்துறை அமைச்சர் : இந்தியனேஞ்சல் தம்பி பிரசன்னா (தவறாமல் அவர் தரும் பின்னூட்டதிற்கான பரிசு)

பால் மற்றும் மீன்வளத் துறை : கோல்மால் கோபால் (இனிமே இவரை பால்மீன் கோபால்ன்னு கூப்பிடலாம்)

இன்னும் வேற யாருக்காவது பதவி வேணும்னா, பின்னூட்டம் வழியா என் மச்சான் மச்சினிச்சியை கேளுங்க.. அவங்களைத் தான் கேக்கனும்னு அவங்க அக்கா அசின் சொல்லியாச்சு.. அதுக்கு மேல அப்பீலே கிடையாது.

இந்த சசி பொண்ணுக்கு ஏதேனும் பதிவு கொடுக்கலாம்னு பாத்தா, இப்போதைக்கு ஊர் பக்கம் இல்ல..

பல கொடுமைகளை அனுபவித்து வரும் தோழி உஷாவுக்கு ஏதேனும் கொடுக்கலாம்னு பாத்தா, அம்மாணி ரொம்ப நாள காணோம்..அவங்களுக்கு எப்போ வந்தாலும் பதவி உண்டு என்று கூறிக்கொள்கிறேன்..

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் நிறைய போடுறவங்களுக்கு வாரியப் பதிவு கொடுக்கப்படும்.. என்ன ரெடியா?

யெப்பா சாமிகளா, நான் ஏதோ ஆர்வத்துல இந்த பதிவை போட்டுட்டேன்.. சட்டுபுட்டுன்னு என்கிட்ட பதவியை கொடுத்துடாதீங்க..நான் இன்னும் சின்ன பையன் தான்... ஹி..ஹி..ஹி..

கடைசி நேரத் தகவல்
நமது கட்சியின் பிரச்சார பீரங்கி சசி அவர்களை சபாநாயகர் பதவிக்கு கட்சித் தலைமை பரிந்துரை செய்கிறது.. இவர் சட்டசபையில் எல்லா பிரச்சனைகளையும் நாட்டமை உதவி கொண்டு அடக்கி சபையின் மானத்தை காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறோம்...

உஷா, ஒவ்வொரு வார இறுதிகள் கட்டாயம் வருவதாக உறுதி அளித்து இருப்பதால் அவங்களுக்கு கொடுமை ஒழிப்பு துறை பதவியும், லண்டன் மாதிரி சென்னையையும் மாற்றும் லகலக லண்டன் திட்டத்திற்கு தலைவியாகவும் நியமிக்கிறேன்.

74 பின்னூட்டங்கள்:

said...

//மத்தவங்களுக்கு கொடுத்தது போக வேற என்னன்ன இருக்கோ எல்லாம் நம்ம கிட்ட தான்)
அட்ராசக்கை நீர்தான்ய்யா தமிழ்நாட்டின் அடுத்த விடிவெள்ளி! எல்லத்தையும் சுருட்டினது போக மத்தது மக்களுக்குன்கிற உயரிய கொள்கையை கொண்டவரே நீவிர்தான் தமிழகத்தின் அடுத்த வாரிசு!

// சிறு வயது முதலே கட்சிக்காக உழைப்பவர், பலமுறை சிறை சென்றவர், இப்போது பஞ்சாப் குதிரையின் மனச் சிறையில் இருப்பவர்

இந்த ஒரு வார்த்தைக்காகவே நாளை திஹாரில் முகாரி பாடுவார் ஜிகிடி வேந்தன் - இல்லியா அம்பி!

//சுகாதாரத்துறை அமைச்சர் : சுத்த சிகாமணி, சுண்டல் மஹாராணி பிரியா (இவர் தமிழ்நாட்டுக்கே பினாயில் அடிச்சு சுத்தப்படுத்துவார்ன்னு நம்புறேன்)

வேப்பமரத்தால் பேயை ஓட்டுவார் பூசாரி,
வாக்குவம் கிளீனரால் அழுக்கை ஓட்டுவார் பிரியா - நம் சுத்த ஆச்சாரி!

//பொதுப்பணித்துறை அமைச்சர் : இந்தியனேஞ்சல் தம்பி பிரசன்னா (தவறாமல் அவர் தரும் பின்னூட்டதிற்கான பரிசு)

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற மறத்தமிழனின் பரம்பரையில் பிறந்து வளர்ந்தவன் நான் (அஹெம்! யாரங்கே விழுந்து விழுந்து சிரிப்பது!) எமக்கு இந்த பதிவெயெல்லாம் வேண்டாம்!

அரசியலில் பதவியென்மது மாயா!
காலையில் எனக்கு போதும் சாயா!

// பால் மற்றும் மீன்வளத் துறை : கோல்மால் கோபால் (இனிமே இவரை பால்மீன் கோபால்ன்னு கூப்பிடலாம்)

கோல்மால் கோபால் - நாளை முதல் என் சாயாவிற்காக் தருவீர் கோமாதா பால்!

ஸ்ஸ்ஸ்பா கார்த்தி இப்ப சந்தோஷமா! :)

said...

//இந்த சசி பொண்ணுக்கு ஏதேனும் பதிவு கொடுக்கலாம்னு பாத்தா, இப்போதைக்கு ஊர் பக்கம் இல்ல..//

Idhu sari illa.. Oru moone naal konjam thalai kaatama irundha kadhaiyave mudikka paakureengale..

Neenga mudhalamaicha aaganumnu kanavu kandappave padhavi venumnu manu koduthava naan.

//CM aanappuram marandhudaadheenga. Eppidinnaalum sari enakku enga thogudhila mattum oru seat koduthurunga..//

Appadi patta enakke padhavi illanna idhu kandanathukku uriya vishayam..

said...

@Kalaga kanmanigalukku idhanaal SASI sollikkolluvadhu ennavendraal, naan indha padhavi vishayamaga migundha mana sangadathukku aalaagi ullen. Enave naan siridhu kaalam kalagathil irundhu vilagi vida ninaikkiren.. En kalaga kanmanigal en ilappai porutpaduthaadhu kalagathukkaaga kala pani aatri, mudhalvarin nallatchikku thunai puriumaaru ketukkolkiren...

said...

@Bharani ushaar.. Padhavi kaalathukku pinnar, kaanamal pona maaniya thogaigalukku ungalithaan visaaranaikku koopiduvaango..

golmaalgopal said...

thalaivaa....*dhoorathulendhu fading effect oda*

enadhu anbu sagodharar mattrum dash dash mu ka katchiyin
seyalaalar,porulaalar,melaalarumaana karthikeyan avargal...enn meedhu azhndha nambikkai kondu edho oru alauvukku periya padhaviyai koduthirukkiraar...

avar nambikkaikku sombu,andaa,matrum dabaraavaaga...adhaanga pathiramaaga,suyanalathoda....*ahem* mannikkavum suyanalamindri arum paadu pattu,ayaramal uzhaitthu...dash
dash mu ka katchikkum namadhu arasukkum perumai serpen endru indha nannaalil therivitthukolgiren...

*mind voice: modhalla maatu theevana oozhal eppidi pannardhunu lalu'oda caseah study pannanum, nxt sogusu bungalow onnu kattanum,adutha CM namma dhaan*

said...

@TRC sir, modhalla kalvi amaichar aana odane neenga Bakthi maargathai oru subjectaa vainga. Appuram schoolukku yaarum book mootai somakka koodaadhu.. Kindly note this.

said...

@Naataamai.. No pending, No vaidhaa illadha oru court venum.. Adhu marathadila nadandhaalum OK.

said...

@Ambi, Pala thuraigal, perum poruppu, Idhu kattaayam neenga Asin thambiya irukkaradhaala thaannu therium.. Irundhaalum neenga idhu ellaathukkum poruthamaanavar. Adhanaala yaarukkum endha mana varuthamum irukka vaipu illa.

said...

@Priya, Vaccum cleanerai clean panna vaccum cleanar ketadhaal kalaga kanmanikku, avaradhu sutha sugadhaara ennathai madhithu indha padhavi valangapattadhu endru naan ariven.. Poruthamaana padhavi. Modhalla namma oorla ella arealaum kosu marundhu adichu kosuvai olikka sollunga.. Chicken Guniea appdinnu sonnanga.. Ippa ennavo Thakkali guniea appidinnu pudhusa vandhirukkaam.. Engal aarogyam ungal kayil

said...

@Porkodiyin anal veesum commentukke innum rendu thurai sethu kodukkalaam.. Aanaalum porkodi Porkodi thookaamal indha padhaviyai yetru Power cut illaadha Tamilagathai uruvaakuvaar. Naatukke pudhu oli tharuvaar endru namba padugiradhu.

said...

அதெப்படி, தலைவி நான் இருக்கிறப்போ எனக்குக் கூடத் தெரியாமல் நீங்க முதலமைச்சர் ஆகலாம்? ஓ, நம்ம பன்னீர் செல்வம் மாதிரி Acting CM.ங்கறீங்க. அப்போ ஓக்கே, ஓக்கே, எனக்கு நிதி, வருவாய்த்துறை, போக்குவரத்து, போலீஸ், சுற்றுலா எல்லாமே வேண்டும். யாருக்கும் விடமாட்டேன், ம்ஹூம், தலைவின்னா என்னன்னு நினைச்சீங்க? :D

said...

@Geetha madam, Modhalla Ella sutrula thalangalaium attavani panni oru nalla advertisement thayaar pannanum, Adhaan indha singapore, malysia, srilanka ellathukkum poduraangale adhumaadhiri.. Adhukkum munnaadi namm oorla irukkira sutrula thalam ellathulaium thangura vasadhi, unavu vasadhi, paditha unmayaana Guide, idhellaam paathu panninaa varavangalukku sowgaryama irukkum. Ungalukku theriyaadhadhaa..

said...

@Veda, Neriya kovilgal nalla manyam illaama idinju vilara nelamaila irukku.. Kumbakonam pakkam irukkura neriya periya kovilgal appadithaan irukku.. Paaka sangadama irukku. Adhoda punar nirmana, kudamulukku velaigalai ellaam konjam paathukkonga.. Appuram aadheenam, madam appidinnu sollikittu kovil aranilaya adhigarathai neriya miss use pannuraanga avangala oru kai paathudunga..

Tamil valarchi thuraium neenga thaanaa.. Idhukku neenga seyavendiyadhunnu naan vinnappikka enna irukku. Ungalukke therium. Ennoda tamil valarchi thittangalai ungalukku thaniya solluren. Inga edam pathaadhu

said...

@Dheeks... Unga annan paathu poruppa oru padhaviya sariyaana aal kitta koduthu irukkaar.. Pasamalarukku nalla per vaangi kodunga.. Tax ellam paathu podunga.. Avvalavudhaan

said...

@Prasanna.. Padhavi paaka posukkunnu irundhaalum, idha vechu neriya nalla kaariyam pannalaam.. Andha vagaiyila neenga koduthu vechavar.

said...

நல்லா சிரிக்க வச்சிட்டீங்க. அம்பி, ஸ்யாம் மற்றும் நம்ம தலைவி அவர்களுக்கு கொடுத்த துறைகள் எல்லாம் சும்மா நச்சு நச்சுன்னு பொருந்துது...சூப்பர்.
:)

said...

@thala

andha vaariya thurai postkkaaga embuttu commentaraanga sasi...kuduthudalaam... :))

@sasi
கோமாதா பால் edhukku...ungalukku aarogya 14.5 paal readyaah irukku....yes 14.5 dhaan...namma phasht arikkaye adhu dhaan...inime aarogya paal 4 arai paal illa padhinaalarai paal....stds ah improve panniyaachu...sadhosam dhaane?? :))

said...

//நீவிர்தான் தமிழகத்தின் அடுத்த வாரிசு//

புல்லரிகுதப்பா பிரசன்ன.. உன் மச்சானுக்கு ஒரு வாரிய பதவி நிச்சயம்

//நாளை திஹாரில் முகாரி பாடுவார் ஜிகிடி வேந்தன் //

இப்பை எல்லாம் நடந்தா நாளை எல்லா விமான ரன்வேலயும் பௌத்து மறியல் பண்ணுவோம்.. ஏன் பிரசன்ன, நான் அசின் கிட்ட திட்டு வாங்கனுமா, தம்பிய திஹார் ஜெயிலுக்கு அனுப்பிட்டு..

//எமக்கு இந்த பதிவெயெல்லாம் வேண்டாம்//

பிரசன்னா இப்படியெல்லாம் சொல்லப்படாது.. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.. இப்போ நீங்க தலைமையை எதுக்குறீங்களோ அப்ப நாங்களே பதவில இருந்து தூக்கிட்டு கட்சிப் பணிக்கு அனுப்பிடுவோம்..

said...

சசி..இவ்வளவு காலமா இல்லாததால.. உங்கள் பேச்சுதிறமை மெச்சத் தகுந்ததால உங்களுக்கு சபாநாயகர் பதவி தரவேனும் என்று கட்சி செயற்குழு (நான், அசின், அம்பி, பொற்கொடி, மாப்ள பரணி, தி ரா சா, நாட்டாமை) முடிவு செஞ்சிருக்கு

said...

//உள்ளாட்சி, கலை, விளம்பரம் மற்றும் செய்தி, உணவுத் துறை//

he hee, ennapa paisa peraatha thuraiyaa irukku? sasi, unakku enna thurai venumoo? eduthukoo! bcoz i've one more important thurai.
*ahem* mukyamaana thuraiya vitutiyee?
athaan Jollu matrum jigidi membaattu thurai. he hee :)

//இவர் தமிழ்நாட்டுக்கே பினாயில் அடிச்சு சுத்தப்படுத்துவார்ன்னு நம்புறேன்//
ROTFL on priya's cabinet session! very apt for her. ;)

said...

@சசி, உங்களுக்காக பதிவின் கடைசியில் கடைசி நேரத் தகவலா சேர்க்கப்பட்டுள்ளது..

மற்றும், சசி கேட்டுகொண்டதைவிட அதிகமாவே நமது கட்சியின் பேரை அமைச்சர்கள், மக்களுக்காக உழைத்து காப்பார்கள் என்று உறுதிகூறுகிறேன்

said...

@Golmaal Gopal
//modhalla maatu theevana oozhal eppidi pannardhunu lalu'oda caseah study pannanum, nxt sogusu bungalow onnu kattanum//

ithukellaamm thanithaniyaa training nadakkum golmaal, payappadathE

//adutha CM namma dhaan//
ippadi oru aasaiyaa.. aduththa CMmai thaan uLLatchchithurai amaichcharaai vachchu irukkOma.. Naan stalinai sollala..ambiyai solren :-))

said...

@Geetha Madam
//அதெப்படி, தலைவி நான் இருக்கிறப்போ எனக்குக் கூடத் தெரியாமல் நீங்க முதலமைச்சர் ஆகலாம்? ஓ, நம்ம பன்னீர் செல்வம் மாதிரி Acting CM.ங்கறீங்க.//

தலைவியே, நீங்க வெறும் கட்சித் தலைவர் மட்டுமே.. முடிவு எல்லாம் நாங்க தான் எடுப்போம்.. அப்புறம் எதுக்கு மச்சான் மச்சினியை கூட வச்சு இருக்கேன்னு நினைக்கிறீங்க

// அப்போ ஓக்கே, ஓக்கே, எனக்கு நிதி, வருவாய்த்துறை, போக்குவரத்து, போலீஸ், சுற்றுலா எல்லாமே வேண்டும். யாருக்கும் விடமாட்டேன், ம்ஹூம், தலைவின்னா என்னன்னு நினைச்சீங்க? :D //

தலைவின்ன சூறாவளிப் பிரச்சாரம் பண்ணனும்.. மத்ததெல்லாம் நாங்க தான்.. ரொம்பக் கேட்டா ஏதேனும் மாநிலத்துக்கு கவர்னராய் போட சொல்லிடுவோம்..

said...

//நல்லா சிரிக்க வச்சிட்டீங்க.சூப்பர்//

நன்றி கைபுள்ள..

// அம்பி, ஸ்யாம் மற்றும் நம்ம தலைவி அவர்களுக்கு கொடுத்த துறைகள் எல்லாம் சும்மா நச்சு நச்சுன்னு பொருந்துது...//

உங்களுக்கும் பொருத்தமான பதவி இருக்கு.. ஆனா ஒத்த பின்னொட்டதுக்கு எல்லாம் தர முடியாது.. வேனும்னா ஏதும் ரோடு கான்ராக்ட் கொடுக்குறேன்

said...

//கோமாதா பால் edhukku...ungalukku aarogya 14.5 paal readyaah irukku....yes 14.5 dhaan...namma phasht arikkaye adhu dhaan...inime aarogya paal 4 arai paal illa padhinaalarai paal....stds ah improve panniyaachu...sadhosam dhaane//

paaththiyaa sasi.. Namathu amaicharkalai.. makkalukku kuraina vuane oi oi uzhaikkirar.. athuvum sandhosam thaane enRu kEttu feedback vaanguraar..

பலே பலே கோபால்

said...

//Jollu matrum jigidi membaattu thurai//

Ambi, athllam offline la.. eppO neen CM machchaan.. Nee enna venumnaalum cheyyalam.. ithukooda theriyaama eppadi ambi TN la irukkaa :-))

said...

//@sasi
கோமாதா பால் edhukku...ungalukku aarogya 14.5 paal readyaah irukku....yes 14.5 dhaan...namma phasht arikkaye adhu dhaan...inime aarogya paal 4 arai paal illa padhinaalarai paal....stds ah improve panniyaachu...sadhosam dhaane?? :))//
Namma paal vala thurai amaicharukku comment poduradhukkulla sila pala sondha kaariyam paaka vendiyadha aagiduchu..
Nandri amaichar Gopal avargale.. Theevanathi oolal panninaalum paal valam perugi milk product, fish product ellam export pannura alavukku vandha sari..
Padhavikku parindhurai seidhadharkku mikka nandri.

said...

நிதி அமைச்சர் பதவி கொடுத்து என் நீண்ண்ண்ண்ண்டடடட நாள் ஆசையை நிறைவேற்றிய மாம்ஸ்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இனி அக்கா அஸின் நடிக்கும் எல்லா படத்தையும் அரசே தயாரிக்கும். அவரது கலை சேவையை பாராட்டி பத்தாவது பாடதிட்டத்தில் ஒரு பாடம் சேர்க்கப்படும்.

தலைவரே பாவனாவை எனக்கு உதவியாளராக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

ஹி ஹி ஹி

//Padhavi kaalathukku pinnar, kaanamal pona maaniya thogaigalukku ungalithaan visaaranaikku koopiduvaango//....சசி எல்லாக் கொள்ளைகளுக்கும் உங்களை பினாமியா போடுறேன். மாட்டிகிட்டா நிதி அமைச்சர்க்கு நெஞ்சுவலின்னு சொல்லி காப்பாதிடுங்க.

said...

@Bharani... Indh natpin karam thangalai ennaalum vittu vidaadhu. Dont worry..

said...

//கடைசி நேரத் தகவல்
நமது கட்சியின் பிரச்சார பீரங்கி சசி அவர்களை சபாநாயகர் பதவிக்கு கட்சித் தலைமை பரிந்துரை செய்கிறது.. இவர் சட்டசபையில் எல்லா பிரச்சனைகளையும் நாட்டமை உதவி கொண்டு அடக்கி சபையின் மானத்தை காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறோம்//

Idha modhallaye panni irukkalaame..
Kalaga kanmanigal ellarukkum idhula sandhoshamna indha padhaviya naan ethukka manapoorvama sammadhikkiren.
Indha padhaviyai enakku koduthu gowrava paduthiya Mudhalvar Thalaivar M.Karthikeyan avargalukku en manamaarndha nandrigalai sollikkolkiren. Ennai prachaara beerangi endri vaalthi aruliyamaikku nandri. En pechu thiramail thaangal kondirukkum abimaanam kandu naan mei silirkiren. (Edhaavadhu sollanumla).
Thangal edhirpaarpukku erpa sabaiyin maanam kaathu sabaikku madhippu serpen endru urudhi koorikolkiren.

said...

சபாநாயகர் தோழியின் ஆதரவுக்கு நன்றி....சபையில் நல்ல stong-ஆன mic வைக்கும்படி கேட்டு கொள்கிறேன். எடுத்து அடிக்குபோது எதிர்கட்சிகள் சிதறவேண்டும்.அடிக்கிற அடியில் தாரை தப்படைகள் தலைகள் கிழிந்து தொங்க வேண்டாமா

said...

@Bharani, Ella tableaum micro phone poruthumbadi sabanayagaraana naan aanai idugiren.. Table ellam tharaiyodu serthu screw panna pada vendum.. Idhara kattida panigal sabanayagar merpaarvaiyil nadathapattu vanmurai illaadha sattasabayaga maatra athanai nadavadikkaigalum edukkappadum endru nanbarum varuvaai thurai amaicharumaana Bharanikku arivikkappadugiradhu.

said...

//நிதி அமைச்சர் பதவி கொடுத்து என் நீண்ண்ண்ண்ண்டடடட நாள் ஆசையை நிறைவேற்றிய மாம்ஸ்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.//

enna Mapla.. namakuLLa Nanri ellam ethukku

//இனி அக்கா அஸின் நடிக்கும் எல்லா படத்தையும் அரசே தயாரிக்கும். அவரது கலை சேவையை பாராட்டி பத்தாவது பாடதிட்டத்தில் ஒரு பாடம் சேர்க்கப்படும்.//
ithai ithai thaan mapla kitta ethirpaarththen.. asathunga mapla

//தலைவரே பாவனாவை எனக்கு உதவியாளராக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.//
mapla, ithu kooda pannalainaa eppadi.. ini pavana nadikkum ella padaththulaiyum mapla barani thaan heronnu anaiyiduren.. melum bavanaavaiyE maplaikku uthaviyaalaraai poduren..

ivarkal iruvarum sernthu nalla padiyaa naattukku uzhaippaangannu ninaikiren

said...

@ golmaal gopal!
//@ sasi
கோமாதா பால் edhukku...ungalukku aarogya 14.5 paal readyaah irukku

யோவ்! கோமாதா பால் கேட்டது நானு, அதை தூக்கி சசிக்கு குடுத்துட்டீங்களே! கட்சி இன்னும் ஆட்சிக்கே வரலை, அதுக்குள்ள உள்கட்சி விவகாரமா?? நறநற!

@ முதலமைச்சர் கார்த்தி:
//paaththiyaa sasi.. Namathu amaicharkalai.. makkalukku kuraina vuane oi oi uzhaikkirar.. athuvum sandhosam thaane enRu kEttu feedback vaanguraar..
பலே பலே கோபால்

இதுக்கு பால்மீனு கோபாலே பரவாயில்லை! தப்பு தப்பா பால் வியாபரம் செய்யறாரு, அவரை பாராட்டறீங்களே! காலைல உங்களுக்கு free'a பூஸ்ட் அனுப்பறாருல்ல அதை நிறுத்த சொல்றேன்! :)

இவ்வளவு யோசிச்ச நீங்க, லஞ்ச ஒழிப்புத்துறைய பத்தி யோசிச்சீங்களா! கொடுமையின் சிகரத்தில் இருந்தாலும் கடமையை கண்ணும் கருத்துமாய் செய்யும் உஷாவுக்கு கொடுத்தரலாம்!

said...

//சபையில் நல்ல stong-ஆன mic வைக்கும்படி கேட்டு கொள்கிறேன். எடுத்து அடிக்குபோது எதிர்கட்சிகள் சிதறவேண்டும்.அடிக்கிற அடியில் தாரை தப்படைகள் தலைகள் கிழிந்து தொங்க வேண்டாமா//

ஹா..ஹா..மாப்ள.. இது இல்லாம சட்டசபையா.. உள்ள விட்டு தாக்குறதுல, பட்டயை கிளப்பணும்..வெளியில் வந்து வேட்டி சட்டையை கிழிச்சிட்டு அடிச்சுட்டங்கன்னு போஸ் கொடுக்கணும்

said...

//Ella tableaum micro phone poruthumbadi sabanayagaraana naan aanai idugiren.. Table ellam tharaiyodu serthu screw panna pada vendum//

No Sasi No.. en Mapla bharani virmbarathai chnju kodungka..

said...

//கொடுமையின் சிகரத்தில் இருந்தாலும் கடமையை கண்ணும் கருத்துமாய் செய்யும் உஷாவுக்கு கொடுத்தரலாம்//

பிரசன்னா, இதை உஷா ஏற்றுகொள்ளும் நிலமையில் இருக்காங்களானு தெரில.. அவங்க ஓகே சொன்ன உடனே கொடுத்துடலாம்..

said...

aaha..oru naal blog pakkam varalana naatla ennennamo matram nadandhirukke!

Thalaivare, enakku pidicha thuraya kuduthadhukku nandri. ana, nidhi thurai kudithirundha nalla irundhirukkum. ahda unga maapillaikku kuduthadhai neengal nattai surutta seidha sadhi endru vanmayaga kandikkiren..sari, eppa padhavi erpu vizha?

@sasi, vidama muzhakkam panni sabanayagar padhavi vaangittingale! neenga nijamave arasiyalku polam.

@ambi,
//athaan Jollu matrum jigidi membaattu thurai. //
thoo thoo adhan 'kalai'...adha purinjikkama, katchi manathai ippadiya velipadaiya vangarathu?

said...

//aaha..oru naal blog pakkam varalana naatla ennennamo matram nadandhirukke!//
ஃபேக்ஸ்ல செய்தி அனுப்பினேனே வரலையா பிரியா

//Thalaivare, enakku pidicha thuraya kuduthadhukku nandri. //
எனக்குத் தெரியும் பிரியா உங்களுக்கு பிடிக்கும்ணு...

//ana, nidhi thurai kudithirundha nalla irundhirukkum. ahda unga maapillaikku kuduthadhai neengal nattai surutta seidha sadhi endru vanmayaga kandikkiren..sari, eppa padhavi erpu vizha? //
நிதித் துறையா..அதெல்லாம் வேண்டாம் ப்ரியா.. உங்களுக்கு சுகாதரமே பொருத்தம் பிரியா..வெகு சீக்கிரமே பிரியா..


// katchi manathai ippadiya velipadaiya vangarathu? //
விடு பிரியா.. என் மச்சான் அப்படித்தான்..ஒண்ணும் பண்ண முடியாது

said...

Hhahaha.. Adadey! Bloggers meet pathi post'a...It was damn hilarious... :) Enjoyed reading... Read in Ambi's blog as well...
Photo thaan missing in both the blogs... :>

said...

Oh..Thanka ponnarasi.. Actually Naanga meet pannalaamnu irukkOm.. chennaila meet pannittaangka.. so soon ambi will upload the posts

Anonymous said...

@prasanna
//யோவ்! கோமாதா பால் கேட்டது நானு, அதை தூக்கி சசிக்கு குடுத்துட்டீங்களே!// sorry ba...sasi too mucha commentitturundhaanga...adhaan kojam 'kan'fuse aayiduchhu....indha thavarukkaaga maanila arasu podhu pani nidhi lendhu oru varudarthikku ungalukku flavoured milkkukaaga nidhi odhukum padi parindhurai seigiren... :))


//கட்சி இன்னும் ஆட்சிக்கே வரலை// engal katchi migaum dheergamaana parvaiyudayadhu....indraya kanavu naalaya nijam....

//அதுக்குள்ள உள்கட்சி விவகாரமா?? // no no...idhu edhir katchiyinarin sadhi...makkals yaarum bayapada vendaam....arasu than paniyai arave aatrum...

Anonymous said...

@praz
//பால்மீனு கோபாலே பரவாயில்லை! //

golmaal nu per irundhadhaala dhaan mix up aayiduchhu... :))

//தப்பு தப்பா பால் வியாபரம் செய்யறாரு// no comments.... :/
uyar matta kuzhuvin visaranai commission reportkku apparam paathukkalaam...

[psst..ugalukku xtra oru packet...withdaraw d complaint :)) ]

said...

கார்த்திக் என்னது இது!! ரெண்டு நாள் காய்ச்சல்ல படுத்தா இப்படியா வீடு கட்டுவீங்க?? சரி, அது எப்படி எல்லாரும் என்ன பாத்தாலே ஷாக் அடிச்சு நின்னுடறாங்கனு கரெக்டா தெரிஞ்சு மின்சாரத் துறை எனக்கு குடுத்தீங்க.. :) வர வர உங்களுக்கும் மூளை ஜாஸ்தியா போச்சு ;)

said...

அப்புறம் பஞ்சாப் கிட்டருந்து அம்பி வேணா வாங்கிப்பாரு.. நா என்னத்துக்கு வாங்கணும்? திருப்பி போட்டுற மாட்டோம் தோசைத் திருப்பியால.. :)

said...

urupatta maadhiri thaan

said...

Pudhusa irukkey indha TAG ;)

Edho enakku idhula 4 peravdhu theriyudhu...;) Padhavikku vandhadhum naatuku nalladhu seyunga-neengalavadhu :P

said...

யோவ் என்னய்யா நடக்குது இங்க ஒரு முக்கியமான தலை(ஹிஹி நாந்தான்) தலைவியை நேர்ல சந்திச்சு ரகசிய உடன்படிக்கை போட்டுட்டு வரத்துக்குள்ள இப்படி ஆளாளுக்கு நாட்டாமை நடத்துறீங்க:) பாருங்க கார்த்தி நீங்க எனக்கு பதவி கொடுக்கற்துக்கு முன்னாடியே நான் தீவிரமா கட்சிக்கு உழைக்க ஆரம்பிச்சுடேன் அதனால் உங்க அரசியல் வாரிசா(அரசியல் மூலமா நீங்க சுருட்டும் சொத்துக்கு தான் முக்கியமா)என்னை அறிவிக்க வேண்டும்:)

said...

// no no...idhu edhir katchiyinarin sadhi...makkals yaarum bayapada vendaam....arasu than paniyai arave aatrum...//

ஆஹா.. என்னே ஒரு பொறுப்புள்ள பதில்.. கோபால் இதுக்காகவே உங்களுக்கு தொழிலாளர் நலத்துறையும் சேர்த்து தர்றேன்..வச்சுக்கோங்க

//ugalukku xtra oru packet...withdaraw d complaint//
இது பக்கா அரசியல்..அரசியல்ல கத்துகுட்டின்னு நினச்சேன்.. பாயும் புலியால்ல இருக்கீங்க கோபால்.

said...

//கார்த்திக் என்னது இது!! ரெண்டு நாள் காய்ச்சல்ல படுத்தா இப்படியா வீடு கட்டுவீங்க??//
பொற்கொடி இப்போ காய்ச்சல் எப்படி இருக்கு.. நல்ல ரெஸ்ட் எடுங்கோ..வெளிநாட்ல போய் சிகிச்சை பாக்கணும்னாலும் அரசு செலவுலயே அனுப்பி வைக்கிறேன்.

// சரி, அது எப்படி எல்லாரும் என்ன பாத்தாலே ஷாக் அடிச்சு நின்னுடறாங்கனு கரெக்டா தெரிஞ்சு மின்சாரத் துறை எனக்கு குடுத்தீங்க.. :) வர வர உங்களுக்கும் மூளை ஜாஸ்தியா போச்சு ;)
//
பொற்கொடி..கடசி பதிவ நீங்க ஒரு மின்சர சிக்கனம் பத்தி போட்டீங்களே..அது தான் காரணம்.. நிறைய துறை தரலாம்னு நினச்சேன்..கட்சியை வேற கவனிக்கனும்ங்கிறதால இந்த ஒரு துறையே போதும்னு விட்டுட்டேன்..

said...

//அப்புறம் பஞ்சாப் கிட்டருந்து அம்பி வேணா வாங்கிப்பாரு.. நா என்னத்துக்கு வாங்கணும்? திருப்பி போட்டுற மாட்டோம் தோசைத் திருப்பியால.. //

ambi, for your kind attention..Nee veetla illaatha neram un aalukku payangara adivelum pola.athu thaan nee vanthavudane pothumaaththu unakku kidaikuthupa

said...

//urupatta maadhiri thaan //

ஹிஹிஹி வாழ்த்துக்கு நன்றி பாலா

said...

//Padhavikku vandhadhum naatuku nalladhu seyunga-neengalavadhu//

இதென்ன சின்னபுள்ள தனமா இல்ல இருக்கு மருதம்.. வேனும்ணா உங்களுக்கு ஒரு வாரியம் தர்றேன்..வச்சு ஒரு பங்களா கட்டிக்கோங்க

said...

//பாருங்க கார்த்தி நீங்க எனக்கு பதவி கொடுக்கற்துக்கு முன்னாடியே நான் தீவிரமா கட்சிக்கு உழைக்க ஆரம்பிச்சுடேன் அதனால் உங்க அரசியல் வாரிசா(அரசியல் மூலமா நீங்க சுருட்டும் சொத்துக்கு தான் முக்கியமா)என்னை அறிவிக்க வேண்டும்:) //

வாரிசா.. என்ன இது வேதா..அதுக்கு தான் 'என்' அசின் இருக்காங்களே.. இல்லைன்ன அம்மணி நம்மள ஒரு ரவுண்டு கட்டிடாது..

வேற ஏதாவது கேளுங்க.. வேணும்னா நேரு ஸ்டேடியத்தை எழுதி தர்றேன்

said...

சரி அப்ப உங்க செயலாளர் பதவியை கொடுத்துடுங்க, ஏற்கனவே கொடுத்த துறையோட சேர்த்து இதையும் செமையா சீசீ செம்மையா கவனிச்சுடறேன்:)

said...

ஆஹா..தோழியே.என்ன இது..நம்ம பதவிக்கே வேட்டு வைக்கிறீங்க..பரவாயில்ல..தோழி கேட்டதால விட்டு கொடுக்குறேன்...

said...

adhane parthen, enga ennai marandhuteengale-nu! Illa thalaiva, naan Saturday/Sunday correct-a aajar ayiduven, weekdays dhan prachanai. Neenga vena en track records check pannunga, every weekend I come here. Ippo enaku enna padhavi thareenga?

said...

உஷா, உங்களுக்குன்னு தனியா ஒரு துறை ஆரம்பிச்சிருக்கேன்.. கொடுமை ஒழிப்பு துறை.. யாருக்கு கொடுமைனாலும் உங்க போஸ்ட்ல வந்து பின்னூட்டம் போடுவாங்க.. வேற ஏதாவது வேணும்னா கேட்டு வாங்கிக்கோங்க

said...

தங்கத் தலைவர் யானை சீசீ தானை தலைவர் அசின் ஜொள் மன்றத்தை தோற்றுவித்த முதல்வர் வாழ்க!
தலைவரே இந்த கோஷத்தோடு லாரி லாரியா தொண்டர்கள் உங்களை அமெரிக்க மண்ணுல வந்து சந்திக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். அதனால செலவுக்கு(லாரியிலேயே அமெரிக்கா வர வேண்டாமா)ஜஸ்ட் ஒரு 10 கோடி நம்ம கட்சி நிதியிலிருந்து எனக்கு அனுப்பிடுங்க:) ஏதோ நானும் கொஞ்சம் கை காசு போட்டு அவங்க எல்லாருக்கும் பிரியாணி பொட்டலம் சப்ளை பண்ணிடறேன்:)

said...

வேதா.. தலைவர் தமிழகம் வரும் போது தொண்டர்களை பார்த்துகொள்கிறேன்.. அதுவரை, அவர்கள் எல்லாம் உங்கள் வீட்டுக்கு வந்து தான் குறைகளை சொல்வார்கள்.. சொன்னது போல..பிரியாணிக்கு ஏற்பாடு செய்து விடுங்கள்

said...

தலைவரை நேரில் சந்திக்கும் வரை யார் வீட்டிலும் காலடி எடுத்து வைக்க மாட்டோம் என தொண்டர் படை அடித்து(!) சொன்னதாலும் மேலும் நிதி பற்றாக்குறை காரணமாக தலைவர் அடக்கி வாசித்ததாலும் தலைவர் வரும்போது விமானநிலையத்திலேயே மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்படும் என செயலாளராக நான் தெரிவித்துக் கொள்கிறேன்(பிரியாணி கேன்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்)

said...

எனக்குத் தெரியாமல், என் கிட்டே சொல்லாமல் இத்தனை பதவியை நீங்க கொடுக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்குத் தந்தது? அதுவும் செயற்குழு உறுப்பினர்களில் என்னோட பேரைப் போடவே இல்லை? என்ன நடக்குது இங்கே? ம்ஹும், இந்த வேதாவைச் சரிக்கட்டிட்டு வரதுக்குள்ளே இத்தனை பேர் வந்திருக்காங்க, தகவலே இல்லை. பேசாமல் முதல் அமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திட்டு ஆஃபீஸ் வேலையைப் பாருங்க.:D

said...

Iiya Muthalvar M.Karthikeyan avarkala, romba arumaiyaka pathavikalai pirithu kuduthullergal. Ungal aatchiel namba makkaluku nalla thitangalai arivitthu saiyalpaduthuvai endru namukeran! enn manamarthan nall vazthukkal:)

said...

வேதா, நல்ல முடிவா எடுத்து இருக்கீங்க..

said...

ஆனா வேதா, பிரியாணி உங்க சொந்த செலவுல கொடுக்கலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

யாரங்கே.. கட்சிகுள்ள குழப்பம் செய்றது.. கீதா மேடம், கட்சிப் பணி பாக்கத் தான் நீங்க இருக்கீங்கலே, எப்போ பாத்தாலும் கட்சி வளர்ப்புக்காக சுற்றுல போறேன் சொல்வீகங்கள்ல அத்ஹு தான்..

said...

vaanga jeevan.. vazzhthukku nanri..kattaayam ethaavathu cheyya try panrom

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

எனக்கு சட்டம் மற்றும் வருவாய் துரைய குடுத்து உங்க பாசத்த காட்டிட்டீங்க...பேச்சே வரல...சரி நானும் என் கடமைய செய்யறேன்...

ஏலே சன்முகா எட்றா வண்டிய... :-)

said...

//@Naataamai.. No pending, No vaidhaa illadha oru court venum.. Adhu marathadila nadandhaalum OK//

கழகத்தின் பிரச்சார பீரங்கி சசி சொன்னதுக்கு அப்புறம் வேற என்ன...எல்லோருக்கும் ஒரே நாளில் தீர்ப்பு...

நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுனு சொல்றதுக்கு அவசர தடை உத்தரவு... :-)

said...

//எனக்கு சட்டம் மற்றும் வருவாய் துரைய குடுத்து உங்க பாசத்த காட்டிட்டீங்க...பேச்சே வரல...சரி நானும் என் கடமைய செய்யறேன்...//

உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது நாட்டாமை

said...

//நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுனு சொல்றதுக்கு அவசர தடை உத்தரவு... //

நாட்டாமை, இதுக்கு தான் நீங்க வேணும்ங்கிறது.. நல்ல வேளை புதுச் சட்டம் கொண்டு வந்தீங்க..
இல்லாட்டி எதிர்கட்சிகாரவங்க எந்திரிச்சு அடிக்கடி இதையே சொல்வாங்க

said...

அண்ணா அப்படியே நம்ம photos எல்லாம் graphics பண்ணி அமைச்சரவை மாதிரி படம் போட்டிருக்கலாம்.. பொருத்தமா இருந்திருக்கும் post-க்கு.. ஆனா என்னை நம்பி வீட்டுவசதி மற்றும் சுங்க இலாகாத் துறை தந்ததுக்கு ரொம்ப நன்றி!!

said...

இங்கே என்னா நடக்குது....இது மந்திரி சபையா இல்லை மகளிர் சுய உதவிக்குழுவா?ஏழு பெண்மந்திரிங்களா.. பாராளுமன்றத்திலேயே 331/3% சொன்னாங்க.கார்த்தி இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை.. இங்கே ஒரு சார்டடு அகௌட்டன்டு,பேங்கர் இருக்கும் போது நிதித்துறையை பரணிக்கா.முடியாது.உடனே கல்வித்துறையை நீக்கிவிட்டு நிதித்துறையை கொடுக்கவும். இல்லயென்றால் 60MLA வுடன் தனிகட்சி.. 60 MLA ஏது என்கிறீர்களா கீதா மேடம் 60 MLAக்கு சமானம்.அரசியல்லே குடும்பம் கலக்கும் பாத்திருக்கேன் ஆனா குடும்பத்தையே அரசியல் ஆக்கிட்டீங்களே கார்த்தி...

Madurai V Krishnaswamy said...

dei yenaku nidhiamaichar mattrum police thurai tharathal naan katchiya vittu veliyeri unaku yethira arasiyal nadathi un munetrathai thaduthu niruthala....
Karthi intha naal un natkuripula kurichu vachuka....