Tuesday, October 17, 2006

படம் பார்த்த கதைகள்

ஒரு மாசத்துக்கு எத்தனை படம் நீங்க சாராசரியா பார்ப்பீங்க.. நான் மதுரையில படிச்சுகிட்டு இருந்தப்போ, மாசத்துக்கு குறைந்தது பதினைந்து முதல் இருபது படமாவது பார்ப்பேன். சில சமயம் வேற வழி இல்லாம பாத்த மொக்கை படங்களையே ரெண்டு தடவை பாத்த கொடுமை எல்லாம் உண்டு. என் நண்பன் மணி இருக்கானே, அடுத்த நாள் செமஸ்டர் இருந்தாக்கூட இன்னிக்கு ரெண்டு படம் பாத்துடுவான். பெரும்பாலும் ஹாஸ்டல்ல நைட் சப்பாட்டை முடிச்சுட்டு கிளம்பினா, ஏதாவது ஒரு படத்தை பாத்துட்டு தான் திரும்புவோம்..மதுரையில இருக்க பெரும்பாலான தியேட்டர்கள் எங்களுக்கு அத்துப்படி.. போறப்ப ரொம்ப ஈசியா போயிடுவோம். திரும்பி வர்றதுதான் சிரமம். எங்க காலேஜ் கொஞ்சம் சிட்டியை விட்டு தூரமா இருக்கிறதால நைட் பஸ் கிடைக்கிறது ரொம்ப சிரமம். ஏதாவது நியுஸ் பேப்பர் வேனோ, பால் வேனோ தான் பிடிச்சு ஹாஸ்டல் வருவோம்.

காதலா காதலா படம் பாக்க சைக்கிள் ஓசி வாங்கிட்டு எட்டு கிலோமீட்டர் போனோம், திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை குரு தியேட்டர் வரை.. படம் நல்லா இருந்தாக் கூட அழுப்பு தெரிஞ்சிருக்காது.. திரும்பி வர்றப்போ படம் கொத்து கொத்துன்னு கொத்துனதுல எங்களுக்கு 'சொத்'துன்னு இருந்தது..

அப்போ உயிரே படம் ரிலீஸ் ஆகி இருந்தது.. என் நண்பர்கள் பலருக்கு ஷாருக்கானின் என்றால் உயிர். எனக்கு என்னமோ ஹிந்தி நடிகர்களோட ரசிகன் கிடையாது. ஆனாலும் மணிரத்தினதுக்காகவும், ரகுமானுக்காகவும் போனோம். இந்த கூட்டத்துல அடிச்சு பிடிச்சு படம் பாக்குறதே ஒரு த்ரில் தான்.. மதுரை அபிராமி தியேட்டருல அந்த படம் போட்டு இருந்தான்..நாங்க போனப்ப ரொம்ப கூட்டம் எல்லாம் இல்லை. கவுண்டர்ல நின்னுகிட்டு இருந்தோம்.. சிகரெட் வாடையும் வெற்றிலை சாறுமாய் கவுண்டர் அதுக்கே உரிய வாடையோட இருந்தது.டிக்கட் கொடுக்க ஆரம்பிச்சவுடனே, எங்க தோள் மேல நாலு பேர் நடந்து போறான். ரெண்டு பேர் பின்னாடி இழுக்குறான். நான் முன்னாடி இருக்க கம்பியை இறுக்கமா பிடிச்சுகிட்டேன்.. பிடிச்சுகிட்டு என் நண்பர்களை உள்ளே ஒவ்வொரு ஆளா அனுப்பினேன்..அவங்க எல்லோரும் போன பிறகு கடைசியா நான் போனேன். சில பேர் வரிசை கடைசில இருப்பாங்க.. சத்தம் போட்டு சத்தம் போட்டே முதல்ல வந்துடுவாங்க.. அவங்களை போய் நாம என்ன பண்ண முடியும்.. கொஞ்சம் பேசினா பிளேடுல கீறிட்டு போய்டுவாங்க..நமக்கெதுக்கு வம்பு.. உயிரே படம் பாக்க வந்தோமா..உயிரே போறதுக்கு வந்தோமா..கையெல்லாம் சிவந்து கிடந்தது.. கொஞ்சம் எரியவும் செய்தது. என் நண்பர்கள் எல்லோருக்கும் டிக்கட் கிடைச்சது..என்னோட டிக்கட் முடிஞ்சது.. என்னடா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு விட்டுட்டோமேன்னு வருத்தமா இருந்தது.. அப்புறம் இருபது ரூபாய் டிக்கட்டை எண்பது ரூபாய் கொடுத்து வாங்கி அந்த படத்தை பாத்தோம்..

இதே மாதிரி தளபதி படம் வந்த நாலாவது நாள். நானும் என் ஊர் நண்பனும் படத்துக்கு போனோம். நாலு காட்சிதானேன்னு ஒரு மணிக்கு போனா, அன்னிக்கு ஐந்து காட்சி.. பனிரெண்டரை மணிக்கே படத்தை போட்டுட்டான். அடப்பாவிகளா.. இன்னிக்கே படத்தை பாக்கனும்னா ஒரு ரெண்டு மணிநேரம் இங்கியே இருக்கனுமேன்னு நினச்சு குழம்பி கிடந்தோம்.. நாமளோ தலைவரோட ரசிகர்கள்.. படத்தை பாக்காம போனா, பாத்தவங்க கதை சொல்லியே கடுப்பேத்துவாங்க.. எவ்வளவு நேரம்னாலும் பரவாயில்ல.. இருந்து படத்தை பாக்காம போகக்கூடாதுன்னு கவுண்டர்ளையே தவம் இருக்க ஆரம்பிச்சோம்.. நாங்க தான் மொத ஆளுக.. இந்த திண்டுக்கல் தியேட்டர்ல மோசம் என்னன்னா இங்க மொத ஆளுக்கு டிக்கட் கொடுக்கறப்பவே அங்க படத்தை போட்டுடுவாங்க.. மொத ஆளா டிக்கட் வாங்கினாலும் தியேட்டர்குள்ள போறப்ப கதை, திரைகதைன்னு மணிரத்னம் பேரை போட்டுட்டான்..

ஏன் இப்படி முதல் ரெண்டு நாள்ல படத்தை பாக்கணும்னு தவியாத் தவிக்கிறோம்னா, நானும் என் நண்பன் மணி வந்து படம் நல்லா இருக்குன்னு சொன்னா தான் ஹாஸ்டல்ல இருக்க பல பேர் அந்த படத்தை பாப்பாங்க.. அதனால அவங்களுக்காக தான்.. பல நாள் இந்த மாதிரி நைட் செகண்டு ஷோ பாத்துட்டு கிளாஸ்ல சாமியாட்டம் ஆடினது உண்டு.

காதலுக்கு மரியாதை வந்தப்போ தியேட்டருல மட்டும் படத்தை ஏழு தடவை பாத்தேன்.. ஹாஸ்டல்ல பொழுது போகலையா..கிளம்பு படத்துக்குன்னு அதை அத்தனை தடவை பாத்திருக்கேன்.. ஒரு தடவை என் ஜூனியர் பசங்களை கூப்பிட்டு போனேன். வரிசைல தான் நின்னுகிட்டு இருந்தோம்.. எங்க மூஞ்சில என்ன தான் எழுதி இருந்ததோ தெரில.. சும்மா நின்ன போலீஸ்காரர் ஒதுங்கு ஒதுங்குன்னு சொல்லிகிட்டு வந்தபடியே நாங்க நின்ன இடத்துல வந்து லத்தியை ஓங்கினாரு.. அடடா..இதுக்கு அடிக்கிறாருன்னு தெரிலயே.. பவம் இந்த சின்ன பசங்களுக்கு அடிவிழப்போகுதேன்னு நான் கையை இடையில நீட்ட அந்த லத்தி என் வலது கை விரல்ல விழுந்தது.. விழுந்த அடில லத்தியே உடஞ்சிடுச்சு.. அந்த போலீஸ்காரர் திரும்பி பாக்குறதுகுள்ள கவுண்டர்ல நுழைஞ்சு எஸ்கேப் ஆயிட்டேன்..

பல சமயங்கள்ல பாத்த படம் ஞாபகம் இருக்கிறதை விட இந்த மாதிரி சம்பவம் தான் ஞாபகம் இருக்கு. அது ஒரு வாழ்க்கைங்க.. அழுதாலும் திரும்ப கிடைக்காது அந்த அருமையான கலகலப்பான வாழ்க்கை

42 பின்னூட்டங்கள்:

said...

மதுரை தியேட்டர்களில் படம் பாக்றதே த்ரில் தான்! நல்லா எழுதி இருக்க பா கார்த்தி!

*ahem* சரி, பதிவு முழுக்க ஒரு சில பில்டப்போட வர மாதிரி இருக்கு. என்ன மேட்டர்? something! something! :D
me thaan pashtu!

said...

ennaga idhu,Just in the morning I finished reading your chittukuruvi adhukkulla next posta?romba surusuruppu.unga postla kadaisi vakiam miga nijam.aaana cinema konja nanjama pathurukeenga?dinam oru padam,yabba!!!!ippavum cini news dhan correcta vasikireenga.--SKM

Anonymous said...

//ஏன் இப்படி முதல் ரெண்டு நாள்ல படத்தை பாக்கணும்னு தவியாத் தவிக்கிறோம்னா, நானும் என் நண்பன் மணி வந்து படம் நல்லா இருக்குன்னு சொன்னா தான் ஹாஸ்டல்ல இருக்க பல பேர் அந்த படத்தை பாப்பாங்க..//

aahaa.....appove makkalukkaaga narpanigalai thodangiyachha... :))

//நான் கையை இடையில நீட்ட அந்த லத்தி என் வலது கை விரல்ல விழுந்தது.. விழுந்த அடில லத்தியே உடஞ்சிடுச்சு//

Policekkaarar enna eer kuchiyalaya adichaaru??? :)) illa unga kai dhaan shankar cementinaal aanadhaa?? :)

kalakkareenga... ;)

said...

கார்த்திக்,

ம்ம் மதுரையிலே இருந்தீங்களா!!! நல்லா வந்திருக்கு பதிவு...

said...

அடடா அதுக்கு ஏங்க அழறீங்க, நல்லா சந்தோஷமா நினைச்சுப் பாத்துக்கோங்க :)

said...

college life-laam thirumbi varaadhu....those are the best moments in everyone's life

said...

innadhu orey maasathula 20 padathuku mela paapingalaaaa??? yean micham irukara naala vittu vechinga? :)

ஆனாலும் மணிரத்தினதுக்காகவும், ரகுமானுக்காகவும் போனோம்.

Same pinch!

said...

"நானும் என் நண்பன் மணி வந்து படம் நல்லா இருக்குன்னு சொன்னா தான் ஹாஸ்டல்ல இருக்க பல பேர் அந்த படத்தை பாப்பாங்க."

aha enna oru makkal thondu

said...

ஆமாம் நண்பா, அது ஒரு காலம், ஸ்கூல் போர் அடிச்சா, தியேட்டருக்கு போறது, தியேட்டர் போர் அடிச்சா ஸ்கூலுக்கு போறதுனு ஏக ரகளை தான். கல்லூரியில் இன்னும் மோசம்.

அதிலும் கல்லூரியில் காதலர் தினம் என்ற ஒரு படத்துக்கு மொத்தம் 82 டிக்கெட் படம் பிடிக்காமல் தியேட்டரில் ஒப்பாரி வைத்து ஒரே அமர்க்களம் தான் போங்க....

said...

Payanga porumai ennaku neenga sonnadhoda artham ippadhan puriyudhu maams :)

ennadhan nalla padama irundalaum KM-ya 9 thadava....adhuvum theaterla....ennapadi ungalala mattum :)

said...

//உயிரே படம் பாக்க வந்தோமா..உயிரே போறதுக்கு வந்தோமா//....thamaasu thamaasu :)

said...

அய்யோ.. மதுரை தியேட்டர்ல படம் பாக்குறது ரகளையான அனுபவம் அம்பி..

oru something illa ambi.. summa thar desert maathiri vaazhkkai pokuthu

said...

//romba surusuruppu//

thanks SKM

//unga postla kadaisi vakiam miga nijam.aaana cinema konja nanjama pathurukeenga?dinam oru padam,yabba//

en friend ennai vida athikamaa paarppaan SKM..appo avanai enna solrathu

said...

//appove makkalukkaaga narpanigalai thodangiyachha//

pinna..naama makkal sevai pannalainaa eppadi, gopal

//Policekkaarar enna eer kuchiyalaya adichaaru??? :)) illa unga kai dhaan shankar cementinaal aanadhaa//

police vachchirunthathu laththi thaan..may be en kai shankar cementaala senjathaa irukkmO

said...

//மதுரையிலே இருந்தீங்களா!!! நல்லா வந்திருக்கு பதிவு//

வாங்க ராம்.. வரவேற்கிறோம்.. நன்றி ராம்.. மதுரையே இல்ல.. கொஞ்சம் முன்னாடி திண்டுக்கல்.. ஆனா ஆறு வருஷம் மதுரைல தான் வாழ்க்கை

said...

// அதுக்கு ஏங்க அழறீங்க, நல்லா சந்தோஷமா நினைச்சுப் பாத்துக்கோங்க //

அழாதவங்களையும் அழ வைப்பீங்க போல, பொற்கொடி.. அதெல்லாம் நினச்சு பாத்து ஏங்குறதுமா..

said...

//college life-laam thirumbi varaadhu....those are the best moments in everyone's life
//
unmai thaan bala.. ippo ellaam ninachchu paakkurathE oru sukam :-))

said...

//innadhu orey maasathula 20 padathuku mela paapingalaaaa??? yean micham irukara naala vittu vechinga//

vera enna panrathu karthik.. pozhuthu pokanumla..

vaanga vaanga..neengalum mani+ARR fan a?

said...

//enna oru makkal thondu//

madhu..vazhkkaiye eppadi makkal thondula thaanda pokuthu

said...

//ஆமாம் நண்பா, அது ஒரு காலம், ஸ்கூல் போர் அடிச்சா, தியேட்டருக்கு போறது, //

பங்கு..நான் ஸ்கூல்ல எல்லாம் எப்படி படத்துக்கு போனதே இல்ல.. எல்லாம் காலேஜ் வந்து தான்

//அதிலும் கல்லூரியில் காதலர் தினம் என்ற ஒரு படத்துக்கு மொத்தம் 82 டிக்கெட் படம் பிடிக்காமல் தியேட்டரில் ஒப்பாரி வைத்து ஒரே அமர்க்களம் தான் போங்க....//

ஆஹா.. நீங்க நம்ம ஆளு.. நான் கலமெல்லாம் காதல் வாழ்க அப்படிங்கிற முரளி படத்தை எத்தனை தடவை பாத்தேன்னு கணக்கே இல்லை

said...

//ennadhan nalla padama irundalaum KM-ya 9 thadava....adhuvum theaterla....ennapadi ungalala mattum //

mapla, ovvoru timeum oru ovvoru alukku company koduththE seven time akiduchchu

said...

karthi , most of the times unnoda tamil fonts ellam are not visible properly in mozilla ..can u fix it ..else put a note some where "best viewed in IE"

said...

enaku namba ellam serndu partha "hey ram" gnabagam vandutchu .adhuvum inda madhiri diwali kitta daan illa ?

said...

//அது ஒரு வாழ்க்கைங்க.. அழுதாலும் திரும்ப கிடைக்காது அந்த அருமையான கலகலப்பான வாழ்க்கை//

- super.. ovoru varthaiyum unmai!

said...

Thanks for an idea Madhu. I will put that

said...

/enaku namba ellam serndu partha "hey ram" gnabagam vandutchu .adhuvum inda madhiri diwali kitta daan illa//

Thats really great experience Madhu.. Still I remember our discussion at hostel after seeing 12B

said...

Ama Sis..athellam inch-inch marakka mudiyaatha vaazhkkai

said...

Just now noticed your template.
Kadavule!Ajith padam parunga nu ad oodittu irukku.Ivalo Cinema Paithiyam,aiyoo!sorrynga,aarvam ullavara neenga.ippdi oruthara ippodhan mudhan murai padikiren(pathadhillayae).--SKM

said...

//Just now noticed your template.
Kadavule!Ajith padam parunga nu ad oodittu irukku.Ivalo Cinema Paithiyam,aiyoo!sorrynga,aarvam ullavara neenga.ippdi oruthara ippodhan mudhan murai padikiren(pathadhillayae)//

SKM, unmayile cinemaanna enakku uyir..cinema paththi pesa arambichchaa vidiya vidiya pesuven..

parava illai..cinema paiththiyamne sollalaam..but ippO konjam salichchiduchchOnnu thoonuthu..

athu thaan..photola ennai paakkureenGkalE, SKM.. :-))

said...

ஆஹா. ரசிகர் மன்ற ஆளுங்களை விட மோசமா இருப்பிங்க போல இருக்கு.

//எங்க தோள் மேல நாலு பேர் நடந்து போறான். ரெண்டு பேர் பின்னாடி இழுக்குறான். நான் முன்னாடி இருக்க கம்பியை இறுக்கமா பிடிச்சுகிட்டேன்.. பிடிச்சுகிட்டு என் நண்பர்களை உள்ளே ஒவ்வொரு ஆளா அனுப்பினேன்..//
இதல்லவோ நட்பு..அதுவும் 'உயிரே' படத்துக்கு...

நான்லாம் ஏதாவது ஒரு channel ல உலக சேனல்களிலேயே முதல் முறையாககககக போடுவான்னு wait பண்ணுவேன் எல்லா படத்துக்கும்.

எப்பவும் போல அருமையா எழுதி இருக்கிங்க.

said...

//ரசிகர் மன்ற ஆளுங்களை விட மோசமா இருப்பிங்க போல இருக்கு//

priya, ennoda mikeum sodavum post padingaka..

said...

கொஞ்சம் பேசினா பிளேடுல கீறிட்டு போய்டுவாங்க..நமக்கெதுக்கு வம்பு.. உயிரே படம் பாக்க வந்தோமா..உயிரே போறதுக்கு வந்தோமா..
கார்த்தி எழுதனோன்னு நினைச்சகூட இப்படி எழுதமுடியாது அது தானா வந்து விழனும். கல்யாண்ம் ஆகாத கட்டைகளுக்கு மதுரைதான் சொர்கலோகம்.ஒரு மூனு வருஷம் அங்கே குப்பை கொட்டினேன்.கணேஷ்மெஸ் சாப்பாடு,காலேஜ் ஹவுஸ் போன்டா சாம்பார்,தங்கம் தியேட்டர் சினிமா.இன்டெர்வெல் போது ரோஸ்மில்க்,ஆர்யா பவன் ராக்கெட் தோசை, ஏம்ப இப்படி பழசையெல்லாம் ஞாபகபடுத்திட்டே.....அழுதாலும் திரும்ப கிடைக்காது அந்த அருமையான கலகலப்பான வாழ்க்கை

said...

//எழுதனோன்னு நினைச்சகூட இப்படி எழுதமுடியாது அது தானா வந்து விழனும். //
Thanks TRC Sir..

//கல்யாண்ம் ஆகாத கட்டைகளுக்கு மதுரைதான் சொர்கலோகம்.ஒரு மூனு வருஷம் அங்கே குப்பை கொட்டினேன்.கணேஷ்மெஸ் சாப்பாடு,காலேஜ் ஹவுஸ் போன்டா சாம்பார்,தங்கம் தியேட்டர் சினிமா.இன்டெர்வெல் போது ரோஸ்மில்க்,ஆர்யா பவன் ராக்கெட் தோசை, ஏம்ப இப்படி பழசையெல்லாம் ஞாபகபடுத்திட்டே.....//

ayyO ganesh mess sappaadu mathurakkE famous..chari tastaa irukkum sir..hmm..neenga uththukittathu pOla athu oru vaazhkkai sir

said...

//கொஞ்சம் பேசினா பிளேடுல கீறிட்டு போய்டுவாங்க..நமக்கெதுக்கு வம்பு.. உயிரே படம் பாக்க வந்தோமா..உயிரே போறதுக்கு வந்தோமா..கையெல்லாம் சிவந்து கிடந்தது//

திருட்டு விசிடி கலாச்சாரத்துல மதுரை மக்கள் இவ்வளவு பொருப்பா தியேட்டர்ல போய் படம் பார்கறீங்களா...மேன் மக்கள் மேன் மக்களே :-)

said...

ஏங்க எல்லா படத்துக்கும் டிக்கட் வாங்கறதுக்கு கவுண்டர் கிட்டயே போறீங்க...செட்டியார்,முதலியார்,பிள்ளை இவங்க எல்லாம் டிக்கட் விக்க மாட்டாங்களா...சும்மா ஒரு டவுட்டு
:-)

said...

//ஏங்க எல்லா படத்துக்கும் டிக்கட் வாங்கறதுக்கு கவுண்டர் கிட்டயே போறீங்க...செட்டியார்,முதலியார்,பிள்ளை இவங்க எல்லாம் டிக்கட் விக்க மாட்டாங்களா...சும்மா ஒரு டவுட்டு //

அய்யோ ஷ்யாம், உங்க லொள்ளு தாங்க முடியலைப்பா சாமி..

said...

//திருட்டு விசிடி கலாச்சாரத்துல மதுரை மக்கள் இவ்வளவு பொருப்பா தியேட்டர்ல போய் படம் பார்கறீங்களா...மேன் மக்கள் மேன் மக்களே //

ஷ்யாம், இந்தியாவுல இருந்தவரை திருட்டு விசிடில நான் படம் பாக்கவே இல்லை. என் ரூம்ல பசங்க பாத்தாக்கூட நான் பக்கத்து ரூமுக்கு போயிடுவேன் ஷ்யாம்.. படம் எடுக்குறவங்க பாவம்னு..

said...

=>நானும் என் நண்பன் மணி வந்து படம் நல்லா இருக்குன்னு சொன்னா தான் ஹாஸ்டல்ல இருக்க பல பேர் அந்த படத்தை பாப்பாங்க.<= Nar panni sangama??

But unga padam parkira rate is too high. Naan mothama one year le kuda avalo padam parka matten. Appppppppa..15 to 20 films... My eyes are almost out of sockets..

said...

//Nar panni sangama//

Ama jananai.. oru masaththulainaa athu muppathai kooda thottirukku :-))

Welcome to here..

said...

நானும் உங்க கட்சிதான் காலேஜ்ல படிக்கும் போது.... ஆனா இப்ப சென்னைல இதெல்லாம் நடக்குற காரியமா???? ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... அது ஒரு காலம்....

Anonymous said...

Nalla eshuti irunteenga, athu oru kana kaalam :)

said...

//Nalla eshuti irunteenga, athu oru kana kaalam//

Thanks haniff..unmai thaan athu oru kanaakaalam