Monday, October 16, 2006

சிட்டுக்குருவிக்கு பக்காவா ஒரு பேர் வைங்க

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 11

நல்ல ஊர் சுத்திட்டு ஒரு முப்பது கிராம் வெயிட் ஏறி கொழுக் மொழுக்குன்னு வந்திருக்கு சிட்டுக்குருவி. நான் அதை அப்படியே பாத்துகிட்டு இருக்க, ஓய்..கண்ணு போடாதேப்பா.. இப்போ தான் நான் ரொம்ப கியூட்டா இருக்கேன்னு என் டார்லிங் சொல்லியிருக்கா..ன்னு சந்தோசத்துல எகிற ஆரம்பிச்சது குருவி.. அப்பா, பெரியப்பா கூட இங்க செட்டில் ஆகிட்டாலும் அதுக்கு இந்தியாவுல நிறைய நண்பர்களும் சொந்தங்களும் உண்டாம்.. அதனால ஒவ்வொரு வருஷமும் இந்தியா போயிட்டு வந்திடுமாம் சிட்டுக்குருவி. இந்த தடவை தன் ஆசை காதலியோட.. அதானல இந்த டிரிப் அதுக்கு ரொம்ப விஷேசமானது. தாரை தப்பட்டை எல்லாம் அடித்து, மாலை எல்லாம் போட்டு அது பிரண்ட்ஸ் அமர்களப்படிதீட்டாங்களாம்.. ஒரே சந்தோசம் அதுக்கு.. அந்த பச்சப் பயிறு, நெல்லுமணி, குருனை அரிசின்னு மெனு வேற தினமும் ஒண்ணாம்.. நம்ம சிட்டுக்குருவோட காதலி அமெரிக்காவுலயே பிறந்து வளர்ந்ததால அதுக்கு இதெல்லாம் ரொம்பவே புதுசாம்.. நல்லா என்ஜாய் பண்ணிச்சாம்.. கூடவே வகை வகையான பழங்களை பாத்து ரொம்ப குஷியாகிடுச்சாம்.. தமிழ்க் குருவிகளோட உபசரிப்புல ரொம்பவே உச்சிகுளிர்ந்து போச்சாம்.. அய்யோ.. குருவியோட டிரிப் கதையை கேக்க கேக்க எனக்கு காதுல ரத்தம் வர ஆரம்பிச்சது.. இதை பாத்தவுடன் குருவி முறைத்து பாத்தபடி வந்த வேலையை ஆரம்பித்தது..

அஜித்தோட அடுத்த படமான கிரீடம் படத்துல திரிஷா தான் ஜோடியாம். இந்த படத்தின் மூலமா பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வசனகர்த்தா ஆகிறாராம்.

கமலோட தசாவதாரம் படத்துல கமல் பத்து வேடத்துல நடிக்கிறது தெரியும். அசின் ரெட்டை வேடத்துல நடிக்கிறாராம்.. உனக்கு தெரியுமா.. (எனக்கே அசின் பத்தின நியுஸா.. சிட்டுக்குருவி இதெல்லாம் ரொம்ப ஓவர்)

ரஜினியோட சிவாஜில ஓப்பனிங் பாட்டுல ஆடுறதுக்கு நயன்தாராவுக்கு சான்ஸ் கிடைச்சிருக்காம்.. ரொம்ப பேர் போட்டி போட்டதுல இப்போ நயனுக்கு தான் லக்காம்.

சொல்லிவிட்டு சிட்டுக்குருவி இரும, ஒரு டம்ளரில் சீரகம் போட்டு காய்ச்சின தண்ணியை ஊற்றிக் கொடுத்தேன்.. ஒரே கல்பில் அதை குடித்த குருவி மறுபடியும் ஆரம்பித்தது.

மணிரத்தினதுக்கு மதுரை திருமலை நாயக்கர் மஹால் மேல எப்பவுமே ஒரு பாசம் இருக்கும். கண்ணாளனே ன்னு மனிஷா பாடினது இங்கே தான்..அவர் தயாரிப்புல, சிம்ரன் மனம் விரும்புதேன்னு நேருக்கு நேர் சூர்யாவை பாத்து பாடினதும் இங்கே தான்.. இருவர் படத்துல மோஹன்லாலும் பிரகாஷ்ராஜும், எம்ஜியார் கருனாநிதியாய் வாழ்ந்ததும் இங்கே தான்.. இப்போ தன்னோட அடுத்த படமான குருவுக்காகவும் திருமலை நாயக்கர் மஹால்ல சில காட்சிகளை ஷூட் பண்றாராம் மணிரத்னம்.

அமீரோட பருத்திவீரன் படத்துல நடிச்சுகிட்டு இருக்க சூர்யாவோட தம்பி கார்த்தி, அடுத்து நடிக்க போற படம், செல்வராகவனோட படம். செல்வராகவன், யுவன், ஒளிப்பதிவாளர் அர்விந்த்கிருஷ்ணா, மூன்று பேரும் சேர்ந்து ஒயிட் எலிஃபான்ட்ஸ் ஒரு பட நிறுவனத்தை கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சாங்கள்ல அதுக்காக செல்வா இயக்குற படம்..

டிசம்பர் 15-இல் ரஜினியோட தலைமையில் நடக்க போற செல்வா-சோனியா கல்யாணாதுக்கு பிறகு, இந்த படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்குமாம்.

கார்த்தி, இன்னும் ஜெட்லாக்ல இருந்து வெளில வரல..ரொம்ப டயர்டா இருக்கு..அதுவும் இல்லாம சென்னைல நடந்த தேர்தல் வன்முறைல மாட்டி அப்படி இப்படின்னு பறந்து, பிளைட் பிடிச்சு இங்கே வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.. நீ ரொம்ப எதிர்பார்ப்பியேன்னு உடனே வந்தேன்.. ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு அப்புறம் வர்றேன்..ஓகேயா..பைன்னு சொல்லிட்டு இறக்கையை விரித்து வானத்துல பறக்க ஆரம்பித்தது, நம்ம சிட்டுக்குருவி..

(நண்பர்களே.. சிட்டுக்குருவி சிட்டுக்குருவின்னு சொல்றது ரொம்பக் கஷ்டமா இருக்கு..அதுவும் தனக்கு ஒரு நல்ல பேர் இல்லியேன்னு அதுக்கும் ஒரு வருத்தம் நெஞ்சுக்குள்ள இருக்கு.. அதனால, நம்ம சிட்டுக்குருவிக்கும் அதோட லவ்வருக்கும் நீங்களே நல்ல பேரா வையுங்க..பாக்கலாம்.. பேர் கொஞ்சம் ஹீரோயிசமா இருந்தா நல்லா இருக்கும்னு சிட்டுக்குருவி ஃபீல் பண்ணுது.. நல்ல பேர் வச்சவங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தரப்படும்.. குருவியின் தீர்ப்பே இறுதியானது)

58 பின்னூட்டங்கள்:

said...

vazhakam pola sittu kuruvi news ellam juuper maams :)

waiting for greedam...inimel ellam thala mayam :)

Venuna unga kuruvikum athoda loverkum...karthik, asin-nu per vachidunga....eppadi idea :)

said...

//நல்ல ஊர் சுத்திட்டு ஒரு முப்பது கிராம் வெயிட் ஏறி கொழுக் மொழுக்குன்னு வந்திருக்கு சிட்டுக்குருவி.
idhu chittukurviya illa neengala, thodarndhu vara seydhigala paartha neengadhaan anniya US'la pidcha maadhiri irukku! thala unmaiya sollunga!

"siragu" symalan'nnu manoj night syamalanu rangeukku per vainga illana "kollywood" kovindan'nnu kuda vainga! :) Aiy naan dhaan firshtu! enakku paal payasam anuppunga!

said...

achacho bharan oru 2 nimit'la enna mundittaar! :(

said...

//Venuna unga kuruvikum athoda loverkum...karthik, asin-nu per vachidunga....eppadi idea //

Yen Mapla, bharani, bhavanaannu vaikakkoodaatha..

Nalla pEra chollu Mapla..

said...

//idhu chittukurviya illa neengala, thodarndhu vara seydhigala paartha neengadhaan anniya US'la pidcha maadhiri irukku//

IA, ippadi ellam mOppam pidikka koodathu..hmm..enakkum appadi ethaavathu Nadantha Nallaathaan irukkum :-))

said...

thala.....sittu's news ellam bayangara range'ah irukku... :)) romba future la pogudhu... :)) soniya-selva kanaalam nadakkuma?? neraya vaati dho ippo nadakkum ippo nadakkum nu kelvi patten....indha vaati sure nu thonudhu...namma sittu sonnadhaache...

said...

//"siragu" symalan'nnu manoj night syamalanu rangeukku per vainga illana "kollywood" kovindan'nnu kuda vainga//
IA, chinna pErach cholluppaa..chittukkuruvi pEr alavukkE sonna eppadi...

// Aiy naan dhaan firshtu! enakku paal payasam anuppunga//

IA, eppadi ovvoru blog-a poka vendiyathu..comments poda vendiyathu.. kaalai tiffinai mudichchukkirathu..eththanai pEr kilambi irukkeenGka.. LOL :-))

said...

//indha vaati sure nu thonudhu...namma sittu sonnadhaache//

gopal, december-15 nichchayamaa nadakka pokuthu.. sittu mela enna oru nambikkai..thanks..

appadiyE oru perum yochichu vaikkalaame chittu jodikku, try pannunga gopal..

said...

good cini news. pls do your sevai.
me out of tamilnadu, :(

kurivikku name : chittu

said...

Yenna Maams...naan sonnadha vida supper name irukaa enna :)

Venuna ajith, shalinu kooda vachikalam :)

said...

bijili nu kupiduvoma... bijili vedi madri news tarude chittukuruvi :)

said...

அமெரிக்காவிலே இப்போ திங்கள் இரவு ஆகி இருக்கும். நீங்க எங்கே இருக்கீங்க? முதல் முதல் பதிவு போடறதோட இல்லாமல் உடனேயே 11 பின்னூட்டங்களுமா? யாருமே அலுவல் வேலை பார்க்கிறதே இல்லையா? இதிலே என்னோட பதிவுக்கு வந்துப் பின்னூட்டம் போடறதுக்கு நேரம் இல்லைனு சால்ஜாப்பு வேறே? என்ன நடக்குது இங்கே? இன்னிக்கு சாயந்திரத்திற்குள் இந்தக் கேள்விக்குப்பதில் வரணும்! நறநறநறநறநற

said...

ஜில், ஜல் னு வைங்க கார்த்தி

பேட்டர ஏதும் தோன்றினால் வந்து சொல்லுறேன்.

said...

//யாருமே அலுவல் வேலை பார்க்கிறதே இல்லையா? //
ithai naan vanmaiyaaga kandikiren. Grrrrrrrrrrr.

//இதிலே என்னோட பதிவுக்கு வந்துப் பின்னூட்டம் போடறதுக்கு நேரம் இல்லைனு சால்ஜாப்பு வேறே? //

yappa! karthi, poi oru commentu pottutu vanthru paa! paavam vayasula periyavangala katha vudaatha! :)

said...

idhu enna namba dinamalar thunukku mootai madhiri kalakura.. unnoda post paditcha tamil film industry update kidaikkum pola irukku.

said...

"Surya - Jo"nnu vacchidungga Karthik. Ippe intha jodithaane tamil cinema industriyin super jodi.

Jothika ini padam nadikka maattaangga. At least, Cinema industry news namakku tharaddume!

said...

//நண்பர்களே.. சிட்டுக்குருவி சிட்டுக்குருவின்னு சொல்றது ரொம்பக் கஷ்டமா இருக்கு..அதுவும் தனக்கு ஒரு நல்ல பேர் இல்லியேன்னு அதுக்கும் ஒரு வருத்தம் நெஞ்சுக்குள்ள இருக்கு.. அதனால, நம்ம சிட்டுக்குருவிக்கும் அதோட லவ்வருக்கும் நீங்களே நல்ல பேரா வையுங்க..பாக்கலாம்.. பேர் கொஞ்சம் ஹீரோயிசமா இருந்தா நல்லா இருக்கும்னு சிட்டுக்குருவி ஃபீல் பண்ணுது.. நல்ல பேர் வச்சவங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தரப்படும்.. குருவியின் தீர்ப்பே இறுதியானது//

அம்பிகாபதி - அமராவதி. இது தான் அந்த காதல் ஜோடிக்கு எனக்கு சட்டுன்னு தோனுன பேரு.

கொஞ்சம் யூத்ஃபுல்லா பேரு வைக்கனும்னா அம்பி - அம்மு.

அம்பி-அம்மு பேருக்குப் பின்னாடியுள்ள காரணத்தையும் சொல்றேன் கேட்டுக்கங்க.

அம்பி - ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு மனுசனுக்கு தன்னோட மச்சான் அன்பும் ஆதரவும் தேவையில்லியா? குருவிக்கு இந்த பேரு வச்சி அப்படியே மச்சியை ஃப்ளாட் ஆக்கிடலாம்ல?

அம்மு - உங்க தலையோட ஆரம்ப காலத்துப் படத்தோட பேரை நியாபகப் படுத்திட்டே இருக்கும் இந்த ஷார்ட் அண்ட் ஸ்வீட் நேம்.

நாளைய பதிவோட தலைப்பு "அம்பியின் சினிபிட்ஸ் - 12". இது எப்படியிருக்கு?

:)

said...

சில Suggestions :
1. அன்புள்ள அம்பியின் சினி பிட்ஸ் -12
2. அலேக் அம்பியின் சினி பிட்ஸ் - 12
(ஹீரோயிக்கா இருக்கா?)
3. அம்பியின் சினி முகவரிகள்(முகவரி வேற புடிக்குமாமே மச்சிக்கு :))
:))

said...

//kurivikku name : chittu //

Ambi, pEr nalla thaan irukku.. but unga kitta irunthu naan romba ethipaakurEn.. :-))

said...

//Venuna ajith, shalinu kooda vachikalam //

bharani mapla, eppadi vachchukalam.. puthusa vanthu padikiravangalukku entha ajiththai paththi solromnu kuzhambidum..illiyaa athu thaan..

mapla..vera vera sollunga..ungalaala mudiyum

said...

//bijili nu kupiduvoma... bijili vedi madri news tarude chittukuruvi //

bijili nalla thaan irukku, porkodi.. anaa athOda jodikkum oru nalla pEr vayunga..

said...

//அமெரிக்காவிலே இப்போ திங்கள் இரவு ஆகி இருக்கும். நீங்க எங்கே இருக்கீங்க? //

அமெரிக்காவிலே தான்..

//முதல் முதல் பதிவு போடறதோட இல்லாமல் உடனேயே 11 பின்னூட்டங்களுமா? யாருமே அலுவல் வேலை பார்க்கிறதே இல்லையா? //
கீதா மேடம், இன்னது இது..நேத்து கூட வந்து ச்ளையா மூணு பின்னூட்டம் கொடுத்தேனே.. இன்னிக்கு பாருங்க.. உங்களை அசர வைக்கிறேன்..

//இதிலே என்னோட பதிவுக்கு வந்துப் பின்னூட்டம் போடறதுக்கு நேரம் இல்லைனு சால்ஜாப்பு வேறே? என்ன நடக்குது இங்கே? இன்னிக்கு சாயந்திரத்திற்குள் இந்தக் கேள்விக்குப்பதில் வரணும்! நறநறநறநறநற //
ரொம்ப பல்லை போட்டு கடிக்காதீங்க மேடம்.. புது பல்செட்னால ஏதோ கொஞ்சம் தாங்குது :-)

said...

//ஜில், ஜல் னு வைங்க கார்த்தி//

சிவா, இதுவும் நல்லாத்தான் இருக்கு.. ஆன உங்க கிட்ட இருந்து நான் ரொம்ப எதிர்பாக்குறேன்.. இன்னும் இன்னும் முயற்சி பண்ணுங்களேன்.. அப்படியே அந்த லவ்வர் குருவிக்கும் ஒரு பேர் வையுங்க..

said...

//yappa! karthi, poi oru commentu pottutu vanthru paa! paavam vayasula periyavangala katha vudaatha//

Ambi, Neththu thaan 3 comments pOtten.. rendu pathivu pOttuiruNthathaala onnukkum mattum 3 comments pOtten..

Geetha madam, comments vendaam vendaam nu neengka kaththura alauvukku inimel comments poduren.. ana athula sila adikalum ungalukku irukkum okvaa :-))

said...

//idhu enna namba dinamalar thunukku mootai madhiri kalakura..//
athe type thaan madhu..

// unnoda post paditcha tamil film industry update kidaikkum pola irukku//

nichchayama..latest news ellaam chittukuruvi namakaaka thedi vanthu sollum :-))

Anonymous said...

cine news ellam ore kalakkal thaaan pola irukku.. :)

said...

//"Surya - Jo"nnu vacchidungga Karthik. Ippe intha jodithaane tamil cinema industriyin super jodi.
//

choorya-jO per vaikkalam, my friend.. appuram entha choorya..entha jO padikkirappO confuse akida koodaathulla..athu thaan.. differenta think panni sollungalen..

said...

//அம்பிகாபதி - அமராவதி. இது தான் அந்த காதல் ஜோடிக்கு எனக்கு சட்டுன்னு தோனுன பேரு.

கொஞ்சம் யூத்ஃபுல்லா பேரு வைக்கனும்னா அம்பி - அம்மு//

அசத்துறீங்க கைப்புள்ள.. உங்க விளக்கங்கலும் கலக்கல்..பாக்கலாம் இன்னும் மத்தவங்க என்ன பேர் சொல்றாங்கன்னு..

said...

பொற்கொடி சொன்ன மாதிரி பிஜிலி பேர் வச்சா அதோட சோடிக்கு குஜிலின்னு பேர் வைங்க:)

said...

//அலேக் அம்பியின் சினி பிட்ஸ் - 12
//

எங்கயோ போயிட்டீங்க கைபுள்ள.. ஆனா தலைப்பு மட்டும் இருக்கிறதே நல்ல இருக்குமோன்னு என் கருத்து.. தலைப்பு மட்டும் பாக்குரவங்கலுக்கு, சிட்டு குருவி ஞாபகம் வராதே..அது தான் ..எதுக்கும் சிட்டுகுருவிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாம்..

அதுவும் அம்பிக்குங்கிரது என் மச்சான் பேர் மாதிரி வேற இருக்கு.. ஒஇதுக்கு என் மச்சான் வேற ஒத்துக்கனும்..அவங்க அக்கா கிட்ட போட்டுகொடுத்துட்டா சிக்கல்

said...

dreamzz..

thanks for dropping here.. yes..mostly you can get latest cine updates from chittukuruvi..

said...

//பொற்கொடி சொன்ன மாதிரி பிஜிலி பேர் வச்சா அதோட சோடிக்கு குஜிலின்னு பேர் வைங்க//

வேதா.. அமர்க்களமா இருக்கே பேர்.. ஆனாலும் இன்னும் யோசிச்சு வேற ஏதாவது மனசுல வந்தாலும் சொல்லுங்க..

said...

//எதுக்கும் சிட்டுகுருவிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாம்..//

அதான் சிட்டுக்குருவியின் தேர்வே இறுதியானதுன்னு சொல்லிருக்கீங்களே? எதுவாருந்தாலும் எனக்கு ஓகே தான்.
:)

said...

//ரொம்ப பல்லை போட்டு கடிக்காதீங்க மேடம்.. புது பல்செட்னால ஏதோ கொஞ்சம் தாங்குது :-) //

ஒரு இளைஞியைப் பாத்து இப்படி நீங்க சொல்லறதை நான் வன்மையா கண்(ண)டிக்கிறேன்.
:)

பாத்து கார்த்திக்! இப்படியெல்லாம் நீங்க கமெண்ட் அடிக்கறீங்க...எவண்டா அவன் இப்படியெல்லாம் சொன்னதுன்னு சாரு அருவாளைத் தூக்கிட்டு வந்துடப் போறாரு இளநி சீவ
:)

said...

யோவ்! கைப்பு! என்ன ராஜஸ்தான் கொழுப்பா? நீங்க தள்ளிகிட்டு வந்த அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் சவுக்கியமா? யப்பா! கார்த்தி, அது என்ன மேட்டர்?னு விசாரிச்சியா? :)

said...

//யோவ்! கைப்பு! என்ன ராஜஸ்தான் கொழுப்பா? //

அம்பி! இப்படி என் இதயத்தைச் சுக்கு நூறாக்கிட்டீங்களே? என்ன ஒரு நல்ல எண்ணத்துல நான் சொன்னேன்...உங்க பேரைப் பட்டித் தொட்டியெல்லாம் பரப்ப...அதை புரிஞ்சிக்காம் இப்படி வஞ்சிட்டீங்களே?
:((

said...

பதிவுக்கு நான் வராத சமயம் பார்த்து நீங்க எல்லாம் பேசறதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், அதுவும் என்னோட கமெண்ட்டுக்கு நான் இருக்கிறப்போ பதில் கொடுக்கணும், கார்த்திக் தூங்கிட்டு இருந்தாக் கூட எழுந்து வந்து பதில் சொல்லணும். இது தலைவியின் ஆணை! :D

said...

ஹ்ம்ம்ம்ம் குருவி ஜாலியா india போயிட்டு வந்திடுச்சு. news எல்லாம் super.

பேரு - தமிழா, englisha, தங்glish a?

1. ‘Swift’ சிட்டு, ‘prompt’ பட்டு (short form - சிட்டு, பட்டு)
2. Spark – Shiny
3. திரைஞானி, எழில் ராணி(short form ஞானி, ராணி)
4. ரீலப்பர், ரூலம்மா (குருவிக்கு rule போடறதால)
5. ஜெட்டு, சிட்டு (ஜெட்டுனா jet)

ஹி ஹி.. எனக்கு தானே மிட்டாய்? (குருவி ரொட்டினா என்ன?)

said...

aahaa!kuruvi oru suthi vandhu evalo mukkiya saidhigal vasikidhu!
adhuvum ameicala pirandhu valandha jodiyoda.Karthi!Ennavo nadukudhu!
idhula jodi kuruvikku per veraya.
neenga vidra reelukku "reelu-Jollu"nu per vainga."kuppi-kuppa" kooda okdhan.enna sollreenga.
nalla comedy ponga.--SKM

said...

சிட்டு குருவி சிட்டு குருவி தான்...கலக்குது நியூஸ் எல்லாம்...அதிலும் நயன் பத்தி நியூஸ் சொல்லி புண்ணியம் கட்டிக்குச்சு :-)

said...

சிட்டு குருவிக்கு பேர எல்லோரும் தேவையான அளவுக்கு குடுத்திட்டதால நான் விட்டுடறேன்...

இருந்தாலும் நம்ம தல சொன்ன பேரு ரொம்ப பொருத்தமா இருக்கு..எப்படியும் சிட்டுகுருவி தான் டிசைட் பண்ணனும் :-)

said...

//சிட்டுக்குருவியின் தேர்வே இறுதியானதுன்னு சொல்லிருக்கீங்களே? எதுவாருந்தாலும் எனக்கு ஓகே தான்//

நன்றி கைபுள்ள.. இது நல்ல பிள்ளைக்கு அடையாளம் :-)

said...

//எவண்டா அவன் இப்படியெல்லாம் சொன்னதுன்னு சாரு அருவாளைத் தூக்கிட்டு வந்துடப் போறாரு இளநி சீவ//

ஏற்கனவே சாரு ஒரு இளநீர் கொடுத்துட்டார் கைப்புள்ள..

said...

//பதிவுக்கு நான் வராத சமயம் பார்த்து நீங்க எல்லாம் பேசறதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், அதுவும் என்னோட கமெண்ட்டுக்கு நான் இருக்கிறப்போ பதில் கொடுக்கணும், கார்த்திக் தூங்கிட்டு இருந்தாக் கூட எழுந்து வந்து பதில் சொல்லணும். இது தலைவியின் ஆணை//

மேடம்..இதெல்லாம் கொஞ்சம் ஒவரு.. ஒரு மனுஷன் தூக்கத்தை கெடுக்குறது ரொம்ப தப்பு.. அது தான் ஒண்ணுக்கு மூணு பின்னூட்டம் போட்டுட்டேனே உங்க பதிவுல.. வேணும்னா இன்னும் ரெண்டு வந்து போடுறேன்

said...

//எனக்கு தானே மிட்டாய்? (குருவி ரொட்டினா என்ன?) //


பிரியா.. ஒவ்வொரு பேரும் பக்கா பேரு.. பார்ப்போம் சிட்டுக்குருவி என்ன சொல்லுதுன்னு..

குருவி ரொட்டினா குருவி ஷேப்ல இருக்க ரொட்டி தான் :-))

said...

//Ennavo nadukudhu!
idhula jodi kuruvikku per veraya//

SKM, enna eppadi santhekappadureengaka.. pEr, jodiyellam ellam kuruvikku thaan enakku illa :-(

said...

//நயன் பத்தி நியூஸ் சொல்லி புண்ணியம் கட்டிக்குச்சு //
நயன்..நயன்னு உசுர விடுறீங்க.. சென்னை போறப்போ பாத்து.. சிம்பு உங்களை அடிக்க ஆள் செட் பண்ணி இருக்காராம்

said...

//நீங்க தள்ளிகிட்டு வந்த அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் சவுக்கியமா? யப்பா! கார்த்தி, அது என்ன மேட்டர்?னு விசாரிச்சியா?//
கைப்புள்ள இது என்ன புது மேட்டர்..சொல்லவே இல்ல..
அம்பி..நீயாவது சொல்லுப்பா..

said...

என்ன என்ன நடக்குது இங்கே..
அம்பிக்கு பஞ்சாப் மாதிரி கைப்புள்ளைக்கு ராஜஸ்தானா

said...

aaha.. 50th comment.. Chittu kuruvi BBC news collectora vida fasta vela paakudhu pola.. Great. :)

said...

G3, 100th comment podurathu..50th comment..first comment podurathu..eppadinga unGkalaaa mudiyuthu..

said...

பிஜிலிக்கு குஜிலினு போடுங்கனு நான் சொல்ல வந்தத வேதா சொன்னாங்க பாருங்க, கீதா பாட்டி பாத்துக்கோங்க எங்க ஒற்றுமைய!!

said...
This comment has been removed by a blog administrator.
said...

Mr and Mrs. சிகு/CK ( cutting short Chittu-Kuruvi, also synonymous to Chitraguptan)!

said...

/பிஜிலிக்கு குஜிலினு போடுங்கனு நான் சொல்ல வந்தத வேதா சொன்னாங்க பாருங்க, கீதா பாட்டி பாத்துக்கோங்க எங்க ஒற்றுமைய//

porkodi..paavam geetha.. enga thirumbinaalum avangalukku oru kottu vaikkira.. :-))

said...

//Mr and Mrs. சிகு/CK ( cutting short Chittu-Kuruvi, also synonymous to Chitraguptan)! //

Good names..paarpom chittukuruvi entha pErai select pannuthunnu

C.M.HANIFF said...

Muthan muthal ungal valai pakkam vanthen, supera irukku ungal comments :)

said...

//Muthan muthal ungal valai pakkam vanthen, supera irukku ungal comments//


Welcome haniff..Welcome..