Wednesday, October 18, 2006

கன்னா பின்னான்னு ஒரு பதிவு.. தீபாவளி ஸ்பெஷல்நம்ம ஆன்மீக ஆசிர்வாதானந்தா இப்படி உங்களை ஆசிர்வதிக்கிறார்..

என்னப்பன் முருகன் பெரிய ரவுண்டா போட்டு மிஸ் பண்ணின பழத்தை.. சின்ன ரவுண்டலயே வாங்கினாரு கணபதி சாமி.. அது மாதிரி வாழ்க்கைல ஜெயிக்கனும்னா வின்டோஸ்ல மாதிரி ஷார்ட்கட் பயன்படுத்தி, சிறப்பா தீபாவளி கொண்டாடுங்க..

இந்த வருட தீபாவளி மலர்ல கருத்து கந்தசாமி என்ன சொல்றாருன்னா...
பொய் சொல்றவன்
பொய் சொல்லாதவனை
பொய் சொல்றான்னு
பொய் சொன்னா
பொய் சொல்லாதவனையும்
பொய் சொன்னான்னு
பொய் சொல்லும் ஊர்.

போட்டிக்கு தத்துவ தாண்டவராயன் இப்படி சொல்றார்...
கதாநாயகனுக்கு வில்லன் வில்லன்
வில்லனுக்கு கதாநாயகன் வில்லன்.

இந்த தீபாவளிக்கு நயன்தாராவோட மூன்று படங்கள் வருது.. அதனால நச்சுன்னு நயன்ங்கிற ப்ரோகிராமுக்காக நயனுடன் ஒரு பேட்டி..ஹிஹி..சிம்பு இல்லாத நேரத்துல தான்..

நான் : இந்த தீபாவளிக்கு மக்களுக்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க, நயன்..
நயன் : என்னோட படங்கள் மூணு வருது.. நல்லா பாத்து தீபாவளியை என்ஜாய் பண்ணுங்க..
நான் : சிம்பு..?
நயன் : நல்ல நண்பர்.. என் ஹீரோ..வல்லவன்ல.. நாங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ்.. நான் கூட எல்லாம அவர் காபி கூட குடிக்க மாட்டார்
நான் : எங்க நட்டாமை பத்தி..?
நயன் : நாட்டாமை..?ஓ..சரத்குமாரா?
நான் : இல்ல..ஷ்யாம் பத்தி..
நயன் : ஷ்யாம்..ஓ..எங்க போனாலும் என் பின்னாடி வந்து சிம்புகிட்ட அடிவாங்கினாரே..அவரா..பாவம்..நல்ல ரசிகர்.. மேக்-அப் இல்லாம நான் எடுத்த போட்டோல கூட அழகா இருக்கேன்னு, எல்லோர் கூடவும் சண்டை போடுவார்..

இப்போ அசின் பத்தி நான் என்ன சொல்றேன்னா

காபியில் கூட
நீ
சக்கரை போடுவதில்லையாமே..
நான்
உன் உதடுகள்
இனிப்பாய் இருக்கிறதென்று
சொன்ன பிறகு..

கூட்டமாய் கிடக்கும்
கூந்தல் முடிகள்
ஜிம்னாடிக்ஸ் பழகிய
சீனத்து பெண்கள்..
என்னமாய் வளைகின்றன
தினமும்....

குதிரை வாலாய் ஒரு நாள்
தூக்கிச் சொருகியபடி மறுநாள்
மேலேழுந்து இறக்கப்பட்டு
கீழ் விழும் நீர்விழ்ச்சி போல் சில நாள்..

அந்த
கூந்தல் கூட்டத்தில் தான்
ஒரு நாள்
நான் காணாமல் போனேன்.

அரியப் புகைப்படம்..
பரமசிவன் ஷூட்டிங்கும், சரவண ஷூட்டிங்கும் அடுத்தடுத்து நடந்த போது, இவர்கள் சந்தித்த போது எடுத்த படம்..அப்படியே எல்லோரும் கொலம்பஸ் வந்தீங்கன்னா.. நம்ம
தீபாவளி பாட்டை போட்டு சிறப்பாய் கொண்டாடலாம்..
டிக்கட் அனுப்பி வையுங்கன்னு வேதா கேக்குறது தெரியுது..

அதனால..நண்பர்களே..எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
தீபங்கள் ஏற்றி, புத்தாடை அணிந்து, தெய்வங்களை கும்பிட்டு ,இனிப்பெல்லாம் சுவைத்து, டிவில இந்திய தொலக்காட்சிகளிலேயேன்னு புது படம் பாத்து,
நண்பர்களோட போன்ல பேசி, ஓசி SMS அனுப்பி
பட்டாசா, ரகளையா தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்..

எல்லா புத்தகங்களும் தீபாவளி மலர் போடுறாங்களேன்னு ஆசைபட்டு இங்கே நாம் போட்ட பதிவு இது.. இன்னும் என்னன்ன பகுதிகள் இருந்தா இது முழுமை அடையும்னு உங்க ஆலோசனைகளை பின்னூட்டமா போடுங்க.. ஒவ்வொரு பின்னூட்டதுக்கும் ஒரு எண் கொடுத்து, அதை குலுக்கல் முறைல செலெக்ட் பண்ணி பரிசு எல்லாம் கொடுப்போம்.. பின்னூட்டம் போடத் தயாரா.. பரிசு தர நான் ரெடி..

67 பின்னூட்டங்கள்:

said...

Yeppa.....kalakiteenga maams...diwali special sema suuppeerrrr :)

//கதாநாயகனுக்கு வில்லன் வில்லன்
வில்லனுக்கு கதாநாயகன் வில்லன்.//...enna oru thathuvam...idhu onne podhum....diwali malar full-a completed :)

said...

asin pathina kavidhai supper super...nadipu, screen test, kadhai...ippa kavidhaya.....innum konja naal-la...kadhai, thiraikadhai, vasanam, paadalgal, dance, hero, direction ellame karthik oru ad vandhaalum sandhega padurathuku illa :)

said...

Ungalukum Iniya Deepavali nalvaazhthukal....columbus-la kolaagalama kondadunga :)

said...

//enna oru thathuvam...idhu onne podhum....diwali malar full-a completed //

O Nanri Mapla.. ithu enga college annual bookukkaaka naan ezhuthinathu..

said...

//kadhai, thiraikadhai, vasanam, paadalgal, dance, hero, direction ellame karthik oru ad vandhaalum sandhega padurathuku illa //

appadi oru asai manasukulla irukku mapla.. asaingkirathai vida latchchiyame ithuthaan

said...

Mapla, romba NanRi...Neengkalum nalla diwali kondatungka..happy diwali..

en employee number 157878..mail id kku phone number anuppunga.. i wanna call to wish you.. i tried to found your name in masterfind..i was unable :-))

said...

//asaingkirathai vida latchchiyame ithuthaan
//....kandipa unga latchiyam oru naal niraiverum....annaki paarunga...neenga eppadi ellam ticket eduthu padam parthenu ezhudhi irundheengalo...appadi naanga ellam unga padatha paarka porom :)

ennoda emp no: 135079....enkita contact number eduvum illa maams...phone vaangalanu nenachapa dhan ooruku poga sollitaanga....give me ur mobile number...naan ungaluku skype-la irundhu call panren :)

said...

டைட்டிலிற்குப் பக்கத்திலுள்ள லோகோக்களைப் பார்த்தால் தொழில்நுட்ப மலர் மாதிரியல்லவா தெரிகிறது
உள்ளே படித்தால் பாலிவுட் சிறப்பு மலர் மாதிரியல்லவா தெரிகிறது
என்ன இருந்தாலும் இலவச மலர் தானே - அதனால் பாராட்டுக்கள்

said...

enna idhu visu style la pudhu release a ?
happy diwali

said...

அண்ணா நிஜமாவே சூப்பர் தீபாவளி மலர்! ரொம்ப நல்லா இருந்தது.

said...

துணுக்கு ஜோக் எல்லாம் இல்லனு சொல்ல வந்தேன், ஆனா நயன் பேட்டியே அதானேனு புரிஞ்சுடிச்சு :) நல்லா இருந்துது மலர்!

said...

விகடன் தீபாவளி மலர் மாதிரி சூப்பரா இருக்கு:) என்ன ஒரே வித்தியாசம் அதுல வாசகர்களும் பங்கெடுத்துப்பாங்க நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா ஏதாவது எழுதி கலக்கியிருக்கலாம்:) சரி பரவாயில்லை இது தலைவரின் சிறப்பு மலரா இருக்கட்டும் அடுத்த தடவை எங்க படைப்புகளும் வரணும்:) சரி இலவச இணைப்பு எதுவும் இல்லையா? ஹும் அப்படியாவது ரிவர்ஸிபள் பட்டு சேலை கிடைக்குமான்னு பார்க்கறோம்:)

said...

தீபாவளி மலரா இது? சினிமா மலர்னு சொல்லுங்க, இந்த மொக்கையோ மொக்கைக்கு ஒரு பின்னூட்டமா? போகுது கொடுத்து வைக்கிறேன். :D
அப்புறம் ஹிஹிஹி, என்னோட பதிவிலே வந்து பின்னூட்டம் கொடுத்துடுங்க.

said...

//neenga eppadi ellam ticket eduthu padam parthenu ezhudhi irundheengalo...appadi naanga ellam unga padatha paarka porom//

enna Mapla..eppadi solliteenga.. ungalukkellam thaniyaa preview show thaa..

sure..mapla i will send the contact number

said...

//பாலிவுட் சிறப்பு மலர் மாதிரியல்லவா தெரிகிறது
என்ன இருந்தாலும் இலவச மலர் தானே - அதனால் பாராட்டுக்கள் //

நன்றி சுப்பையா அண்ணா.. அவசரத்துக்கு அந்த லோகோ தான் கிடச்சது

said...

//enna idhu visu style la pudhu release a ?
happy diwali //

Thanks da Madhu.. chumma oru try vidalaamnu

C.M.HANIFF said...

Ungal diwali special superungo :)

said...

பொய் சொல்றவன்
பொய் சொல்லாதவனை
பொய் சொல்றான்னு
பொய் சொன்னா
பொய் சொல்லாதவனையும்
பொய் சொன்னான்னு
பொய் சொல்லும் ஊர்.


Ippo idhula edhu poi, edhu mei? :)

நான் : எங்க நட்டாமை பத்தி..?
நயன் : நாட்டாமை..?ஓ..சரத்குமாரா?
நான் : இல்ல..ஷ்யாம் பத்தி..
நயன் : ஷ்யாம்..ஓ..எங்க போனாலும் என் பின்னாடி வந்து சிம்புகிட்ட அடிவாங்கினாரே..அவரா..பாவம்..நல்ல ரசிகர்.. மேக்-அப் இல்லாம நான் எடுத்த போட்டோல கூட அழகா இருக்கேன்னு, எல்லோர் கூடவும் சண்டை போடுவார்..


Syam anne, unga maanam kaathula parakudhu anne! :d

said...

ஓசி SMS அனுப்பி
பட்டாசா, ரகளையா தீபாவளி கொண்டாட ungalakkum வாழ்த்துக்கள்..

Anonymous said...

thala...kalaasiputeenga....deepavali malar soober... :))

happy deepavali to u too...ensoi pannunga... :)

hmmmm konja naal aatum..naanum ennoda emp num podaren... :))

said...

Ore poi poiya padichutu konjam confuse ayitten.Unga diwali malar suma sooda irukku...

Diwali Wishes to U too.:-)

said...

உங்களூக்கும் தீவாளி வாழ்த்துக்கள் கார்த்திக்....கலக்கல் தீபாவளி ஸ்பெஷல்...பிச்சு பீஸ் கெளப்பிட்டீங்க... :-)

said...

//நான் : இல்ல..ஷ்யாம் பத்தி..
நயன் : ஷ்யாம்..ஓ..எங்க போனாலும் என் பின்னாடி வந்து சிம்புகிட்ட அடிவாங்கினாரே..அவரா..பாவம்..நல்ல ரசிகர்.. மேக்-அப் இல்லாம நான் எடுத்த போட்டோல கூட அழகா இருக்கேன்னு, எல்லோர் கூடவும் சண்டை போடுவார்//

அதுதான...நான் அடிவாங்கின மேட்டர போஸ்டர் அடிச்சு ஒட்டுலனா உங்களுக்கு தூக்கம் வராதே....

அடாது அடி விழுந்தாலும்...
விடாது நயன துரத்துவோம்.... :-)

said...

//Syam anne, unga maanam kaathula parakudhu anne!//

karthik b.s, sari nayan kaaga ithu kooda illana epadi :-)

said...

@deekshanya,

நன்றிமா தங்கச்சி.. உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் சுட்டி பையனுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

said...

//துணுக்கு ஜோக் எல்லாம் இல்லனு சொல்ல வந்தேன், ஆனா நயன் பேட்டியே அதானேனு புரிஞ்சுடிச்சு :) நல்லா இருந்துது மலர்//

என் பிரிய மச்சினிச்சி பொற்கொடிக்கு, இனிய தீபாவளி வாழ்துக்கள்..

துணுக்கு ஜோக் போடணும்னு நினச்சுகிட்டு இருந்தேன்.. கடைசில மறந்துட்டேன் பொற்கொடி..

said...

//விகடன் தீபாவளி மலர் மாதிரி சூப்பரா இருக்கு:) என்ன ஒரே வித்தியாசம் அதுல வாசகர்களும் பங்கெடுத்துப்பாங்க நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா ஏதாவது எழுதி கலக்கியிருக்கலாம்//

வாவ்..சூப்பர் ஐடியா வேதா.. பொங்கல் மலரை இன்னும் நல்ல கொண்டுவரலாம்.. இப்போ தானே ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்..இனிமே கலக்கலாம் தோழியே..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

// சரி இலவச இணைப்பு எதுவும் இல்லையா? ஹும் அப்படியாவது ரிவர்ஸிபள் பட்டு சேலை கிடைக்குமான்னு பார்க்கறோம்//

பரணி அனுப்பியாச்சு.. இந்த போஸ்டலே இப்படித்தான் வேதா

said...

தலைவா! பயங்கரமா கலக்கி இருக்கிங்க. பயங்கர creative idea லாம் தோணுது உங்களுக்கு. ஆன்மீக ஆசிர்வாதானந்தா, கருத்து கந்தசாமி, தத்துவ தாண்டவராயன் - இந்த புது characters லாம் அப்பப்ப வருவாங்களா?

hightlight நயன் பேட்டி தான்..

said...

ஆமா தீபாவளி மலரோட சீயக்காய் பொட்டலம், shampoo packet, தேங்காயெண்ணெய் என்னென்னமோ free samples குடிப்பாங்களே. அதெல்லாம் எங்க?

said...

//sari nayan kaaga ithu kooda illana epadi //

கவலைப் படாதிங்க நாட்டாமை. sympathy love ஆ மாறர மாதிரி எவ்ளோ படத்துல பாத்திருக்கோம்.

said...

/தீபாவளி மலரா இது? சினிமா மலர்னு சொல்லுங்க, //

ஏதோ தலைவி நீங்க பாத்து ஒரு முடிவுக்கு வந்தா சரி..

//இந்த மொக்கையோ மொக்கைக்கு ஒரு பின்னூட்டமா? போகுது கொடுத்து வைக்கிறேன்.//

என்ன தலைவியே, நான் உங்களோட பதிவுக்கு ஏழு கொடுத்தும் இப்படிச் சொன்னா இது நியாயமா, தர்மமா..

//அப்புறம் ஹிஹிஹி, என்னோட பதிவிலே வந்து பின்னூட்டம் கொடுத்துடுங்க//

தலைவியே நீங்க சொல்லவே வேன்டாம்.. நம்ம பின்னூட்டம் எப்பவும் உண்டு

said...

//Ungal diwali special superungo //

Thanks Haniff..

said...

//Ippo idhula edhu poi, edhu mei//

ahaa..kuzhappivittuteengalE karthik :-))

//Syam anne, unga maanam kaathula parakudhu anne//
shyam maanam already melaiye thaan irukku karthik

said...

//ஓசி SMS அனுப்பி
பட்டாசா, ரகளையா தீபாவளி கொண்டாட ungalakkum வாழ்த்துக்கள்.. //

ஓசி SMS.. இங்கே மெசேஜ் அனுப்பினாலே காசு தான் கார்த்திக்

நீங்களும் தீபத்திருநாளை சிறந்தபடியா கொண்டாட வாழ்த்துக்கள்

said...

//thala...kalaasiputeenga....deepavali malar soober... //
Thanks Gopal

//happy deepavali to u too...ensoi pannunga... :)//
Neengalum nalla enjoy pannu gopal

//hmmmm konja naal aatum..naanum ennoda emp num podaren...//
welcome Gopal..TCSla ILP enGke?

said...

//Ore poi poiya padichutu konjam confuse ayitten.Unga diwali malar suma sooda irukku...

Diwali Wishes to U too.//

Thanks janani.. Nalla kondaatungka diwaliyai.. unGkal kudumbaththrukkum enathu vaazhthukkaL

said...

//கலக்கல் தீபாவளி ஸ்பெஷல்...பிச்சு பீஸ் கெளப்பிட்டீங்க//

நன்றி ஷ்யாம்..நன்றி.. நீங்களும் குடும்பத்தோட தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள் ஷ்யாம்

said...

//நான் அடிவாங்கின மேட்டர போஸ்டர் அடிச்சு ஒட்டுலனா உங்களுக்கு தூக்கம் வராதே....

அடாது அடி விழுந்தாலும்...
விடாது நயன துரத்துவோம்//

நயனையா துரத்துறீங்க நாட்டாமை.. ஊர்ல சிம்பு உங்களுக்கு எதிரா பஞ்சாயத்து கூட்டப்போறாரு..பாருங்கோ..

said...

//karthik b.s, sari nayan kaaga ithu kooda illana epadi//

mudivE panniteengala.. adi vaanginaalum parava illainnu..
Naattaamai oru diwali news.. Nayan eppO seattle la thaan irukkaanGo..
oru telugu shootingkkaaka

said...

//புது characters லாம் அப்பப்ப வருவாங்களா?

hightlight நயன் பேட்டி தான்//

நன்றி பிரியா.. நன்றி..
புது ஆள்கள் இந்த மாதிரி (உங்க கல்யாண சிறப்பு மலர்ல கூட வரலாம்) சிறப்பு மலர்ல தான் வருவாங்க.. :-))

நயன் பேட்டி ஐடியா உங்க பதிவுல நயன் போட்டோ பாத்தவுடன் தான் வந்தது பிரியா..

said...

/தீபாவளி மலரோட சீயக்காய் பொட்டலம், shampoo packet, தேங்காயெண்ணெய் என்னென்னமோ free samples குடிப்பாங்களே. அதெல்லாம் எங்க//

அடடே.. பிரியா, பரணி அனுப்பின ரிவர்சிபிள் சேலை இன்னும் வரலையா, சரியான அட்ரஸ் தானே கொடுத்தீங்க :-))

said...

//கவலைப் படாதிங்க நாட்டாமை. sympathy love ஆ மாறர மாதிரி எவ்ளோ படத்துல பாத்திருக்கோம்//

ஆமா பிரியா.. நாட்டாமைக்கு ஹஸ்பிடல்ல நர்ஸ் தான் லவ் ஊசி குத்த போகுது..அடிக்கடி அங்க போறதால

said...

//உங்க கல்யாண சிறப்பு மலர்ல கூட வரலாம்//
அட, அதெல்லாம் போடுவீங்களா? அதுக்காகவே கல்யாணம் பண்ணிக்கலாம் போல இருக்கே.

//நயன் பேட்டி ஐடியா உங்க பதிவுல நயன் போட்டோ பாத்தவுடன் தான் வந்தது//
இப்ப நட்டாமை என்ன அடிக்க வரப் போரார்.

//பரணி அனுப்பின ரிவர்சிபிள் சேலை இன்னும் வரலையா//
அவர் எல்லாத்தையும் மொத்தமா பாவனாக்கு அனுப்பி இருப்பார்.

// நாட்டாமைக்கு ஹஸ்பிடல்ல நர்ஸ் தான் லவ் ஊசி குத்த போகுது..//
LOL..அதுவும் மல்லு நர்ஸா இருந்தா ok தானே?

said...

//அதுக்காகவே கல்யாணம் பண்ணிக்கலாம் போல இருக்கே//

ஓ..அப்ப அந்த ப்ளானும் ஓடுதுன்னு சொல்லுங்க.. என்ன எந்த பையனாவது சிக்கியாச்சா, ப்ரியா... இல்ல இப்பத்தான் வீட்ல வலையை வீச ஆரம்பிச்சு இருக்காங்களா

//எல்லாத்தையும் மொத்தமா பாவனாக்கு அனுப்பி இருப்பார்//

என் மாப்ள அப்படி எல்லாம் பண்ற ஆளு தான், ப்ரியா

//அதுவும் மல்லு நர்ஸா இருந்தா ok தானே?//

அதையும் அவர் நர்ஸ் வேஷத்துல வந்த நயன்னு சொன்னாலும் சொல்வார், ப்ரியா

said...

Aaha.. Diwali malar sooper.. :))

Ungalukkum iniya deepavali vaazhthukkal...

Jokes missingnu solla vandhen.. Adhukkula porkodi commentla explain pannitadhaala suggestion vapous :D

said...

//அவர் எல்லாத்தையும் மொத்தமா பாவனாக்கு அனுப்பி இருப்பார்//

he.he.he...unga address dhan ezhudanunu nenachen...kaiyila pena edutha bhavana addressdhan varudhu ;))

//என் மாப்ள அப்படி எல்லாம் பண்ற ஆளு தான், ப்ரியா//

Yenna Ippadi solliteenga....katchi saarbha konjam pudavaya akka asin-ku anupi iruken thalaivare....

said...

//Jokes missingnu solla vandhen.. Adhukkula porkodi commentla explain pannitadhaala suggestion vapous //

:-))

G3, happy diwali wishes.. Ama..enna en mapla ulunga tea vaangi kodukuraaplayaa :-))

said...

//Yenna Ippadi solliteenga....katchi saarbha konjam pudavaya akka asin-ku anupi iruken thalaivare//

enna Mapla..athai ellaam velila sollikittu..

ethO paavam, vethavukkum, priyavukkum marrum nam nanbarkalukeelam onnu anuppi vaiyyEn paa, bharani

said...

இப்பொ எல்லாம் தீபாவளி மலரோட அன்பளிப்பு மற்றும் சினிமா டிக்கெட் எல்லாம் தரான்க.அது எல்லாம் எப்போ குரியரில் வரும்னு சொல்லுங்கோ கார்த்தி.முதல் மலரே உங்களதுதான் அதுவும் சுப்பர் பரிசு

said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்! அப்புறமா வந்து comment போடறேன்!

said...

//எல்லாம் எப்போ குரியரில் வரும்னு சொல்லுங்கோ கார்த்தி.முதல் மலரே உங்களதுதான் அதுவும் சுப்பர் பரிசு
//

என்ன தி.ரா.சா சார், பரிசு பொருல் எதுக்கு..எங்களோட மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் சார் :-))

said...

Thanks IA.. Happy Diwali to you.. Enjoy the fireworks IA

Anonymous said...

பலது புரியவில்லை..சிலது புரிந்தது..ரசித்தேன்..சிரித்தேன்..வாழ்த்துக்கள்

said...

நாட்டாம நயன துரத்தி என்ன பயன்? தங்கமணி ஏதோ வேலையா கூப்பிடுறாங்க, உள்ள போங்க :)

said...

Hahaha
Nice one!
U r tagged! :)
Pls check my blog & write if u r ok with it

said...

தீபாவளி வாழ்த்துக்கள்:)

said...

//பலது புரியவில்லை..சிலது புரிந்தது..ரசித்தேன்..சிரித்தேன்..வாழ்த்துக்கள் //

வாங்க தூயா.. கொஞ்சா நாள் தொடர்ந்து படிச்சா எல்லாம் புரியும்.. அடிக்கடி விஸிட் அடிங்க.. தீபாவளி வாழ்த்துக்கள்

said...

//நாட்டாம நயன துரத்தி என்ன பயன்? தங்கமணி ஏதோ வேலையா கூப்பிடுறாங்க//

பொற்கொடி, அவருக்கு தான் எத்தனை அடிவாங்கினாலும் நயன் தானே.. ஒரு தடவை, அவங்க மனைவி நாட்டாமையை அடிக்க, இவரோ ஒவ்வொரு அடிக்கும் ஒன், டூ, த்ரீன்னு எண்ண ஒன்பதாவது அடிக்கு நயன்னு சொல்ல, அவங்க இவர் நயன்தாராவைத் தான் சொல்றாருன்னு இன்னும் ரெண்டு அடி போட..அன்னிக்கு ரணகளமாயிடுச்சு, பொற்கொடி..

மத்தளதுக்கு ரெண்டு பக்கமும் அடி மாதிரி நாட்டாமை, சிம்பு கிட்டயும் அடி வாங்குறார்..தங்கமணிகிட்டயும் அடிவாங்குறார்..ச்சோ..பாவம் நம்ம நாட்டாமை

said...

//U r tagged! :)
Pls check my blog & write if u r ok with it //

Thanks ponna.. But I already wrote about that..
Sorry.. Next time vera ethukkaavathu ennai kEkkaamalE tag-ai pOdunGka..kattaayam ezhuthuREn :-))

said...

வாழ்த்துக்கு நன்றி வேதா.. ஊர்ல நல்ல தீபாவளி கொண்டாடுங்க..

said...

Wish you & ur family a very happy & safe diwali [:)]....

said...

ஒரு தடவை, அவங்க மனைவி நாட்டாமையை அடிக்க, இவரோ ஒவ்வொரு அடிக்கும் ஒன், டூ, த்ரீன்னு எண்ண ஒன்பதாவது அடிக்கு நயன்னு சொல்ல, அவங்க இவர் நயன்தாராவைத் தான் சொல்றாருன்னு இன்னும் ரெண்டு அடி போட..அன்னிக்கு ரணகளமாயிடுச்சு,

நாட்டாமைக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.தீபாவளிக்கு கார்தியோட பம்பர் பரிசு இது.. ஏதோ இதுக்கு அப்பறமாவது ஜால்ராவை கீழே வச்சா சரி.கார்த்தி கொஞ்சம் அப்படியே கை குடுங்க

said...

Thanks for wishes marutham

Hearty Diwali wishes for you, Marutham

said...

//ஏதோ இதுக்கு அப்பறமாவது ஜால்ராவை கீழே வச்சா சரி.கார்த்தி கொஞ்சம் அப்படியே கை குடுங்க//

தி.ரா.சா சார் என்ன இது.. நானும் நாட்டாமையும் நல்ல நண்பர்கள்.. ஏதோ நடந்த உண்மையை சொன்னா கையக் கொடுங்கன்னு சொல்லி பிரிக்க பாக்குறீங்களா.. நண்பா..நாட்டாமமமமமம..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. எப்பா இதுல இருந்து தப்பிகிறதே பெரிய பாடாய் இருக்கும் போல.. ஹிஹிஹி

said...

//என்ன எந்த பையனாவது சிக்கியாச்சா, ப்ரியா... //
அப்படி இருந்தா நான் ஏன் blog ல time-pass பண்ண போரேன்? jolly யா கடலை போட்டுட்டிருந்திருப்பேன்.

said...

என்ன ஆளாளுக்கு நாட்டாமைய ரொம்ப ஓட்டறீங்க? அவர் என்ன ஆளையே காணும் பதில் சொல்ல? leave போட்டுட்டு தீபாவளி பலகாரம் பண்றதுல busy போல.

said...

என்ன ப்ரியா.. நாட்டுல கடலை போடுறதுக்கு பையனா கிடைக்கல.. இது பசங்க எங்களுக்கு பெருத்த அவமானம் ப்ரியா.. கடலை போடுறதுக்கு போய் கல்யாணத்தை பத்தி பேசுறீங்க..

காலேஜ்ல கடலை போட்டப்ப நாங்க கல்யாணத்த பத்தியா பேசினோம்..

கடலை போடுறவங்க அப்படி என்னதான் பேசுவாங்களோன்னு ஸ்கூல்ல படிக்கிறப்போ யோசிப்பேன்.. ஆனா என்ன பேசினேனுன்னு தெரியாது..காலேஜ்ல எனக்கு கடலை கார்த்தின்னு பேராயிடுச்சு, ப்ரியா..

நாட்டாமைக்கு இப்போ நேரஞ்ச் சரியில்ல.. இது முறுக்கு பிழியிற காலம்