Thursday, October 26, 2006

அமெரிக்கா கனவுகளும் ராக்கெட் கேள்விகளும்

இந்தியாவின் தென்கோடியில் இருக்க ஒரு சின்ன ஊர்ல நான் பிறந்தப்பவும் சரி, அதுக்கபுறம் வளர்ந்து ஆறாவது படிச்சிகிட்டு இருந்தப்பவும் சரி.. எனக்கு அமெரிக்கான்ன என்னானு தெரியாது.. அப்போதைக்கு சென்னையும் அடிக்கடி காட்டுற அந்த உயரமான எல்.ஐ.சியும் தான் அதிசயமா தெரியும். டெல்லி பத்தி பேப்பருல படிக்கிறப்ப, அது எட்டாத கனியாவே இருக்கும்.. அந்த வயசுல மதுரைக்கு போறதே போறதே ஒரு பெரிய லட்சியமா இருக்கும்.

ஐந்தாவது படிச்சப்போ, திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர்ல , முதல் ஆங்கில படமா, சில்வஸ்டர் ஸ்டேலோன் நடிச்ச FIRST BLOOD படம் பாத்தேன். அப்போ என் நண்பன் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு.. டேய்..இந்த படம் அமெரிக்காவுல எடுத்ததுடா..அங்கே எல்லாம் சினிமா எடுக்க கோடி கோடியா பணத்தை கொட்டுவாங்களாம்.. எனக்கு ஞாபகம் இருந்து நான் முதல்ல அமெரிக்கான்னு கேள்விப்பட்து அப்போ தான்.

அதுக்கப்புறம் காந்திகிராமத்துல ஏழாவது சேர்ந்தப்போ, அப்பப்போ உலக வரைபடத்துல உலகத்துல இருக்க கண்டங்கள்ல ரெண்டு வட அமெரிக்கா தென் அமெரிக்கான்னு படிச்சப்போ, அது இந்தியவுல இருந்து எவ்ளோ தூரம் இருக்கும்னு வெறுங்கையால முழம் போட்டதுண்டு. அப்புறம் டவுன் நண்பர்கள் கிடச்சப்புறம், கிளின்டன் பத்தி கொஞ்சம் செய்திகளில் பாக்குறப்போ.. ஓ..அமெரிக்கா.. உன்னை பாக்க நான் எவ்வளவு செலவு பண்ணி வர்றது.. ஒரு ஆயிரம் ரூபாய் ஆகுமா..கையில டார்ச் வச்சுகிட்டு நிக்கிற அந்த அம்மாவை எல்லாம் எப்போ பாக்குறது..ன்னு சும்மா என்னிக்காவது மனசுல பேசிகிட்டதுண்டு.. சொந்த செலவுல மதுரை போறதே நடக்காத விஷயம் அப்போ..

என்னோட அய்யா (அப்பாவோட அப்பா), இளைய வயசுல கொஞ்ச நாள் பினாங்குல இருந்தார். பினாங்கு மலேசியாவுல இருக்க ஒரு ஊர்.. அதனால அவர் அங்க போனதையும், இருந்ததையும் பத்தி அடிக்கடி நிறைய கதை சொல்வார். அது தான் நான் கேள்விப்பட்ட முதல் வெளிநாடு பற்றிய சுற்றுலா கதை. அவருடைய காலத்துல நிறைய பேர் பினாங்கு போனாங்க, என் ஊர்ல இருந்தே.. நாம எப்படி அங்க எல்லாம் போகப்போறோம்னு நினச்சுகிட்டதுண்டு..

அப்போ எல்லாம் பஸ் பிடிச்சு திண்டுக்கலுக்கு போய் படம் பாக்குறதே ஒரு பெரிய விஷயம். ஏதாவது படம் வந்து அது நல்ல ஓடுறப்போ யார்கூடவாவது தொத்திக்கிட்டு போனா உண்டு. எங்க ஊர்ல திருவிழான்னா திரையில படம் ஓட்டுவாங்க.. ஒரு எம்ஜியார் படம்..ஒரு சிவாஜி படம்..ரெண்டு படம் உறுதி.. ஊர்ல இருக்க பெரிய தெருவுல படத்தை ஓட்டுவாங்க.. ரெண்டு பக்கமும் பெரிய கம்பத்தை நட்டு, அதுக்கு இடையில திரையை கட்டி, அந்த கம்பத்துல ஒலி பெருக்கிய கட்டி படம் போடுவாங்க.. கிட்டதட்ட ஒரு ஆயிரம் பேர் உக்கார்ந்து பார்ப்போம் அந்த படத்தை.. அப்படி பாத்ததுதான் எம்ஜியாரோட உலகம் சுற்றும் வாலிபன் படம்.. நாடு நாடா அவர் சுத்த கூடவே என் ஆசைகளும்..

முதல்ல மதுரையில கல்லூரிக்கு போனப்போ என்னுடைய மிகப் பெரும் சிறு வயசு ஆசை நிறைவேறியது.. அப்புறம் அடுத்த ஆசையா சென்னைக்கு போறது.. அதுவும் வேலைக்கு வந்த பிறகு நினைவாச்சு. அடுத்த கனவாய் டெல்லி வந்தது.. ஒரு முறை பிராஜெக்ட் விஷயமா டெல்லி போய் இருபது நாள் இருந்தப்போ அந்த கனவும் பலிச்சது.. இப்போ அமெரிக்க கனவும் நினைவாகி.. நடந்துகிட்டு இருக்கு.. எல்லாம் அந்த ஆண்டவனால நடக்குறது..

ஆனா நான் காலேஜ் முடிச்சு, வேலை சேர்ந்த வரைக்கும் கூட, ஒரு நாள்கூட நினைச்சதே இல்ல. இப்படி அமெரிக்கால வசிப்பேன், இந்த காத்தை சுவாசிப்பேன்னு.. இப்போ நினைச்சாலும் அடிக்கடி நானே என்னை கிள்ளி பாத்துக்கொள்வதுண்டு..

என்னுடைய இந்த வளர்ச்சி பாதைல நான் ரொம்ப நாளா கவனிச்சது என்னன்னா.. எனக்கும் என் கூட இருக்க, நகர பகுதிகள்ல இருந்த வந்து படிச்ச பசங்களுக்கும் இடையே இருந்த ஒரு இடைவெளி.. நான் அப்போ தான் போன்ல பேசவே ஆரம்பிச்ச சமயம்.. பயந்து பயந்து ஒவ்வொரு பட்டனையும் அமுக்கிய நேரம்.. என் நண்பர்கள் பலர் செல்போன்ல பேச ஆரம்பிச்சிருந்தாங்க.. நான் முதல் முறை சென்னை வந்து ஸ்பென்சர் பிளாசா போனப்போ, உள்ளார போறப்பவே ஒரு பயம் இருந்தது.. ஏதோ நான் மட்டும் தனி உலகத்துல இருக்கிறத உணர்வு.. எல்லோரும் என்னையே பார்ப்பதாய் ஒரு பிரமை. சொல்ல முடியாத உணர்சியாய் இருந்தது அப்போ..

எவ்வளவோ புது விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டாலும் என் ஊர்ல அதை பத்தி யார்கிட்டயாவது பேசினா அது விழியிழந்தோர்க்கு யானையை பத்தி விவரிக்கிற மாதிரி இருக்கும் ஆனாலும் ஏதாவது ஒரு புது விஷயத்தை அவங்க கிட்ட சொல்றத நான் என்னிக்கும் விடவே இல்ல. ஒரு தடவை ராக்கெட் மற்றும் ஏவுகணை பத்தி சொல்லிகிட்டு இருந்தப்போ, எவ்வளவு பெரிய திரி வேண்டும் அந்த ராக்கெட்டை அனுப்பன்னு ஒருத்தர் தீபாவளி ராக்கெட்டை மனசுல வச்சு கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கு..

38 பின்னூட்டங்கள்:

said...

Superb experience Karthik. Ippellam kaalayile office vanthathum unge blogthaaan naan padikkire mudhal "newspaper"..

Etho vegu thoorathula irukkunnu ninaichathai, eppodi kandupidichu ange poi settle aayiddeengga. Vazhtukkal..

said...

இந்த பதிவை படிக்கும் போது உங்களுக்கு ரொம்ப வயசான மாதிரி ஒரு எண்ணம் தோணுது:) முன்பெல்லாம் பையன் அமெரிக்காவுல வேலை பார்க்குறான்னு சில அம்மாக்கள் பெருமை பட்டுக்கறப்போ சுத்தி நிக்கறவங்க வாயை பொளந்துக்குட்டு கேப்பாங்க இப்ப என்னடான்னா? என்ன உன் புள்ள/பொண்ணு இன்னுமா அமெரிக்கா போகலைன்னு கேட்கறாங்க. இப்ப அமெரிக்கா போறது அமிஞ்சகரை போற மாதிரி ஆயிடுச்சு:) சரி அடுத்து எங்க போறதா உத்தேசம் தலைவா ராக்கெட் பத்தியெல்லாம் சொல்ற?:) நிலவுக்கா?:)

said...

கார்த்திக்,
நான் வாழந்த வாழ்க்கையையும் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள்.(அல்லது 'நீங்கள் வாழ்ந்த.....)

ஆச்சர்யமாகத் தான் உள்ளது.. என் சின்ன வயது அனுபவங்களை நீங்கள் எழுதுவது போல் ஒரு உணர்வு.

பத்தாவது முடித்தபின் தான் எனக்கும் மதுரை மண் அறிமுகம்.

கோவில் திருவிழாக்களில் போடப்படும் திரைப்படங்கள் தான் எங்கள் ஊருக்கு புதிய ரிலீஸ் படங்களைக் கொண்டு வரும்- அட்லீஸ்ட் ஒரு வருடத்துக்கு முந்தைய படங்களாவது அதில் உண்டு(ஊரில் இருந்த இரண்டு தியேட்டர்களில்- அதில் ஒன்று டூரிங்- இரண்டு வருடம் கழித்துத் தான் புதிய(?!) படங்களே வரும்.)

மணலில் கூட்டத்தோடு கூட்டமாக இடம் பிடித்து பார்த்த அந்த நாட்கள்..ம். மறக்க முடியுமா.

அட.. நீங்களுமா, எல்லோரும் பெல்ஸ் போட்டு, பேண்ட்டுக்கு மாறி, ஜீன்ஸ் முயற்சிக்கும்போது தான் நான் பெல்ஸுக்கு வருவேன்.. டெலிபோனிலும்.. வேண்டாம்.. உங்கள் பதிவை திரும்ப எழுதின மாதிரி இருக்கும்..

பள்ளியில் சரியாக படிக்காத பூகோள பாடத்தை 'நேரில் பார்த்து தெரிந்து கொள்' என்று கப்பல் வாழ்க்கை அறிமுகம் செய்த போது, உலகை நான் பார்த்தபோது, எனக்கும் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வு தான் கார்த்திக்.

Anonymous said...

super'ah irundhudhunga unga vaazhkai payanam...as vedha said idhellaam padikkum bodhu உங்களுக்கு ரொம்ப வயசான மாதிரி thonudhu... :)

and my ilp's at bhubaneswar...

i wish that all ur dreams come true as it's happening now..... :))

said...

felt nostolgic. kaduvul sithapadi ellam nadakkum. No body can stop us. :D

another good post from U friend. :)

C.M.HANIFF said...

Ungal pathivu arumaiya irukku, nalla nadai, continue karthik :)

said...

Maams..kalakitinga ponga...naan kooda first chennai vandu school ponappa...college ponappa..oru oddness irunthukite irundhuchi :((

But ellathayum thaandi ippa ivlo valanthu irukeengala...adhu dhan maams gr8 :)

said...

//எவ்வளவு பெரிய திரி வேண்டும் அந்த ராக்கெட்டை அனுப்பன்னு//....LOL...idhudhan gramathu manasu :))

said...

//Superb experience Karthik. Ippellam kaalayile office vanthathum unge blogthaaan naan padikkire mudhal "newspaper"..

Etho vegu thoorathula irukkunnu ninaichathai, eppodi kandupidichu ange poi settle aayiddeengga. Vazhtukkal.. //

Thanks my friend.. Thanks for this great recognization :-)

said...

//இந்த பதிவை படிக்கும் போது உங்களுக்கு ரொம்ப வயசான மாதிரி ஒரு எண்ணம் தோணுது:) //

வேதா, என்ன இது.. வாழ்க்கைல நடந்ததை எழுதின வயாசான நம்ம தலைவி லிஸ்ட்ல சேக்குறீங்க.. தலைவியோட சதி திட்டமா இது..

//உன் புள்ள/பொண்ணு இன்னுமா அமெரிக்கா போகலைன்னு கேட்கறாங்க. இப்ப அமெரிக்கா போறது அமிஞ்சகரை போற மாதிரி ஆயிடுச்சு//

உண்மையான வார்த்தைகள் வேதா,,

//அடுத்து எங்க போறதா உத்தேசம் தலைவா ராக்கெட் பத்தியெல்லாம் சொல்ற?:) நிலவுக்கா?:) //

ஆண்டவன் அனுக்கிரகம் இருந்த அதுக்கும் போய் வரலாம் வேதா

said...

//நான் வாழந்த வாழ்க்கையையும் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள்//
கணேசன், நிறைய விஷயங்களில் நாம் ஒத்துப்போகிறோம்..

//மணலில் கூட்டத்தோடு கூட்டமாக இடம் பிடித்து பார்த்த அந்த நாட்கள்..ம். மறக்க முடியுமா//
இது ஒரு தனியா யாருக்கும் அவ்வளவு சீகிரம் கிடைத்து விடாத வாழ்க்கை கணேசன்

எல்லாவிததிலையும் என்னை பிரதிபக்கிற ஒருவரை ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன் கணேசன்..ரொம்ப சந்தோசமா இருக்கு

ஆமா, அசினையும் உங்களுக்கு பிடிக்குமா..ஹிஹிஹி

said...

//super'ah irundhudhunga unga vaazhkai payanam...as vedha said idhellaam padikkum bodhu உங்களுக்கு ரொம்ப வயசான மாதிரி thonudhu... :)//
Thanks Gopal..

ennathu ithu ellOrum ore pallaviyap paadureenGka..

//and my ilp's at bhubaneswar...//
All the Best Gopal

//i wish that all ur dreams come true as it's happening now...//
Thanks Gopal Thanks

said...

//felt nostolgic. kaduvul sithapadi ellam nadakkum. No body can stop us. :D//

intha maathiri postukkal than manachu paaraththai irakki vaikkuthu ambi

//another good post from U friend//
Thanks my dear friend

said...

//Ungal pathivu arumaiya irukku, nalla nadai, continue karthik //

Thanks Haniff

said...

//Maams..kalakitinga ponga...naan kooda first chennai vandu school ponappa...college ponappa..oru oddness irunthukite irundhuchi :((

But ellathayum thaandi ippa ivlo valanthu irukeengala...adhu dhan maams gr8 :) //

NanRi Maapla.. ellaam kadavuloda asiyum cheyalkalum Mapla :-))

said...

////எவ்வளவு பெரிய திரி வேண்டும் அந்த ராக்கெட்டை அனுப்பன்னு//....LOL...idhudhan gramathu manasu //

vellendhiyaana manachu Mapla

said...

கஷ்டப்பட்டு, சொந்த முயற்சியால இந்த அளவு வந்திருக்கிங்கனு புரியுது கார்த்திக். நான் சென்னைலயே இருந்தாலும், school படிக்கும் போதுலேருந்து airport பக்கம் போகும் போதெல்லாம், நாம எப்ப US போய் வேலை பாப்போம்னு யோசிப்பேன். கல்யாணம் பண்ணி US போகாம சொந்த முயற்சில போகணும்னு நினைச்சேன். ஆனா எனக்கு அண்ணா & cousins இருந்ததால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்னு சொல்ல முடியாது. அதுக்கே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. உங்கள மாதிரி சின்ன ஊர்லேருந்து, எந்த background ம் இல்லாம முன்னுக்கு வரது தான் பெருமையான விஷயம். உங்க திறமையால மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

said...

//கையில டார்ச் வச்சுகிட்டு நிக்கிற அந்த அம்மா//

LOL

//நான் முதல் முறை சென்னை வந்து ஸ்பென்சர் பிளாசா போனப்போ, உள்ளார போறப்பவே ஒரு பயம் இருந்தது.. ஏதோ நான் மட்டும் தனி உலகத்துல இருக்கிறத உணர்வு.. எல்லோரும் என்னையே பார்ப்பதாய் ஒரு பிரமை. சொல்ல முடியாத உணர்சியாய் இருந்தது அப்போ..//

புரியுது, எனக்கும் சில இடங்கள்ல அந்த மாதிரி உணர்வு இருந்திருக்கு (especially in the US).

said...

கார்த்திக், ஆனந்த விகடன்ல marks: வல்லவன்-37, வரலாறு-43, ஈ-44..

said...

superb CM, ரொம்ப அழகா உங்க அனுபவத்த சொல்லி இருக்கீங்க...நானும் இங்க வரப்போ flight ஏறுனது தான் முதல் டைம்...அப்போல இருந்து எல்லாம் கொஞ்சம் பம்பி பம்பி யார் என்ன பன்றாங்கனு பார்த்து அத அப்படியே ஃபாலோ பண்ணுவேன்...
:-)

said...

எப்படி உங்க சொந்த முயற்சில அமெரிக்கா வந்தீங்களோ அப்படியே CM ஆய்டுங்க...எனக்கு நம்ம ஊர் மினிஸ்டர் போஸ்ட் எல்லாம் வேண்டாம்...பிரேஸில் ல ஏதாவது ஒரு வேலை வாங்கி குடுத்திடுங்க பொழச்சுக்குவேன் :-)

said...

போன போஸ்ட்ல priya சொன்னத பார்த்தா முன்னனி நடிகைனால பாவனாவ strikeout பண்ணிட்டாங்கலாம்....த்ரிஷாவும் முன்னனி நடிகைல இல்ல எதுக்கும் கொஞ்சம் சாக்ரதயாவே இருங்க...என்னோட ரூட் கிளியர் :-)

said...

தற்செயலா இந்த நேரம் வந்தேன். உங்க பதிவைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. மேன்மேலும் நீங்களும் உயர்ந்து உங்கள் குடும்பத்தாரையும் உயர்த்த என்னுடைய வாழ்த்துக்கள். ரொம்பவே வெளிப்படையாச் சொல்லி இருக்கீங்க. சில வீட்டுக்குப் போகும்போதும், சில இடத்துக்குப் போகும்போதும் எனக்கும் இந்த மாதிரி உணர்வுகள் வரதுண்டு.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், அது என்ன தலைவி பதவியை விட்டுத் தூக்கிடலாம்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? நான் நிரந்தரத் தலை(வலி)வின்னு தெரியாது? :D பார்த்து நடந்துக்கோங்க. :D

said...

நல்ல பதிவு நண்பா. உங்க முயர்ச்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் !!!

ஆனா, என்னதான் Starbucks-ல காபி குடிச்சாலும் நாயர் கட டீ தான் நிரந்தரம்-னு இங்க வந்த கொஞ்ச நாள்லயே புரிஞ்சிக்கிட்டேன் :)

பணம் படுத்தும் பாடு !!!

-அருண்

said...

நல்ல மண்வாசனை உங்கள் பதிவில்.
மிக மிக அழகாக எழுதி இருக்கீங்க.இதே நிலமைதாங்க எனக்கும்.மலரும் நினைவுகள் தந்தமைக்கு நன்றிகள்.--SKM

said...

அருமையான பதிவு. வாழ்க, மென்மேலும் வளர்க, கனவுகள் நனவாக வாழ்த்துக்கள்.

சென்னையிலே பிறந்து வளர்ந்தும், என் அனுபவமும் (சினிமா, திருவிழா போன்றவை நீங்கலாக) இதேபோல்தான். முதல் முறை பெங்களூர் சென்றபோது அடைந்த சந்தோஷம் அளவிட முடியாது.

எல்லோரும் கடவுளுக்கு அடுத்து Y2K- விற்கும் நன்றி சொல்லவேண்டும்.


Cheers
SLN

Anonymous said...

hmm.... there is a saying.. "Be carefull of what you want..u might get it" nnu...
enna solrathu..neenga eludhanadha padichu naan yosika arambichutten...
India pathu 2 .5 varusham aguthu.. :((

said...

//உங்கள மாதிரி சின்ன ஊர்லேருந்து, எந்த background ம் இல்லாம முன்னுக்கு வரது தான் பெருமையான விஷயம். உங்க திறமையால மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்//

Thanks Priya

said...

//எனக்கும் சில இடங்கள்ல அந்த மாதிரி உணர்வு இருந்திருக்கு //

ella commentsum paaththaa ellorukkum appadi oru ullunaru irukkirathu theriyuthu priya

said...

//superb CM, ரொம்ப அழகா உங்க அனுபவத்த சொல்லி இருக்கீங்க...நானும் இங்க வரப்போ flight ஏறுனது தான் முதல் டைம்...அப்போல இருந்து எல்லாம் கொஞ்சம் பம்பி பம்பி யார் என்ன பன்றாங்கனு பார்த்து அத அப்படியே ஃபாலோ பண்ணுவேன்...//
அய்யோ ஷ்யாம்..நானும் அப்படித் தான்.. நான்-வெஜ் கேப்பாங்க..எனக்கு வெஜ் மட்டும் கேக்கும்.. இப்படி ரெண்டு தடவை மொத்ததுல மிஸ் பண்ணியிருக்கேன்

said...

//எப்படி உங்க சொந்த முயற்சில அமெரிக்கா வந்தீங்களோ அப்படியே CM ஆய்டுங்க...எனக்கு நம்ம ஊர் மினிஸ்டர் போஸ்ட் எல்லாம் வேண்டாம்...பிரேஸில் ல ஏதாவது ஒரு வேலை வாங்கி குடுத்திடுங்க பொழச்சுக்குவேன்//

ஷ்யாம், நான் மட்டும் CM ஆனேன்னா.. நீங்க எங்க இருந்தலும் ஒரு போஸ்ட் உங்களுக்கு உண்டு ஷ்யாம்

said...

//த்ரிஷாவும் முன்னனி நடிகைல இல்ல எதுக்கும் கொஞ்சம் சாக்ரதயாவே இருங்க...என்னோட ரூட் கிளியர்//

த்ரிஷா முன்னணி நடிகை இல்லையா.. என்ன ஷ்யாம் சொல்றீங்க.. அசினுக்கும் த்ரிஷாவுக்கும் தான் போட்டியே தலைவா.

said...

//உங்க பதிவைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. மேன்மேலும் நீங்களும் உயர்ந்து உங்கள் குடும்பத்தாரையும் உயர்த்த என்னுடைய வாழ்த்துக்கள்//

நன்றி மேடம்..

//அது என்ன தலைவி பதவியை விட்டுத் தூக்கிடலாம்னு எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? நான் நிரந்தரத் தலை(வலி)வின்னு தெரியாது? :D பார்த்து நடந்துக்கோங்க//

நீங்களும் தொண்டர்களை கொஞ்சம் கண்டுக்கணும் தலைவியே

said...

//நல்ல பதிவு நண்பா. உங்க முயர்ச்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் !!!//

Thanks friend

//ஆனா, என்னதான் Starbucks-ல காபி குடிச்சாலும் நாயர் கட டீ தான் நிரந்தரம்-னு இங்க வந்த கொஞ்ச நாள்லயே புரிஞ்சிக்கிட்டேன் :)

பணம் படுத்தும் பாடு//

truth truth truth friend!!!

said...

//நல்ல மண்வாசனை உங்கள் பதிவில்.
மிக மிக அழகாக எழுதி இருக்கீங்க.இதே நிலமைதாங்க எனக்கும்.மலரும் நினைவுகள் தந்தமைக்கு நன்றிகள்//

SKM, நிஜத்தில் இருக்கிறதை விட மலரும் நினைவுகள்ல தான் ரொம்ப சந்தோசமே

said...

//அருமையான பதிவு. வாழ்க, மென்மேலும் வளர்க, கனவுகள் நனவாக வாழ்த்துக்கள்.//

O..Thanks SLN

//எல்லோரும் கடவுளுக்கு அடுத்து Y2K- விற்கும் நன்றி சொல்லவேண்டும்.//

kattaayam NanRi cholla vEndum, SLN

said...

//neenga eludhanadha padichu naan yosika arambichutten...
India pathu 2 .5 varusham aguthu//

2.5 years? ayyO ennaala ellaam avLO Naal thaakkupidikka mudiyumaannu therila dreamzz

said...

Great post. Hope all your other dreams do come true.

Unga blogging rate is too high... Naan oru post thathi thadavi padichu mudicha.. here comes another....

God Job. Do carry on